Skip to main content

Posts

Showing posts from September, 2018

ஒப்பனை ஒரு நாள் கலையும் !!! மௌலவி றாபி அவர்களே !

ஒப்பனை ஒரு நாள்  கலையும் !!! மௌலவி றாபி அவர்களே ! http://al-bathr.blogspot.com/2018/09/blog-post_12.html ---------------------------        ஷர்க்கி ,  பரேலவி. --------------------------- மௌலவி றாபி அவர்களே ! உங்களின் பதிலில் நான் தடுமாறுவதாகவும், எனது செழுமை மங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள்.! யார் தடுமாறுகிறார். யாருடைய செழுமை மங்குகின்றது என்பது முக்கியமல்ல. யார் கூறுவது சரி உண்மை எப்பக்கம் இருக்கின்றது என்பதுதான் முக்கியம். கதீம் என்றால் பூர்வீகம் என்பது உங்களுக்குத் தெரியும். இச்சொல் எதார்த்தமாகப் பார்த்தால் அல்லாஹ்வுக்கு மட்டுமே கூறப்படும். மற்றவருக்குக் கூறுவது ஷிர்க். என்பதை மறுக்க மாட்டீர்கள். அது போல் அல்லாஹ்வின் பண்புகளை எதார்த்தமாக அல்லாஹ் அல்லாத எவருக்கும் கூறக் கூடாது. அவ்வாறு கூறுவது ஷிர்க் என்பதையும் மறுக்க மாட்டீர்கள். ஆனால் , கதீம் என்ற சொல்லும் அல்லாஹ்வின் பண்புகளும் திருநாமங்களும் அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. அப்படியாயின் இதை எப்படி நியாயப்படுத்துவது.? அல்லாஹ்வின் பண்புகள் சுயமானவை. இன்னொருவரால் வழங்கப்படாதவை. ஆரம்பம்

கலீல் அவுன் மௌலானாவின் கற்பனைகள் !!!

கலீல் அவுன் மௌலானாவின் கற்பனைகள். ! ✯ *Link* ➽ http://al-bathr.blogspot.com/2018/09/blog-post_10.html ●•●┄─┅━━━━━━━━━┅─┄●•● ஷர்க்கி  *** பரேலவி ●•●┄─┅━━━━━━━━━┅─┄●•● கலீல் அவுன் மௌலானா ஒரு சாதாரணமானவராக இருந்தால் நாம் பெரிதாக அலட்ட மாட்டோம். அவர் ஒரு அஹ்லுல் பைத்தைச் சார்ந்தவராகவும் , ஒரு ஷெய்காகவும் இருக்கின்றார். மக்கள் குறிப்பாகப் பாமரர்கள் அவரைப் பின்பற்றுகின்றனர். அவர் தன்னை ஒருகுத்பு என்று கூறுவதால் அவர் பேச்சை வேதமாகக் கருதுகின்றனர். அதில் சரி, பிழை யாரும் பார்ப்பதில்லை. எதுவித ஆராய்வுமில்லாமல் சில உலமாக்களும் அவர்பின்னால்  நிற்பதனாலும்.பிரபலமான மற்றும் சில உலமாக்கள் அவரை ஆதரிப்பதனாலும் மக்கள் இவர்கூறுவது முற்றிலும் உண்மைதான் என்று நம்புகின்றனர். உண்மையில் பொறுப்பற்ற உலமாக்களின் சுய நலத்தால் இவரின் மார்க்க விரோதப் பேச்சைக்கேட்டு அப்பாவிகள்வழி தவறிச் செல்கின்றனர். இந்த அவல நிலையிலிருந்து  மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் தான் அவரின் குறைகளை எழுத நிற்பந்திக்கப் பட்டோம். நமது எழுத்து சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக் கின்றது. அதனால் எம்மை வசைபாடுகின்றன

