Skip to main content

வஹ்ததுல் வுஜூத் கோட்பாடும், மௌலவி அப்துர் றஊபின் வழிகேடும்


வஹ்ததுல் வுஜூத் கோட்பாடும்,

மௌலவி அப்துர் றஊபின் வழிகேடும்


கலீபத்துல் காதிரி AL.பதுருதீன் ஷர்கி பரேலவி அவர்கள்

 


 ஓர் ஆய்வு"


                வஹ்தத்துல் வுஜூத் கோட்பாட்டையும், தஸவ்வுபின் நோக்கத்தையும் அறிந்து கொள்வதற்கு பின்வரும் கோட்பாடுகளைக் தெரிந்திருப்பது அவசியமாகும். வாசகர்கள் கவனமூன்றி படிப்பதன் மூலமே இத்தொடரின் உள்ளடக்கத்தை அறியமுடியும்.! இத்தொடரில் வருபவற்றை கிரகிக்கும் திறனில்லாதவர்கள் தயவு செய்து ஒதுங்கி இருப்பது சிறப்பாகும். தொடர்ந்து கோட்பாடுகளைப் படியுங்கள்.!

1)   எதார்த்தமான இருப்பு وجود உள்ள பொருள் அல்லாஹுத்தஆலா உடைய தாத்தோடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.அல்லாஹ் அல்லாத படைப்புகளின் இருப்பு என்பது சுயமாக இல்லாதது. அல்லாஹ் அல்லாதவையின் தாத் சார்பாக (عرضஆக)வும் அல்லாஹ்வுடைய வுடையய தாத்தோடு தொடர்புபட்டதாகும். அதாவது, அல்லாஹ்வின் தாத்தைக்கொண்டு நிலைத்து நிற்க கூடியதாகும்.

2)   அல்லாஹ்வின் திருநாமங்களும், படைப்புக் (களான ممكن) களும்  (عين) அல்லாஹ்வின்" தாத்"தானுமல்ல ,அல்லாஹ்வுக்கு வேறு(غير)ம் அல்ல! ஆயினும் , இவற்றின் அடிப்படை ஹக்கின் "தாத்" ஆகும்.

3)   அஃயானே தாபிதா என்ற அல்லாஹ்வின் அறிவில் அறியப்பட்டிருந்தவையும், அவனது அறிவும் அல்லாஹ்வின் நாட்டமும்,சக்தியும்  சக்தியும் (ارادة،قدرة) தொடர்பாகுவதற்குமுன்னுள்ள நிலையைக் குறிக்கும்.  அதனால் அவை படைப்புக்கள் அல்ல! அதாவது, "குன்"  என்ற கட்டளைக்கு முன்னுள்ள வை குத்றத்திற்கு முற்பட்டவையாகும்.

4)   அஃயானே தாபிதாவும், வஸ்த்துக்களின்எதார்த்தங் (حقائق)களும் அல்லாஹ்வின் திருநாமங்களின் கட்டுப்பாட்டுக்குட்டவையாகும். இவற்றில் அல்லாஹ்வின் அறிவிலிருந்து வெளிவந்த படைப்பின் வாடைகூட படவில்லை !
5)   "குன்"  என்ற கட்டளைக்கு முற்பட்டவை  அல்லாஹ்வின் அந்தங்க படித்தரங் களைச் சார்ந்தவையாகும்.  "குன்" என்பதற்குப் பின்னுள்வை வெளியான படித்தரங்களானவை.அதாவது படைப்புக்கள் ஆகும்.

6)   அஃயானே தாபிதா , படைப்புக்கள்; உலகத்தின் எதார்த்தங்கள; படைப்புக்களின் இயல்புகள் உள்ளிட்டவையில்அல்லாஹ்வின் பண்புகள், திருநாமங்களின் தஜல்லி வெளிப்படுகிறது. அதாவது, அல்லாஹ்வின் அறிவோடு குத்றத் சேருகிறது.!  இவை இரண்டும் சேர்வதிலிருந்து வெளிப்படுவது படைப்புக்கள்ஆகும் .

7)   அஃயானே தாபிதாவில் என்ன ஒழுங்கு இருந்தோ அந்த ஒழுங்கின் படியே தஜல்லி- வெளிப்பாடு- நிகழும்.!

8)   தொகுப்பான ஹகீக்கத்தின் மீது தொகுப்பான தஜல்லியும், வகுப்பானாதின் மீது வகுப்பான தஜல்லியும் நிகழும்.!  அதாவது, கண்ணாடியின் விசாலத்திற்குத் தக்க அதன் கோலம் இருக்கும். பெரிய கண்ணாடியில் பெரிதாகவும், சிறிய கண்ணாடியில் சிறிதாகவும் வெளியாகும்.

9)   அஃயான், ஹகாயிக்கின்  மூலங்கள் , எதார்த்தங்களில் எவரும் ஏன்?எப்படி? என்று கேள்வி கேட்க முடியாது.

10) தக்தீர் என்ற விதி என்பது உலகில் நடப்பவை யின் செயல் ஒழுங்கு வடிவமாகும். ! அதாவது, அஃயானே தாபிதாவில் உள்ள படிமுறை யின் ஒழுங்குவடிவம் என்பதுதான் முன்னளப்பாகும்.

11) வுஜூத் முத்லக் என்பது  மொத்த நன்மை(خيرمطلق) ஆகும். ஒட்டுமொத்த இன்மை(عدم محض) என்பதுஒட்டு மொத்த தின்மை(شر محض) ஆகும். படைப்பின் வுஜூத் அல்லாஹ்வின் வுஜூதோடு தொடர்பாக இருப்பதால் படைப்பிலிருந்து சில நன்மைகளும் , சில தின்மைகளும் வெளிப்படுகின்றன.
12) படைப்பின் செயல்பாடுகளுக்கு இயல்புத்தன்மையும், எதார்த்தமும் உண்டு.! அவற்றிற்கு அவசியமானவையும், அடையாளங்களும், குணபாடுகளும் இருக்கின்றன. அதாவது அதன் செயல்களுக்கு சட்டங்களும், தீர்வுகளும் இருக்கிறன.

13) அறிவு அறியப்பட்ட வையை பின் தொடரும். அதாவது வஸ்துக்கள் அவனது அறிவில் இருக்கும் ஒழுங்கையே பின்தொடரும்.!

14) எதார்த்தங்கள் பிரளுதல்(انقلاب)  சாத்தியமில்லை.!அதாவது, இன்மை உள்ளமையாகாது. உள்ளமை இன்மையாகாது !

15) அல்லாஹ்வின் அறிவில்இருந்தவையை (ثبوت) படிவம்என்றும்; அறிவிலிருந்து வெளியில் வந்த வையை " வுஜூத்". என்றும் கூறப்படும்.!  சில கட்டங்களில் அறிவில் அஃயானே தாபிதா அறிவுரீதியான வுஜூதையும் " அதம்" இன்மை- என்றும் கூறப்படும்.!  இதனால் அஃயானே தாபிதா என்பது வெளியில் பொருளாக இல்லாததனால் அவை இல்லாதவை யாகும்.!

16) அஃயானே தாபிதாவிலிருக்கின்ற மொத்தமான தகுதிக்கு ஏற்பவே வெளியில் உள்ளவையின் தகுதிகளும் பிறக்கின்றன.

17) ஒவ்வொரு நொடியும், கணமும் வுஜூத்துக்கு அல்லாஹுத்த ஆலா உதவிக்கொண்டிருக்கின்றான்.படைப்புக்கள் ஒவ்வொரு நொடியும் அவன் உதவியை எதிர்பார்த்து வேண்டி நிற்கின்றன. அல்லாஹுத்த ஆலா வானம் பூமிகளை ஆளுகின்றவன்.

18) அல்லாஹ்வின் வெளிப்பாடுகளினாலும், படைப்போடுள்ள தொடர்புகளினாலும் அடிப்படையான அல்லாஹ்வின் வுஜுதில் படைப்பின் தன்மை வராது.!

19) வஸ்த்து (شئ) க்கு இரு குறிப்புக்கள் உள்ளன.

வஸ்த்து (شئ) க்கு இரு குறிப்புக்கள்

v  தாத்தினாலான குறிப்பு. தாத்திலான புறத்தால் ஒரு போதும் மாறுபடாது!

v  பண்பிலான குறிப்பு, பண்பின் காரணத்தால் மாறுபடும்.இதனால், தாத்தின் பகுதிகளிலும், அதன் கோலத்திலும் எதுவித தாக்கமும் வரப்போவதில்லை.!

                               மேற்கண்டவை தஸவ்வுப் மற்றும் வஹ்தத்துல் வுஜூதின் இன்றியமையாத அடிப்படை கோட்பாடுகளாகும். இவற்றைப் பற்றிய அறிவில்லாமல் அத்துறையில் கால்பதிப்பது ஆபத்தாக அமையும்.  வஹ்தத்துல் வுஜூத் பற்றிய நமது தொடரை தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு இவை இன்றியமையாததாகும். இந்த அடிப்படை விதிகள் பற்றிய அறிவின்மையால்தான் மௌலவி அப்துர் றஊப் வழிதவறினார் என்பதை வாசகர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

2
                               வஹ்தத்துல் வுஜூத் கோட்பாட்டில் தன்ஸீஹ், தஷ்பீஹ் முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றன. "தன்ஸீஹ்" என்பது வுஜூதின் பாதின் பகுதியையும், தஷ்பீஹ் என்பது அதன் ழாஹிர் பகுதியையும் குறிக்கும். தன்ஸீஹ் பகுதியில் உள்ள வுஜூதின் நிலைகளில் ஆதியானது  " அமா" வாகும். படைப்புக்களைப் படைக்க முன் அல்லாஹுத்த ஆலா எங்கே இருந்தான் என்று றஸூலுள்ளாஹி சல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்களிடம் கேட்கப்பட்டதற்கு "அமா" விலிருந்தான் என்று விடைபகர்ந்தார்கள்.

"அமா" வைப்பற்றி அல்ஆரிபு பில்லாஹ் அப்துல் கரீம் ஜியலி றஹ்மதுல்லாஹி அலைஹி தனது புகழ் பூத்த " இன்ஸான் காமில்" என்ற நூலில் எழுதியுள்ளதின்  முக்கிய பகுதிகளை தமிழாக்கி வாசகர்கள் முன் வைத்துள்ளேன். முடிந்தவரை இலகு தமிழில் தர முயன்றுள்ளேன்.

இதன் உள்ளடக்கம் ஆழமானதாகையால் கருத்தூன்றி படிப்பதன் மூலமே இதன் உட்கருத்தைப் புரிந்து கொள்ள முடியும்.!  இப்போதுள்ள இளம் மௌலவிமார்கள் நினைப்பது போல் இவ்விடயம் வரலாறு பிக்ஹுபோன்ற கலையல்ல! தஸவ்வுபில் ஆழமான அறிஞரிடமிருந்து கற்பதன் மூலமே இதன் உள்ளடக்கத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

இத்துறையில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களை முற்றிலும் கருத்தில்  கொள்ளாமல்  இத்துறையில் ஈடுபாடும் ஆர்வமும் உள்ளவர்களைக் கருத்தில் கொண்டே இத்தொடரை எழுத விரும்புகின்றேன்.

இத்துறையில் ஆரம்ப நிலையில் உள்ள ஆர்வமிக்கவர்கள் முயன்று கற்றுக்கொள்ள முயற்சிக்குமாறு வேண்டுகின்றேன! எனக்கும் உங்களுக்கும் நேர்வழியையும்ஹக்கைவிளங்கி அதன்படி நடக்க றஹ்மதுன் வில் ஆலமீன் ஷபீஉல் முத்னிபீன் முஹம்மது முஸ்தபா சல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்களின் பொருட்டினாலும், காமிலான  ஷைகுமார்களின் பொருட்டினாலும் தௌபீக் செய்வானாக! என்று பிரார்த்தித்தவனாக விடையத்திற்குள் நுழைகின்றேன்.
وما توفيقي الا بالله العلي العظيم.
    
"அமா" (عماء)

"அமா" என்பது தெய்வீக நிலையின் ஆரம்ப நிலையைக் குறிக்கும். அதனால் "அமா" என்பது அனைத்து எதார்த்தங்களுக்கும் எதார்த்தமாக இருப்பதோடு இருபுள்ள  தாத்துல் முத்லக்குக்கு மட்டும் சொல்லப்படுகின்ற பெயராகவும் இருக்கின்றது.  இதில், ஹக்குடைய மற்றும் படைப்பின் எந்த ஒரு படித்தரங்களும்  சேராது.! இதனைத்தான் றஸூலுள்ளாஹி சல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்களின் பின்வரும் கூற்று சுட்டிக்காட்டுகின்றது.

ان العماء ما فوقه هواء ولا تحته هواء،
"அமா"  عماء என்பது அதற்கு மேலும் ஆகாயம் இல்லை! அதற்குக் கீழும் ஆகாயம் இல்லை"! அதாவதுஅதற்கு மேல் ஹக்கு இல்லை! அதற்குக் கீழ் படைப்பில்லை! " அமா"  என்பது அஹதியத்தின் தரத்தில் இருப்பதாக ஒருவகையில் விளங்கிக் கொள்ளலாம்.

அஹதியத்தில் திருநாமங்(اسماءக்)களும் பண்பு(صفات) களும் இல்லாமல் (வெளியாகாமல்) இருக்கின்றன. அதில் எந்த ஒரு வஸ்துவிலும் அவை அங்கே வெளியாகுவதில்லை.!

அதுபோன்றே "அமா"வின் நிலையில் எப்பொருளும் வெளியாவதற்கான வாய்ப்புமில்லை சாத்தியமுமில்லை!  இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாதெனில், "அஹதியத் "என்பது "தாத்தின்" உயர் தகுதியின் வெளிப்பாட்டை தேடுவதாலும், அதன் வெளிப்பாடாக இருப்பதாலும் " தாத்" அது ஒன்றுதான் (احد)என்ற தீர்ப்பை இங்கே கொடுக்கின்றது..! " அமா" என்பது பொதுவான தாத்தை
مطلق الذات  க்குறிக்கும். இதில் நெருக்கம், உயர்த்தி என்பதையெல்லாம் புரியமுடியாது.! அதனால் "அமா" என்பது தாத்தின் அந்தரங்கம்(باطن) பகுதியாக இருக்கும்..

அஹதியத்தில் எவ்வித வெளிப்பாடுகளும் இல்லாத காரணத்தால்  "ஸறாபத்துத் தாத்" என்பது அஹதியத்திற்கு எதிர் நிலையில் நிற்கின்றது!  அவ்வாறு அஹதியத் "அமா" வுக்கு எதிர் நிலையில் நிற்கின்றது! "ஸறாபத்துத் தாத்" என்றால் அல்லாஹ்வின் தாத்தின் தஜல்லி வெளிப்படையாகுவதை மறைத்தல் என்ற தீர்ப்பைக்கொண்டிருப்பதால் அவ்வாறு கூறப்படும். . அதனால் தான் அஹதியத்தை கன்ஸுல் மக்பியா மறைவான பொக்கிஷம்என்கின்றனர். தனது தாத்திலிருந்து தஜல்லியாவதில், தாத் மறைதல் என்பதும்தாத்மறைவிலிருந்து வெளிப்பட்டது என்பதும் அல்லாஹ்வின் தகுதியைக்குறைக்கும் வார்த்தைகளாக இருப்பதால் இவற்றை விட்டும் அல்லாஹுத்த ஆலா தூயவன்!

அல்லாஹுத்த ஆலாவின் தாத் தஜல்லி, மறைத்தல்அகமாதல், வெளிப்பாடுஷஃன்கள்- கருத்தியலான எண்ணக்கருக்கள்உள்ளிட்டவையோடுள்ள தொடர்பு, نسب,கவனிப்பு اعتبارات க்கள் உள்ளவையிலிருந்து தஜல்லியை அல்லாஹ்வின் "தாத்" தேடுகிறது, அதனால் இவ்வார்த்தைகள் யாவும் எம்மைக் கவனித்துப் பார்ப்பதனாலன்றி அல்லாஹ்வின் தாத்தின் புறத்தால் அல்ல! அல்லாஹ்வின் "தாத்" ஆரம்பத்தில் இருந்த படியே இப்போதும் இருக்கின்றது! அவனின் பண்பில் எவ்வித மாற்றமும் கிடையாது!

"அமா" என்பது தனது தாத்துக்காக அவனே விரும்பிய தனித்த ஒரு தஜல்லி ஆகும். வேறு எவருக்கும் இந்த தஜல்லி நிகழாது  படைப்புக்கு இத்தஜல்லியில் எவ்வித பாத்திபமும் கிடையாது. அதனால் இதில் கவனிப்பு اعتبارات، க்கள்தொடர்புنسب،கள், பண்பு உள்ளிட்ட எதுவித வஸ்த்துவிலும் அது தேவையாவதில்லை . இவற்றில் எதுவும் அதன் தஜல்லியில் உள்ளடங்கவுமில்லை.

இலாஹிய்யத்தான ஏனைய தஜல்லிகள் அது தாத்தியத்தானதாக இருக்கலாம் அல்லது செயல்  தொடர்பான தாக இருக்கலாம் அல்லது ஸிபத்துகள் தொடர்பான தாக இருக்கலாம் அல்லது திருநாமத்தோடு தொடர்பான தாக இருக்கலாம். இவ்வாறு தஜல்லியானாலும் " தாத்" தனக்கான ஒரு ஹகீக்கத்தை தனதாக்கிக் கொண்டுள்ளதுடன் தனது அடியார்களில்தஜல்லியாகுதல், வெளிப்படுதல் என்றகோணத்தில் அது விருப்பங் கொண்டிருக்கின்றது.

இந்த வகையில் "அமா" என்பது அனைத்து குறிப்புக்களும் இல்லாத தனித்த தாத்துக்குரிய முந்திய தீர்ப்புக்குரிய பெயராகும். தாத்தின் அனைத்துத் தஜல்லியாத்துக்களும் , வெளிப்பாடுகளும் இதில் பாதினாக இருந்தன.  இவையனைத்திற்கும் ஆரம்ப அடிப்படையாக இருப்பதும் இதுவே!  அடிப்படை என்பது அஸல் என்ற பொருளே தவிர "மாத்தத்" என்ற பொருளில் அல்ல!

"அமா"  என்பதற்கு "தாத்துல் பஹ்து" "ஜம்உல் ஜம்உ"  "ஹகீக்கத்துல் ஹகாயிக்" என்றும் பல பெயர்கள் உள்ளன. இப்பெயர்களைக்கொண்ட தாத்தில் பண்புகள், வர்ணிப்பு க்கள்; திருநாமங்கள் என்ற கூறிப்புக்கள் வெளியாகாமல் இருப்பதனால்தான்" தாத்துல் முத்தலக்" என்று கூறப்படுகின்றது.!
3
அஹதியத்    احدية
அஹதியத் என்பது "தாத்"  தின் முதலாவது  வெளிப்பாடாகும்.இதில் பண்புகள், திருநாமங்கள் மற்றும் இவற்றின் விளைவுக்குள்ளான (படைப்புகளான) எப்பொருளுக்கும் இங்கே இடமில்லை.அதனால், அஹதிய்யத் என்பது படைப்பு, ஹக்கு ஆகியவற்றின் அனைத்து விதமான கணிப்புக்களை விட்டும் ஒழிந்த தனித்த தாத்துக்கு மட்டுமான பெயராகும்.  அதனால் இதனை "ஸறாபத்துத்தாத்"  "தாத்துஸ்ஸாதஜ்" கலப்பற்ற தாத், என்றும் கூறுவர்.  இது தவிர, அஹதியத்திற்கு இன்னும்பல பெயர்கள் உள்ளன. அவையாவன,

கன்ஸுல் மக்பி, குன்ஹு தாத், மஸ்கூத் அன்ஹு,  "அமா" என்ற இருளிலிருந்து நூர் என்ற ஆற்றல் மற்றும் வெளிப்பாடு என்ற தரப்பிலிருந்து இறங்கிய தாத்தின் முதல் இறக்கமாகும். இவையனைத்தும் தனது பரிசுத்த, ஸறாபத்,தனித்தவைகள், மஹ்ழியத்,கலப்பற்றிருத்தல் மற்றும் அனைத்துபண்புகள்,, திருநாமங்கள், சைக்கினை கள், கவனிப்புக்கள், தொடர்புகள் உள்ளிட்டவைகளைவிட்டும் பரிசுத்தமாக இருப்பதோடு இவையனைத்தும் மறைபொருளாக அதில் இருந்தன. இதனால்தான் இதை " கன்ஸுல் மக்பியா, மறைந்த கருவூலம் என்று கூறுகின்றனர்.

அஹதியத் என்பது தாத்தின் ஒரு தஜல்லியாக இருப்பதால் மறைந்தவையில் எவையும் வெளியாகவில்லை ! அதனால் ஏனைய தஜல்லியாத்துக்களை விட இது உயர்ந்த தரத்திலான தஜல்லியாகும். அஹதியத்  என்பது பொதுமையானது என்ற ரீதியில் பின்னால் அடுத்து வருகின்ற வெளிப்பாடுகளின் தன்மைகளின்" ஐனா"க இருக்கின்றது. இதைப்பின் வரும் உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

சுவர் என்பதில் கல், மண், சீமெண்டு  ( கொங்றீட் ஆயின் கம்பி) உள்ளிட்டவையை உள்ளடக்கியிருக்கின்றது.  இதை தூரத்திலிருந்து பார்க்கின்றவன் அதன் உள்பாகங்களைக்கவனிக்காது சுவரை மட்டுமே காண்கின்றான்.  இதுபோல் தூரத்திலிருக்கும் மனிதனின் அவயங்களையோ பாலினத்தையோ காணாமல் மனிதனின் தனித்த கோலத்தை மட்டுமே காண்கின்றான். இவ்வாறுதான் அஹதியத்தும். அஹதியத்தில் விஷேஷங்கள் என்று எதுவும் இல்லை   . உலூஹிய்யத் கூட இங்கு வெளியாக வில்லை! 

இந்த நிலையில் படைப்பு இங்கே எப்படி வெளியாகும்?
وامتنع الاتصال بالاحدية المخلوق لان الاحدية  صرافة الذات  المجردة  عن الحقيقة والمخلوقية وهو أعني الحق  قد حكم عليه  بالمخلوقية فلا سبيل الى ذلكانسان كامل ،٣٦

அஹதியத்தில் படைப்பு தாத்தின் பண்பை பெறுவது சாத்தியமில்லை ! காரணம் இது ஸறாபத்துத் தாத் - பண்புகள் வெளியாகாத தனித்த" தாத்" ஆகும்.  அதனால் படைப்பு இங்கே தாத்தைத் கொண்டு இலட்சணம் பூணுவதற்காக எந்த ஒரு வழியும் கிடையாது! பண்புகள் அனைத்தையும் விட்டும் ஒளிந்திருக்கும் தாத்திலிருந்து படைப்பு வெளியாவதற்கு ரிய பண்புகள், திருநாமங்களுக்கான கட்டளை இங்கே வரும் என்று மூடனைத்தவிர வேறு எவரும் கற்பனை செய்ய மாட்டான்.
وان ذلك الوجود  من حيث الكنه  اي حقيقة الذات  التي  هي عباره عن المرتبة الاحدية لا ينكشف لا لاحد ولو نبيا مرسلا وملكا مقربا في الدنيا ولا في الاخرة كقوله  تعالى لا تدركه الابصار و هو يدركه  الابصار، و لا يدركه العقل العزيزي  ولاالوهم  ولاالحواس أي المدركات الظاهرة كالباطنة ولا يتأتى معرفة ذلك الكنه فى القياس أي فى قياس العقل والفكر. أي في التقدير  والمساوات بينه وبين المقيس عليه اذ لا يعلم حقيقته الاهولان هذه المذكورات كلهن محدثات والمحدث  أي المخلوق المسبوق بالعدم  ..    التحفة المرسلة ،

துஹ்பத்துல். முர்ஸலாவின் தமிழாக்கத்தை அஷ்ஷைகுல் காமில் அல்ஆரிபு பில்லாஹ் ஷைகுனா ஸூபிஹளறத் நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் தமிழ் வடிவம் இதோ!,

இன்னும் அந்த உஜூதானது "குன்ஹின்"  புறத்தால், அதாவது அஹதியத்துடைய மர்தபாவென்று சொல்லக்கூடியதான தாத்தின் ஹகீக்கத்தின் பூறத்தினால் எவருக்கும் வெளியாகாது. முர்சலான நபியானாலும் சரி, முகர்ரபான மலக்காக இருந்தாலும் சரி, துன்யாவிலும்சரி, ஆகிறத்திலும்சரி " பார்வைகள் அவனை எட்டிக்ககொள்ளாது! அவன் பார்வைகளை எட்டிக் கொள்வான்." என்று அல்லாஹுத்த ஆலா கூறியது போல்ஆனாலும் அதை புத்தியும் , பேதமுற்ற மனமும், இன்னும் புலன்களும் , அந்த கரணங்களைப் போன்று வெளிப்புலன்களான ஞானேந்திரியங்களும் எட்டிக் கொள்ளாது.  குன்ஹை அறிவதானது,ஒழுங்கு பிடிப்பதனாலும் வராது. அதாவது, புத்தியும் ,சிந்தனையும், அதற்கிடையிலுள்ளதும்அதைஎதன்பேரில் ஒழுங்கு பிடிக்கப்படுமோ அதற்கிடையிலும்சம ஒற்றுமை இருப்பதாக ஏற்பாடு செய்து பார்ப்பதிலும் வராது ஏன்அவனுடைய ஹகீக்கத்தை -சுய தட்சொரூபத்தை(தாத்தை) அவனயல்லாது      ( வேறெவரும் ) அறியாரே!
அத்துஹ்பத்துல் முர்ஸலா,
தமிழாக்கம் : பக்: 33  
வழிகேடு:-
மௌலவி அப்துர்ற ஊப் நாற்பது ஆண்டுகளுக்கு  மேலாக வஹ்தத்துல் வுஜுத் கோட்பாட்டைப் போதிக்கின்றார். இக்காலப் பகுதியில் அவர் எழுதிய நூற்களில் அதிகம் பாராட்டப்பட்ட நூற்களில் " துஹ்பத்துல் முர்சலாவும் ஒன்று! அதுபோல் இன்சான் காமில் என்ற நூலும் அவரின் பாராட்டுக்குரியது என்பதில் இரு கருத்தில்லை!,
மேற்கண்ட இரு நூற்களிலும் உள்ளவை தான் ஏனைய நூற்களிலும் உள்ளன. அதனால் நூற்களில் பட்டியல்களை அடுக்காமல் இவ்விரு நூற்களோடு சுருக்கிக் கொண்டோம்.  மௌலவி அப்துர்ற ஊபும் அவரது வாரிசுகளான உலமாக்களும் மாற்றமில்லாமல்" படைப்புக்கள் அல்லாஹ்வின் வுஜூதின், அதாவது அஹதியத்தின் அதாவது ,தாத்துஸ்ஸிருபின் வெளிப்பாடாகும்.  என்று முழங்கி வருவது, ஆரிபீன்களின் கருத்துக்களுக்கும், மௌலவி அப்துர் றஊபின் ஷைகாகிய ஞானமேதை கண்ணியத்திற்குரிய ஸூபி ஹளறத். கத்தஸல்லாஹூ ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் விளக்கத்திற்கும் முற்றிலும் முரணானது என்பதும் வெளிப்படையாகிவிட்டது .!
இதிலிருந்து நாற்பது ஆண்டுகளாக வஹ்தத்துல் வுஜூதின் ஆரம்ப நிலையான " அஹதியத்தைப் பற்றிய அறிவில்லாமலே பிழையான கருத்தை- விளக்கத்தை மக்கள் மத்தியில் முழங்கி வந்தனர்.
இதன்மூலம் தானும் வழிகெட்டு மற்றவர்களையும் வழிகெடுத்துள்ளார். அஹதியத் பற்றிய அவரின் அறியாமை அல்லாஹ்வின் "தாத்து, ஸிபாத்துகள் பற்றிய அறியாமையையும் பகிரங்கப்படுத்துகின்றது. இதன் விபரங்கள் அடுக்கடுக்காக வரும்.!
                   தொடரும்.....

