Skip to main content

Posts

Showing posts from December, 2019

வஹ்ததுல் வுஜூத் கோட்பாடும், மௌலவி அப்துர் றஊபின் வழிகேடும்

வஹ்ததுல் வுஜூத் கோட்பாடும், மௌலவி அப்துர் றஊபின் வழிகேடும் கலீபத்துல் காதிரி  AL. பதுருதீன் ஷர்கி பரேலவி அவர்கள்    ஓர் ஆய்வு"                 வஹ்தத்துல் வுஜூத் கோட்பாட்டையும் , தஸவ்வுபின் நோக்கத்தையும் அறிந்து கொள்வதற்கு பின்வரும் கோட்பாடுகளைக் தெரிந்திருப்பது அவசியமாகும். வாசகர்கள் கவனமூன்றி படிப்பதன் மூலமே இத்தொடரின் உள்ளடக்கத்தை அறியமுடியும் .! இத்தொடரில் வருபவற்றை கிரகிக்கும் திறனில்லாதவர்கள் தயவு செய்து ஒதுங்கி இருப்பது சிறப்பாகும். தொடர்ந்து கோட்பாடுகளைப் படியுங்கள்.! 1)    எதார்த்தமான இருப்பு وجود உள்ள பொருள் அல்லாஹுத்தஆலா உடைய தாத்தோடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.அல்லாஹ் அல்லாத படைப்புகளின் இருப்பு என்பது சுயமாக இல்லாதது. அல்லாஹ் அல்லாதவையின் தாத் சார்பாக ( عرض ஆக)வும் அல்லாஹ்வுடைய வுடையய தாத்தோடு தொடர்புபட்டதாகும். அதாவது , அல்லாஹ்வின் தாத்தைக்கொண்டு நிலைத்து நிற்க கூடியதாகும். 2)    அல்லாஹ்வின் திருநாமங்களும் , படைப்புக் (களான ممكن ) களும்  ( عين ) அல்லாஹ்வின்" தாத்"