தரீக்கத்துல்ஹக்கியத்துல் காதிரிய்யாவின் நோக்கம் அம்பலம்

*தரிகத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா* *ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை*❇                    “ஜீவஜோதி மஹான் “ 💎 *அஷ்ஷெய்கு ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அல்காதிரிய்யுல் ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல்  ஹாஷிமிய்* 💎 🌺 *கொள்கைகள்-நோக்கங்கள்* 🌺 1.  மதத்தால், இனத்தால் மொழியால் பிளவுபட்டுள்ள மனித சமுதாயத்தை ஆன்மீகத்தால் ஒன்றிணைத்து மத நல்லினக்கத்தையும் மனித நேயத்தையும் பேணிப் பாதுகாத்தல். 2.  மெய்ஞ்ஞான விளக்கம் நல்கி இறைவனை அறிய வழிகாட்டுதல் 3.  அனைத்து வேதங்களின் குறிக்ககோளும் மெய்ஞ்ஞானத்தில் ஒன்றே எனும் உண்மையை உணரச்செய்யவும். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் அழகுடன் போதிக்கப்பட்ட இஸ்லாத்தின் அழகு நெறி முறைகளை எடுத்துச் சொல்லியும், மக்கள் மத்தியில் நிலைக்கச் செய்து, வேற்றுமை நீக்கி, ஒற்றுமை, அன்பு ஆதியென வளரச் செய்து, எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவவும், சமத்துவம், சகோதரத்துவம் நிலைக்கவும் பாடுபடுதல். 4.  மெய்ஞ்ஞான நூல்கள் வெளியிடல். 5.  யோகப்பயிற்சி மூலம் மெய்யுள் வளர்ச்சி பெற்று உள்மறைந்துறையும் மாசக்தியை வெளியே கொணர்ந்து தன் வயப்படுத்தல். 6.  மனிதன் தன்னை அறிவதான ச

கலீல் அவுன் மௌலானா மறு பிறப்பை ஆதரிக்கின்றாரா.?

கலீல் அவுன் மௌலானா மறு பிறப்பை ஆதரிக்கின்றாரா.? ------------+------------        ஷர்க்கி .-பரேலவி . -----------+------------ கலீல் அவுன் மௌலானாவின்  பின் வரும் கூற்று மறுபிறப்பை ஆதரிப்பது போன்றுள்ளது. பிறப்பு இறப்பின் இரகசியம் ---------------------------------------------- 22-  அழிவென்பதும் இறப்பென்பதும் மறைவென்பதும் செல்லுதல் என்பதும்  மாற்றமேயாகும். உலகம் மாறி மாறிப் பிறக்கிறது. இல்லாவதொன்றுமில்லை. உள்ளவையே எல்லாம். ஆகவே. ஏகத்தில் குறைதல் என்பதோ , நிறைதல் என்பதோ இல்லை. மறைகின்றவைகள் உருமாறி  வெளிவருகின்றன. ஔன் நாயகரின் அருள் மொழிக் கோவை ,பக்,28 "உலகம் மாறி மாறி பிறக்கின்றன." மறைகின்றவைகள் உருமாறி வெளிவருகின்றன. என்ற கருத்துக்களும் படைப்பில் குறை நிறை இல்லை என்பதும், இருப்பவைதான் பின் உருமாறி வருகின்றன என்ற கூற்றுக்களும் ஹிந்துக்களின் மறு பிறப்புக்கோட்பாட்டை உறுதிப்படுத்துகின்றன. மேற்படி கூற்றில், புதிது பதிதான படைப்புக்கள் மறுக்கப்படுகின்றன. அழிந்த அதாவது இறந்த உடலின் அசல் பகுதி வேறு உருவில் மீண்டும் பிறக்கிறது. இக்கோட்பாடு  " அனைத்த

கலீல் அவுன் மௌலானாவின் புதிய மதக் கோட்பாடுகள்

கலீல் அவுன் மௌலானாவின் புதிய மதக் கோட்பாடுகள். ( 1) ************************* தொகுப்பு : ஷர்க்கி பரேலவி ---------------------------------- கலீல் அவுன் மௌலானா அவர்கள் தனது முரீதுகளுக்கு போதித்தவையில் சிலதை  நூல் வடிவில் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து சில வற்த் தொகுத்து அடியிற் தருகிறேன்.  படியுங்கள்! உண்மையைப்  புரியுங்கள் ! ----------          ----------    -------- கேள்வி : எல்லாம் இயற்கைதான், ஆனால் இயற்கைதான் "அல்லாஹா" எனக் கூற முடியாது எனப் பேழையில் ஒரு முறை பார்த்துள்ளேன். அதன் விளக்கம் என்ன? பதில் :  தன்னில் தானாக தோன்றி இருப்பது  "இயற்கை"  தோற்றமே இல்லாது தன்னில் தானாக இருப்பது "அல்லாஹ் " மெய்யொளி பதில்கள் .111 தன்னில் தானாகத்  தோன்றுவது பூர்வீகம். அப்படியாயின் உலகம் பூர்வீகம் என்றுதானே கூறுகிறார். இது குப்று இல்லையா ? கேள்வி : இறை காணக்கூடிய ஒன்றா ? காணக் கிடைக்காத ஒன்றா ? பதில் :  கடலில் உள்ள ஒரு துளி நீருக்கு  கடல் காணக்கூடிய ஒன்றா ? காணக்கிடைக்காத ஒன்றா ? மெய்யொளி பதில்கள்.100 அல்லாஹ்வும் கடலும் ஒன்று! வித்தியாசமில்ல