4
நாத்திகன் எதார்த்தம் பற்றி அல்ஆரிபு பில்லாஹ் அப்துல் கரீம் ஜியலி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இன்சான் காமில் என்ற நூலில் குறிப்பிடுவதை தமிழில் முன்வைத்துள்ளேன்.இமாமவர்கள் இறுக்கமான நடையில் சிலேடை யாகவும், சுருக்கமாகவும் விடையத்தை விளக்குகின்றார்கள். தாத்தின் கமாலியத், ஜமாலியத், ஜலாலியத் உள்ளிட்டவையையும் இதைத்தொடர்ந்து விளக்குகின்றார்கள். இமாமவர்களின் விளக்கம் முடிந்த பின்சுருக்கமான அதன் சாரத்தை முன்வைப்போம் இன்ஷாஅல்லாஹ்!

حقيقة الذات.   தாத்தின் எதார்த்தம்.!
முத்லக்குத்தாத் (பொதுவான தாத்) என்பது பண்புகளும், அஸ்மாக்களும் எதன்பக்கம் சேர்த்துக் கூறப்படுமோ அதற்குக் கூறப்படும்.  இந்தச் சேர்மானம் அதன் ஐனில்(ஹுவிய்யத்தில்)  ஆகும். அதன் வுஜூதில் அல்ல!  ஒவ்வொரு திருநாமமும், அல்லது ஒவ்வொரு பண்பும் எந்த வஸ்த்துவின் பக்கம் சேர்க்கப்படுகிறதோ அந்த வஸ்த்துதான் தாத் ஆகும். அந்தப் பொருள் ஆன்றா பட்சி போன்று இல்லாதவை யாக இருந்தாலும் சரி,அல்லது உள்ளதாக இருந்தாலும் சரி! இதை நன்கு புரிந்து கொள்!

உள்ளதாக இருப்பவை இரு வகைப்படும் .
1)   கலப்பில்லாத  எப்போதும் உள்ளதாக இருப்பது.  இது அல்லா ஹுத்த ஆலா வின் தாத்தாகும்.
2)   இன்மையோடு தொடர்பானது.  இது படைப்புக்களின் தாத்தாகும்.

அல்லாஹ்வின் தாத் என்பதன் கருத்து அவனுடைய நப்ஸாகும். அதைக்கொண்டு தான் அவன் உள்ளதாக இருக்கின்றான். என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.இதனால் தன்னைக் கொண்டே நிற்பது அவனது தாத்தாகும். மேலும், தனது ஹுவிய்யத்தில் அஸ்மா, ஸிபாத்துக்களுக்களுக்கு தகுதியாக இருப்பதும் அந்த வஸ்த்துவாகிய தாத்துத்தான். மேலும் ஒவ்வொரு பொருளுக்குமுரிய கருத்தை அதிலிருந்துதேடக்கூடிய ஒவ்வொரு கோலத்தை யும் அது எடுக்கின்றது. அதாவது, ஒவ்வொரு வர்ணிப்புக்களும்  தேடக்கூடிய பண்புகளைக் கொண்டு அது இலட்சணம் பூணுகிறது.

மேலும், தனது இருப்புக்குத் தகுதியான ஒவ்வொரு திருநாமமும் அதன் பூரணத்துவத்துவம் இருப்பதை புரியும்படியானதின் பக்கம் அறிவிக்கின்றது. முடிவு இல்லாமலிருப்பதும், எத்திக் கொள்வதை மறுப்பதும் எத்திக் கொளாவதற்கான பூரணத்துவமாகும். பின்னர், அது எத்திக்கொள்ளப்படாது என்று  தீர்மானமாக்கப்பட்டது.காரணம்  பொதுவாக அதன்மீது அறியாமை என்பது அசாத்தியம் என்பதற்காக!,

இந்த கருத்தை அடிப்படையாக வைத்து பின் வரும் பாடலைப் பாடினேன்.

நீ தொகுப்பு வகுப்பு என்ற விதத்தில் உனது தாத்தின் அனைத்தையும் அல்லது அதன் பண்புகள் அனைத்தின் மீதும் சூழ்ந்து கொள்ளுதல் என்ற வழியின் செய்தியை பொதிந்து கொண்டாயா? அல்லது , அதன் குன்ஹுவை சூழ்வதிலிருந்து உன் திருமுகம் பரிசுத்தமாகிவிட்டதா?
தனது அறிவால் அவனது தாத்தை சூழ்ந்தறிய முடியாது என்பதன் மூலம் அதனை சூழ்ந்தறிந்து கொண்டேன். சூழ்ந்தறிவோர்களிலிருந்து நீ பரிசுத்தமானவன்.
இன்னும் தன்னைப்பற்றி தானே அறியாதவன் என்பதிலிருந்தும் பரிசுத்தமான வன். எச்சரிக்கையும்,தண்டனையும் தடமாற்றமுள்ளவனுக்காகும்.  அதாவது,. அவனை அறிவதிலும், எத்திக்கொள்வதிலும் வரும் தடமாற்றமானது தண்டனைக்குரிய தீர்மானமாக அமையும்.

தெய்வீக தாத்!

அறிந்து கொள்!
அல்லாஹ்வின் தாத் ஆகிறது அஹதியத்தின் மறை பொருளாகும்.  அதன் மீது சகல விசயங்களும் ஒரு விதத்தில் உண்மையாகின்றன.  இன்னும் பல விதங்களில் அதன் கருத்துக்களை முழுமையான விதத்தில் ஒப்புவிக்கமுடியாது. அதன் விளக்கத்தை வார்த்தைகளால் எத்திக் கொள்ளவும் முடியாது. சிலேடைகளாலும் கூட அதனை புரிய வைக்க முடியாது. !  அதனால் ,ஒரு பொருளை  அதற்குப் உடன்படக்கூடியபொருத்தமான தைக்கொண்டு அல்லது அதற்கு எதிர்மறையானதைக்கொண்டு புரிய வைக்க முடியும்.  அல்லாஹ்வின் ஹக்கான  தாத்திற்கு உலகத்தில் நேர்பொருந்தும்படியான துமில்லை! உடன்பாடான பொருளுமில்லை !  மறையானதுமில்லை! எதிரானதுமில்லை! பேச்சு வழக்கில் இருக்கும் கருத்துக்களை பரிபாஷைச் சொற்களின் மூலம் அதன் கருத்தை வெளிப்படுத்துவது தான் சிறப்பானதாக அமையும்.  இதன் மூலம் அல்லாஹ்வின் தாத்தைப பற்றி மக்களால் விளங்க முடியும் என்ற சந்தேகம் நீங்கிவிட்டது.

அல்லாஹ்வின் தாத்தின் விடயத்தில் பேசுபவன் மௌனியாகி விட்டான்.  அதில் துள்ளுபவன் அடங்கி விட்டான். நோட்டமிடுபவன் தட்டழிந்து விட்டான். அறிவாலும், விளக்கத்தாலும் அவனைத் எத்திக்கொள்வதை விட்டும் அவன் மேலாகி விட்டான். இதில் தனது விளக்கமும், சிந்தனைகளும் வித்துவம் காட்டி விளையாடுவதை விட்டும் அவன் பரிசுத்த மாகி விட்டான். அவனுடைய  குன்ஹு தாத்தின் எதார்த்தத்தில் அறிவு பூர்வீகம் என்ற பேச்சுக்கள் சம்பந்தப்படாது.

நுட்பமான எவ்வித மகோன்னத எல்லையோ உயர்ந்த பாராட்டலோ அதனை ஒன்று சேர்க்காது. இந்த பரந்த வெட்ட வெளியில்  பரிசுத்தமான பறவை அதன் சிறகை விரித்து பறந்து விட்டது.  அதி உச்ச தகுதி மிக்க வானின்  வெட்ட வெளியில் தனது முழுப்பலத்துடன் அது நீந்திக் கொண்டிருக்கின்றது. பின்னர் உலகத்தை விட்டும் அது மறைந்து விட்டது. பின்னர் எதார்த்தம் என்ற வழியில் திருநாமங்கள், பண்புகள் என்ற ஆடையை கிழித்தெறிந்து விட்டது.

புதிது , பூர்வீகம் என்ற தூரத்தை துண்டித்துக் கொண்ட பின், அதற்கு (எப்பொழுதும் உள்ளதாக இருப்பது ) "வாஜிப்"  என்று கண்டு கொண்டது. அது உண்டாகுவதும் ஆகாது.அது இழப்பதும் மறையாது. பின்னர் தலையை மழித்துக் கொண்டு  இன்மை (அதம்) என்ற வெளியில்  பறக்கத் தொடங்கியது.

படைப்பு பிரபஞ்சம் என்ற உலகத்திற்குத் திரும்பி வருவதற்கு நாடிய போது அடையாளத்தைத் பெற்றுக் கொள்வதைத் தேடியது.  பின்னர், அதன் நெஞ்சின் மத்தியில் அம்மா பஃது امابعد  என்று எழுதப்பட்டது.

ஓ! இரகசியமானவனே! உனக்குரிய எதுவித தாத்துமில்லை! பெயருமில்லை! நிழலுமில்லை! அடையாளமுமில்லை! றூஹுமில்லை! உடலுமில்லை! இலட்சணமுமில்லை! வர்ணிப்பு மில்லை! எந்தவிதமான அடையளமுமில்லை.! எந்தவிதமான முகவரியுமில்லை. ! உனது தகுதி இதுதான்! உனக்கு இருப்புமுண்டு இன்மையும் உண்டு ! உனக்குத்தான் பூர்வீகமும், புதிதுமாகும்.  இல்லாதிருப்பது உனது தாத்துக்குத்தான்.  இருப்புள்ளதாக இருப்பது உனது நப்ஸிலேயே!  நீ எமது அருளில் அறியப்பட்டவர் .தனது இனத்தில் இல்லாதவர்
(5)
ஹுவிய்யத்,هوية

ஹுவிய்யத் என்பது அஹதிய்யத்தின் குன்ஹு தாத்தின் அந்தரங்கத்தைச் சுட்டிக்காட்டும் சொல்லாகும். இது ஒருபோதும் வெளிப்படாது. எப்போதும் மறைவாகவே இருக்கும். வாஹிதிய்யத்தில் அல்லாஹுத்த ஆலாவின் திருநாமங்களும், பண்புகளும் வெளிப்படும். அப்போது அவற்றின் பாதின்- உள்ளரங்கத்தின் பக்கம் இது சைக்கினை செய்யும்.  வாஹிதிய்யத்தில் உள்ள பண்புகள், திருநாமங்களில் மொத்தத்திலும், சில்லறையிலும் சுட்டிக்காட்டும். அதனால், ஹுவிய்யத் எப்போதும் மறைவானவற்றின் மீதே சுட்டிக்காட்டும்.

ஹுவிய்யத் என்பது هو என்ற சொல்லிலிருந்து வந்தது . இச்சொல்  படர்க்கையைக் குறிக்கும். குன்ஹு தாத்தில் திருநாமங்களும், பண்புகளும் மறைந்திருந்திருப்பதின் பக்கம் சுட்டிக்காட்டுவதால் هو என்று கூறப்படுகின்றது. ஹுவிய்யத் என்பது கலப்பற்ற தாத்தைக் குறிக்கும். இதில் வுஜூதியத்தானதும், ஷுஹூதிய்யத்தானதுமான சகல கமாலியத்- பூரணத்துவம்களும் அதில் இருக்கின்றன. ஆயினும் அவையாவும் மறைவாக இருப்பதால் அவற்றை அடைந்து கொள்ள முடியாது.

படர்க்கையிலிருக்கும் ஒன்றை அல்லது ஒருவரை அடைய முடியாது என்பதனால் தான் هو غائب அவர் மறைவாக இருக்கின்றார் என்கின்றோம்.  மறைவும், சாட்சியும் நம்மை ஒப்பிட்டே தவிர அல்லாஹ்வை ஒப்பிட்டல்ல! இவையிரண்டும் அல்லாஹுத்த ஆலாவின் விடயத்தில் சமமாகும். அல்லாஹுத்த ஆலாவின் ஹுவிய்யத்தை எம்மால் பூரணமாக எத்திக்கொள்ள முடியாது என்பதனால் தான் மறைவாகும்.  அதனால் அல்லாஹுத்த ஆலாவைக்காட்சி காண முடியாது என்பது கருத்தல்ல! எழுத்தில் புள்ளி மறைந்து கொண்டு அனைத்திலும் ஊடுருவியிருக்கின்றது.

சடம் என்பது மனிதன், மிருகம், வானம், பூமி,தாவரம் உள்ளிட்ட அனைத்திலும் உருவி மறைத்திருக்கின்றது. உயிர் என்பது மனிதன் மிருகம் அனைத்திலும் சமனாக ஊடுருவியிருக்கின்றது. மனிதன் என்ற சொல் அனைத்து ஆண் பெண்ணிலும் ஊடுருவியிருக்கின்றது. பேச்சில், மூச்சில் காற்று மறைந்திருக்கின்றது. அப்படியிருந்தும் மேற்கண்ட அனைத்திலும் பொதுமையை காணமுடியாது.! ஆனால் ,அது அனைத்திலும் தானாக ஊடூருவியிருப்பதை மறுக்க முடியாது.மனிதர்கள் செறிந்து இருப்பதைப் பார்த்துஎங்கு பார்த்தாலும் மனிதன் தான் இருக்கின்றான் என்கின்றான். உண்மையில் அங்கு இருப்பது மனிதனில் தனிநபராகும்.மனிதன்-இன்சான்-என்பது எல்லோரிடமும் ஊடூருவி மறைந்திருக்கும் பொதுமையாகும்.  எங்கு பார்த்தாலும் மனிதனிதன்தான் இருக்கின்றான் என்பதில் இன்சான் என்ற பொதுமையைப் புரிவது போன்று , எங்கு நோக்கினாலும் அல்லாஹ்வின் திருமுகம் இருக்கின்றது என்பதில் அவனுடைய குன்ஹு தாத்தின் வுஜூத்- ஹுவிய்யத்- இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.!.

இன்சான் என்பது தனிநபரில் மறைந்திருந்து போல் ஹுவிய்யத்தும் படைப்பில் ஊடுருவி மறைந்திருக்கின்றது.! இதைப்புரியாமல் கண்ணுக்குத் தெரிபவை யாவும் அல்லாஹ்வின் தாத்துத்தான் என்று கூறினால் அல்லாஹ்வுக்கு சடத்துவப் பண்பைக் கற்பித்து ஷிர்க்கு செய்த குற்றம் வரும்.
நஊதுபில்லாஹ்!

வழிகேடு-
மௌலவி அப்துர்ற ஊப் ஹுவிய்யத்தின் உட் பொருளைப் புரியாமல் சடங்களை அல்லாஹ்வின் தாத் என்கின்றார். இது கடைந்தெடுத்த ஷிர்க் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகம் கிடையாது.!  வஹ்தத்துல் வுஜூத் பேசுவதாகக் கூறிக்கொண்டு ஷிர்க், குப்று சகதியை முகத்தில் பூசிக்கொண்டு பெருமையடிக்கின்றார். இவரின் மாய்மாலத்தைப் புரியாமல் ஏமாந்து செல்கிறது ஓர் அப்பாவிக் கூட்டம்.
6
அன்னியத்,    انية

கலப்பற்ற தாத் (தாத்துஸ்ஸிர்பிஸ்ஸாதிஜி) அதன் கலப்பற்ற நிலையிலிருந்துஅதன்  ஒப்பற்ற நிலை நீங்காத நிலையில் கீழ் இறங்கும் போது அதற்கு மூன்று வெளிப்பாடுகள் இருக்கும். 

1.   அஹதியத்:-
எதுவிதமான பண்புகள், திருநாமங்கள், மற்றும் வேறுவிதமான சேர்மானங்கள், கவனிப்புக்கள் எதுவும் இங்கு வெளியாகாது.!

2.   ஹுவிய்யத்:-
இங்கு அஹதிய்யத்தைத் தவிர்த்து வேறு எவ்விதமான வெளிப்பாடும் இல்லை . ஹுவிய்யத் கலப்பற்ற தாத்துஸ்ஸதாஜத்தோடு தொடர்பாக இருக்கும். ஹுவ هو, என்ற சொல்லால் மறைவான தின் பக்கம் சைக்கினை செய்வதால் அதன் வட்டம் அஹதியத்தை விட குறைவாக இருக்கும்.

3.   அன்னிய்யத் :-
இதுவும் மேற்படி அஹதிய்யத், ஹுவிய்யத் போன்று வெளிப்பாடுகள் இல்லாமல் கலப்பற்ற தாத்தோடு இருக்கின்றது. இதில் ஹுவிய்யத்தைத் தவிர்த்து வேறு எந்த ஒன்றினுடைய வெளிப்பாடும் கிடையாது.

அன்னியத் என்பது நான் என்ற பொருளைக் குறிக்கும்.  இச்சொல் தன்மையைக் குறிப்பதனாலும், நம்மோடு நெருக்கமாக இருப்பதனாலும் ஹுவிய்யத்தை விட குறைந்ததாகும். இந்த வகையில், ஹுவிய்யத், அஹதிய்யத்தின் பாதினாகும். அதுபோல் அன்னியத்திற்கும் பாதினாகும்.  மேலும் அன்னிய்யத் ஹுவிய்யத்தின் ழாஹிறாகவும் இருக்கின்றது.

அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.
انه أنا الله لااله الا أنا
"நிச்சயமாக அவனாகிறவன் நானாகிய அல்லாஹ்வாக இருக்கும். என்னையன்றி வேறு இலாஹ் இல்லை!"
இதில் هو , அவன், என்பதுஹுவிய்யத்தை சுட்டுகிறது. அந்த அவன் هو என்பது நான் انا ஆகும்.அதாவது ஹுவ هو என்பது அன انا என்ற அல்லாஹ் வாகும். இந்த வகையில்அன்னியதின்ஐனாக இருப்பதோடு ஹுவிய்யத் அன்னிய்யத்தில் புரியும் படியாக வெளியாகியுள்ளது.
ஹக்கின் ழாஹிர் அதன் பாதினின் ஐன்ஆகும். அதன் பாதின்அதன் ழாஹிரின் ஐன் ஆகும்.  தவிர, ஒரு கோணத்தில் ஜாஹிர் வேறு இன்னுமொருகோணத்தில்  பாதின் வேறு என்பதல்ல!
பாதினும்,. ழாஹிரும் எதிரும் புதிருமான வை . இவை இரண்டும் ஒரே  இடத்தில் இருப்பதை புத்தி ஏற்காது.  இந்த மாற்றத்தை அகற்றவே மேற்படி திருவசனத்தில்" நிச்சயமாக". ان، என்ற சொல்லைப் பாவித்து உறுதிப்படுத்தினான். ஹுவிய்யத், அன்னிய்யத் என்ற முரண்பாடான இரண்டும் அல்லாஹ் என்ற திருநாமத்தைக் கொண்ட  உலூஹிய்யத்தை அறிவிக்கின்றன.

வஹ்தத்
அல்லாஹ்வின் தாத்துல் முத்லக்கின் ஹுவிய்யத்திலிருந்து வெளிவந்த முதல் இறக்கம், அல்லது மர்தபாவை " வஹ்தத்" என்று கூறப்படும்.

இதற்கு பல பெயர்கள் உள்ளன. அவையாவன,
ஹகீக்கத்துல் முஹம்மதிய்யா, நூறுல் முகம்மதிய்யாஹகீக்கத்துல் ஹகாயிக்மகாமு அவ் அத்னா, பர்ஸகுல் குப்றா, அக்லுல் அவ்வல்உள்ளிட்ட இன்னும் பல பெயர்கள் உள்ளன.

" அல்லாஹுத்த ஆலா முதன் முதலில் எனது ஒளியைப் படைத்தான். எனது ஒளியிலிருந்து ஏனைய அனைத்தையும் படைத்தான். "
" அல்லாஹுத்த ஆலா முதன் முதலில் அக்லைப் படைத்தான்."
" அல்லாஹுத்த ஆலா முதன் முதலில் கலமை ( எழுது கோலை)ப் படைத்தான். "
உள்ளிட்ட ஹதீதுகள் யாவும் இதையே குறிப்பிடுகின்றன.

                          அல்லாஹ்வின் பண்புகள் திருநாமங்கள் மற்றும் உலூஹிய்யத், றுபூபிய்யத் ஆகிய வற்றின் வெளிப்பாட்டின் மூலமாக இருப்பது "வஹ்தத்" என்ற  ஹகீக்கத்தே முஹம்மதிய்யா , நூறே முகம்மதிய்யாவாகும்.  இவற்றுள் பொதிந்திருக்கும் பொதுமையைப் புரிந்து கொண்டால் இதன் ஒத்த கருத்தின் உள்ளார்த்தம் புரியும்.

ஒளி:- என்பது தானும் வெளியாகி மற்றவற்றையும் வெளியாக்குவதற்குக் கூறப்படும். இந்த மர்தபாவில் அல்லாஹ்வின் பண்புகளும் அவனது ஹுவிய்யதும் மொத்தமாக வெளியாகியிருக்கின்றன. இதில் அவனது தாத்து வெளியாகி அவனது பண்புகளையும் வெளியாக்கி இருப்பதால்  ஒளி என்று கூறுவதற்கும் தகுதியாக இருக்கின்றது.
இந்த ஒளி றஸூலுள்ளாஹி சல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்களின் றூஹின் எதார்த்தமாக இருப்பதால் ஹகீகத்தே முகம்மதி என்றும், இந்த ஹகீகத்திற்கு மூலமாக ஒளியிருப்பதால் நூறே முகம்மதி என்றும் கூறப்படும்.

அறிவு வெளிப்படும் பகுதி "அக்லு" புத்தியாக இருப்பதாலும்புத்தியிலிருப்பதை வெளிப்படுத்தும் சாதனமாக எழுது கோல் " கலம்" இருப்பதாலும் சிலேடையாக இச்சொற்கள் பாவிக்கப்படுகின்றன. வார்த்தைகள் பலதாயினும் கருத்து ஒன்றேதான்.! "வஹ்தத்"  என்ற மர்தபா- படித்தரம்- அஹதிய்யத்திற்கு நெருக்கமாக இருப்பதாலும்  , ஸிபாத்துக்கள் விபரமாக வெளியாகிமலிருப்பதாலும் இதனை" வஹ்தத்" தனித்து என்று கூறப்படுகின்றது.

மேலும், வஹ்தத், அஹதியத்திற்கும், ஸிபாத்துக்கள், அஸ்மா க்கள் வெளியான வாஹிதிய்யத்திற்கும் நடுவிலிருப்பதாலும், இரண்டையும் பிரிக்கும் கோடாக இருப்பதாலும் இதனை" பர்ஸக்". என்றும், காப கௌசைன், என்றும், அவ் அத்னா என்றும் கூறப்படும்.
                     " நான் மறை பொருளாக இருந்தேன். நான் அறியப் படவேண்டும் என்று ஆசைப்பட்டேன். படைப்புக்களைப் படைத்தேன்."  என்று ஹதீதுக்குத்ஸியில் றஸூலுள்ளாஹி சல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்கள் கூறினார்கள்.

இங்கு மறைபொருள் என்பது அஹதிய்யத்தாகும்.  "படைப்புக்களைப் படைத்தேன்." என்பதில் படைப்புக்களை அவனது அறிவில் மொத்தமாக அறிந்ததைக் குறிக்கும்.  அதாவது, வஹ்தத்தின் மர்தபாவில் அவனது வுஜூதை அறிந்தான். இந்த அறிவு இலங்கியது. அது ஒளியாகும் அந்த ஒளியில் தன்னை க்கண்டான்.அது வுஜூதாகும். அதோடு ஒன்றித்தான் அது காட்சி, ஷுஹூது ஆனது.

                        அதாவதுதனது தாத்தைக் கொண்டே தனது தாத்தின் வுஜூதை அறிந்தான்.தனது தாத்தைத் கொண்டு தனது தாத்திலே தனது தாத்தை அறிந்தான். தனது தாத்தில் மறைந்திருக்கும் படைப்புக்களைப்பற்றிய தொகுப்பான அறிவாகிய ஷுஊனாத்துகளையும் அறிந்தான். அவனுடைய தாத்தைத் கொண்டு பிரகாசித்ததாகவும், பிரகாசிக்கப் பட்டதாகவும் கண்டான்.   இங்குள்ள யாவும் ஹக்கு தஆலாவின் அறிவில் பிரியாமல் தொகுப்பாக இருந்ததால் இத்தொகுப்பை "இல்முல் இஜ்மாலி "- தொகுப்பான அறிவு என்று கூறப்படும். தொகுப்பான அறிவில் எண்ணிக்கையில்லாமலும் பன்மையாக இல்லாமலும் இருந்ததனால் இதை "வஹ்தத்" எனப்படுகிறது.
                       அஹதியத்திற்கு முன் எதுவும் இல்லாததால் அதாவது அவனுடைய தாத் மட்டும் இருந்ததைக் கவனித்து  தாத்தை " அஹது" என்று கூறப்பட்டது. அஹது என்பது இலக்கத்திற்குள் வரமாட்டாது. காரணம், இலக்கம் என்பது இரு ஓரங்களின் கூட்டுத் தொகையின் சரி பாதியாகும்.  அஹதியத்திற்கு முன் எதுவுமில்லாத தால் "அஹது" என்பது இலக்கத்திற்குள் வராது.
                        மௌலவி அப்தூர் றஊப் கூறுவது போல் " அஹது என்றால் ஏகமாக இருப்பவன். வாஹிது என்றால் ஒருவனாக இருப்பவன் என்பதல்ல! அது அவரின் சுய விளக்கமே தவிர ஸூபியாக்களின் விளக்கமல்ல!

