Skip to main content

தரீக்கத்துல்ஹக்கியத்துல் காதிரிய்யாவின் நோக்கம் அம்பலம்

*தரிகத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா*
*ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை*❇

                   “ஜீவஜோதி மஹான் “

�� *அஷ்ஷெய்கு ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அல்காதிரிய்யுல் ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல்  ஹாஷிமிய்* ��

�� *கொள்கைகள்-நோக்கங்கள்* ��

1.  மதத்தால், இனத்தால் மொழியால் பிளவுபட்டுள்ள மனித சமுதாயத்தை ஆன்மீகத்தால் ஒன்றிணைத்து மத நல்லினக்கத்தையும் மனித நேயத்தையும் பேணிப் பாதுகாத்தல்.

2.  மெய்ஞ்ஞான விளக்கம் நல்கி இறைவனை அறிய வழிகாட்டுதல்

3.  அனைத்து வேதங்களின் குறிக்ககோளும் மெய்ஞ்ஞானத்தில் ஒன்றே எனும் உண்மையை உணரச்செய்யவும். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் அழகுடன் போதிக்கப்பட்ட இஸ்லாத்தின் அழகு நெறி முறைகளை எடுத்துச் சொல்லியும், மக்கள் மத்தியில் நிலைக்கச் செய்து, வேற்றுமை நீக்கி, ஒற்றுமை, அன்பு ஆதியென வளரச் செய்து, எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவவும், சமத்துவம், சகோதரத்துவம் நிலைக்கவும் பாடுபடுதல்.

4.  மெய்ஞ்ஞான நூல்கள் வெளியிடல்.

5.  யோகப்பயிற்சி மூலம் மெய்யுள் வளர்ச்சி பெற்று உள்மறைந்துறையும் மாசக்தியை வெளியே கொணர்ந்து தன் வயப்படுத்தல்.

6.  மனிதன் தன்னை அறிவதான சுயதரிசன அனுபவம் பெற பயிற்சி அளித்தல்.

7.  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிறந்த தின மீலாது விழாவினை வெகு சிறப்பாகக் கொண்டாடுதல், மேலும் ஞான மகான்களை நினைவு கூர்வதன் மூலம் அவர்களின் கொள்கைகளை நிலை நாட்டல்,

8.  நாட்டுப் பற்றுடன் வாழ உதவுதல்.

9.  நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்காமலும் மற்றும் சட்டதிட்டங்களை மதித்து முழுமையாகக் கட்டுப்பட்டு நடத்தல்.

10.  தீவிரவாத கொள்கைகள் மக்களிடம் பரவாமல் தடுக்கப் பாடுபடுதல்,

11.  மானிட தேவ சக்திகளையறிந்து, இரண்டறக் கலக்கவும் பூரணத்துவம் அடைய முயலவும் வாய்மையும், சாந்தியும் வாய்ந்த நல் வாழ்வு வாழப் பாடுபடுதல்,

12.  மானிட வாழ்க்கையில் இன்றியமையாத சுகாதாரம் முதலான அவசியமான கல்விகளில் தேவையான விளக்கங்களைத் தேவைக்கேற்ப நல்குதல்,

13.  கல்விக் கூடங்கள், தொழிற்பயிற்சிக் கூடங்கள், மருத்துவப் பணிமனைகள் அமைத்து மக்களுக்கு சேவை புரிதல்.

14.  பொது நல சேவை புரிதல்.

15.  ஆக்கமும் ஆக்கங்களுக்கு உறுதுணை புரிதல்.

இங்கணம்

சங்கையான ஜீவஜோதி மஹான் வாப்பா நாயகம்

அகில உலக  ஆன்மீக தலைவர்

“ஹக்கியுல் காதிரியா”

அகில உலக தலைவர்

உலக அமைதி அறக்கட்டளை

தாளாளர்.

தரீக்கத்துல்ஹக்கியத்துல் காதிரிய்யாவின் நோக்கம் அம்பலம் .!
-------------------------------------

தரீக்கத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா என்பது ஸூபிகள் வழியாக வந்த தரீக்கத் அல்ல. !

கலீல் அவுன் மௌலாவால் அல்லது அவருடைய தந்தை யாஸீன் மௌலானாவால் உருவாக்கப்பட்ட இயக்கம்.

இவ்வியக்கம் இஸ்லாத்தின் கோட்பாட்டை ஒட்டிய ஓர் அமைப்பில்லை என்பதை அவர்களின் நோக்க அஜன்ட்டா மிகத் தெளிவாகவே புலப்படுத்துகின்றது.

"மதத்தால் வேறுபட்டவர்களை ஆன்மீகத்தால் ஒன்றிணைத்து இறைவனை அறிய வழிகாட்டுதல்."

என்பதன் மூலம் இஸ்லாமல்லாத காபீர்களும் நேரான பாதையில் இருக்
கின்றனர் என்பதை ஏற்கின்றனர். இக்கருத்து இஸ்லாமிய கோட்பாட்டுக்கு முற்றிலும் முறனான கருத்தாகும்.