வஹதத்தின் மர்தபாவில் உள்ள ஷுஊனாத்துகள் தான் விபரமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இச்சுஊனாத்துகளுக்கு ஹுவிய்யத் ஐனாகும்.  அல்லாஹாவின் அறிவிலிருந்து பிரியாத தனால் இவற்றில் படைப்பின் வாடை படவில்லை. அதனால் இவற்றைக் கதீம் என்று கூறப்படும். இவை பிரியாமலிருப்பதால் இவற்றை அஃயான்கள் என்றும் கூறப்படாது. மரம் கொம்பு, பூ, காய் உள்ளிட்டவை வித்தில் பிரியாமலிருப்பது போல் இங்குள்ளன. வித்தில் உள்ளவை தான் மரத்தில் வருவது போன்று ஷுஊனாத்தில் உள்ளவைதான் அஃயானுத்தாபிதாவில் விபரமாக வெளியாகும். அதுதான் படைப்பாக வெளிவரும்.  அல்லாஹ்வின் தாத்தைக் கவனித்து வுஜூத் ஒன்றாகும். ஷுஊனாத்துக்களைக் கவனித்து பலதாகும். அவையனைத்திற்கும் தாத்- வுஜூத்- என்ற ஒருமை ஐனாகும்.

கவனிப்பில் பன்மையும், எதார்த்தத்தில் ஒருமையும் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
7
வாஹிதிய்யத் واحديت-

"வஹ்தத்"  என்ற மர்தபாவில் பல எண்ணக் கருக்கள்  விபரமாக வெளியாவதற்கு தகுதியான  ஆற்றல் நிலையில் (بالقوي) இருந்தன. இதற்கு "ஷுஊனாத்" என்று கூறப்படும்.இதற்கு அடுத்த நிலை ஸிபத்துக்களும், அஸ்மா க்களும் விபரமாக வெளியானமர்தபாவாகும்.  இதற்கு "வாஹிதிய்யத்" என்று கூறப்படும்.! ஸிபாத்துக்களில் முதன்மையானதும் விசாலமானதுமான ஸிபத்துக்கள் மூன்று! இவற்றை உம்முஹாத்துஸ் ஸிபாத்  امهات الصفات பண்புகளின் தாய்! , எனப்படும்.
அவையாவன,
1)   ஹயாத்,حيات،  . ஜீவன்
2)   அறிவுعلم،
3)   சக்தி ،   قدرة
இவற்றில்  கேள்வி, பார்வை , ஆகியவை அறிவுக்குரிய இரு உதவியாளர்களாகும். இதுபோல், நாட்டம், பேச்சு ஆகியன சக்தியின் உதவியாளர்களாகும்.
இந்த வகையில்,
1-   ஜீவன், 2- அறிவு, 3- கேள்வி, 4- பார்வை 5- சக்தி, 6- நாட்டம், 7- பேச்சுஇவையாவும் உம்முஹாத்துஸ் ஸிபாத்துக்கள் ஆகும். !
அல்லாஹ்வின் அறிவில்  கருத்துப் படிவங்களாக இருக்கின்ற معلومات களை "அஃயானுத் தாபிதா" எனப்படும். இவை அல்லாஹ்வின் அறிவிலும்   "குன்". என்ற கட்டளைக்குள் வராததாலும் இவை கதீம் பூர்வீகமாகும்.  அஃயானே தாபிதாவில் உள்ளவை தங்களை அறியாத நிலையில் ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிரிந்து  இருக்கின்றன. இவ்வாறு உணர்வு (வுஜூது)இல்லாமல் தவிக்கும் அஃயானே தாபிதா அல்லாஹுத்த ஆலா விடம் வுஜூதை வேண்டி மண்றாடுவது போல் அதன் நிலை காணப்படுகின்றது. அப்போது அல்லாஹ்வின் றஹ்மத்  விரைவாக வந்து வுஜூதை வழங்குகிறது.

இந்த நிலையை ஷைகுல் அக்பர் இப்னு அரபி றஹ்மத்துள்ளாஹி அலைஹி அவர்கள் كرب பெருமூச்சு விடுதலுக்கு! ஒப்பாக்கிக் கூறுகின்றார்கள்.
இந்தக் கருத்தில் தான் மூஹ்யத்தீன்   மௌலிதில்
اذما اراد اله العرس ذي العظم
تنفيس كرب اساميه اولى الحكم،

மகத்துவமிக்க அர்ஷுடைய நாயன் நாடிய போது, ஞானமிக்க அவனது திருநாமங்களை பெருமூச்சாக விட்டான்.! அஃயான்களின் வேண்டுதல்களின் பின் ஹக்கு த ஆலா அவற்றின் பக்கம் கவனத்தைச் செலுத்தினான்.  இதுவே பார்வை بصر ஆகும். அஃயானே தாபிதாவின் விதிகளையும், அதன் தகுதிகளையும் அறிந்தது கேள்வியாகும். அஃயான்களை موجود படைப்பாக ஆக்குவதற்கு தனது அஸ்மா க்களின் தஜல்லியாத்துக்களின் பக்கம் கவனம் செலுத்தியது. சக்தி قدرت ஆகும். பின், நாட்டத்தின் மூலம் குறிப்பிட்ட வுஜூதின் பக்கம் கவனம் செலுத்தப்படுகின்றது. இதன் பின் குறிப் பாக்கப்பட்ட வுஜூதைப் பார்த்து  ஆகு! كن  என்று கூறுகின்றான். இது பேச்சாகும்.  كلام،   இவையனைத்தும் சேர்ந்தே படைப்புக்கள் வெளி வருகின்றன.

 "குன்" என்ற கட்டளைக்குப் பின்புதான் படைப்பு பிறக்கிறது.  அதனால் இதை كلمةالله  அல்லாஹ்வின் வாக்கியம் என்று கூறப்படும். வாக்கியம் என்பது தனித்தனியான ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத எழுத்துக்களின் இணைவாகும். எழுத்துக்கள் இணைந்த பின் வாக்கியமாகின்றது. தனித்தனியான வாக்கியங்கள் பின்னர் பெயராக ஆகின்றன. இப்பெயர் சொல் கள் காலத்தோடு சேரும் போது  செயலாக ஆகின்றன.  ج-ع-ف-ر- இந்த நான்கு எழுத்துக்களும் தனித்தனியான கருத்தில்லாத மூலங்களாகும். பின்னர், இவை இணையும் போது جعفر என்றாகின்றது. இவ்வாறே سالم،خالد, சாலிம், காலித் என்று கணக்கற்ற சொற்கள் உருவாகின்றன..  இவை ஒவ்வொன்றும் தனித்தனியான தாகும். இவை காலத்தோடு  சேராவிட்டால் இவற்றை اسم பெயர்ச் சொல் எனப்படும். 

உண்டான், நடந்தான், படிப்பான், என்பதில் காலம் தொடர்பாகுவ தால் இச்செயலை இறந்த காலம், எதிர் காலம் என்று கூறுகின்றோம். மனிதன் பேசும் போது  உச்சரிப்பின் தானத்தில்மூச்சை ஆழுத்தி வெளிப்படுத்தும் போது  வார்த்தை. كلمة வெளியாகிறது. படைப்பை செவ்வையா க்குவதில் உள்ள கவனம் نفس الرحمن  நப்ஸுர் றஹ்மானின் இடத்திலும், உச்சரிப்பு க்கள் இறைவனின் திருநாமங்களின் இடத்திலும் இருக்கின்றன. இந்த வகையில் சகல படைப்பும்  كلمة الله அல்லாஹ்வின் வார்த்தைகளின் இடத்தில் இருக்கின்றன.

இதை வெளியாகுவதிலுள்ள வேகம் , அழுத்தத்தின் காரணமாகவே அல்லாஹுத்த ஆலா மூச்சு விட்டான். அஃயான்கள் அல்லாஹுத்த ஆலாவிடமிருந்து பெற்ற فيض அருளை  நப்ஸுர் றஹ்மான் نفس الرحمن  எனப்படும். ஏனெனில், றஹ்மான் என்ற பண்பிலிருந்துதான்அல்லாஹுத்த ஆலா அருள் புரிகின்றான்.  பண்புகளும்,திருநாமங்களும் அஃயான்களும், ஹகாயிக் களும் வுஜூதைப் பெற்று உலகத்தின் கோலத்தைப் பெறத் துணை செய்வது றஹ்மான் பண்புதான்.

உலகத்தின் கோலங்கள் ஹக்கு த ஆலாவின் ழாஹிர்- வெளிப்பாடாகும். அதனுள் மறைந்து (باطنஆக) இருப்பதும் அவன்தான்.  படைப்புக்கள் உண்டாகுவதற்கு முன் அவன்தான் இருந்தான். அதனால் அவன்தான் اول، முதல்வன்.  படைப்புக்கள் இல்லாமல் போன பின்பும் அவன் மட்டுமே இருப்பான் அதனால் அவன் أخر இறுதியானவன்.

உலகத்தின் கோலங்கள் வெளியான போது அவற்றின் ஐனாக அவனே இருந்தான். எனவே, ஐனின் இறுதி வெளியாப்பாடும்அவனே!. அதன் ஆரம்பம் باطن அந்தரங்கமாகும்.  وهو بكل شئ عليم،   அவன் அனைத்து வஸ்த்துக்களையும் அறிகின்றவனாக இருக்கின்றான். அவன் அவனை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். இதை அடுத்து உலூஹியத், முல்கியத் பற்றிய விளக்கம் வரும் இன்ஷா அல்லாஹ்!

அறியாமை! :-
மௌலவி அப்துர்ற ஊப் வுஜூதின் மர்தபாக்களைப் பற்றிய அறிவில் சூனியமாக இருக்கின்றார். அதனால்தான் அஹதியத்தில் தனது தாத்தைப்பார்த்து" குன்" என்று கூறினான் என்று உளறுகிறார்.  இவரின் இந்த கூற்றுக்கு ஸூபிகளின் எந்த ஒரு நூலிலிருந்தும் கியாமத் நாள் வரை அவரால் ஆதாரம் காட்ட முடியாது .!  அவர் அதிகமாக ஆதாரம் காட்டும் நூலைக் கூட முழுமையாக வாசிக்க வில்லை.!  அதனால் தான் மூலமில்லாமல் படைப்பை  வெளியாக்குவது எப்படிஎன்று கேள்வி எழுப்புகிறார்.? அடுத்த தொடரில் "குன்" என்ற கட்டளையின் இருப்பிடத்தை ஆதாரங்களுடன் பதிவிடுவோம்.  அப்போது அவரின் நூலாய் வின்  திறமை வெளிச்சமாகும். இன்ஷாஅல்லாஹ் !

இத்தொடர் இறுக்கமான கருத்துச் செறிவோடு செல்வதால் கருத்தூண்டிப் படிக்கவும்.
8

உலூஹிய்யத். ,الوهية

உலூஹியத்தைப்பற்றி இன்சான் காமில் என்ற நூலில் அல் ஆரிபு  பில்லாஹ் அப்துல் கரீம் ஜியலி றஹ்மதுல்லாஹி அலைஹி பின்வருமாறு விளக்குகின்றார்கள்.! வுஜூதின் அனைத்து எதார்த்தம்(حقائق) களும் அதன் மர்தபாவில் அது வைத்திருக்கும் பார்வைக்கு "உலூஹிய்யத் "என்று கூறப்படும்.  அதாவது வுஜூதின் எதார்த்தங்களின் வெளிப்பாட்டின் அதி உச்ச வெளிப்பாடுக்குரிய பெயராகும்.

"உலூஹிய்யத்" என்பது இலாஹிய்யத்தான படித்தரங்களையும், படைப்பின் படித்தரங் களையும் உள்ளடக்கியுள்ளது!. வுஜூதின் படித்தரத்திலிருந்து வெளிப்படுகின்ற ஒவ்வொன்றுக்குமுரிய பாத்திரத்தை உலூஹிய்யத் வழங்குகிறது. "அல்லாஹ்" என்ற திருநாமம் உலூஹிய்யத்தின் மர்த்தபாவுகுரிய. "றப்பா"கும்.  ( அதனால் அல்லாஹ் என்ற திருநாமத்தை றப்புல் அர்பாப் என்றும் கூறுவர்)

 உலூஹிய்யத் என்ற படித்தரம்  வாஜிபுல் வுஜூதாகிய தாத்துக்கு மட்டும்   சொந்தமான உயர்ந்த படித்தரமாகும். அதனால், அனைத்து வெளிப்பாட்டிலும் உலூஹியத்  பொதிந்திருக்கும். இதனால், உலூஹிய்யத் ஒவ்வொரு பண்பையும் , அல்லது ஒவ்வொரு திருநாமத்தை யும் அது கண்காணிக்கும்.  இந்த  வகையில் உலூஹிய்யத்தின் கண்காணிப்பில் அனைத்து திருநாமங்களை விடவும் அஹதிய்யத் முதன்மையாக இருக்கின்றது.

இதன் பின்,அஸ்மாக்கள்,ஸிபத்துக்கள் வெளியான முதல் படித்தரம்  "வாஹிதிய்யத்" ஆகும். வாஹிதிய்யத்தில் உள்ளடங்கியிருக்கின்ற சகல படித்தரங் களிலும் உன்னத இடத்திலிருப்பது "றஹ்மானியத்" என்ற படித்தரமாகும். றஹ்மானிய்யத்தின் உயர்ந்த படித்தரம்  "றுபூபிய்யத்". இரட்சகன்,ஆகும். "றுபூபிய்யத்"தின் உயர்ந்த படித்தரம் றுபூபிய்யத்தின் திருநாமமாகிய  "முல்கியத்"   அரசாட்சி,ஆகும்.

இந்த வகையில், மில்கிய்யத், றுபூபிய்யத்திற்கும், றுபூபிய்யத், றஹ்மானிய்யத்திற்கும், றஹ்மானிய்யத்,வாஹிதிய்யத்திற்கும், வாஹிதிய்யத், அஹதிய்யத்திற்கும், அஹதிய்யத் உலூஹிய்யத்திற்கும் கீழ் இருக்கின்றன.

இந்த வகையில் உலூஹிய்யத், வுஜூத் வுஜூத் அல்லாத (படைப்பு) ஆகியவற்றின் எதார்த்தங்களை உள்ளடக்கியிருப்பதோடு அவை ஒவ்வோன்றிற்குமான ஹக்கையும் வழங்குகின்றது. வுஜூதின் எதார்த்தங்களுக்குள் அஹதிய்யத்தும் உள்ளடங்குவதால் , உலூஹிய்யத், அஹதிய்யத்தை விட உயர்வானதாக இருக்கின்றது.

இதனால்தான்  "அல்லாஹ்" என்ற திருநாமம்  அனைத்து திருநாமங்களை விடவும் உயர்வாக இருக்கின்றது. அஹதிய்யத்தில் எந்த ஒரு ஸிபத்துகளும் வெளியாக மாட்டாது.  காரணம் இது தாத்துக்கு மட்டுமான பெயராகும்.  அதனால் அஹதிய்யத்தில் தஜல்லியாத் என்பது (மும்தனிஃ)- சாத்தியமே இல்லை! அப்படியிருக்க படைப்பு வெளியாகுவ து எப்படி சாத்தியமாகும்?

 ( மௌலவி அப்துரா றஊபுக்கும், அவரின் ஊதுகுழல்களுக்கு மட்டும் சாத்தியமாகிறது! )

فان الاحدية ذات محض  لا ظهور لصفة فيها  فضلا عن ان يظهر فيها  مخلوق  فامتنع نسبتها الى المخلوق  من كل وجه  فما هي الا القديم القائم بذاته
انسان كامل:. صف-٣٤

இதனால், உலூஹிய்யத்திற்கு எதுவும் மறைவதில்லை. அனைத்தையும் அல்லாஹுத்த ஆலா ஊடுருவி அறிகிறான்.   வுஜூதும், அதமும் நேர்மாறானது. ஆனால் உலூஹிய்யத் இவை இரண்டையும் சூழ்ந்திருக்கின்றது பூர்வீகம்புதிது,  ,  சிருஷ்டி, சிருஷ்டிக் கர்த்தா (ஹக்கு) வுஜூது, அதம், உள்ளிட்ட நேர் எதிர்மறையானவையை உலூஹிய்யத் சேகரமாக்கிக் கொண்டுள்ளது. இதில் வாஜிபான பண்பு தனது முகத்தைத் காட்டி எதிரானவையை விலக்கிக் கொள்கிறது. மும்தனிஃ இருக்கத்தகாத பண்பு தனது கோலத்தைக் காட்டி வாஜிபின்  நிறத்தில் வெளிப்படுகிறது. அப்போது "ஹக்கு" படைப்பின் கோலத்தில் வெளிப்படுகின்றது.

 இதனை பின்வரும் ஹதீதில் உதாரணமாகக் கூறப்பட்டுள்ளது.
رأيت ربي في صورة شاب امرد

முகத்தில் அரும்பு வெளிப்படாத  இளவலின் கோலத்தில் எனது இரட்சகனைப் பார்த்தேன்.

இதேபோல் ஹக்கு, படைப்பின் கோலத்தில் வெளியாகியதை
خلق  أدم علي صورته

ஆதத்தை தனது கோலத்தில் படைத்தான். என்று ஹதீது குறிப்பிடுகின்றது.இதன் பொருள்உலூஹிய்யத் நேர் எதிர் மறையான பண்புகளை சேகரமாக்கியிருப்பது போல் ஆதமும் - (மனிதனும், )- நேர்எதிர்மறையான பண்புகளைக் கொண்டிருக்கின்ற நிலையில் படைக்கப் பட்டுள்ளார்கள்

உலூஹிய்யத் நேர்எதிர் மறையானவையை உள்ளடக்கிக் கொண்டு அவை ஒவ்வொன்றுக்குமான ஹக்கை - பாத்திரத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றது. உலூஹிய்யத்தில் "ஹக்" என்ற திருநாமத்தின் வெளிப்பாடு பரிபூரணமான தாகவும் அதி உயர்வாகவும் காணப்படுகின்றது. ( அதனால்தான் வானம், பூமி உள்ளிட்டவை ஹக்கைக்கொண்டு நிலைத்திருக்கின்றன என்று திருக்குர் ஆன் கூறுகிறது. ) உலூஹிய்யத்தில் படைப்பின் வெளிப்பாடு அதற்குத் தகுதியான அனைத்து கருமங்களோடும் இருக்கின்றது.  அதாவது,அழிப்பது, மாற்றுவது,உண்டாக்குவது, (ஆக்கல், அழித்தல்) என்ற வகைகளோடு சேர்ந்திருக்கின்றது.

உலூஹிய்யத்தில் வுஜூதின் வெளிப்பாடு என்பது, அதன்  பூரணத்தோடு  ஹக்கு, படைப்பு ஆகிய இரண்டிலும் அவற்றின் தகுதிக்குத் தக்க வகையில்  ஒவ்வொன்றிலும் இருக்கின்றது.  உலூஹிய்யத் வெளியாகாது என்பது  தாத்துஸ்ஸறாபத்தின் பாதினைக். குறிக்கும்.  இதை புத்தியால் புரிய முடியாது!  தௌகிய்யத்தான அனுபூதி(கஷ்பு)  அறிவால் மட்டுமே விளங்க முடியும்.

அல்லாஹ்வை அறிந்த ஞானிகள் அதிகம் அஞ்சுவதும் இங்குதான்.   (உலூஹிய்யத்தின் வெளிப்பாடுகள் இரகசியமானவை, மறைவானவற்றின் சாவி இங்குதான் உண்டு! இதனை இல்முல் மக்னூன்- மறைக்கப்பட்ட ஞானம்என்பர், மக்று என்பதும் இதன் வெளிப்பாடுதான். மக்று என்றால் மறைமுகமான தீர்மானமாகும். மரணவேளையில் வரும் முடிவும் இவ்வகையைச் சார்ந்ததே!)
இந்த வகையான உலூஹிய்யத்தின் பண்பின் பக்கம் சாடை காட்டி றஸூலுள்ளாஹி சல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
أنا اعرفكم بالله واشدكم خوفا منه،

நான் உங்களை விட அதிகமாக அல்லாஹ்வை அறிந்தவன். இன்னும் அவனை அஞ்சுவதிலும் உங்களைவிட நான் அதிகம் உறுதியானவனாகும். இங்கே றஸூலுள்ளாஹி சல்லல்லாஹூ அலைஹி வசல்லமவர்கள் றஹ்மானோடோ, அல்லது, றப்போடோ அஞ்சுவதாகச் சொல்லவில்லை.  அவர்கள் அஞ்சுவது அல்லாஹ்விடம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பின்வரும் கூற்றும் இதேவகையைச் சேர்ந்ததுதான்..
ما ادري  ما يفعل بي ولا بكم،
என்னை எப்படிநடாத்தப்படும் ? உங்களை எப்படி நடத்தாட்டப்படும் ? என்பதை நான் அறியேன்.  இத்தனைக்கும் நபியவர்கள் அனைத்து படைப்பிலும் அல்லாஹ்வை அதிகம் அறிந்தவர்கள்.அவனதே செயற்பாட்டின் தன்மைகளை நன்கு அறிந்தவர்கள். " நான் அறியேன்" என்பதன் பொருள்,

அல்லாஹ்வின் தஜல்லியில் வெளியாகும் கோலம் எது? வெளியாகாத கோலம் எது? என்பதை நான் அறியேன்.  அவை அவற்றின் சட்டத்தோடுள்ளதாக இருக்கும். அதனால், அவனின் தீர்ப்பை மாற்ற யாராலும் முடியாது.  இதை அறிந்தாலும் சரி, அறியாவிட்டாலும் சரி!  அதுபற்றிய அறிவு இல்லாத மூடனாக இருந்தாலும் சரிமுட்டாள் இல்லாமலிருந்தாலும் சரி!

அல்லாஹ்வின் தஜல்லியின் விபரத்தை அறியக்கூடய எந்த ஒரு வழியும் கிடையாது!  அல்லாஹ்வின் விடயத்தில் இது சாத்தியமற்றதாகும். ஆயினும், சில வேளை அல்லாஹுத்த ஆலா மொத்தமாகவும், மூடலாகவும் தஜல்லியாகுவான்.   அவற்றில் மொத்தமான ,மூடலான என்ற விதத்தில் அத்தஜல்லிக்கான சட்டங்களை அறிந்து கொள்ள  காமிலான மகான்களால் முடியும். இம்மகான்களின் தகுதிகளில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும். அவர்களுக்கு தஜல்லியான மூடலானவற்றில் எந்தளவு அவர்களுக்கு விளக்கமானதோ ஆந்தளவே அறிவார்கள். இவற்றில் ஆரீபீன்களில் மேலானவர்கள் எந்தளவு அறிந்து கொள்கிறார்கள் என்பது அல்லாஹுத்த லாவின் நாட்டத்தில் உள்ளதாகும்.

உலூஹிய்யத் தைக் கண்ணால் காண முடியாது.! அதன் விளைவை காணலாம்.அதைவைத்து அதற்குரிய சட்டத்தை அறிய முடியும். அதன்அடையாளத்தைத் காணமுடியாது.!  தாத்துக்கு கூறிப்பிட்ட ஓரிடம்  இல்லையாயின் வெளியில் காணமுடியும். ஆனால் அதன் விதத்தைக் கூற முடியாது.!

உதாரணமாக, பலவிதமான பண்புள்ள ஒரு நபரை நீங்கள் பார்ப்பதாக வைத்துக்கொள்வோம்.  அந்த நபரிடம்அந்த பண்புகள் எல்லாம் இருப்பதை அறிவாலும்,நிர்ணயத்தாலும் தெரிந்து கொள்கிறான்.ஆனால் அப்பண்புகளின் எந்த ஒரு "ஐனை"  யும் அறிய முடியாது!    அவரின் தாத்தை (வெளிக்கோலத்தை) மொத்தமாக வெளியில் பார்க்கின்றீர்கள்.!  அவரில் மறைந்திருக்கும் ஆயிரமாயிரம் பண்புகளை உங்களால் காணமுடியாது.

இதனால், வெளிக்கோலத்தைக் காணமுடியும்.  பண்புகளைக் காணமுடியாது!  பண்புகளில் அவற்றின் விளைவை - ( அடையாளத்தை-) த்தவிர வேறு எதனையும் காணமுடியாது! இதன்மூலம் பண்பு ஒட்டியிருக்கும் தாத்தையும் ஒருபோதும் காணமுடியாது! இது அனைவரும் மாற்றமில்லாமல் ஏற்றுக்கொண்ட சூத்திரமாகும்.!

உதாரணமாக, யுத்தகளத்தில் ஒரு வீரனின் சாகசங்களையே காணமுடியும்! இதுவீரமல்ல! வீரத்தின் அடையாளம்!  ஒரு கொடைவள்ளலிடம் கொடையைக் காணமுடியாது அவர் கொடுப்பதையே காணமுடியும்.  இது கொடை, ஈகையின்அடையாளமாகும்.  அதுவே கொடையல்ல!  காரணம், பண்பு தாத்தில் மறைந்துள்ளது! அது வெளிப்படவேண்டுமாயின் தாத்திலிருந்து அதை வேறுபடுத்த வேண்டும். இது சாத்தியமில்லை இவ்வாறு இன்சான்காமில் நூலில் வரையப்பட்டுள்ளது.

மேற்பட்டவையின் சாரம் வருமாறு,

உலூஹிய்யத் என்பது ஜீவன், அறிவு, சக்தி, கேள்வி, பார்வை, நாட்டம் , பேச்சு உள்ளிட்ட உம்முஹாத்துஸ்ஸிபாத்துக்கள் சேர்ந்திருக்கும்  தாத்திற்கான பெயர்  ஆகும். இதனையே " அல்லாஹ்" என்று கூறுகிறோம். அல்லாஹ் என்ற திருநாமம் அனைத்து ஸிபாத்துகளையும், அஸ்மாக்களையும் உள்ளடக்கியிருப்பதால் இதுவே இஸ்முல் அஃழமாகும்.

உலூஹிய்யத்துதான் பாதினான மர்தபாக்களையும், ழாஹிறான மர்தபாக்களையும் ஆளுகிறது.  அதன் தீர்மானங்களில் சிலதை அறியலாம். பலதை அறிய முடியாது.
உலூஹிய்யத்தின் தீர்மானங்கள் ஸிபத்தின் விளைவாகக்காணலாம் தவிர, தாத்தையோ, ஸிபத்தையோ காணமுடியாது!

அல்லாஹ்வின் பண்புகளில் அல்லாஹ்வுக்குச்சொந்தமானவையும் உண்டு! அடியார்களுக்கும், அல்லாஹ்வுக்கும் கூட்டானதுவும் உண்டு! அல்லாஹ்வின் பண்புகளில் உலூஹிய்யத்திற்குரிய பண்புகள்  غني،صمد،  ஙனிஸமது, ஆகிய இரு பண்புகள் மட்டுமாகும்.   இவ்விரு பண்புகளும் அவனது ஏனைய பண்புகளை சுயமான வகையாக அறிவிக்கின்றன.  படைப்புக்களின் தாத்தும் , ஸிபாத்துகளும் அல்லாஹ்வின் வுஜூதைக்கொண்டு இயங்குவதால் அவை சுயமற்றவை . அல்லாஹ்வால் வழங்கப்பட்டவை!

அல்லாஹ்வின் தீர்மானங்களில் மறைக்கப்பட்டவைகளை(இல்முல் மக்னூனை) அல்லாஹ்வையன்றி வேறு எவராலும் அறிய முடியாது!  அதனால், அதன் வெளிப்பாட்டையும், அதையொட்டி வருகின்ற தீர்மானத்தையும்பற்றி நபிமார்கள் உள்ளிட்ட சகல மகான்களும் அஞ்சுவர்.

உலூஹிய்யத்தின் எதார்த்தம் அனைத்து படைப்பிலும், அல்லாஹ்வின் ஏனைய படித்தரங்களிலும் ஊடுருவியிருப்பதால் அவன் யாவற்றையும் நன்கு அறிகிறான். உலூஹிய்யத் எதிரும் புதிருமானவையில் தொடர்பாக இருப்பதால்  நல்லவர், தீயவர்களின் செயலைப் படைத்து அதற்குரிய தீர்ப்பையும் செய்கிறது.


9
றுபூபிய்யத் -ربوبيت

படைப்புக்களின் வுஜூத் தங்களின் இருப்புக்கும், வாழ்வுக்கும் அவசியம் என்று எதிர்பார்க்கின்ற திருநாமங்களின் படித்தரத்திற்குரிய பெயராகும். இதன் கீழ் عليم، سميع، يصير قيوم، مريد ،ملك  உள்ளிட்ட பண்புகள் உள்ளடங்கும். இவற்றில் ஒவ்வொரு திருநாமமும் அதோடு தொடர்பானதைத் தேடும்
உதாரனம்:- அலீம், அறிவுள்ளவன், அறியப்பட்டதையும், சக்தியுள்ளவன், சக்திக்குட்டத்தையும், நாடுபவன் நாடப்பட்டதையும் தேடும். இவ்வாறே ஏனைய திருநாமங்களையும் ஒப்பு நோக்குக!

" றப்பு" என்ற திருநாமத்திற்குள் இருவகையான திருநாமங்கள் உள்ளன.
1)   படைப்போடும், படைத்தவனோடும் கூட்டாக தொடர்பானவை,
2)   படைப்போடு மட்டும் குறிப்பாக தாக்கம் செலுத்தத் கூடியவை.

கூட்டான திருநாமங்களுக்கு உதாரணம்  عليم،- அறிவுள்ளவன்.  இத்திருநாமம் நப்ஸிய்யத்தான திருநாமமாகும். அதாவது, தன்னையும் அறிவான். படைப்பை யும் அறிவான். سميع- தனது நப்ஸ் கூறுவதையும் கேட்பான். தானல்லாதவர்களின் பேச்சையும் கேட்பான்.بصير، தன்னையும் பார்ப்பான். தன்னல்லாதவற்றையும் பார்ப்பான். இவ்வாறான திருநாமங்கள் கூட்டானவையாகும். கூட்டு என்பதன் கருத்து, இப்படியான திருநாமங்கள் ஒரு பக்கத்தில் அல்லாஹ்வின் பக்கம் குறிப்பாக இருக்கும். மறுபக்கத்தில் அடியார்கள் பக்கம் பார்வையைச் செலுத்தும்.  அடியார்கள் பக்கம் தொடர்பான திருநாமங்கள் செயலோடு தொடர்பானவை யாகும்.
உதாரனம்:- காலிக், خالق، படைப்பவன். உலகைப் படைத்தான் என்போமே தவிர, தன்னைப்படைத்தான் என்று கூறமாட்டோம்.
" றாஸிக்"رازق இரணமளிப்பவன்படைப்புக்கு இரணமளித்தான் என்போமே தவிர, தனக்கு இரணமளித்தான் எனக் கூறமாட்டோம்.
காதிர், قادر ஆற்றல் மிக்கவன் , படைப்பில் ஆற்றலைப்பிரயோகித்தான் என்போமே தவிர, தன்னில் ஆற்றலைப் பிரயோகித்தான் எனக்கூறமாட்டோம்.  இப்படியான திருநாமங்கள் படைப்புக்களோடு மட்டும் சொந்தமானவை..

படைப்புக்களோடு தொடர்பான திருநாமங்கள் யாவும்  "மலிக்" ملك ஆட்சியாளன் என்ற திருநாமத்திற்குக் கீழ் இயங்குபவை யாகும்.  "மலிக்"ملك  என்பது படைப்போடு தொடர்பான செயலோடுள்ள படித்தரத்திற்குரிய பெயராகும். ."றப்பு" رب  என்பது, அல்லாஹ்வோ டும், படைப்போடும் கூட்டான வையோடும், படைப்போடு மட்டும் குறிப்பானதோடும் உள்ள படித்தரத்திற்கான பெயராகும்.

இந்தவகையில்,  "றப்பு"رب  என்ற திருநாமம் படைப்பையும், படைத்தவனையும் பொதிந்து இருக்கிறது. "றஹ்மான்رحمان, " றப்பு" رب ஆகிய இரண்டு திருநாமங்களிலும் பின்வரும் வேற்றுமை காணப்படுகின்றது.  " றஹ்மான்"رحمان என்ற திருநாமம்,الهية இலாஹிய்யத்தான உயர் பண்புகளோடு குறிப்பான வை. இவற்றில் " தாத்" ذات மட்டும் தனித்திருந்தாலும் சரி, உ+ம்- அழீம், عظيم، فرد பர்து, அல்லது கூட்டனதாக இருந்தாலும் சரி,
உதாரனம்:- அலீம், عليم،பஸீர்بصير அல்லது, படைப்போடு மட்டும் குறிப்பான தாக இருந்தாலும் சரி, காலிக், றாஸிக், خالق، رازق "றஹ்மான்" رحمانஎன்ற  திருநாமத்திற்கும், "அல்லாஹ்!"الله என்ற திருநாமத்திற்கும் உள்ள வேற்றுமை வருமாறு,  "அல்லாஹ்!"الله என்பதுபடைப்புக்களில் மேலான, தாழ்ந்த ,அனைத்திற்குமானحقائقஹகாயிக்குகளைப் பொதித்திருக்கின்றது.  றஹ்மானியத்தும் رحمانيت இவ்வாறு பொதிந்திருந்தாலும், றஹ்மானியத்الوهيت உலூஹிய்யத்திற்குக் கீழ் இயங்குவது குறிப்பிடத்தக்கது.  இந்த வகையில், றப்பு ربஎன்பது, றஹ்மான் رحمانஎன்ற ஸிபத்திற்கு க் கீழும், ملكமலிக் என்ற திருநாமம் "றப்பு" ربஎன்ற திருநாமத்திற்குக் கீழும் செயல்படுகின்றன.

றுபூபிய்யத்ربوبيت றஹ்மானியத்தின் பண்புகள் வெளியாகும் தானமாக இருப்பதால் றுபூபிய்யத் றஹ்மானிய்யத்தின் عرشஅர்ஷாக இருக்கின்றது. இந்த வகையில் றஹ்மானியத் றுபூபிய்யத்தின் ஊடாகவே படைப்பில் பார்வையைச் செலுத்துகிறது.

றஹ்மானிய்யத் என்ற தொடர்பின் மூலமாகவே அல்லாஹ்வின் தொடர்பு சீராகிறது.  றஸூலுள்ளாஹி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் கூறினார்கள்.
أنه وجد الرحم اخذ من حقو الرحمن . றஹ்முக்குரிய வுஜூது றஹ்மானின் மத்தியிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

றஹ்மானியத் மூன்று விதமான திருநாமங்களைப் பொதிந்திருக்கின்றது.
1)   ஹக்கிற்கு மட்டும் தனித்துவமானது.
2)   ஹக்கும், படைப்பும் கூட்டனது.
3)   படைப்போடு மட்டும் குறிப்பானது.

றுபூபிய்யத், ஹக்கு, படைப்பு இரண்டையும் கூட்டாகச் சேர்க்கும் திருநாமங்களைக் கொண்டது . இந்த வகையில் றுபூபிய்யத் மத்தியில் வருவதைக் காணலாம். எனவே, றஹ்மு رحم   றஹ்மானின் மத்தியிலிருந்து கொண்டு றப்பு(இரட்சகன்) மர்பூபு( இரட்சிக்கப்பட்டபடைப்பு) க்கிடையில்  தொடர்பை ஏற்படுத்துகின்றது.

இதனால் இரட்சிக்கப் படுகின்றவை யில்லாத எந்த ஒரு றப்பையும் காணமுடியாது. இந்த உறவின் மூலமாகவே அல்லாஹ்வுக்கும், அடியானுக்குமிடையிலான உறவு அவசியமானதாகின்றது. இங்கு றுபூபிய்யத் மத்தியிலிருந்து கொண்டு றஹ்மானின் தொடர்பை கொண்டிருப்பதை கவனியுங்கள்.!  அல்லாஹுத்த ஆலா படைப்போடு தொடர்பாகுவது முக்கியம் என்பதிலிருந்து ஒரு பொருள் மற்றுமொருபொருளோடு சேர்ந்திருப்பது போன்று அல்ல! அல்லாஹுத்த ஆலா இவையாவற்றையும் விட்டும் பரிசுத்தமானவன்.

றுபூபிய்யத் என்றால் என்ன?

 றப்பு ( رب )  என்பதற்கு தப்ஸீர் பைழாவியில் பின்வருமாறு வரைவிலக்கணம் கூறப்பட்டுள்ளது
الرب : في الأصل مصدر بمعنى التربية وهي تبليغ الشئ الى كماله شئا شئا ،

" றப்பு" என்பது வளர்த்தல் என்ற பொருளைக் கொண்ட ஒரு வேர்ச்சொல்லாகும். அதாவது, "ஒரு பொருளை அதன் பூரணத்துவத்தின் பக்கம் கட்டம் கட்டமாக அடையச் செய்வதாகும். ஒரு பொருள் அதன் உள்ளமைப்புக்கள் தேவைகள், வாழ்க்கைத்தன்மை ஆகிய வற்றிற்குப் பொருத்தமுள்ள முறையில் விருத்தி பெறலும், அதனதன் இறுதியான  பூரண நிலையைப் படிப்படியாக அடைவதற்காக அதற்குத் தகுந்த  சூழல் நிலை யைஅளித்தலுமான முன்னேற்றம் என்பது இதன் சொல்லர்த்தமாகும்.

இதன்படி, றுபூபிய்யத் என்பது ஒருவரது பூரணமான முன்னேற்றத்திற்காக வேண்டப்படுவன எல்லாம் பெற்றுக் கொள்ளும்படியாக  ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு நிலையிலும்அன்பும் கவனமும் நிறைந்ததொரு வளர்ப்புத் திட்டம் எனப் பொருள்படும். மேலும், இச்செயல் முறையானது அன்பும் அனுதாபமும் நிறைந்ததாக இருத்தல் வேண்டும். ஏனென்றால், இவை இல்லாத நிலையிலுள்ள எத்தகைய இயக்கத்தையோ செயலையோ றுபூபிய்யத் எனக்கூற முடியாது.

உதாரணமாக  ஒரு தாய் குழந்தை பிறந்த நாள் தொட்டு அது குமரப்பருவம் அடையும் வரை  தாயானவள் தன் குழந்தையை வளர்த்துப் பாதுகாக்கின்றாள். குழந்தையின் வயிறு பாலைத் தவிர வேறொன்றையும் ஏற்காத நிலையில் அதற்குப் பால் மட்டும்  வழங்கப்படுகிறது.  பின்னர் , சற்று கடினமான உணவை ஏற்கும் நிலை வந்த போது அது வழங்கப்படுகிறது.  குழந்தை தன்கால்களின் உதவியால் நிற்க முடியாத  பருவத்தில் தாயானவள் தான் செல்லுமிடமெல்லாம் தூக்கி சுமந்து கொண்டுசெல்கிறாள். பின்னர், அந்தக் குழந்தைக்கு உட்காரவும், எழுந்து நிற்கவும்  சக்தி வந்து விட்டால், தாயானவள் அதன் விரலைப் பிடித்துக்கொண்டு, அக்குழந்தை  ஒவ்வோர் அடியாக எடுத்து வைக்க உதவி செய்கிறாள்.

இவ்வாறு ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் வளர்ப்பிற்குரிய எல்லா வசதிகளையும் சங்கிலித் தொடர் போன்று செய்து கொடுக்கும் செயல் முறையே  " றுபூபிய்யத்"  எனப்படுகின்றது.  இவ்வாறு மழை பொழியும் காலத்தையும் கவனித்துப் பாருங்கள்.! முதலில் நிலத்தை உழுது பண்படுத்துவதற்கு நன்கு ஏற்ற விதமாக விட்டு விட்டு தேவையான அளவு மழை பொழியும்.

பின்னர் சிறுது  இடைவெளி விட்டு, விதை தூவப்பட்ட பின், தூறலாகவும் இலேசாகவும் மழை பெய்யும்.  பயிர் ஒரளவு வளர்ந்த பின் சற்று கடினமாக மழை பெய்யும். பின்னர் சிறிது இடைவிட்டு தேவைக்கு ஏற்றாற்போல் மழை பெய்யும்.  வேளாண்மை குடலைப்பருவம் ஆகும் போது  தொடர்மழை  பொழியும். இதன்பின் கதிர் வெளிவரும்போது மாலையில் மழை பெய்யும். பின்னர் இடைவிட்டு சற்று அதிகமாக மழை பெய்யும்.  கதிர் முற்றி மஞ்சள் நிறம் வந்த போது மழை முற்றாக நின்று கடுமையாக வெயில் இறைக்கும்.

இங்கு பயிர் முழைத்ததிலிருந்து முற்றும் வரை அதன் நிலைக்கேற்ப விதத்தில் அதன் பூரணம் வரை கட்டம் கட்டமாக வளர்க்கப்படுகிறது. இதுவே றுபூபிய்யத் ஆகும். ஒரு தாய் குழந்தை பிறந்ததிலிருந்துதான் பாராமரிப்பை தொடங்குகிறாள்.  ஆனால் றுபூபிய்யத் கற்ப அறையில் ஆணின் கரு  நுழைந்ததிலிருந்து ஆரம்பிக்கின்றது. குழந்தை பிறப்பதற்கு முன்பே தாயின் மார்பகத்தில் அதற்கான அமுதை பருவத்திற்கேற்ற விதத்தில் சுரக்க வைக்கின்றான். குழந்தை வயிறு கனமான ஆகாரத்தை ஏற்கும் பக்குவம் வந்த போது தாயின் மார்பில் பாலை வற்றச்செய்கிறான். பால் குழந்தையின்  வயிற்றில் புகுந்த பின் அதைச்சீரணிக்கச்செய்து உடலுக்குச் சக்தியை வழங்குவது றுபூபிய்யத்தின் செயலாகும்.

அல்லாஹுத்த ஆலா எதுவித கடப்பாடுமின்றி கருணையின் அடிப்படையிலே அவனது இரட்சிப்பு தொடர்கிறது.  அல்லாஹ்வின் இரட்சிப்பு இருவிதமாக வெளியாகின்றன.  சில அனைவருக்கும் பொதுவானவை.  உதாரணமாக, காற்று, வெயில், மழை, நிலம் வானத்தின் நிழல் வேறுசில அருட்கொடைகள் குறிப்பானவை  உதாரணம்-.  செல்வம், குழந்தை, கண்ணியம், ஆட்சி,

மனிதனால் வெளி உறுப்பைக் கவனிக்கலாம். ஆனால் உயிர்வாழ்வதற்கு அவசியமான உள்ளுறுப்புக்களை அல்லாஹ்வே அவனது இரக்கத்தினடிப் படையில் இரட்சிக்கின்றான். உலகின்  இயக்கம் யாவும் அஃயானே தாபிதாவில் அவனுடைய அறிவில் அமைந்த ஒழுங்கின் அடிப்படையில் செயல்படுகின்றன.
அஃயானே தாபிதாவில் றுபூபிய்யத்தின் அந்தரங்கத்தை புரியாத காரணத்தினால் தான்  வஹ்தத்துல் வுஜூத் பேசப்போய் குப்று, ஷிர்க்கை முகத்தில் பூசிக்கொண்டு பெருமையடிக்கின்றனர்.அதனால், வஹ்தத்துல் வுஜூத் கோட்பாட்டின் இரகசியத்தைப் புரிவதற்கு றுபூபிய்யத்தின் அந்தரங்கத்தையும், அது செயல்படும் விதத்தையும் அறிதல் அவசியமாகும். இதற்காகவே றுபூபியத் என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றிய சிறிய அறிமுகத்தைத் தந்தோம்.  இதை மனத்தில் பதித்துக் கொண்டு அடுத்து வரும் விளக்கத்தைப்படிக்கத் தயாராகுங்கள்.இன்ஷாஅல்லாஹ்!

றுபூபிய்யத்தின் அகமியம்.!

வஜூதின் இறக்கத்தில் மூன்றாவது நிலை  "வாஹிதிய்யத்" ஆகும். இந்த மர்தபாவில் தெய்வீக திருநாமங்கள், உலகத்தின் திருநாமங்கள் இங்கு வெளியாகின. இத்திருநாமங்கள் இந்த மர்தபாவில் விபரமாக வெளியாயின. இவ்வெளிப்பாடுகள் அல்லாஹ்வின் அறிவிலேயே இருந்தன. அறிவில் இருந்த இந்த பதிவுகளை ஸூபியாக்களின் பரிபாஷை யில்  "அஃயானே தாபிதா" அல்லது, "அஃயானே மும்கினா"என்று கூறுகின்றனர்.

அஃயானே மும்கினாத்.:இதை ஸூறத்தே மும்கினாத், படைப்பின் கோலங்கள் என்றும் கூறப்படும். அதாவதுஉலகத்தின் மொத்தமான கோலங்களின் எதார்த்தங்கள் அல்லாஹ்வின் அறிவில் பதிவாகியிருக்கின்றன. அறிவின் கோலங்களுக்குமறு பெயர்" ஹகாயிகுல் அஷ்யாஹ்" என்றும் கூறப்படும். இவ்வாறு அஃயானே தாபிதாவுக்கு "மஃலூமாதுல் ஹக்"  என்றும் கூறப்படும்.  அல்லாஹ்வின் அறிவில் உலகத்தின் எதார்த்தம் களை அவனுடைய அறிவில் அறிந்து கொண்டதை " மஃலூமாத்"என்று கூறப்படும்

அஃயானே தாபிதாவில் உள்ள தனித்தனியான ஒவ்வொரு இஸ்முக்கும் தனித்தனியான தஜல்லி வெளியாகும். இவ்வாறு தஜல்லியாகும் இஸ்மை ஸூபியாக்களின் பரிபாஷையில் " றப்பு" என்று கூறுவார்கள். இந்த வகையில் சகல அஸ்மாக்களும் " அர்பாபுகளாகும்". அஃயானே தாபிதாக்கள் அனைத்தும் அவற்றினால் இரட்சிக்கப்படக்கூடிய" மர்பூபாத்" – இரட்ஷிக்கப் – பட்டவையாகும்.காரணம், அஃயானே தாபிதாவில் ஒவ்வொரு  வஸ்த்துவும் மற்ற வஸ்த்துக்களை விட்டும் பிரிந்து தனித்தனியாக இருக்கின்றன. அதனால் தஜல்லியாகும் வஸ்த்து தஜல்லியாகாத வஸ்த்துவுக்கு வேறாக இருக்கின்றது.

இந்த வகையில், இந்த தஜல்லியாத்துக்கள் அஃயானே தாபிதாவுக்கும், இலாஹிய்யத்தான திருநாமங்களுக்குமிடையில் தொடர்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றன. இத்தஜல்லியாத்தின் தொடர்பு வுஜூதின் செயலின் பக்கம் திரும்பும் போது அத்திருநாமத்தின் பெயர் " றப்பு" ஆகும்.அஃயானே தாபிதாவில் உண்டாயிந்தது வெளியில் வரும்போது அவை இந்த றப்பால் வளர்க்கப்படக்கூடியதாக இருக்கும்.

இதன்படி, ஒவ்வொரு வஸ்த்துவுக்கும் அதை வளர்க்கின்ற தனித்தனியான "றப்பு" இருக்கின்றது. அஃயானே தாபிதாவில் உள்ள பதிவுகளில் வுஜூதின் ஓர் ஒளி பட்டதும் அறிவில் மறைந்திருந்த வை வெளியில் வந்தன. இந்த ஒளிக்கு " பைழுல் அக்தஸ்" எனப்படும். இதை "அக்லு" என்றும் கூறப்படும். இதைத்தான்" நூறே முகம்மதி," றஸூலுள்ளாஹி சல்லல்லிஹு அலைஹிவசல்லமவர்களின் ஒளி எனவும்கூறப்படுகின்றது.

இந்த ஒளியிலிருந்து தான் வருசைக்கிரமமாக றூஹுகளின் வகைகள் வெளி வருகின்றன. அதாவது படைக்கின்றான். அஃயானே தாபிதாவில் "குன் "என்ற கட்டளையோடு ஆடையைப் போர்த்திக் கொண்டு வெளிவருவதை  "பைழுல் முகத்தஸ்" எனப்படும்.  ஒவ்வொரு "ஐனு"ம்   றப்பிடமிருந்து குணபாடு பெற்று செயலாக வடிவம் பெறும்.  அதனால் செயல் வடிவம் "ஐனின்" தரப்பால் வருவதில்லை.  செயலும், விளைவும்" றப்பின்" தரப்பாலே வருகின்றன.

இதனால் ஐனிலிருந்து செயல்வந்தாலும் எதார்த்தத்தில் அது றப்பின் செயலாகும். ஒவ்வொன்றும் தனது செயல்களிலும், விளைவுகளிலும் திருப்தி கொள்கின்றன. அதனால் ஐனிலிருந்து வருகின்ற செயல்களை அதன் றப்பும் பொருந்திக் கொள்கிறது.ஏனென்றால்,ஐனுடைய சுபாவத்திற்கும், இயல்புக்கும்ஏற்ற விதத்தில்தான் அதன் றப்பு செயலாற்றும்.

இதைத்தான் பின்வரும் திருவசனம் குறிப்பிடுகின்றது.
وما من دابة  الا هو أخذ بناصيتها  ان ربي على صراط مستقيم

எந்த ஓர் உயிர் பிராணிகளும் அதனுடைய முன்நெற்றிமுடியை அவன் பிடித்தேயன்றி(வாழ்வது) இல்லை.     11- 56 .

ஸஹ்லு இப்னு அப்துல்லாஹித் தஸ்துரி றஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்.
ان للربوبية سرا وهو انت  لو ظهر لبطلت للربوبية

றுபூபிய்யதிற்குஓர் இரகசியம் உண்டு . அது "நீ"   (உனது ஐன்) தான்.  அந்த இரகசியம்(ஐன்)  நீங்கி விட்டால் றுபூபிய்யத்தும் இருக்க மாட்டாது.

ஆனால்",ஐன்" ஒருபோதும் பாதிலாகாது .அதனால் றுபூபிய்யத்தும் பாதிலாகாது.காரணம், "ஐன்" என்பது அல்லாஹ்வின் அறிவில் உள்ளதாகும். அல்லாஹ்வின் அறிவில் உள்ளவை இல்லாமல் போவதால் அல்லாஹ்வுடைய அறிவும் இல்லாமல் போகும்  அதனால் அறியாமை அங்கே வாஜிபாகி விடும். அதனால் ஐனும் பாதிலாகாது.அதன் றப்பின் றுபூபிய்யத்தும் பாதிலாகாது.

தஜல்லியாத்துக்கள் பல தாத்துகளின் வெளிப்பாடுகள் அல்ல! ஒருதாத்தின் (உலூஹிய்யத்தின்) வெளிப்பாடுகள் தான். அதுவே " ஐனு"க்கும், அல்லாஹ்வின் திருநாமங்களுக்கிடையிலும் தொடர்பை( நிஸ்பத்தை) ஏற்படுத்துகின்றன.

இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தால்தான்  காபீர்கள்,
اجعل الالهة الها واحدا ان هذا لشئ عجاب،

(நம்முடைய) பல தெய்வங்களை ஒரே தெய்வமாக இவர் ஆக்கி விட்டாரே! நிச்சயமாக இது ஆச்சரியமான ஒரு விஷயமாகும். (என்று கூறினர்.) 38, 5

இதைப் புரிந்து கொள்ளாத அவர்கள் பல நூறு கடவுள்களை உருவாக்கி விக்ரஹ வணக்கத்தில் மாட்டிக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு றப்பும் அதாவது தஜல்லியும் அதனால் இரட்சிக்கப்படுகின்ற ஐனுக்குமிடையில் பொருத்தமுண்டு.  அந்தப் பொருத்தம் அதுவல்லாத ஐனுடைய றப்பிடத்தில் கிடையாது.

இந்த வகையில் , ضال வழிகேடு என்ற கருமம் مضل வழிகெடுப்பவன் என்ற திருநாமத்தின் றப்போடு பொருத்தமும், இணக்கமும் உள்ளதாக இருக்கும்.  இது هادي நேர்வழி காட்டுபவர் என்ற திருநாமத்தோடு பொருத்தமாக இருக்காது.  இந்த அடிப்படையில் ஒவ்வொரு வஸ்த்துவும் அதன் றப்பிடத்தில் திருப்தியான தாகவும் பொருந்திக் கொண்டதாகவும் இருக்கும்.

ஆனால், எவரிடத்தில் இலாஹிய்யத்தான பல திருநாமங்கள் தஜல்லியாகி அதிக நன்மைகளைக் கொண்டவராக அவர் இருப்பாராயின்,அவர் பொதுப்படையாக திருப்தி கொள்ளப்பட்டவராக இருப்பார். ஸிறாத்துல் முஸ்தகீம் என்ற  நேரான வழி என்பதும் இவ்வாறு அநேக நன்மைகளைப் பொதிந்ததாக இருக்கும்.  அதிக நன்மைகள் என்பது ஜாமிஉல் அஸ்மா( என்ற அல்லாஹ்) வின் வெளிப்பாட்டைக் குறிக்கும்.

எவர் ஹாதி என்ற திருநாமத்தின் வெளிப்பாட்டின் உள்ளாரோ அவர் நேர்வழியிலிருப்பார். அவருக்கு நன்மையான கருமங்களைச் செய்வது இலகுவாகவும், இன்பமாகவும் இருக்கும். இது போன்றே ஏனையவர்களுக்கும் அவர்களின் திருநாமத்தின் தஜல்லியில் திருப்தி இருக்கும்.  காபிர்கள் குப்று, ஷிர்கிலும்தீயோர் பாதக செயல்களிலும், உலகாயுதவாதிகள் உலக இன்பத்திலும் திருப்தி காண்பதற்கு இதுவே காரணமாகும். இதனால்தான், தனது ஐனை நப்ஸை அறிந்தால் அதை வளர்க்கின்ற இஸ்மாகிய றப்பை அறிவார்.