காபீர்கள் பகிரங்க வழி
கேட்டிலிருக்கின்றனர் என்று திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளதற்கு முற்றிலும் முறனானதாக உள்ளது.

"அனைத்து வேதங்களின்
குறிக்கோளும் மெய்ஞ்சானத்தில் ஒன்றே! "  என்பதில்,

வேதங்கள் என்பதில் அல்லாஹுத் தஆலா வழங்காத இந்து சமயம் உள்ளிட்டவையையும் இங்கு உள்ளடக்கப்படுகின்றது. 

இந்து பௌத்த சமயங்கள் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டவை. அவற்றில் இஸ்லாத்தின் அடிப்படைக்கு முற்றும் முறனான பல கோட்பாடுகள் உள்ளன.  அப்படியிருக்க அவற்றை மெய்ஞ்ஞானத்தால்  எப்படி ஒன்று படுத்தமுடியும்?

இந்தக் கோட்பாட்டைத்தான்
முகலாய மன்னர் அக்பர் "தீனே இலாஹி " மூலம் நிறுவ முயன்றார். அதே நோக்கத்தைத்தான் கலீல்
அவுன் மௌலானாவின் தரீக்கத்துல் ஹக்கியா மூலம் சாதிக்க முயலுகின்றார்.

ஷரீஅத் ,  தரீக்கத் ஒழுக்கங்கள் பற்றி எந்த ஒரு குறிப்பும் அவர் நோக்கத்தில் உள்ளடக்கப்படவில்லை.

இந்துக்களின் "யோகா " முக்கிய  செயற்பாடாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்துக்களில் உள்ள " சாயிபாவாவின் மடங்களிலும், இராம கிரிஷன் மெஷனிலும் மீலாத் விழாக்கள் எடுக்கப்படுகின்றன.

இவர்களின் நோக்கமும், தரீக்கத்துல் ஹக்கியாவின் நோக்கமும் கிட்டத்தட்ட நெருங்கி வருகின்றன.

11வது.நோக்கம் இஸ்லாத்திற்கு மாறான இந்துக்களின் பிரம்மாதல் என்பதையும்,பௌத்தத்தின்  நிப்வாணமடைதலையும் ஒத்திருக்கின்றது.

ஆக ,

தரீக்கத்துல் ஹக்கியத்துல்
காதிரிய்யா என்பது இஸ்லாம் சார்ந்த அமைப்பல்ல என்பது அவர்களின்
அறிக்கை மூலம் தெளிவாகி விட்டது.

உலமாக்களே!  முஸ்லிம்களே!

ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் !

Comments

Popular posts from this blog

வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை

வஹாபிய நூரீ ஷா ஸில்ஸிலாவில் 31வது இடத்தில் ஷேகாக வரும்  *வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை*  காஃபிரான அஷ்ரபலி தானவி தன்னுடைய ஹிகாயதே அவ்லியா என்ற நூலில் பெருமையாக எழுதியது

சேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் கொள்கைவாதியா அல்லது கொள்கை ???

சேக் அப்துல்லா ஜமாலி கொள்கைவாதியா அல்லது கொள்கை வேசியா ??? https://youtu.be/jVA8PTOAxzQ சேக் அப்துல்லா ஜமாலி  வாப்பா நாயகத்தை வாயாரப் புகழ்கிறார் .அவரின்  நூலைப்படித்ததாகவும் வாக்குமூலம...

விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்?

"லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  கலீபத்துல் காதிரி ஏ எல் பதுறுதீன் ஷர்க்கிபரேலவி அவர் கள்  "லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  என்று ஒருவர் கூறுவதை பற்றி விளக்கம் கேட்டால் வசைபாடுகின்றனர். வசை பாட முக நூலில் பக்கம் பக்கமாக எழுத முடியும். விளக்கம் சொல்ல முடியாது விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்? எழுதியதற்குரிய விளக்கத்தை கேட்பவர்கள் அஹ்லுல் பைத்தைக்குறை கூறுபவர்களாம். விளக்கம் சொல்ல ஏன் தயக்கம்? வசைபாடுவது அநாகரிகமாப்பேசுவது அபாண்டம் கற்பிப்பது. பிறரைத்தூண்டுவது விரும்பியவிதத்தில் மார்க்க முறனாகப் பேசுவது எல்லாம் அஹ்லுல் பைத்துகளுக்கு ஆகுமான செயல் ? நாகரிகமாகப் பேசி  விளக்கம் சொல்லி நல்வழிப்படுத்து வதெல்லாம் அவர்கள் பணியல்ல! தனிப்பட்ட விவகாரங்கள் பற்றி நாம் பேச வில்லை .அதுபற்றிபேச நாம் விரும்பவும் இல்லை .. இது மார்க்கம். அதிலும் ஈமானோடு தொடர்பானது. "இந்த நூற்றாண்டுக்கும் வருகின்ற நூற்றா...