எவர் றப்பை அறிவாரோ அவர் தனது இஸ்முல் அஃழத்தையும் அறிவார். தனது இஸ்முல் அஃழத்தை முன்னிறுத்தி கேட்கப்படுபவை தட்டப்படுவதில்லை.  றுபூபிய்யத் தொடர்பில் ஆழமான விளக்கங்கள் உண்டு .அதை பகிரங்கப்படுத்துவதால் பிழையான கிரகித்தல் ஏற்பட்டு வழிதவற வாய்ப்புண்டு! அதனால் அடக்கத்தோடு இத்தோடு சுருக்கிக் கொள்கின்றோம்.

இதனை நன்கு கவனத்தில் கொண்டு சிந்தித்தால் ,

"உங்களையும் உங்கள் செயல்களையும் அல்லாஹ்தான் படைத்தான். "
" நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் உண்டு"
"" உங்கள் பிடரி நரம்பை விட நாம் உங்கள்பால் அதிக நெருக்கமாக உள்ளோம்"

என்பன போன்ற திருவசனங்களின் உள்ளர்த்தம் விளங்க வரும் . இன்ஷாஅல்லாஹ்!

யாஅல்லாஹ் உனது ஹபீப் சல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்களின் பொருட்டினால் நேரான வழியில் எங்களை நடாத்துவாயாக! எங்களையும், எங்களின் மனைவி மக்கள் உற்றார், உறவினர் நண்பர்கள் உள்ளிட்ட முஸ்லிம்களையும் நேரான வழியில் ஹாதியின் வெளிப்பாடான றப்புவின் இரட்சிப்புக்குள் ஆக்கிவைப்பாயாக!
 ஆமீன் யாறப்பல் ஆலமீன் பீஜாஹி செய்யிதில் முர்சலீன்.

எதார்த்தமான வாஜிபுல் வுஜூதுக்கு இரண்டு விதமான குறிப்புக்கள் உள்ளன.

1)   தாத்தின் புறத்தினாலானது. இதன்படி அவன் ஆரம்பத்தில் எப்படி இருந்தானோ அப்படியே இப்போதும் இருக்கின்றான். الآن كما كان
2)   பண்பு(صفت) கள், திருநாமங் (اسماء) கள் தரப்பிலான கவனிப்பு க்கள்.

இந்தக் கவனிப்பின் படி, இதற்குப் பல படித்தரங்கள் உள்ளன.
1.   உள்ளான படித்தரம்.
2.   வெளியான படித்தரம்.

1.   உள்ளான படித்தும் என்பது "குன் பயகூனு (كن،فيكون) க்கு முன்னுள்ள நிலை.! இதனால் இப்படித்தரங் களில் படைப்புக்கு இடம் கிடையாது.!பல வகைப்பட்ட தாத்துகளும் கிடையாது.

2.   வெளியான படித்தரம்என்பது, " குன்"னுக்குப்பின்னுள்ளதாகும். இதுவே படைப்பின் படித்தரமாகும். இவற்றின் இருப்பு நிலையான தல்ல, அல்லாஹ்வின் வுஜூதை சார்ந்திருக்கும் ஆதேயமான புதிதாகும். இணைவு (تركيب)  தெய்வீக பண்புகளின் தொகுப்புக்கள் மூலமாக தொடர்பு (نسبت)கள் உண்டாகின்றன.

இத்தொடர்புகளுக்கு இருவிதமான கவனிப்பு (اعتبار) கள் தகுதியாகின்றன.

1)   இணைவாலும், தொடர்பாலும் உண்டாகும் ஹகீக்கத் (எதார்த்தம்) மாஹிய்யத் (மூலம்) தபீஅத்( இயல்பு)  ஆகியவற்றை ஹகீக்கத்தே மும்கினா, அஃயானே தாபிதா எனப்படும்.

2)   இணைவாலும், தொடர்பாலும் ஆன ஹகீகத்தே மும்கினா எதனைக் கொண்டு நிலை நிற்கின்றதோ அதற்கு  ஹகீக்கத்தே இலாஹிய்யா, அல்லது இலாஹிய்யத்தான திருநாமம் எனப்படும்.

இந்த ஹகீக்கத்அல்லது குறிப்பான திருநாமம் அஃயானே தாபிதாவில் உள்ள கூறிப்பிட்ட ஓர் ஐனுக்கு நேர்பாடாக வெளியாகும் போது அதனை "அஃயானே காறிஜா " எனப்படும். இதனையே படைப்புக்கள் எனப்படும். அப்போது அதன் குணபாடுகளும், சட்டங்களும் வரிசைக்கிரமமாக அதில் வரும்.  அதனைப் பேணவேண்டியது அவசியமாகும்.

இதனை பின்வரும் உதாரணத்தின் மூலம் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.

தண்ணீர் என்பது வெளிப்டையில் கவனித்துப் பார்த்தால் எதார்த்தமான ஒரு பொருளாகும்.  அது தன்னில் நிற்கும் பொருளல்ல!  அதன் நிலைக்கு வேறு ஒன்றின் பக்கம் சாய்ந்து நிற்கின்றது. அதனால் தண்ணீர் சார்ந்து நிற்கும் பொருளாகும். தண்ணீரின் நிலைக்களம் ஹைட்றேஜன், ஒக் ஷிஷன் ஆகியவற்றின் குறிப்பான தொடர்பில் இருக்கின்றது. அதாவது, இருமடங்கு ஹைட்றேஜன் , ஒருமடங்கு ஒக் ஷிஷன்ஆகியவற்றின் இணைவைஉள்ளடக்கியிருக்கின்றது.

ஒரு வேதியல் , ரசாயனத்தை படித்தவன்/ அறிந்தவன் ஹைரோஜன், ஒக் விஷன் ஆகிய வேறுபட்டவையின் தொடர்பில் பிறக்கின்ற வேறுபட்ட எதார்த்தம் ( ஹகீக்கத்) களை அறிகிறான். படைப்பின் ஹகீக்கத்தாகிய அஃயானே தாபிதா என்பது தண்ணியில் உள்ள ஹைடோஜன், ஒக் ஷிஷன் ஆகியனபோன்றதாகும். இவற்றின் இணைவு அதாவது அவற்றின் சேர்மானம் அஃயானே தாபிதாவின் நிலைக்களமாகிய ஹகீகத்தே இலாஹிய்யா அல்லது, குறிப்பான திருநாமம் அல்லது, குறிப்பிட்ட தஜல்லிக்கு உதாரணமாகும்.

ஒருவேதியல் காறன் தண்ணியின்எதார்தத்திற்கு ஏற்ப இருமடங்கு ஹைடோஜனையும், ஒருமடங்கு ஒக் ஷிஷனையும் சேர்ப்பதனால் அவனுடைய கற்பனையில்அல்லது, அவனுடைய அறிவிலிருந்த தண்ணீர் எதார்தமான தண்ணியாக வெளியில் வந்துவிடுகிறது.  இப்போது இதனை அவனது அறிவிலிருந்து வெளிவந்த தண்ணீர் எனக்கூறுப்படும். தண்ணியாக வெளிவந்ததும் தாகம் தீர்த்தல், பயிர்களைப்பசுமையாக்கல்  உள்ளிட்ட பண்புகள் அதன் பக்கம் மீண்டு விடுகின்றன.வெளியில் வந்த தண்ணீருக்குள் அதன் மூலம் மறைந்து விட்டது. ஆனால், வேதியல் வாதியின் அறிவில் அதன் மூலமே இருக்கின்றது.

இந்த உதாரணத்தில், தண்ணியின் எதார்த்தமான ஹைட்டோஜன், ஒக் ஷிஷனின் தொடர்பு ஆகியன இலாஹிய்யத்தான திருநாமங்களுக்கு உதாரணமாகும். அவற்றின் தொடர்பு குறிப்பான திருநாமம் அல்லது ஹகீக்கத்தே இலாஹிக்கு உதாரணமாகும். தண்ணிர்  "ஐன் காரிஜி"க்கு உதாரணமாகும். வெளிப்படையில் தண்ணீர் அறியப்பட்ட பொருளாக இருக்கின்றது.அதன் நிலைக்கும் ஹைடோஜன், ஒக் ஷிஷனின் தொடர்பிலிருக்கின்றது. இந்தத் தொடர்பும் கூட ஹைடோஜன், ஒக் ஷிஷனில்தான் தங்கியிருக்கின்றது. இப்போது தண்ணியின் மூலத்தைப் பற்றி ஒவ்வொருவரும் அவர்களின் அறிவுக்கும், புரிதலுக்கும், அனுபவத்திற்கும் ஏற்றாற் போல் கூறுவார்கள்.  இக்கூற்று க்கள் அவர்கள் மட்டத்தில் சரியாகும்.

உதாரணமாக, தண்ணீர் எதார்த்தமான பொருளா? என்று கேட்டால், பாமரர்கள் கூறுவார்கள், குடிக்கின்றோம், அண்றாடத்தைவைகளுக்குப் பயன்படுத்துகின்றோம் அதனால் நிச்சயமாக எதார்த்தமான பொருள்தான் என்பர். இதே கேள்வியை ஒரு வேதியல் காரணிடம் கேட்டால், தண்ணியின் எதார்த்தம் ஹைடோஜன், ஒக்  ஷிஷன் என்பான்.

தத்துவாசிரியனிடம் கேட்டால் அது ஒரு மூலப் பொருள் என்பான். ஷூஹூதியிடம் கேட்டால் இலாஹியத்தான திருநாமங்கள் என்பார்கள். வுஜூதியிடம் கேட்டால் அல்லாஹ்வின் தாத் மட்டும்தான் என்பர். இவர்கள் அனைவரும் அவர்கள் இருக்கின்ற நிலைக்கும் அனுபவத்திற்கும் தக்க விதத்தில் பதில் கூறுகின்றனர். இங்கு ஒரு கேள்வி எழுகிறது. ஹைடோஜன், ஒக் ஷிஷன், தண்ணீர் ஆகியவற்றில் புத்தியிலும், அறிவிலும் உள்ள வஸ்த்து எது? காட்சியில் பட்டதும்,(مشهود) உணர்வில்பட்டதும்ஆக(محسوس) உள்ளது எது?

தண்ணீர் வெளியில் தெரியக்கூடிய ஒரு பொருள்.ஹைடோஜனும், ஒக் ஷிஷனும்  அல்லாஹ்வின் அறிவிலிருந்து வெளியான எதார்த்தமானவஸ்த்துவாகும். இதனால் தண்ணீர் புத்தியால் விளங்கக்கூடிய து. அதன் எதார்த்தமான (عناصر) மூலங்கள் அறிவால் உணரக்கூடிய வை(محسوس)ஆகும். இதன்படி படைப்புக்கள் புலனுக்குட்பட்டவை (معقول)  இலாஹிய்யத்தான திருநாமங்கள் அறிவால் உணரக்கூடிய வை(محسوس) ஆகும்.

நன்கு ஆழமாக சிந்தனை செய்தால் இலாஹிய்யத்தான திருநாமங்களும்  புரியக்கூடியவைதான். ஹக்கும் உணரக்கூடிய தாகும் கல்புக்கண்ணால் தரிசிக்கக்கூடியதுமாகும். ஆனால் நமது பார்வை யில் மறதியின் (மதிமயக்கத்தின்غفلت) திரைவிழுந்ததால் புரியக்கூடிய தை உணரக்கூடிய தாகவும், உணரக்கூடிய தை காட்சிகாண முடியாததாகவும் விளங்கிக் கொண்டோம்.
اللهم ارنا حقائق الاشياء كما هي

யாஅல்லாஹ் வஸ்த்துக்களின் ஹகாயிக்குகளை அது எப்படியுள்ளதோ அதன்படி எங்களுக்குக் காட்டித் தருவாயாக! ஆமீன்.!
part 13
(ஏற்கனவே கூறப்பட்ட வையை இலகு படுத்தி. விளக்கி எழுதுமாறு பலர் கேட்டதற்கு இணங்க இத்தெளிவுரையை தொடங்கியுள்ளேன்.! படியுங்கள்! தெளியுங்கள்!

அல்லாஹ்வின் தாத்துக்கு இருநிலைகள் உண்டு.
1)   தன்ஸீஹ்!
2)   தஷ்பீஹ்.
தன்ஸீஹ் என்பது  வுஜூதின் பாதின் பகுதியையும்,
தஷ்பீஹ்  என்பது வுஜூதின்  ழாஹிர் பகுதியையும் குறிக்கும்.
வுஜூதின் பாதின் பகுதியில்  மூன்று பகுதிகள் உள்ளன.  அவையாவன
1)   அஹதிய்யத்
2)   வஹ்தத்  
3)   வாஹிதிய்யத்      இம்மூன்றும் தன்ஸீஹ் பகுதியைக் குறிக்கும்.
இதில் அஹதிய்யத்தை "குன்ஹு  தாத்து" என்பர். இதனை எவராலும் அறிய முடியாது.
அஹதிய்யத்தை பல பெயர்களால் அழைப்பர்.அவையாவன,

1)   குன்ஹு தாத்,
2)   கன்ஸுல் மக்பியா  (மறைவான பொக்கிஷம்)
3)   மஸ்கூத் அன்ஹு (அது பற்றி வாய் மூடப்பட்டது)
4)   தாத்துல் பஹ்து  மற்றும் பல...

அஹதிய்யத்தில் " தாத்" மறைந்திருந்த தால்  அதனைப் படர்க்கை யாக.  " ஹுவ" என்று கூறப்படும்.  இதனை "ஹுவிய்யத்". என்றும் கூறுவர்.  இது அஹதிய்யத்தின் "பாதின்  " பகுதியாகும்.
"ஹுவிய்யத்"தின் ழாஹிறான வெளிப்பகுதி" நான்" என்ற "அன்னியத்"தாகும்.  இவையனைத்தும் சேர்ந்து  உலூஹிய்யத்தைக் குறிக்கும்.  அஹதிய்யத்தில் அல்லாஹ்வின் பண்புகள்,திருநாமங்கள் வெளியாகாமல் இருந்ததனால் தாத்தை  "ஸறாபத்" என்றும், "ஸாதிஜ்" என்றும் கூறப்படும் . "ஸறாபத்" என்றாலும்,. "ஸாதிஜ்" என்றாலும் கலப்பற்றது என்பது பொருளாகும்.  அதனால் இதை "தாத்துல் பஹ்து"என்றும் குறிப்பிடுவர்.

இங்கு படைப்பின் எண்ணக்கருக்கள் உருவாக வில்லை. அதனால் அஹதிய்யத்தில் படைப்பின் வாடை படவில்லை.! அதனால் குன்ஹு தாத்து எவருக்கும் வெளியாகாது.
அத்துஹ்பத்துல் முர்சலா என்ற நூல் பின்வருமாறு கூறுகிறது.

وان ذلك الوجود من حيث الكنه اي حقيقة الذات  التي هي عبارة عن المرتبة الاحدية  لا ينكشف لاحد  ولو نبيا مرسلا  وملكا مقربا  لا في الدنيا ولا في الاخرة  كقوله تعالي  لا تدركه الابصار  وهو يدرك الابصار ...
التحفة المرسلة. : ١١
அஹதிய்யத்தின் படித்தரத்தைக் குறிக்கும் "குன்ஹு"   எவருக்கும் இம்மையிலும் சரி, மறுமையிலும் சரி வெளியாகாது.! இதில் முர்சலான நபியும், முகர்ரபான மலக்கும் சமமாகும்.  பார்வைகள் அவனை ( சூழ்ந்து) அறியாது. அவன் (பிறரின்) பார்வைகளை சூழ்ந்து அறிவான் என்று அல்லாஹுத்த ஆலா கூறியிருப்பதால் (அஹதிய்யத் எவருக்கும் வெளியாகாது)
அத்துஹ்பத்துல் முர்சலா : பக் , 11,
மேலும் இதே நூலில்,
ومن اراد معرفته اي معرفة الله تعالي من هذالوجه اي الكنه وسعي فيه اي جد في طلبه  فقد ضيع وقته. ١٢
 யாராவது ஒருவர் குன்ஹு தாத்தை அறிய முயற்சி செய்வாராயின் அவர் ( வீணான தனது முயற்சியால்) தனது வாழ்நாளை வீணாக்கி யவராவார்.
அத்துஹ்பத்துல் முர்சலா பக்கம் : 12

இன்சான் காமில் என்ற நூல் பின் வருமாறு கூறுகிறது.
فالاحدية أول ظهور الذاتي  وامتنع  الاتصاف  بالاحدية  للمخلوق
الانسان كامل :٣٦
அஹதிய்யத்  என்பது தாத்தின்  முதற் வெளிப்பாடு.  அஹதிய்யத்திலிருந்து  அடியானுக்கு. இலட்சணம் பூணுவது அசாத்தியமாகும். காரணம், அஹதிய்யத் என்பது ஹக்குடையதும், அடியானுக்குமான பண்புகளை விட்டும் கலப்பற்ற தனித்த தாத்துக்கான பெயராகும்.
ஆதாரம்: இன்சான் காமில்  பக்கம் : பக் 36

ஷைகுல் அக்பர் முகையத்தீன் இப்னு அரபி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் கூறுகின்றார்கள்.
واما الاحدية الالهيةفما لواحد فيها قدم  لانه فلا يقبل لواحد منها شيئ لانها لا تقبل التبغيض  فأحديته مجموع كله بالقوة
فصوص الحكم ، فص اسماعيلية
இலாஹிய்யத்தான அஹதிய்யத்திலும், பரிசுத்தமான தாத்திலும் எந்த வொரு படைப்புக்கும் வுஜூதும்  நிலைத்தலும்,கிடையாது.  காரணம், அஹதிய்யத்தின் ஒருபகுதி இன்னாருக்கு என்றும் மறு பகுதி வேறொருவருக்கென்றும் கூற முடியாது.ஏனெனில், அஹதிய்யத் என்பது (அவனுடைய அஸ்மா க்கள், அவனது பண்புகள், அவனது செயல்கள், இன்னும் அவனுடைய தீர்ப்புக்கள் உள்ளிட்ட) அனைத்தும் அவனுடைய தாத்தில் மொத்தமாக விசாலமாக( மறைந்து) இருக்கக்கூடியதாகும்.அதனால் பகுதிகளையும், வகுப்புகளை யும் அது ஏற்காது.
ஆதாரம்: புஸூஸுல் ஹிகம். பஸ்ஸு இஸ்மாயீலி.

அதாவது , படைப்பின் வகைகள் தொகுப்பாகவோ, வகுப்பாகவோ அஹதிய்யத்தில் இல்லை. அங்கு அல்லாஹ்வின் திருநாமங்கள், பண்புகள், செயல்கள், தீர்ப்புக்கள் யாவும் வெளியாகாமல் அவனது தாத்துக்குள் மறைந்திருந்தன.
இவையாவும் வாஹிதிய்யத் என்ற மூன்றாவது படித்தரத்தில்தான் வெளியாயின. குத்புல் ஆரிபீன், சுல்தானுல் வாயிழீன் ஹைதராபாத் ஸூபி நாயகம் கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் அஸ்ஸுலூக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள். " அஹதிய்யத், அல்லது தாத்துல் முத்லக் என்ற படித்தரம் சகல கட்டுப்பாடுகளை விட்டும் பரிசுத்தமானதாகும்.  இதில் எந்த கோலத்தின் பேரிலும் வெளியாவதற்கு (இஸ்திஃதாத், காபிலிய்யத், ) அருகதை, ஏற்புத் தன்மை (ஏற்புத் திறன்) இல்லை.

உதாரணமாக, மெழுகின் எண்ணையைப்போல்அது சகல கோலத்திலும் வெளியாவதற்குரிய ஏற்புத் திறனைக் கொண்டுள்ளது.
ஆதாரம்: அஸ்ஸுலூக்.

அஹதிய்யத் எவருக்கும் வெளியாகாது. அதனை எதற்குள்ளும் அடக்கிவிடவும் முடியாது என்பதை ஹைதறாபாத் ஸூபி நாயகத்தின் கலீபாவான , அட்டாளைச்சேனை அல்ஆரிபு பில்லாஹ் அஹ்மது மீரான் ஸூபி கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் இரத்தினச் சுருக்கமாக இவ்வாறு கூறுகிறார்கள்.
" அஹதிய்யத் என்ற அடங்காப்   பொருள் நீயே!
மஹ்பூப் மனோன் மணிக்கீதம் ,கீதம் :10,

அல் அரிபு பில்லாஹ் மஸ்தான் ஸாஹிபு வலியுள்ளாஹ் கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் அஹதிய்யத்தின் ஆரம்ப நிலையையும் அதைத் தொடர்ந்த படித்தரங்களையும் இப்படி விபரிக்கின்றார்கள். மஹ்ழியத்தான தாத்துல் கிப்ரியாவில்மறைந்த  கன்சுல் மக்பியாம். மஸ்கூத்து அன்ஹுல் கதீமுல்  அமாவான மௌஜூதெனும் ஸிர்புலே அஹதியத்து வஹதாகி வாஹிதிய்யத்தான..... என்று வுஜூதின் ஏழு படித்தரங்களையும் தொடர்பாகப்  பாடுகிறார்கள்.

மேற்கண்ட அனைத்து எடுத்துக் காட்டுக்களிலும்  அஹதிய்யத்  என்ற படித்தரத்தில் அல்லாஹ்வின் பண்புகள் வெளியாகாது. படைப்புக்கு அங்கே எந்த விதமான வாய்ப்பும் கிடையாது.  என்பது ஐயமறத் தெளிவாகி விட்டது.

இலங்கையில் வஹ்தத்துல் வுஜூத் கோட்பாட்டை அதிகமதிகமாகப் பேசுபவர்கள் இருவர்.
1.   வெலிகமை கலீல் அவ்ன் மௌலானா
2.   காத்தான்குடி மௌலவி அப்துர் றஊப் மிஸ்பாஹி
கலீல் அவ்னு மௌலானா அவர்கள் "அத்துஹ்பத்துல் முர்சலா" என்ற நூலை மொழி பெயர்த்து விளக்கமும் எழுதி வெளியிட்டுள்ளார்கள்.  அதில், குன்ஹு தாத்தை எவராலும் அறிய முடியாது என்ற மூல நூலாசிரியரின் கூற்றை விமர்சித்து அது பிழையென்று துணிந்து கூறி, குன்ஹு தாத்தை அறிய முடியும் என்று புது விளக்கம் எழுதியிருக்கின்றார்.
மௌலவி அப்துர் றஊப் அஹதிய்யத்தில் தனது தாத்தை ( வுஜூதை)ப் பார்த்து அல்லாஹுத்த ஆலா " குன்" என்று கட்டளையிட்டு படைப்பை வெளியாக்கினான் என்கின்றார். இவ்விருவரும் இது வரை வந்த எந்த ஒரு ஸூபிகளும் கற்பனை செய்யாத  கருத்தை தன்னிஷ்டப்படி துணிந்து கூறி வருகின்றனர்.  இவ்விருவரின் எழுத்துக்கள், பேச்சுக்களை மேலோட்டமாகப் பார்த்தால் கூட இவர்கள் இருவருக்கும் வஹ்தத்துல் வுஜூத் கோட்பாட்டின் வாடை கூட கிடையாது என்பது தெட்டத் தெளிவாகின்றது. 
மௌலவி அப்துர் றஊப் அல்லாஹுத் ஆலா தனது  வுஜூதைப் பார்த்தே "குன்" ஆகுக! என்று கட்டளையிட்டான் என்று கூறுவது  அவரது அகீதா ஞானத்தின் பூச்சியத்தை புடம் போட்டுக் காட்டுகின்றது. இவரின் இக் கூற்றினால் விளையும் அபத்தத்தையும் அவரின் அறியாமையையும் அடுத்த தொடரில் எதிர்பாருங்கள்.
part 14

இதுவரை கூறியதின் தெளிவுரையின் தொடர்ச்சி :-

மௌலவி அப்துர். ற ஊப் மிஸ்பாஹி அவர்கள் பல மத்ரஸா க்களில் ஓதியவர். அதே போல் பல மத்ரஸாக்களில் பல்லாண்டுகள் ஓதிக் கொடுத்தவர்.  இதற்கப்பால் நீண்ட காலமாக தொடர்ச்சியாகப் பிரச்சாரம் செய்து வருபவர். இப்படிப்பட்டவர்தான் அஹதியத்தின் நிலையில் தனது தாத்தைப் பார்த்து "குன்" என்று அல்லாஹுத்த ஆலா கட்டளையிட்டான்என்றும்,  அக்கட்டளையைக் கேட்ட அவனது தாத்து பல கோலங்களாக வெளிவந்தன என்றும் கூறுகின்றார்.  இவரது இக்கூற்றை அவரை அண்டியிருக்கின்ற மௌலவிமார்களும், அவர் மத்ரஸா வில் ஓதிக் கொடுக்கின்ற உலமாக்களும்,படிக்கின்ற மாணவர்களும்  காது தாழ்த்தி, வாய்பொத்தி செவிமடுத்து மக்களுக்கு ஒப்புவிக்கின்றனர்.  மௌலவி அப்துர்ற ஊபை அவர் சீடர்கள் அறிவு ரீதியாகப் பின்பற்றாமல் , ஜாஹிலியாக் காலத்து மக்கள் மாதிரி   மூடாத்துமாக்களாகவே  பின்பற்றுகின்றனர்.

மௌலவி அப்துர் றஊபின் சீடர்கள் தங்களது குருவின் அறியாமையை மறைக்க அவரைப் பற்றிய புகழ் பாடல்களையும் கறாமாத்துக்களையும் ஓயாமல் அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர்..இது அவர்களின் சொந்த விடயம்.

விடையத்திற்கு வருவோம்.
"குத்றத்"  என்ற பண்பு ஆக்கல்,அழித்தலோடு தொடர்பானது.   ஆக்கலும், அழித்தலும் படைப்போடு தொடர்பானது . தவிர, படைத்தவனோடு தொடர்பான தல்ல! மௌலவி அப்துர்ற ஊபின் கருத்துப்படி பார்த்தால், அல்லாஹுத்த ஆலா தன்னை அழிக்கவும், தனக்கெதிரான ஒருவரை படைக்கவும் ஆற்றல் கொண்டவன் என்றாகும்.  ஒரு புத்திசாலி இதை ஏற்பானா ?  இக்குறையை பல முறை  நாம் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியும் அவர் திருந்தாமலும், தனது பிளையைத் திருத்திக்  கொள்ளாமலும் மேலும், மேலும் எம்மை வசைபாடிக்கொண்டிருக்கின்றார். அவர் வசை பாடுவது எம்மை மட்டுமல்ல! அவர் குறையைச் சுட்டிக்காட்டிய அவருடைய ஷைகு உட்பட உஸ்தாதுமார்கள் அனைவரும் அவரில் பொறாமை கொண்டதனால் குறை கூறுவதாக ஒப்பாரி வைக்கின்றார்.

இது அவரைத் தொட்ட தீராத நோய்! அதற்குத் தீர்வு  அல்லாஹ்வின் விதியில் தான் உண்டு!

அல்லாஹ்வின் தாத்தின் இரண்டாவது இறக்கம் ( படித்தரம்)

2-  வஹ்தத் ஆகும் .
" நான் மறை பொருளாய்( கன்ஸுல் மக்பியில்) இருந்தேன். நான் அறியப்பட வேண்டும் என்று  விரும்பினேன்.  படைப்புக்களை ப் படைத்ததேன். " என்று ஹதீதுக்குத்ஸியில் அல்லாஹுத்த ஆலா கூறிய படி,அவன் விருப்பத்தத்தினால்  முகிழ்த்ததுதான்  "வஹ் தத்". என்ற மர்தபாவாகும்.

இந்த நிலைக்கு பல பெயர்கள் இருந்தாலும் இதுதான் றஸூலுள்ளாஹி சல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்களின் றூஹின் எதார்த்தமாகும்.  அதனால் இப்படித்தரத்தை " ஹகீகத்துல் முஹம்மதிய்யா" என்று கூறப்படும்.
றஸூலுள்ளாஹி சல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்கள்  மிஃறாஜில்  அல்லாஹ்வைப் சந்தித்த இடமும் இதுதான் .அதனால், வஹ்தத்தை " காப கௌசைனி, அவ் அத்னா" என்றும் கூறப்படும்.

இந்த மர்தபாவில் தான்  சகல படைப்புக்களின்  கருத்துப் படிவங்கள் அல்லாஹ்வின் அறிவில் தொகுப்பாக பதிந்தன.  இப்பதிவின் தொகுப்பை " ஷுஊனாத்கள்"  எனப்படும்.  இதை வித்துக்கு ஒப்பிடலாம். ஷுஊனாத்துக்கள் வெளிவருவதற்குக் காரணமான ஒளியை  " பைழுல் அக்தஸ்" எனப்படும்.  வஹ்தத்தில் விபரமாக இல்லாமல் அதாவது, வானம், பூமி, விலங்கு,மனிதன், மலக்கு, ஜின், தாவரம், என்று வகைப்படுத்தப்படாமல் படைப்பை தொகுப்பாக அறிந்தான்.

இத்தொகுப்பில், ஷூஊனாத்தில் உள்ளவை தான் படைப்பாக வெளிவரும். இதில் இல்லாதவை வெளிவராது! படைப்பின் கருத்துப் படிவங்கள் வஹ்தத்தில் தோன்றினாலும், படைப்புக்கள் தனியாகாமல் அல்லாஹ்வின் அறிவிலிருந்ததால் இப்படைப்புக்களைப் படைப்பு என்று கூறுவதில்லை.! எதார்த்தத்தில் இங்கு படைப்பு இல்லாத பொருளாகவே உள்ளது.அதனால்ஷ ஊனாத்கள் கதீமாகும்.

வாஹிதிய்யத்,
இது தாத்தின் மூன்றாவது இறக்கம்.!  இந்த படித்தரத்தில்தான்  வஹ்தத்தில் தோன்றிய ஷுஊனாத்கள்"  விபரமாக வெளிவந்தன. அதனால், அல்லாஹ்வின் பண்புகளும், அவற்றின் வர்ணிப்புக்களும், தெய்வீகத் திருநாமங்களும் வெளியாகின.  படைப்புக்களை யொட்டியதாகத்தான் " உலூஹிய்யத், றுபூபிய்யத், மில்கியத் இருக்கின்றன.

படைப்பு இல்லையாயின் தெய்வீகம் , இரட்சிப்பு, ஆட்சி உள்ளிட்டவை வெளிவராது.  அதனால், படைப்பின் அஃயான்( எண்ணக்கருக்) கள் வாஹிதிய்யத்தில்  வெளிவர முன் அல்லாஹ்வின் தாய்ப்பண்புகளான  ஜீவன்,அறிவு, சக்தி, நாட்டம், கேள்வி, பார்வை, பேச்சு உள்ளிட்டவை வெளிவந்தன.  இந்தப் பண்புகளிலிருந்துதான் கணக்கற்ற திருநாமங்களும், பண்புகளும் (நஃது) வர்ணிப்புக்களும் வெளிவருகின்றன. 

இதனால் அல்லாஹ்வின் தாய்ப்பண்புகள் அனைத்தும் சேர்ந்த தாத்தாகிய வாஜிபுல் வுஜூத் " உலூஹிய்ய" த்தை  ஏற்றுக் கொள்கிறது.   இந்த "உலூஹியத்"  என்ற பொதுமைக்கான  பெயர் " அல்லாஹ்" என்பதாகும்.  அதனால், அல்லாஹ் என்ற  நாமம் தனி நாமமல்ல! அனைத்து  பூரணமான பண்புகளையும், திருநாமக்களையும் உள்ளடக்கிய   பொதுப் பெயராகும். அதனால்தான் "அல்லாஹ்"  என்ற திருநாமத்தை " ஜாமிஉல் அஸ்மாஃ" என்றும்இஸ்முல் அஃழம்"  என்றும் கூறப்படுகின்றது.

வாஹிதிய்யத்தில் ஷுஊனாத்துக்கள்  வகுப்பாகிவிட்டன. அதாவது, படைப்பின் வகைகள் ஒவ்வொன்றும் அதனதன்  பெயரோடு தனியாகப்  பிரிந்து விட்டன.  இந்த  படிவங்களை " அஃயானே தாபிதா"  எனப்படும். அஃயானே தாபிதா என்பது வஹ்தத்திலுள்ள ஷுஊனித்துக்களின் வகுப்பான -விரிவான- பகுதியாகும். இதனை " நூறு முஹம்மதிய்யா" என்றும் கூறுவர்.

" நான் அல்லாஹ்வின்ஒளியில் நின்று முள்ளவர்" என்பது" ஹகீக்கத்துல் முஹம்மதி" யா வையும், எல்லாம் என் "நூறில் நின்று மானவை"   என்பது , அஃயானே தாபிதாவில் உள்ள நூறு முஹம்மதியிவையையும்  குறிக்கும்.  " அஃயானே தாபிதா"வில்  உள்ளவை, வெளிவருவதையும், அல்லாஹ்வின் பண்புகள்,மற்றும் திருநாமங்களின் பூரணத்துவங்கள் வெளியாகுவதையும் நாடியது. இதனால்,  அல்லாஹ்வின் றஹ்மத்  விரைந்து வந்து வுஜூதை வழங்கியது.இதை ஸூபியாக்களின் பரிபாஷையில் " றப்பு" எனக்கூறுகின்றனர்.

அஃயானில் உள்ளவை யின்  ஏற்புத்திறனை கருத்தில் கொண்டு அல்லாஹ்வின் நாட்டம் குறிப்பாக்குதில் அல்லாஹ்வின் "குத்றத்" சக்தி " ஆகு!, குன்!   என்று கூறியதை செவிமடுத்த"  ஐன்" படைப்பாக வெளியாகின்றது.  இங்கு படைப்பு வெளியாவதற்கு " குன்" என்ற பேச்சுத்தான் காரணமானதால், "குன்" என்பதை "கலிமத்துள்ளாஹ்" அல்லாஹ்வின் பேச்சு எனப்படும். மனிதன் பேசும் போது சுவாசத்தை  உச்சரிப்பு வெளியாகும் தானத்தில் சுவாசத்தை அழுத்தி வெளியாக்குவதால் வார்த்தை ( கலிமாத்) கள் வெளியாகின்றன. படைப்பின் வெளிப்பாடும் இதையொத்தே இருக்கின்றது. இங்கு சுவாசத்தை " நப்ஸுர் றஹ்மான்"  என்றும், வார்த்தை(உச்சரிப்பு) வெளியாகும் தானமான (மக்றஜு) களை  அஸ்மா க்கள் என்றும் ஸூபிகளின் பரி பாஷையில்  கூறுகின்றனர்.

உலகத்தில் அல்லாஹ்வின் றஹ்மத்  " றஹ்மான்" என்ற திருநாமத்தின் ஊடாகவே வெளியாவதால்தான் " நப்ஸுர் றஹ்மான்"  எனக்கூறப்படுகின்றது. அல்லாஹ்வின் பண்புகள், திருநாமங்கள்  அஃயான்கள், ஹகாயிக்கள் அனைத்தினதும் தொடர்புகள்யாவும்   உலகத்தின் கோலங்களைவெளியாக்குமாறு வேண்டிய போது நப்ஸுற்றஹ்மான் அதனை பூரணமாக்கி வெளியாக்கியது.
Part15
பிரபஞ்சம் உருவான  மூல  இடங்கள் மூன்றாகும்.

1)   வஹ்தத்தில் உள்ள ஷுஊனுகள். அதாவது அல்லாஹ்வின் அறிவில் தொகுப்பாக  அமைந்த கருத்துப் படிவங்கள்.
2)   வாஹிதிய்யத்தில் உள்ள அஃயானே தாபிதா, அதாவது, ஷுஊனாத்துகளின் விபரமான பகுதிகள்.
3)   அஃயானே தாபிதாவில் உள்ள விபரமான கருத்துப் படிவங்கள் தன்னைப் பற்றி அறியாததாக  இருந்ததனால், அஃயானே தாபிதாவுக்கு இரு நிலைகள் உள்ளன.

1-   படைப்பை இன்மையின் பக்கம் சேர்த்தல்..

" هل آتي علي الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا
மனிதன் மீது ஒரு காலம் வந்தது. அதில் அவன் ( பெயர் சொல்லிக்) கூறப்பட்ட ( இருப்புள்ள) ஒரு பொருளாக இருக்க வில்லை."  என்ற திருவசனம் இந்த நிலையையே சுட்டிக் காட்டுகின்றது.
2-.   ஆகுக! என்ற அல்லாஹுவின் கட்டளையைக். கேட்பதற்கு தகுதியைப் பெற்றுக் கொண்ட நிலை!  இந்த நிலையில் படைப்புக்கு வுஜூத் இல்லாத காரணத்தால் இந்த நிலையில் உள்ள "ஐனை"  படைப்பு என்று கூற முடியாது.

இரண்டாவது நிலையைக் குறித்து பின் வரும் திருவசனம் சுட்டிக் காட்டுகின்றது.
انما قولنا لشيئ  إذا اردناه  ان نقول له  كن. فيكون

ஒரு வஸ்த்துவுக்கு நம்முடைய சொல் என்பதெல்லாம்  அதை நாம் நாடிய போது அதற்கு " ஆகு"  என்று சொல்லுவது தான்.   அது உண்டாகி விடும்.

3- அஃயானே காறிஜா, " ஆகுக!" என்ற கட்டளையைக் கேட்டு தனக்கென தனியான வுஜூதைப் பெற்று அல்லாஹ்வின் அறிவிலிருந்து வெளி வந்த  நிலை.!  இதைத்தான் "றூஹ்" என்கின்றோம். இவற்றில் படைப்பின் எதார்த்மான அஃயானே தாபிதா , படைப்பின் வெளிப்படையான வாடையை நுகர வில்லை.!
ஆதாரம்:  அத்துஹ்பத்துல் முர்சலா , பக்: 32- 33,

இதனை அத்துஹ்பத்துல் முர்சலா நூலாசிரியர் அவர்கள் பின்வருமாறு எழுதுகிறார்கள்.
ان للعالم العرضي ثلاثة مواطن ، احدها ، التعين الاول  اي المرتبة المسماة بالوحدة  ،ويسمي العالم فيه  شئونا ذاتية للحق  وهي نسب واعتبار ات لصفات الحق سبحانه وتعالي،

وثانيهما التعين الثاني أي المرتبة المسماة بالواحدية  ويسمي العالم فيه اعيانا ثابتة ......

ثم اعلم  ان الاعيان الثابتة لها وجهان ،

أحدهما ، نسبتها الي العدم الممكن . واليه الإشارة
 بقوله. .

هل آتي علي الانسان  حين من الدهر لم يكن شيئا مذكورا ،

وثانيهما ، نسبتها الي الوجود الاعتباري

 .والي الاشا رة  بقوله  انما قولنا لشيئ إذا اردناه ان نقول له  كن فيكون  وجه اعتبارعدميتها

وثالثها، في الوجود الخارج الممكن ويسمي العالم فيه  اعيانا خارجية.  وذلك لخروجها من الوجود العلمي الي الوجود العيني  في عالم الخلق بواسطة امر كن

.وان الاعيان اي العلمية التي هي حقائق  الممكنات الكونية ما شمت رائحة الوجود الظاهر ، ولا يليق بها نسبة ذلك إليها لتفرد واجب الوجود بالوجود

التحفة المرسلة ، صفحة ٣٢ -٣٣

மௌலவி அப்துர் றஊப் மிஸ்பாஹி அவர்கள் அதிகமாக ஆதாரம் காட்டுகின்ற நூல் " அத்துஹ்பதுல் முர்சலா!

இந்த நூலில் தான்
1)   படைப்பின் மூல எண்ணக்கருவின் ஆரம்பம் வஹ்தத் என்ற மர்தபாவாகும்.  இதில் கற்பனையான பிரபஞ்சத்தின் தொடக்கம் "ஷுஊனுத் தாத்தியா" வாகும்.

2)   2-பிரபஞ்சத்தின் இரண்டாவது இடம், வாஹிதிய்யத்தில் உள்ள "அஃயானே தாபிதா"வாகும்.
இந்த இரண்டு இடங்களிலும் படைப்பின் வாடை படவில்லை.

இவ்விரண்டு மர்தபாக்களும் அல்லாஹ்வின் வாஜிபுல் வுஜூதைக் கொண்டு தனித்த வுஜூதாகவே இருக்கின்றது. அதனால், படைப்பை அல்லாஹ்வின் தனித்த வாஜிபுல் வுஜூதோடு சேர்த்துக் கூறுவதற்கு எத்தகுதியும் கிடையாது.! என்று அத்துஹ்பத்துல் முர்சலா ஆசிரியர்  அழுத்தம் திருத்தமாக  எழுதியுள்ளார்கள்.

இந்த விளக்கத்தை மௌலவி அப்துர் றஊப் கோட்டை விட்டு விட்டு  படைப்பின் எண்ணக்கருவே அல்லாஹ்வின் அறிவில் வராத அஹதிய்யத்தின் நிலையில் " குன்" என்று கூறினான் என்று  உளம்புகிறார்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அத்துஹ்பத்துல் முர்சலா என்ற நூலைப் பார்க்கின்றவருக்கு இந்த விடையம் மறைந்தது எப்படி??
பிரபஞ்சத்தின் மூன்றாவது இடம், "  அஃயானே காறிஜா"! என்ற அர்வாஹுகுகளாகும். அர்வாஹுகள்  அஃயானே தாபிதாவில்  இல்லாதவை யாக இருந்தன.  அதில் றஹ்மானின் ஒளிபட்டதால் அது தன்னை அறிந்து கொண்டது.  றூஹாக வெளிவந்தது.

இங்கு றஹ்மானின் ஒளி அஃயானில் பட்டதால் நிழல் விழுந்தது. அந்த நிழல் தான் படைப்பு. நிழல் என்பது ஒரு பொருளை அண்டி நிற்கும்  ஆதேயமான( தனித்து நிற்காமல் இன்னுமொன்றில் தாங்கி நிற்கும்) வஸ்த்துவுக்குச் சொல்லப்படும். இன்னுமொரு வகையில் பிறர் தயவுக்கும் சொல்லப்படும்.

இந்த வகையில்  "வஹ்தத் " அஹதிய்யத்திற்கு நிழலாகும். வாஹிதிய்யத் , வஹதத்தின் நிழலாகும். அர்வாஹு  அஃயானே தாபிதாவின் நிழலாகும். எதார்த்தத்தில் பார்த்தால் படைப்பு அல்லாஹ்வின் வுஜூதின் பண்புகள், திருநாமங்களின் நிழலாகும். இந்தக்கருத்திலேயே பின்வரும் திருவசனத்தின் பொருள் நோக்கப்படுகிறது.

الم تر الي ربك كيف مد الظل . .

(நபியே!)  நிழலை எப்படி நீட்டுகிறான் என்று உமது இரட்சனின்( ஆற்றலின்) பால் நீர் பார்க்க வில்லையா? அவன் நாடினால் அதை ( அசையாமல்) நிலைத்து நிற்கக்கூடிய தாக ஆக்கி விடுவான்.

பின்னர், சூரியனை அதன்(நிழல்) மீது  ஆதாரமாக நாம் ஆக்கினோம்.  பிறகு அதனை (ச் சிறிது சிறிதாய்) இலைசான கைப்பற்றுதலாக  நம்பக்கம்  ஆக்கினோம்.
                       25-45,

அல்லாஹ் அல்லாதவற்றையே பிரபஞ்சம் என்கின்றோம்.  ஒரு பொருளுக்கும், அப்பொருளுக்குமுரிய நிழலுக்கு மான உறவுதான் படைப்புக்கும், படைத்தவனுக்கு மிடையில் இருக்கிறது. அதனால் ,பிரபஞ்சம் அல்லாஹ்வின் நிழலாகும். ஒரு பொருள் இருந்தால் தான் அதற்கு நிழல் விழும்.  அல்லாஹ்வின் " நூர்" என்ற திருநாமம் அஃயானே தாபிதாவில் படுகிறது.  அதன் நிழல் அதற்குரிய பொருளை மறைத்து விடுகிறது. காரணம் நிழல் கறுப்பு நிறத்தைக் கொண்டிருக்கிறது.

நிழல் கறுப்பாக இருப்பது அதற்குரிய பொருள் வெகு தூரத்திலிருப்பதின் பக்கம் சாடை காட்டுகிறது. காரணம் இரண்டுக்குமிடையிலான தூரம் அதிகமாகும். தூரத்திலிருக்கும் பொருள் வெண்மையாக இருந்தாலும்  அதன் நிழல் கறுப்பாகவே காட்டும்.  பிரகாசமில்லாத பொருளில் வெளிச்சம் படும் போது அதற்கான நிழல் கறுப்பாகவே இருக்கும்.

அஃயானே தாபிதாவில் உள்ள அஃயானே மும்கினாத்துக்கள் இயல்பில் (தாத்தில்) பிரகாசமானவையல்ல! காரணம், அவை தன்னில் இல்லாதவை யாகும். உண்மையில் ஒளியாக இருப்பது வுஜூதுதான்.  அஃயானே தாபிதாவில் உள்ள பதிவுகளுக்கு வூஜூத் இல்லாத காரணத்தால் அவை பிரகாசமானவையல்ல!  அதனால் அதில் வுஜூதின் ஒளி பட்ட போது அதன் நிழல் நீண்டு கறுப்பாகத் தெரிகிறது.

ஒரு வெளிச்சமுள்ள பொருள் வெகு தூரத்திலிருந்தால் சிறியதாகக் தெரியும். சூரியன், நட்சத்திரங்கள் சிறிதாகத் தெரிவதற்கு அதன் தூரமே காரணமாகும். இதன்படி தூரத்தின் அடையாளம் (اثر) ஒன்றில் கறுப்பு, அல்லது, சிறிது வானம் நீலமாகத் தெரிவதற்கு தூரமே காரணமாகும். நிழலைப்பற்றி நாம் அறிந்து கொள்ளும் அளவுதான் பிரபஞ்சத்தைப் பற்றி நம்மால்  அறிய முடியும்.  நிழலில் நிழலுடையவனும், அவனின் பூரணங்களும்  மறைந்திருப்பது போன்றே  ஹக்குத் த உலாவும் நம்மால் அறிய முடியாதவனாக இருக்கின்றான்.  இதனால்தான் நாம் கூறுகின்றோம்.  அல்லாஹுத்த ஆலா வை ஒரு விதத்தில் அறிகிறோம். மற்றுமொரு விதத்தில் அறிய முடியாதிருக்கின்றோம்.

அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான். உமது இரட்சகன் உமது நிழலை எவ்வாறு  நீளமாக்கியுள்ளான் என்று நீ பார்க்க வில்லையாஅவன் நாடினால் அதை அசையாமல் ஆக்கி விடுவான்.  அதாவது, அவன் நாடினால் அதனை வெளியாக்காமல் அவனுடைய தாத்திலே மறைத்து விடுவான்.   பின்னர், அஃயானே தாபிதாவில் உள்ளவையில் வுஜூத் என்ற சூரியனைப் படச்செய்து அதை காட்சியானதாக ஆக்கிவிடுகிறான். பின்னர்  மெது, மெதுவாக நம்பக்கம் அதை மீட்டிக் கொள்கிறோம். 

அதாவது, இதன் பொருள்  அவன் பக்கம் நிழல் மீண்டு செல்கிறது. 
واليه يرجع  الامر كله
அனைத்து வஸ்த்துக்களுக்கும் ஒதுங்கும் தலம் அவன்தான். இதன்படி, நிழலும், நிழலுடையவனும் ஒருவிதத்தில் ஒன்றுதான். வேறு இல்லை !  அல்லாஹ்வின் வுஜூத்  அஃயானே மும்கினா என்ற அவனுடைய அறிவிலிருந்த கோலத்தின் மூலமாக வெளியாகியுள்ளது.  ஹுவிய்யத், தாத், ஹக்கியத் என்ற புறத்தில் பார்த்தால் நிழலும், நிழலுடையவனும் ஒன்றே!  அதாவது அஹதிய்யத்தின் புறத்தில் ஒன்றுதான்.! அஃயான்களின் பன்மையான கோலங்களின் புறத்தில்  வேறாகும்.    பிரபஞ்சம் என்பது அஃயானின் வெளிப்பாட்டின் குணபாடு (அடையாளமு) ம், அதற்கான தீர்ப்புமாகும்.

நிழல்  நிழலுடையவனை விட்டும் பிரியாது. நிழலுக்குத்  தனியாக நிற்கின்ற வுஜூது கிடையாது, நிழலுடையவனின் அசைவில் தான் நிழலின் இயக்கமும் தங்கியுள்ளது. நிழல் முழுமையாக நிழலுடையவனின் அதிகாரத்திலிருக்கின்றது.  "உங்களையும் உங்கள் செயல்களையும் அல்லாஹ்தான் படைத்தான். "

லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லா ஹில் அலிய்யில் அழீம்.

Part 16

"ஆகுக!" (குன்) என்ற கட்டளைக்கு முன்னுள்ள வை  படைப்பல்ல !

அல்லாஹ்வின் அறிவிலுள்ள கருத்துப் படிவங்களான மஃலூமாத்கள் அதாவது, " அஃயானே தாபித்தா " என்பதும் படைப்பல்ல !  அவ்வாறே தெய்வீகப் பண்புகளும், திருநாமங்களும் படைப்பில் லை,! இவையனைத்தும் அல்லாஹ்வின் தாத்தோடுள்ள  கதீம்- பூர்வீகமானவையாகும். "குன்" - ஆகுக! என்ற கட்டளைக்குப் பின் றூஹுகள் பிறக்கின்றன.  இவை இல்லாமலிருந்து புதிதாக வந்த படைப்பாகும்.  றூஹுகள் புதிதாக வந்த படைப்பாயினும் காலத்திற்கு கட்டுப்பட்டவையல்ல! அதனால் காலத்திற்குட்பட்ட படைப்பாக றூஹுகள் இல்லை. அதனால், அவற்றை "ஹாதிதுத் தஹ்ரி" எனப்படும். ஒரு பொருள்  மெல்ல, மெல்ல கட்டம் கட்டமாக அதன்  முழுமையை அடையக்கூடியது " ஹாதிதுஸ் ஸமானி"   யாகும்.

முழுமையாக ஒரேயடியாக பிறக்கின்றவை அதன் பூரணத்தத்தோடே பிறக்கின்றது. அதனால் இப்படியானவையை " ஹாதிதுத் தஹ்ரி" எனப்படும். இந்த வகையில் றூஹுகள் " ஹாதிதுத் தஹ்ரி" வகையைச் சார்ந்ததாகும் . சட உலகம்" ஹாதிதுஸ் ஸமானி" வகையைச் சார்ந்ததாகும். ஆலமுல் அர்வாஹுக்கும், ஆலமுஷ்ஷஹாதத்து (சட உலகு) க்கும் இடைப்பட்ட உலகு " ஆலம் மிதால்( சூக்கும உலகம்)  ஆகும்.  இது சட உலகு , ஆன்ம உலகு இரண்டையும் விட்டும் பிரிந்து நிற்கக்கூடிய துடன் கற்பனையோ டு கட்டுப்பட்டதாகும்.

இதனால்தான் மனிதனின் கற்பனைக்கும் இவ்வுலகத்திற்கும் தொடர்பு  இருக்கின்றது. ஒரு மனிதன் ஒன்றை எழுதவோ, படிக்கவோ, ஏதும் ஒரு காரியத்தை ஆரம்பிக்க முன்போ முதலில் அது அவரின் கற்பனையில்தான்   வரும்.    அதன் பின்புதான் அது உலகில் வெளியாகும். இவ்வாறு உலகில் ஒன்று பிறப்பதாயினும் சரி, அல்லது வெளியாகுவதாயினும் சரி அது முதலில் " ஆலம் மிதாலில்"  வரும். அதுவே சட உலகில் வெளியாகும். மறைவான விடயங்கள் சாதாரண பாமரனின் கனவில் வெளியாகுவ தை நமது அனுபவம் மறுப்பதில்லை. கனவு ஆலம் மிதாலைச் சேர்ந்ததாகும்.

நபிமார்களுக்கு வஹி வரும் போது மலக்கு ஆலம் மிதாலில்தான் காட்சி கொடுப்பார். நபிமார்களுக்கு ஆரம்பத்தில் நல்ல கனவுகள் வரும்.  கனவில் கண்டது பொழுது புலர்ந்ததும் நிஜமாக நடக்கும்.  இந்த வகையில் பின்னோக்கிப் பார்த்தால்அஃயானே தாபிதாவின்" மிதால்" றூஹுகளாகும். இவற்றின் "மிதால்" ஆலம் மிதால் ஆகும். இதன் மிதால் சட உலகமாகும். 

இவ்வுலகத்தில் செய்கின்ற கிரிகைகளுக்கு ஏற்ப  "கபுறு", அமையும். "கபுறு" எப்படி அமைகிறதோ அவ்வாறுதான் மறுமையில் எழுப்பப் படுவார். இந்த வகையில், அனைத்து உலகங்களும் அஃயானே தாபிதாவின் மிதால், மாதிரிகளாகும்.  சகல வஸ்த்துக்களின்மொத்த மூலமும்( மாஹியாத்) எதார்த்தமும்( ஹகாயிக்கும்) உலகத்தின் பகுதிகளான  ( اجراء)  ஹுவிய்யாத்துகள்  யாவும் அஃயானே தாபிதாவின் வெளிப்பாடுகளும், மாதிரிகளுமாகும் என்பது இப்போது தெளிவாகிவிட்டது,

உண்மை இப்படியிருக்க, மௌலவி அப்துர்ற ஊப் அல்லாஹுத்த ஆலா தனது வுஜூதைப் பார்த்து " குன்" என்று கூறி தன்னைத் தானே அழித்துக் கொண்டதாக குப்றியத்தான வார்த்தைகளை தன்ஸீஹ் என்றால் என்ன என்பதையும், வுஜூதின் படித்தரங்கள் எவைஎன்பதையும் புரியாமல் புலம்புகிறார்.

17-- (17)

பிரபஞ்சம் என்பதுவாஹிதிய்யத் என்ற படித்தரத்தில் உள்ள அஃயானே தாபிதாவில் (அல்லாஹ்வின் அறிவில் பதிவாயிருந்ததில்). அல்லாஹ்வின் வுஜூதின் திருநாமங்களின் தொடர்பினால் ஏற்பட்ட தஜல்லியாத்துக்களாகும். இந்த தஜல்லியாத்துக்கள் கண்ணாடியில் பட்ட  விம்மங்கள் போன்றவையாகும். இந்தத்தஜல்லியாத்துக்களினால்  தனியான வுஜூதைப்பெற்று வெளிவந்ததை  அர்வாஹுகள்( ஆன்மாக்கள்) என்று கூறப்படும்.

இதனை ஹைதராபாத்  ஞானக்கடல்  முஹம்மது அப்துல் காதிர் ஸூபி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் பின் வருமாறு கூறுகின்றார்கள்.

  واما الارواح  ما هي الا الاسماء وما الاسماء الا الشوءن وما الشوءون الا الذات الاحد الواحد الاحد ،..  

அர்வாஹுகள் என்பது அஸ்மாக்களேயன்றி வேறில்லை.அஸ்மாக்கள் என்பது (வஹ்தத்தில் உள்ள) ஷுஊனாத்களாகும் ஷுஊனாத்துக்கள் அல்லாஹ்வின் தாத்துக்களாகும். அல்லாஹுத்த ஆலா  அல்லாஹ்வின் திருநாமங்கள் எடுத்த கோலங்களுக்கு ஓர் உணர்வைக்கொடுத்தான். அவை தன்னைப் பற்றியும் தனது நிலைக்களத்தின் இடத்தையும் பற்றிய அறிவைப் பெற்றுக் கொண்டது. இவையனைத்தையும்  " குன்" ஆகுக! என்ற கட்டளைக்குப் பின்பே!  ஆனதால் அர்வாஹுகள் என்ற. நாமத்தைச் பெற்றுக் கொண்டது. இதன்மூலம் படைப்பின் வாசல் திறந்தது.

இந்த மர்தபாவை (அல்லாஹ்வின் அறிவிலிருந்து) வெளியான  படித்தரம் எனப்படும். இதில் அவற்றின் குணபாடுகளும், அதற்கான சட்டங்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். அர்வாஹுகளுக்கு முன்னுள்ள வாஹிதிய்யத்தும், வஹ்தத்தும் " குன்" என்ற கட்டளைக்கு முன்னுள்ள படித்தரங்களாகும்.  அர்வாஹுகள்  தங்களைப் பற்றிய உணர்வையும், தங்களின் இருப்புக்கு க் காரணமான இடத்தையும் பற்றிய அறிவைக் கொண்டுள்ளதனால் திருநாமங்களிலிருந்து வேற்றுமையாகி விட்டன.

ஆதாரம் : அல்ஹகீக்கா கையெழுத்துப் பிரதி பக்: 57
மேற்கண்ட விளக்கம்  மௌலவி அப்துர் ற ஊபின் ஷைகின் ஷைகுக்குரியது என்பது கவனிக்கத்தக்கது.

மௌலவி அப்துர்ற ஊப் அல்லாஹுத்த ஆலா அஹதிய்யத்தில் "குன்" என்று கட்டளையிட்டான் என்கின்றார். அவர் தரீக் வழிப்பாட்டனான ஹைதறாபாத் ஸூபி ஹளறத் ஷைகு நாயகமவர்கள், அஹதிய்யத்திற்குக் கீழ் உள்ள இரு மர்தபாக்களும் " குன்" என்ற கட்டைளைக்கு முந்தியவை என்கின்றார்கள். இவ்வாறே மௌலவி அப்துர்ற ஊப் அதிகமாக ஆதாரம் காட்டுகின்ற " அத்துஹ்பத்துல் முர்சலா" என்ற நூலும் ஏனைய சகல தஸவ்வுப் நூற்களும் வியாக்கியானம் செய்கின்றன. மௌலவி அப்துர்ற ஊப் தனித்து நின்று கூறும் அறிவுக்கு ஒவ்வாத அவரின் உளறல் பேச்சைக் கேட்பதா? அல்லது, ஞானக் கடல்களின் முத்தான விளக்கங்களை ஏற்பதா?
நன்கு சிந்தியுங்கள்.!

மௌலவி அப்துர் ற ஊப்  பிரபஞ்சம் அதம் என்ற இன்மையிலிருந்து வரவில்லை என்று ஓயாமல் ஒப்பாரி வைக்கின்றார். இதை அறியாமை என்பதா? அகங்காரம் என்பதாபொறுப்பற்ற வாய்ச்சவாடல் என்பதா?  
மௌலவி அப்துர்ற ஊப் தெளிந்த நிலையில் அகீதா நூலையும், ஸூபிகளின் தஸவ்வுப் நூற்களை யும்  வாசிப்பாராயின் தனது தவறைப்புரிந்து கொள்வார்.  இதற்கு ஒருபோதும் ஆவர் முன்வரமாட்டார்.

காரணம்,  அவரின் முழுக் கவனமும் தன்மீது விழுந்த  " முர்தத்" என்ற நஜீஸை அகற்றுவதாகும். அதற்காக, தான் கூறியது வழிகேடு தான் என்று தெட்டத் தெளிவாக அவருக்குத் தெரிந்தும் அவர் அதை ஒப்புக்கொள்ள பிடிவாதமாக மறுக்கின்றார்.

அண்மையில் ஒரு வட்சொப் வலைத்தளத்தளத்தில்  அஹ்லூஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் மௌலவிமார்களுக்கும், மௌலவி றஊப் மௌலவி யின் சீடர்களான மௌலவிமார்களுக்குமிடையில் ஒரு விவாதம் பல நாட்களாக நடந்தது. அல்லாஹுத்த ஆலா மூலப் பொருளைக் கொண்டே உலகத்தைக் படைத்தான் என்று றஊப் மௌலவி யின் சீடர்கள் வாதித்தனர். இக்கருத்தை மறுத்து அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் மொலவிமார்கள் வாதித்தார்கள். வாதத்தின் நடுவில், அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜ மாஅத்  மௌலவி யொருவர் இமாமுல் அஃழம் அபூஹனீபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் பிக்ஹுல் அக்பர் என்ற நூலிலிருந்து அல்லாஹுத்த ஆலா உலகத்தை மூலப் பொருளிலிருந்து படைக்க வில்லை என்பதற்கான ஆதாரத்தைக்காட்டி அவர்களின் வாதத்தை சுக்குநூறாக்கினார்..

இதற்குப் பதில் செல்ல வக்கற்றுப் போனவர்களில் ஒருவர்  இருகருத்துக்களை முன்வைத்து நெஞ்சை உயர்த்திக் கொண்டார்.

1)   இமாம் அபூஹனிபா அவர்களைப்பற்றி நிறைய விமர்சனங்கள் உண்டு. அவர் பற்றிய விமர்சனங்களை நாங்கள் முன் வைத்தால் காடுமுறித்துக் கொண்டு  நீங்கள்  ஓட வேண்டி  வரும்.

2)   இமாம் அபூ ஹனிபா றஹ்மதுள்ளாஹி அலைஹி அவர்கள் பிரபஞ்சத்தை எந்த ஒரு மூலப்பொருளிலிருந்தும் படைக்க வில்லை என்று எந்த ஆதாரத்தை வைத்துக் கூறினார்கள் என்று நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்று பல முறை பல நாட்களாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

இதே மாதரி  மற்றுமொரு சீடர்அதே வட்சொப் வலைத் தளத்தில் பிரபஞ்சம் இன்மையிலிருந்து வந்தது என்ற ஷைகுல் அக்பர் இப்னு அரபி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் கருத்தை அவர்களின் நூலிலிருந்து காட்டிய போது, இக்கருத்தை ஷைகுல் அக்பர் அவர்கள் எந்த ஆயத்து, சஹீஹான எந்த ஹதீதின் அடிப்படையில் கூறினார் என்று நீங்கள் எடுத்துக்காட்ட வேண்டும் என்று முழக்க மிட்டார்.

ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். என்பது போல், மௌலவி அப்துர்ற ஊப் தனது கருத்துக்கு எதிராக யார் கூறினாலும் அவர்களை தூக்கி வீசி விடுவார் என்பதற்கு அவரினதும், அவர் சீடர்களினதும் சீற்றங்கள்  தக்க சான்றாகும். மௌலவி அப்துர்ற ஊபும் அவர் வழிவந்த சீடர்களும் இமாம்களை யும், ஸூபி ஞானிகளை யும் பின்பற்றுவதாக க் கூறுவது மக்களை ஏமாற்றுவதற்காகக் கூறுகின்ற மாய்மாலங்களாகும்.  உண்மையை ஏற்பது, உரைப்பது அவர்களின் நோக்கமாயின் தனது ஷைகையும், தனக்கு ஓதிக்கொடுத்த உஸ்தாமார்களையும் எட்டி உதைத்திருக்க மாட்டார்.

இமாம்களின் ஆதாரங்களை முன்வைத்து போது அதை மறுக்க குறுக்கு வழிகளைக் தேடியிருக்க மாட்டார். உண்மையான அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையையுடையவன்  இமாம்களின் கூற்றுக்களை மதிப்பான். ஏன் என்றோ அதற்கான ஆதாரம் எங்கே என்று இமாம்களுக்கு எதிராக விரலை நீட்ட மாட்டான்.

இமாம்களின் கூற்றுக்கள்   வாதத்தின் கருத்தை தெளிவாக விளக்குமாயின் அதை சரிபடுத்துமாறு அதாவது அதற்கான ஆதாரத்தைக் கேட்க முடியாது. யாராவது அவ்வாறு கேட்டு வலியுறுத்தினால் அவனது நோக்கம் உண்மையை என்பதல்ல,! விதண்டா வாதம் செய்வதாகும். விவாதம் செய்யும் ஒழுங்கைப்பற்றிக் கூறும் " முனாழறா றஷீதிய்யா" என்ற நூல் பின்வருமாறு கூறுகிறது.

 ثم اعلم انه بعد ما نقل احد المتخاصمين  قولا ان كانت صحته وكونه  مطابقا للواقع  معلومة للآخر  فلا يصح طلب تصحيحه  فانه مع العلم بذلك لو طلب  تصحيحه كان مكابرا
مناظرا رشيدية ، ١٤

வாதம் செய்கின்ற இருவரில் ஒருவர் சரியான ஒருகூற்ற முன்வைத்து அக்கூற்று  வாதத்திற்கு நேர்பாடாக இருந்து அது பற்றிய அறிவும் அவருக்குஇருந்தும் அவர் முன் வைத்த கூற்றின் வலிதை சரிப்படுத்த வேண்டும் என்று கோர முடியாது.!  இக்கூற்றின் ஆதாரத்தன்மையைப்பற்றிய அறிவு அவருக்கு இருந்தும் அக்கூற்றை நியாயப்படுல்துமாறு அவர் கோரினால் அவர் விதண்டாவாதியாவார்.
ஆதாரம்: முனாழறா றஷீதிய்யா: பக், 13-14-

மௌலவி அப்துர் ற ஊபும் அவர் வழிவந்தவர்களும் விதண்டாவாதிகள் என்பதை அவர்களின் நீண்ட கால வரலாறு  நிரூபித்துக் கொண்டே வருகிறது. . மௌலவி அப்துர்ற ஊப் தனக்கு ஓதித்தந்த உஸ்தாதுமார்களுக்கு தஸவ்வுப் ஞானம் கிடையாது என்றார். ஓதும் காலத்தில் மத்ரசாக்களில் தஸவ்வுப் நூற்களையோ, அகீதா நூற்களையோ ஓதிக் கொடுக்க வில்லை என்றார். தன்னில் குறை கண்ட தனது ஷைகை பெருமை பிடித்தவர் என்றார். அவரின் அறிவுரையை புறந்தள்ளிவிட்டு பயில்வானை தனது ஷைகுக்கு எதிராக களமிறக்கினார். இப்படியாக  அவர் வரலாறு தொடர்ந்து கொண்டே செல்கிறது.

மௌலவி அப்துர்ற ஊபின் தனிப்பட்ட வஹ்தத்துல் வுஜூது கோட்பாட்டில் படைப்புக்கு முன் இன்மை கிடையாது.  ஆனால், ஷைகுல் அக்பர் அவர்கள் கூறும் வஹ்ததுல் வுஜூத் கோட்பாட்டில் படைப்பு "அதம்"- என்ற இன்மையிருந்த வந்ததாகும்.

ஷைகுல் அக்பர் றழியல்லாஹு அன்ஹு எழுதுகிறார்கள்.

فاعلم ان الناس مذ خلقهم الله تعالي وأخرجهم من العدم الي الوجود لا يزالوا مسافرين

التدبيرات الالهية  في إصلاح المملكة الانسانية -٢

இந்த நூலை ஆல்ஆரிபு பில்லாஹ் அஷ்ஷைகுல் காமில் ஷைகு அப்துல் காதிர் சூபி ஹளறத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் தமிழாக்கி " கல்வத்தின் இரகசியம்" என்ற பெயரில் வெளியாக்கியுள்ளார்கள் .அதை இப்போது படியுங்கள்! " அறிந்து கொள்வீராக! அல்லாஹுத்த ஆலா  நம்மை "அதம்" என்ற இன்மையிலிருந்து உஜூது ( என்ற) உள்ளமைக்கு யாத்திரீகர்களாகவே தான் படைத்திருக்கின்றான்.    இதைவிட தெளிவான ஆதாரம் வேறு தேவையில்லை.

இந்த நூலையும், ஷைகுனா ஸூபி நாயகத்தின் நினைவு மலரையும் ஆதாரமாக எடுப்பவர் இந்த கூற்றை தட்டிக் கழிப்பது ஏன்??? ஷைகுல் அக்பர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மட்டுமல்ல பிரபஞ்சம் ஒருபடைப்பு என்ற அகீதாவைக் கொண்டுள்ள சகலரும் இப்படித்தான் கூறுவார்கள்.  மௌலவி அப்துர்ற ஊபின் கூற்று சாதாரண அறிவுள்ளவனாலும் ஏற்க முடியாது .

பிரபஞ்சம் இல்லாதிருந்து புதிதாக வரவில்லை என்றால் பிரபஞ்சத்தின் மூல இடம் அஹதியத்தாக வேண்டும். அப்படியாயின் அஹதியத்தை கன்ஸுல் மக்பியா, மஸ்கூத்து அன்ஹு , காத்துக் ஸறாபத் என்றெல்லாம் கூறுவது பிழையாகும்.  பிரபஞ்சம் கதீம் என்று ஏற்க வேண்டும்.  இங்கே ஷிர்க் வந்து விடுகிறதே! இதைவிட  பெரிய முட்டாள்தனம் என்ன தெரியுமா? குத்றத் என்ற ஸிபத் வாஜிபான ஸிபத்துக்களிலும் முஸ்தஹீலான ஸிபத்துக்களிலும் ஒருபோதும் தொடர்பாகாது. படைப்புக்களோடு மட்டுமே தொடர்பாகும். காரணம், குத்றத் ஆக்கல் அழித்தல் வேலையைச் செய்யும்.  அப்படியாயின் ,

குத்றத் வாஜிபான பண்பில் தொடர்பானால் அவற்றை செயலிழக்க வைத்து அதற்கெதிரான முஸ்தஹீலான பண்புகளை கொண்டு வரும். அதுபோல் முஸ்தஹீலான பண்பில் கொழுகினால் அதற்கெதிரான வாஜிபான பண்புகளைக்கொண்ட அல்லாஹ்வுக்கு நிகரான ஒருவரைக் கொண்டுவரும். இவையிரண்டும் சாத்தியமில்லை!  படைப்பில் தொடர்பானால் ஒன்றை ஆக்குவதும், அழிப்பதும் அவன் வல்லபத்தை பறைசசாற்றுவதாகும்.  இந்த விளக்கம் அகீதா நூற்களில் தெளிவாகக் கூறப்பட்டவை!

மௌலவி அப்துர்ற ஊபின் கருத்துப்படி, அல்லாஹ்வின் வுஜூதில் குத்றத் கொழுகினால் அல்லாஹ் தன்னைத் தானே தற்கொலை செய்து கொண்டதாக ஆகும். ந ஊதுபில்லாஹி மின்ஹா! மௌலவி அப்துர்ற ஊபுக்கு தன்ஸீஹும் புரிய வில்லை, தஷ்பீஹும் புரிய வில்லை!  அதனால் குப்று ஷிர்க்கு சகதியை முகத்தில் பூசிக் கொண்டு பெருமையடித்து க் கொண்டு திரிகிறார் என்றும், அவர் மார்க்கத்தில் துணிச்சலாக விளையாடுகிறார் என்றும் அவருடைய ஷைகான அஷ்ஷைகுல் காமில் ஸூபி நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் கூறியது எந்தளவு உண்மை என்பது இப்பொழுது புரிகிறதா?  பிரபஞ்சம் வுஜூத் என்ற மூலத்திலிருந்து தான் படைக்கப்பட்டுள்ளது என்ற மௌலவி அப்துர் ற ஊபின் முட்டாள்தனமான கூற்றின் விளக்கத்தை அடுத்த தொடரில் எதிர்பாருங்கள்.!

18
மௌலவி அப்துர்ற ஊப் மிஸ்பாஹி அவர்கள் படைப்பின் ஆரம்பத்தைப் பற்றிக் கூறும் போது, படைப்பை தனது தாத் என்ற மூலத்திலிருந்தே படைத்தான் என்கின்றார். இவரின் இவ்வாதம் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அகீதா வுக்கு எதிரான கூற்றாகும்.  அகீதா தொடர்பாக முதன் முதலில் வெளிவந்த நூல் இமாமுல் அஃழம் அபூ ஹனீபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் "பிக்ஹுல் அக்பர்" என்ற நூலாகும்.

இந்த நூலுக்கு பலரும் விரிவுரை எழுதிய போதும் இமாம் முல்லா அலி காரி றஹ்மத்துள்ளாஹி அலைஹி அவர்களின் "ஷறஹு பிக்ஹுல் அக்பர்" என்ற நூல் பிரசித்தி பெற்றதாகும். இந்த நூல் உலகம் முழுவதிலும் குறிப்பாக ஹனபி  மத்ரசாக்களில் பாடத்திட்டத்தில் உள்ளது.  இந்த நூலில் உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது? என்று நம்ப வேண்டும் என்ற  அகீதா கோட்பாட்டை இமாமுல் அஃழம் அபூ ஹனீபா றஹ்மதுல்லாஹி அலைஹி பின் வருமாறு எழுதுகின்றார் கள்.

خلق الله تعالي الاشياء لا من شيئ،
எந்த ஒரு மூலமுமில்லாமல் அல்லாஹுத்த ஆலா வஸ்த்துக்களைப் படைத்தான்.
ஆதாரம்: ஷறஹு பிக்ஹுல் அக்பர், பக்,47

வஹ்தத்துல் வுஜூத் கோட்பாட்டை சுருக்கமாகவும், ஆழமாகவும் கூறும் நூற்களில்"  அத்துஹ்பத்துல் முர்சலா" என்ற நூல் பிரபல்யமானது. இந்த நூலை எங்களின் ஷைகு நாயகம் அல்ஆரிபு பில்லாஹ் ஆஷிக்குர்றஸூல் அஷ்ஷைகுல் காமில் ஷைகு அப்துல் காதிர் சூபி கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் தமிழாக்கி வெளியிட்டுள்ளார்கள். இந்த நூலை மௌலவி அப்துர் ற ஊபும் அதிகமாகப் பாராட்டி எழுதியுள்ளார்.  இந்த நூலின் ஆரம்பத்தை மட்டும் பார்த்து விட்டு திருப்தி கண்டதனால் முழுமையாக வாசிக்கத் தவறி விட்டார்.

துஹ்பத்துல் முர்சலா என்ற நூலை முழுமையாக அவர் வாசித்திருந்தால்  முட்டாள் தனமாக இப்படிப் பேசியிருக்க மாட்டார்.
அத்துஹ்பத்துல் முர்சலா நூலிலில் பின்வருமாறு வருகிறது.

المرتبة الرابعة مرتبة الارواح  وهي عبارة عن الاشياء الكونية اي الداخلية تحت حيطة كن  المجردة اي المادة من حيث انها صادرة من العدم الخارج الي الوجود الخارجي
التحفة المرسلة ، ١٧-١٨

அல்லாஹ்வின் வுஜூதின் இறக்கத்தில் நான்காவது படித்தரம்  அர்வாஹுகளின் படித்தரமாகும். இது " குன்" என்ற வட்டத்திற்குட்பட்ட உலகம் தொடர்பான ஒரு வாசகமாகும்.

(மேலும் இதுவாகிறது) (அஃயானே தாபிவிலிருந்து) வெளியான  இன்மையிலிருந்து(உணர்வு பெற்று)வெளியான உள்ளமையயின் பால் வந்தது என்ற ரீதியில் மூலங்களிலிருந்து தனித்த தாகும்.
ஆதாரம்: அத்துஹ்பத்துல் முர்சலா,: பக்; 17,18

அத்துஹ்பத்துல் முர்சலா நூலின் ஒருவிரிவுரை நூலில்,
 اذ هي من الابدعيات الكائنات من غير مادة،
الحجب المسبلة علي فوائد التحفة المرسلة ٣٦
றூஹுகள் என்பது   மூலமின்றி " குன்" என்பதைக் கொண்டு உண்டான நவீனமான வகையில் உள்ளதாகும் .

ஆதாரம்: அல்ஹுஜ்புல் முஸப்பலா. பக்: 36

அர்வாஹுகள் அஃயானே தாபிதாவில்  தனித்த வுஜூத் காரணத்தால் இல்லாத வையாக இருந்தன. பின்னர், அவற்றிற்கு அல்லாஹுத்த ஆலா "குன்" என்ற அவனது சக்தியின் மூலம் உணர்வைக் கொடுத்தான். அதன்பின் அவை தனியொரு பொருளாக வெளியில் வந்தன. இங்கு அவை வெளியில் வருவதற்கு "குன்" என்ற கட்டளைதான் காரணமாகும். றூஹுகள் எதுவித மூலப் பொருளுமின்றி  அல்லாஹ்வின் அறிவிலிருந்து அவன் கட்டளையால் வந்ததனால்தான் றூஹு எனது றப்பின் கட்டளையிலிருந்து வெளிவந்தது என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

தப்ஸீர் பைழாவியில் இத்திருவசனத்திற்கு இவ்வாறு விளக்கம் எழுதப்பட்டுள்ளது
(قل الروح من امر ربي)  من الابدعات الكائنة بكن من غير مادة ،
تفسير بيضاوي

றூஹ் என்பது மூலமின்றி " குன்" என்ற கட்டளையால் உண்டான நவீனமானவையில் நின்றும் உள்ளதாகும்.
ஆதாரம், தப்ஸீர் பைழாவி,

இந்தியாவில் வஹ்தத்துல் வுஜூத் கோட்பாட்டை  வளர்த்த வர்களில் முன்னோடியாகக் கருதப்படுபவர்கள் ஷைகுனா ஷைகுல் இஸ்லாம் அஷ்ஷாஹ் வலியுள்ளாஹில் முஹத்திதுத் திஹ்லவி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களாகும். இவர்கள் ஷைகுனா அல் ஆரிபு பில்லாஹ் அஷ்ஷைகுல் காமில் ஷைகு அப்துல் காதிர் சூபிநாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின்ஸில்ஸிலாவில் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் புகழ் பூத்த நூலான ஹுஜ்ஜத்துல்லாஹில் பாலிஙாவில் பின்வருமாறு எழுதுகிறார்கள்.
اعلم ان الله تعالي بالنسبة  الي ايجاد العالم  ثلاث صفات ،
احدها، الابداع وهو ايجاد شيئ لا من شيئ  فيخرج الڜئ من كتم العدم بغير مادة ،

الحجة الله البالغة، ٢١
அறிந்து கொள்! உலகத்தை உருவாக்குவது தொடர்பாக  அல்லாஹுத்த ஆலா வின் மூன்று பண்புகள் ஒழுங்கு முறையாக உள்ளன. அவற்றில் முதலாவது,    "அல்இப்தாஃ "  அல்இப்தாஃ (الابداع) என்பது எதுவித மூலமுமின்றி  தனித்த இல்லாமையிலிருந்து ஒரு பொருளை படைப்பதாகும். அதாவது, மூலமின்றி இல்லாமையிலிருந்து ஒரு வஸ்த்து வெளியாகும்.

ஆதாரம், ஹுஜ்ஜத்துள்ளாஹில் பாலிஙா, பக், 21,

ஹுஜ்ஜல்துல் இஸ்லாம் இமாம் ஙஸ்ஸாலி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அஸ்மாஉல் ஹுஸ்னா வுக்கு அற்புதமான ஒரு விளக்கவுரை எழுதியுள்ளார்கள்.
அதில்,"பாரி" என்ற திருநாமத்தை பின்வருமாறு வரை விலக்கணப்படுத்துகின்றார்கள்.

 وباعتبار مجرد الايجاد والاخراج  من العدم الي الوجود ، بارئ،

படைப்பதும், இன்மையிலிருந்து வுஜூதின் பக்கம் வெளியாக்குவதும்  " பாரி" என்ற பண்பாகும்.
ஆதாரம்: அல் மக்ஸதுல் அஸ்னா, பக்: 75,

அல் அரிப்பு பில்லாஹ் அப்துல் கரீம் ஜியலி றஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.
فالقدرة  هي القوة البارزة للموجودات  من العدم وهي صفة نفسية بها ظهرة الربوبية،
انسان كامل ، ص، ٦٩
"குத்தத்"  என்பது , பண்பு இன்மையிலிருந்து வெளிப்படுத்துகின்ற ஆற்றலாகும்.  இது அல்லாஹ்வின் தாத்தோடுள்ள பண்பாகும். இப்பண்பின் மூலமாகத்தான் றுபூபிய்யத் வெளியாகியது.
ஆதாரம் :  இன்சான் காமில்,  பக்: 69,

மேற்கண்ட சகல சான்றுகளும் ஆரம்பத்தில் எதுவித மூலமுமின்றி அவனுடைய தனித்த ஆற்றலின் மூலமே படைப்பை வெளியாக்கி னான்.  படைப்பு வெளியாக முன் அவனுடைய அறிவில் படிவங்களாக இருந்தன. அவற்றில் அல்லாஹ்வின் திருநாமங்கள் தொடர்பாகி தஜல்லியாகின என்று வஹ்தத்துல் வுஜூதைப்பற்றி எழுதுகின்ற சகல  அறிஞர்களும் மாற்றமில்லாமல் கூறும் போது  மௌலவி அப்துர் ற ஊப் போதையில் ஏதோ உளறுகிறார்.  இவரின் பிழையான புரிதலால் தானும் வழிகெட்டு மற்றவர்களையும் வழிகெடுக்கிறார். தன்னிடமிருக்கின்ற பேச்சாற்றலையும், சாணக்கியத்தையும் பயன்படுத்தி வழிகேட்டை அவர் சீடர்கள் மத்தியில் திறமையாக அரங்கேற்றுகிறார்.
இவரின் பசப்பு வார்த்தையில் ஈமானைப் பறிகொடுக்காமல் மனம் திருந்தி ஈமானைப்புதிப்பித்தால் மறுமையில் தப்பலாம். தவறினால் இருபதியும் கைதேசமாகவே அமையும்.  அல்லாஹுத்த ஆலா பாதுகாப்பானாக!


தஜல்லி--تجلي
வஹ்தத்துல் வுஜூத் கோட்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு " தஜல்லி" என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். ஸூபியாக்களின் பரிபாசையில், தஜல்லி என்பது,

ஒரு பொருள் முதற் படியிலிருந்து அடுத்த படித்தரத்திற்கு இறங்குவதற்குக் கூறப்படும். ஷைகுல் இஸ்லாம் ஸக்கரிய்யல் அன்சாரி றஹ்மதுள்ளாஹி அலைஹி கூறுகின்றார்கள்.
التجلي، ظهور الذات في حجب الاسماء والصفات تنزلا،
منتخبات من شرح الاسلام ابي يحيزكريا الانصار ، من هامش الرسالة القشيرية، ص، ٤٢

தஜல்லி என்பது,அஸ்மா க்கள், மற்றும் பண்புகள் என்ற திரையில் தாத் இறங்கி வெளியாகுதலைக் குறிக்கும்.
ஆதாரம்:, அல்முன்தகபாத்பக்: 42

உதாரணமாக, கரும்புச்சாறு கரும்பிலிருந்து நீங்கி வெளியில் வந்துள்ளது. அப்படியாயின், கரும்பில் பாதினாக- அகமாக- இருந்ததுவெளியில் தஜல்லியாகி விட்டது. சாறு என்ற கோலம் வெளியில் இருக்க வில்லை. கரும்புக்குள் ஆற்றலாக(بالقوة)  இருந்தது. இப்போது செயல் வடிவில் வந்துள்ளது. பின்னர், இச்சாறு பல்வேறு கோலங்களில் வெளியாகக்கூடிய தகுதியைக் கொண்டிருக்கின்றது. கரும்புச் சாற்றிலிருந்து, சர்க்கரை, வெல்லம், சீனி, கற்கண்டு,உள்ளிட்ட கோலங்கள் வெளியாகின்றன. பின்னர் சீனியும் பல கோலங்களில் வெளி வருவதற்கான தகுதியைப் பெற்றிருக்கின்றது.  குளுக்கோஸ், பாகு, சிகப்புச்சீனி, தூய வெள்ளைச்சீனி  உள்ளிட்ட அனைத்துத் கோலங்களும் கரும்புச் சாற்றில் ஆற்றலாக இருந்தன. ஆதலால், மேற்படி அனைத்து கோலத்திலும் " சாறு"  வெளியாகியுள்ளது.

"சாறு" சர்க்கரையாக ஆனது அதன் முதல் வெளிப்பாடு- தஜல்லி- வெல்லம் இரண்டாவது தஜல்லி, வெல்லம் சீனி யானது மூன்றாவது தஜல்லி, வெல்லத்திலிருந்து சிகப்புச்சீனியாக வந்தது நான்காவது தஜல்லியாகும். சிகப்புச் சீனியிலிருந்து தூய வெள்ளைச்சீனியானது ஐந்தாவது தஜல்லியாகும். இவ்வாறு அதன் ஒவ்வொரு கோலமும் தஜல்லியாகும். இந்த உதாரணத்தை நன்கு கவனத்தில் கொண்டிருந்தால்  இலாஹியத்தான(தெய்வீக) தஜல்லியாத்தின் ஹகீக்கத் வெளியாகும்.அத்தோடு பிரபஞ்சத்தின் கோலங்களின் இரகசியமும் வெளிச்சமாகும்.

இதன்பின், مجلي மஜல்லா என்றால் என்ன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.  மஜல்லா, என்றால் தஜல்லியாகும் "தலம்" என்பதுஅகராதிப் பொருள். ஸூபியாக்களின் பரிபாஷைச் சொல்லில், தஜல்லியாகக் கூடியது எப்பொருளில் தஜல்லியானதோ அந்தப் பொருளின் குறிப்பிட்ட கோலமாகும். உதாரணமாக, சாறு, சீனியின் கோலத்தை எடுத்தது.இதில் சீனியின் கோலம் மஜல்லா- தஜல்லியான தலம்- ஆகும். சீனி வெளியில் கோலம் எடுக்க முன் சாற்றில் சீனியாக வெளியாவதற்கானஆற்றலாக மறைந்திருந்தது.,

சாற்றில் ஆற்றலாக இருந்த கோலங்களை அதன் பண்புகள் எனக்கூறப்படும். இக்கோலங்கள் யாவும் சாற்றில் மறைந்திருக்கும் வரை வெளியில் அதனை நமக்குக் காட்டாது. ஆயினும் சாற்றுக்குள் இத்தனை கோலங்களும் மறைந்துள்ளன என்பதை நமது புத்தி உறுதிப்படுத்துகின்றது. சாற்றில் இத்தனை கோலங்களும் மறைந்திருக்கும் போது    அக்கோலங்கள் சாறு தன்னிலே "ஐன்"  சாறாகவே இருந்தன. இக்கோலங்களில் எதுவும் பிரிந்து வேறாகியிருக்க வில்லை. 

இக்கோலங்களைப் பிரித்தறிவதை  நமது புத்தியிலிருந்து அகற்றிவிட்டால்  அவற்றை கரும்புச் சாற்றின் ஷஃனு, شأن، அல்லது தொடர்பு, நிஸ்பத், அல்லது ஸிபத், பண்பு என்று கூறுவோம். இக்கோலங்கள் வெளியில் வர முன் அக்கோலங்களை புத்தியில் பெற்றுக் கொள்வோம். அப்போது புத்தியில் ஒன்றிலிருந்து மற்றதை வேறுபடுத்திப் பார்ப்பது வெளியில் வர முன் அவற்றை "அஸ்மா க்கள் " எனக் கூறுவோம். சாற்றில் மறைந்திருந்த கோலங்கள் வெளியானால் அதனை(வெளியான கோலங்களை)  செயல் என்போம். (ஸிபத்,) பண்பு, என்பது எதுஇஸ்மு, (திருநாமம்) என்பது எது? செயல் என்று எதற்குப் சொல்வது? என்று நாம் கூறியதை நன்கு கவனத்தில் கொண்டு அடுத்து வரும் விளக்கத்தைக் படிக்க தயாராகுங்கள்.
      
(20)
பண்பு, திருநாமம், செயல் உள்ளிட்டவைகள் எதற்குச்சொல்லப்படும் என்பதை கடந்த தொடரில் உதாரணத்தோடு விளக்கினோம்.  அதே விடயத்தின் மேலதிக விளக்கத்தை அதே உதாரணத்தின் மூலம் தருகிறோம். கவனமாகப் படியுங்கள்.! அல்லாஹுத்த ஆலா எனக்கும், உங்களுக்கும் தெளிவாக விளங்கும் பாக்கியத்தை றஸூலுள்ளாஹி சல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்களின் பொருட்டினாலும், சங்கைக்குரிய ஸூபியாக்களின் பொருட்டினாலும் தௌபீக் செய்வானாக!
ஆமீன். யாறப்பல் ஆலமீன்.!

நமக்கு  முன்னால் இருக்கும் வெள்ளைச் சீனியின் கோலத்தை  சீனியின் செயல் எனப்படும். மேலும் அதை "மஜல்லா". தஜல்லியான இடம் என்றும் கூறப்படும். காரணம், சீனியின் கோலம் வெளியாக முன்னர்  சாற்றில் இந்தக் கோலங்களை புத்தியால் வகுத்துப் பார்க்கக் கூடியதாக இருந்தன.  இதனை அறிவில் அமைந்த கோலங்கள் ( சூறத்தே இல்மிய்யா, (صورعلمية) என்று கூறப்படும்.!

அறிவில் அமைந்த கோலங்களும், சீனியை உருவாக்கிய பண்பும்  வெளியில் வந்த கோலங்களாக ஸிபத்தும், இஸ்மும்  வெளியான இடம் போன்று சீனியின் கோலத்தில் வெளியாகி விட்டன. ஆயினும், இஸ்முக்கான இடம்  தாத்தை கொண்டுதானிருக்கின்றது.  ஸிபத்திற்கான இடம்  இஸ்மு என்ற கோலத்தின் ஊடாக இருக்கின்றது. ஏனெனில், அறிவில் உள்ள சீனியின் கோலம் வெளியான இடம்  சீனியின் ஸிபத்துத்தான்.  அது சாற்றில் ஐன் சாறு தன்னாகவே தான் இருந்தது.

புத்தியில் இருந்த  கோலமான சீனியில்   ஸிபத் வெளியானது.  அதனால்தான் சீனியை இஸ்மு வெளியாக்கியது.  இரண்டு கோலங்களின் வெளியாகும் தானத்தின் இடம் " நீ" தான். ஆனாலும் இஸ்முக்கான இடம் தாத்தேதான்.

ஸிபத்துக்கான இடம் என்பது இஸ்முக்கான தானத்தை உண்டாக்கிய தஜல்லியை  "கண்ணாடி"   என்றும் கூறப்படும்.  வெளியில் வந்த கோலத்தை அதனை செயல் என்றும் கூறப்படுகின்றது. நாம் இஸ்மைப் பார்க்கின்றோம்.  அதன் கோலத்தில்  ஸிபத்தையே காண்கின்றோம்.  செயல் என்பது இஸ்முக்கான கண்ணாடியைப் போன்றுள்ளது.  இஸ்மு என்பது ஸிபத்துக்கான கண்ணாடியாக உள்ளது.  ஸிபத்துக்கான கண்ணாடி சாற்றின் தாத்துக்கான கண்ணாடியாக உள்ளது.

முதலில் சீனியை நாம் பார்க்கும் போது  முதலில் செயலின் காட்சி - முஷாஹதா- ஏற்படுகிறது.  இரண்டாவது பார்வையில் இஸ்முக்கான முஷாஹதா விழுகிறது. மூன்றாவது பார்வையில் ஸிபத்துக்கான முஷாஹதா விழுகிறது நான்காவது பார்வையில் தாத்துக்கானதாகும். இவற்றில் குறிப்பில்லாமல் இருப்பது  தாத்துல் பஹ்த்தாகும்.   இதில் ஸிபாத் என்ற ரீதியில் பிரிவில்லாமலும்வேறுபாடில்லாமலும் தாத்திலிருந்து எழுந்ததை ஸிபாத்துடைய மர்தபாவாக குறிப்பானது. அது எப்போது ஒவ்வொரு வஸ்த்துவும் மற்ற வஸ்த்துவிலிருந்து வேறுபட்டு அறிவில் பிரிந்ததோ அப்போது  இஸ்முக்கான மர்தபா உண்டாகிவிட்டது.

கோலங்களாக வெளியில் வந்த போது செயலாக வெளிவந்து விட்டது. அதுவே பிரபஞ்சம் என்ற பெயரில் வெளிவந்தது. பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு அணுவும் இவ்வாறுதான் வெளிவந்துள்ளன.  இதை வைத்து ஏனைய வற்றை ஒழுங்கு பிடித்துக் கொள்ளவும். ஒவ்வொரு மர்தபாவும் அதற்கு மேல் உள்ள மர்தபாவில் மறைந்துள்ளது. இந்த வகையில்,  செயல் இஸ்மிலும், இஸ்மு ஸிபத்திலும், ஸிபத் தாத்திலும் மறைந்துள்ளது.  இந்த வகையில் பார்க்கின்ற ஒவ்வொரு பொருளையும் கண்ணாடியாக்கிப்பார்த்தால் முதலில் செயலின் கோலம் தெரியும்.அடுத்து இஸ்மின் கோலம் அடுத்து ஸிபத்தின் கோலம் அடுத்து தாத்து.!

இந்த வகையில் முதலாவது பார்வையில் வெளிப்பாடானது அடுத்த பார்வையில் உள்ள இஸ்மு மறைவாக இருக்கும்.  மூன்றாவது பார்வையில் உள்ள  "ஷஃனு" மறைவில் மறைவாக இருக்கும். நான்காவது பார்வையில் உள்ள  தாக்குதல் பஹ்து என்பது மறைவில் மறைவில் மறைவாகும். இது இப்படியிருக்க, செயலை மூன்றாவது கட்டத்தில் உள்ள வெளிப்பாடு என்பது தாத்துல் பஹ்துக்கு வெளிப்பாடில்லை என்பதைக் கவனித்ததனாலாகும் என்பதைக் கவனத்தில் கொள்க!  

தாத்துல் பஹ்துக்கு வெளிப்பாடு சாத்தியமில்லை  என்பதனால் சகல வழிகளிலும் அது மறைவாகவே இருக்கின்றது.  அதனால் எந்த ஒரு பெயராலும் , அல்லது சிலேடை யாவும் குறிப்பாக்கிக் கூறமுடியாது. அதனால் எந்த ஒரே பெயராலும் குறித்துக் கூற முடியாத காரணத்தால் "ஹுவ" என்ற வார்த்தையால் கூறி மனநிம்மதி அடைகின்றோம். இந்த " ஹுவ" என்ற தாத்துத்தான் ஸிபத்தின் மர்த்தபாவாக, பின் இஸ்மின் மர்தபாவாக, பின் செயலின் மர்த்தபாவாக வெளி வந்துள்ளது.   ஒவ்வொரு மர்த்தபாவிலும்  "ஹுவிய்யத்" மறைந்துள்ளது. அதுதான் மறைந்து கொண்டு அனைத்தையும் இயக்குகின்றது.  பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் அது ஊடுருவி காட்சி கொடுத்துக் கொண்டிருக்கின்றது. " நீங்கள் எங்கு திரும்பினாலும் அல்லாஹ்வின் தாத்து இருக்கின்றது" என்ற திருமறை வசனத்தின் பொருளை இப்போது புரிந்திருப்பீர்கள்.
(21)
மர்த்தபத்துல் அர்வாஹ்!

ஆலமுல் அர்வாஹ் மூன்றாவது குறிப்பு,அல்லது இறக்கமாகும் வுஜூதின் நான்காவது மர்தபாவாகும். அஹதிய்யத், வஹ்தத், வாஹிதிய்யத் ஆகிய மூன்று குறிப்புக்களும் உள்ளார்ந்த வை!.

"அர்வாஹ்" என்பது அல்லாஹ்வின் அறிவிலிருந்து வெளிவந்த நான்காவது மர்தபாவாகும். அதாவது, வெளியான மர்த்தபாக்களில் முதல் இறக்கமாகும். வெளியில் வந்துள்ள சகல படைப்புக்களையும்  "கௌனிய்யத்தான வஸ்த்துக்கள்" எனப்படும். மர்த்தபத்துல் காறிஜிய்யாவில் வெளியான கௌனிய்யத்தான வஸ்த்துக்கள்  தனித்தவையாகும். இதனையே "அர்வாஹ்"! என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. "அர்வாஹ்" எதுவித மூலப்பொருள்களின் தாக்கத்திற்கும் உட்பட்டவையல்ல! இதனால் "றூஹ்" பலமூலப்பொருளின் சேர்க்கையால் (முறக்கப்) ஆனதல்ல! அதேநேரம் றூஹ் வெளியாவதற்கு இடமும் மாதிரி (மிதால்) அவசியமாகும்.

அல்லாஹுத்த ஆலா அர்வாஹுகளை  அஃயானே தாபிதா, மற்றும் அதன் ஆதார் (اثار) களுக்கு நேர்பாடாக தனது  தாத்தின் அனைத்துப் பண்புகளையும் பெற்றுக்கொண்டதாககண்டு கொண்டான். கொண்டான். அல்லாஹ்வின் ஸிபத்துக்கள்  அல்லாஹ்வின் அறிவில் இருந்த குறிப்புக்களில் முதலில் காட்சியானதால் அவற்றை புதியவை எனப்படாது. அல்லாஹுத்த ஆலா முதன் முதலில் தஜல்லியானது றஸூலுள்ளாஹி சல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்களின் றூஹிலாகும்.

றஸூலுள்ளிஹி சல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்கள் கூறினார்கள்.
اول ما خلق الله روحي

அல்லாஹுத்த ஆலா( முதல் வெளிப்பாட்டில்) முதன்முதலாகப் எனது றூஹை ( நூறை) த்தான் படைத்தான்.  இங்கு றூஹ்( நூர்) என்பதன் கருத்து றூஹ் முஹம்மதி என்ற றூஹுல் அஃழம் ஆகும். இந்த றூஹுக்கு காலம், திசை , வடிவம்,இல்லை. அது எப்பொருளைப் போன்று மில்லை. ! மூலப்பொருளால் ஆனதல்ல. றூஹுல் அஃழம் அஹதிய்யத்தின் நிழல் ஆகும்.அதனால் குன் என்ற கட்டளைக்குட் இது வராது.

 "குன்" என்ற கட்டளையால் வெளிவந்த யாவும் றூஹே முஹம்மதியிலிருந்து வெளிவந்தவை யாகும். இதனால்தான் றஸூலுள்ளாஹி சல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்கள் கூறினார்கள். "ஆதம்(அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உடல்) மண்ணுக்கும், நீருக்குமிடையில் இருக்கும் போது நான் நபியாக இருக்கின்றேன். " மர்தபத்துல் காறிஜியில் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அபுல் பஷர் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. ஆனால், றஸூலுள்ளாஹி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அல்லாஹ்வின் அறிவில் அமைந்த உள்ளார்ந்த மர்தபாவில் அபுர் றூஹாக இருந்தார்கள். இதனால் இந்த றூஹுல் அஃழம் பிரபஞ்சத்தோடு தொடர்பாகாது. பிரபஞ்சத்தின் எத்தேவையும் அவர்களுக்குக் கிடையாது.

றஸூலுள்ளாஹி சல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்கள்  பிரபஞ்சத்திற்கு றஹ்மத்தாகும்.  பிரபஞ்சம் றஸூலுள்ளாஹி சல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்களில் தங்கியுள்ளது. பிரபஞ்சத்தின் எதுவித சட்டம் பொருளும் அன்னாரைத் தொடாது. றஸூலுள்ளாஹி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் ஏகனான தனித்தவனான ஸமதான அல்லாஹ்வில் மட்டுமே தங்கியுள்ளார்கள். இதனால் றஸூலுள்ளிஹி சல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்கள்  " குன்" என்ற கட்டளைக்கு ட் பட்டவர்கள் அல்ல! என்று கூறுகின்றோம்.

றஸூலுள்ளிஹி சல்லல்லாஹூ அலைஹி வசல்லமவர்கள் அஹதிய்யத்திற்கு நெருக்கமாக இருப்பதால் அல்லாஹ்வின் தாத்தின் நிழலாக உள்ளார்கள். இதனால்தான் அன்னாருக்கு நிழல் இல்லை என்பதையும்,அல்லாஹ்வை நேரில் முகக்கண்ணால் பார்க்கும் தகுதியயையும் பெற்றுக் கொண்டார்கள்என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த றூஹுல் அஃழமை "றூஹுல் குத்ஸு" என்றும் கூறப்படும். காரணம், அஹதிய்யத்தோடு சேர்ந்திருக்கின்றது. ,"தாத்துல் பஹ்துக்கு"  நெருக்கமாக இருக்கின்றது. முகர்ரபான அனைத்து மலக்குகளும்,குத்தூஸியான ,. கர்ரூபியான சகல மலக்குகளும் றஸூலுள்ளாஹி சல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்களின் றூஹே (நூறே) முஹம்மதியிலிருந்து அருளை( பைழை)ப் பெறுகின்றவர்கள்தான்.

அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.
يوم يقوم الروح  والملائكة صفا لا يتكلمون الا من أذن له الرحمن
அந்த நாளில் றூஹும் , மலக்குகளும் அணிவகுத்து நிற்பர்; எவருக்கு அர்றஹ்மான்அனுமதி கொடுத்திருக்கின்றானோ அவர்களைத் தவிர எவரும் பேச மாட்டார்கள்                                                                             78 : 38

இங்கு குறிப்பிடப்படுகின்ற  றூஹ்" என்பது றூஹுல் அஃழமாகிய  நூறே முஹம்மதியாவாகும்.

றூஹுல் அஃழம் என்பது ஹக்கின் வெளிப்பாட்டிற்கான கண்ணாடியாகும்.

                     தொடரும்....










Comments

  1. பதிறுதீன் சறுக்கிதான் உலகிலேயே உண்மையான சூபி. மற்றெல்லாரும் fake Sufi என்ற கிப்ர் கொண்டவரின் கிறுக்கலே இது.

    இதில் தான்சொல்ல முயற்சிக்கும் கருத்துக்கு உண்மையான ஸூபிய்யாக்கள் ஆரிபீன்களின் கருத்துக்களிலிருந்தோ திருமறை நபிமொழியிலிருந்தோ ஆதாரங்களை முன்வைத்து பேச வக்கில்லை அதற்குள் மற்றவர்களை பேக் சூபியா என்று அவதூறு சொல்லவருகிறீரா??

    அல்லாஹ் ஹக் எனும் வுஜூதிலிருந்துதான் சிருஷ்டித்தான், ஹுவ ழாஹிர் அவனே வெளியாகியுள்ளான் என்பது திருமறையின் தீர்ப்பு. ஆனால்
    அதம் எனும் இல்லாமையிலிருந்துதான் படைத்தான், அல்லாஹ்வுடைய தாத் சம்மந்தப்படாமல் அவனுடைய ஸிபத் மாத்திரம்தான் சிருஷ்டியாக வெளியாகியிருக்கிறது என்பது சறுக்கியின் கொள்கை.
    இதில் யார் பேக் சூபி?

    அண்மையில் ஒரு வட்சப் குழுமத்தில் நடந்த விவாதத்தில் தகுந்த ஆதாரங்களை முன்வைக்க திராணியில்லாமக் சுருண்டுபோன மெளலவி பதுறுதீன் இனியாவது சூபிய்ய்யாக்களின் கொள்கை இதுதான் என்று ஆதாரத்துடன் முன்வைக்கவேண்டும்.
    தனிப்பட்ட பொறாமைக்காக மார்க்கம் நடத்த வரக்கூடாது!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கலீல் அவுன் மௌலானாவின் கற்பனைகள் !!!

கலீல் அவுன் மௌலானாவின் கற்பனைகள். ! ✯ *Link* ➽ http://al-bathr.blogspot.com/2018/09/blog-post_10.html ●•●┄─┅━━━━━━━━━┅─┄●•● ஷர்க்கி  *** பரேலவி ●•●┄─┅━━━━━━━━━┅─┄●•● கலீல் அவுன் மௌலானா ஒரு சாதாரணமானவராக இருந்தால் நாம் பெரிதாக அலட்ட மாட்டோம். அவர் ஒரு அஹ்லுல் பைத்தைச் சார்ந்தவராகவும் , ஒரு ஷெய்காகவும் இருக்கின்றார். மக்கள் குறிப்பாகப் பாமரர்கள் அவரைப் பின்பற்றுகின்றனர். அவர் தன்னை ஒருகுத்பு என்று கூறுவதால் அவர் பேச்சை வேதமாகக் கருதுகின்றனர். அதில் சரி, பிழை யாரும் பார்ப்பதில்லை. எதுவித ஆராய்வுமில்லாமல் சில உலமாக்களும் அவர்பின்னால்  நிற்பதனாலும்.பிரபலமான மற்றும் சில உலமாக்கள் அவரை ஆதரிப்பதனாலும் மக்கள் இவர்கூறுவது முற்றிலும் உண்மைதான் என்று நம்புகின்றனர். உண்மையில் பொறுப்பற்ற உலமாக்களின் சுய நலத்தால் இவரின் மார்க்க விரோதப் பேச்சைக்கேட்டு அப்பாவிகள்வழி தவறிச் செல்கின்றனர். இந்த அவல நிலையிலிருந்து  மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் தான் அவரின் குறைகளை எழுத நிற்பந்திக்கப் பட்டோம். நமது எழுத்து சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக் கின்றது. அதனால் எம்மை வசைபாடுகின்றன

வஹ்தத்துல் வுஜுத் என்ற பெயரில் வழிகேடுகள் எச்சரிக்கை

வஹ்தத்துல் வுஜுத் என்ற பெயரில் வழிகேடுகள் எச்சரிக்கை!! ------------+-++----------+++---- ஷர்க்கி,. பரேலவி. --------------* ---------- இலங்கையில் வஹ்தத்துல் வுஜுத்  என்ற சொல்லாடல் கடலை வியாபாரத்தையும் மிஞ்சிய அங்காடி வியாபாரமாகிவிட்டது. இவ்வியாபாரத்தை குறிப்பிட்ட ஒருசிலர் தங்கள் குருவின் குறையை மறைக்க  வில்லங்கத்தோடுசெயல்படுகின்றனர். இஸ்லாம் தோன்றிய காலம் முதல் போதிக்கப்பட்டு வந்த கோட்பாடுகள் எல்லாம் இவர்களிடம் செல்லாக்காசாகி விடுகின்றன. இவர்களின் அனைத்து போதனைகளும் இவர்களில் தோன்றி இவர்களுக்குள்ளே. சமாதியாகுவது இவர்களின் போதனைகளின் சிறப்பம்சமாகும். ஷைகுல் அக்பர் இப்னு அரபி ரலியல்லாஹு அல்ஹு அவர்கள் போதித்த வஹ்தத்துல் வுஜூத் கோட்பாட்டையே போதிக்கின்றோம் என்று கூறி அவர்களின் முகத்திலேயே காரி உமிழ்கின்றனர். "அல்லாஹ் ". என்ற திருநாமம் எதற்குரிய பெயர் என்ற அடிப்படை அறிவற்ற வர்களாகவே வேதாந்தம் பேசுகின்றனர். படைப்பு இல்லாமலிருந்து வந்தது புதிதாகப் படைக்கப்படவில்லை என்கின்றனர். அது அல்லாஹ்வின் வுஜுதிலிருந்து வந்தது என்கின்றனர். இவர்கள் வாதப்படி, படைப்பு  புதிதல்ல!  பூர்வ