ஒப்பனை ஒரு நாள் கலையும் !!!
மௌலவி றாபி அவர்களே !
http://al-bathr.blogspot.com/2018/09/blog-post_12.html
---------------------------
ஷர்க்கி , பரேலவி.
---------------------------
மௌலவி றாபி அவர்களே !
உங்களின் பதிலில் நான் தடுமாறுவதாகவும், எனது செழுமை மங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள்.!
யார் தடுமாறுகிறார். யாருடைய செழுமை மங்குகின்றது என்பது முக்கியமல்ல. யார் கூறுவது சரி உண்மை எப்பக்கம் இருக்கின்றது என்பதுதான் முக்கியம்.
கதீம் என்றால் பூர்வீகம் என்பது உங்களுக்குத் தெரியும். இச்சொல் எதார்த்தமாகப் பார்த்தால் அல்லாஹ்வுக்கு மட்டுமே கூறப்படும். மற்றவருக்குக் கூறுவது ஷிர்க். என்பதை மறுக்க மாட்டீர்கள்.
அது போல் அல்லாஹ்வின் பண்புகளை எதார்த்தமாக அல்லாஹ் அல்லாத எவருக்கும் கூறக் கூடாது.
அவ்வாறு கூறுவது ஷிர்க் என்பதையும் மறுக்க மாட்டீர்கள்.
ஆனால் ,
கதீம் என்ற சொல்லும் அல்லாஹ்வின் பண்புகளும் திருநாமங்களும் அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன.
அப்படியாயின் இதை எப்படி நியாயப்படுத்துவது.?
அல்லாஹ்வின் பண்புகள் சுயமானவை. இன்னொருவரால் வழங்கப்படாதவை. ஆரம்பம்
இல்லாமல் தானாக வந்தவை .
அடியார்களின் பண்புகள் அல்லாஹ்வால் வழங்கப்பட்டவை. தானாக வந்தவையல்ல. ! அதனால் சுயமற்றவை.!
அடியானின் பண்புகளையும்., அல்லாஹ்வின் பண்புகளையும் பிரிக்கும் எல்லைக் கோடு இதுதான். இதைப் புரிந்தால்....
‘பிரபஞ்சமும் தானாக உருவாகிறது.
அல்லாஹ்வும் தானாக உருவாகிறான்.’ என்று கலீல் அவுன் மௌலானா (வாப்பா நாயகம்) கூறுவதில். அல்லாஹ்வும், பிரபஞ்சறமும் தானாகத் தோன்றியதில் சமப்படுகின்றதா ? இல்லையா ?
ஆரம்பம் இல்லாத ஒரு பொருளை, அதாவது உண்டாக்குவோன் இல்லாமல் தானாகத்தோன்றிய ஒன்றை, பூர்வீகம் என்று கூறப்படும்.
ஆரம்பம் உள்ளதை அல்லாஹ்வால் படைக்கப்பட்டதை புதிது /படைப்பு என்று கூறப்படும். இதை நீங்கள் புரியாவிட்டால் . அதுஉங்களின் குறைபாடு.
மறுபிறப்புப் பற்றி ஒருநூலின் பக்கத்தோடு போட்டீர்கள். அதைத்தான் கேட்டேன் பதிலில்லை.
‘ஓம்’ என்பதற்கு ஓங்காரம் என்ற சொல்லைத் தொடர்புபடுத்திக் கூறினீர்கள்.
ஓங்காரம் என்ற சொல்லை சூபி ஞானிகள் பரவலாகப் பாவித்துள்ளனர்.
மஸ்தான் வலியுள்ளாஹ்வின் பாடலிலும் இச்சொல்லைக் காணமுடிகிறது.
அங்கெல்லாம் நீங்கள் கூறுவது போல் " ஹூ" என்ற பொருளில் பாடப்படவில்லை. என்பதை உங்களுக்கு விளங்கப்படுத்தவே அட்டாளைச்சேனை அஹ்மது மீரான் ஸூபி கத்தசல்லாஹு சிர்ரஹுல்
அஸீஸ் அவர்களின் பாடலை மேற்கோள் காட்டினேன்.
"லாதஅய்யுன்" என்று எதை நீங்கள் கூறுகிறீர்கள்.?
" ஓம்" என்பதற்கான விளக்கம் இந்து சமய அகராதியில் தெளிவாகப் போடப்பட்டிருக்கிறது.
முஸ்லிம் ஞானிகளான சூபிகள் ‘ஓங்காரம்’ என்ற சொல்லைப் பாவித்தது போல் ."ஓம்" என்ற சொல்லை பாவிக்கவில்லையே!
நீங்கள் ஆதாரமாக காட்டும் நூல் இந்து சமயத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் பரிபாஷையையும் ஏற்று மொழிகின்ற ஒருவரின் நூலாகும்.
விமர்சனத்திற்குரிய ஒருவரின் நூல், எப்படி ஆதாரமாகும்?
மௌலவி றாபி அவர்களே.!
உங்களிடம் பல முறை நாம் கேட்பதெல்லாம்
"ஓம் " என்பது "ஹூ"வைத்தான் குறிக்கும்
——————————————————
என்பதற்கான எடுத்துக் காட்டுக்களைக் கூறி
———————————————————
நியாயப்படுத்துங்கள்.
—————————
இதுவரை உங்கள் விளக்கங்கள் பகுத்தறிவுரீதியாக உள்ளனவாக இருக்கின்றதே தவிர மார்க்கரீதியாகவோ சூபிகளின் நூற்களை ஆதாரமாகக் கொண்டதாகவோ இருக்கவில்லையே!
நீங்கள் காட்டிய நூலுக்குரியவரும் வாப்பா நாயகத்தைப் போல இந்து சமயத்தில் துவண்டு போனவராகும்.
அதனால்தான் வாப்பா நாயகத்தைப் போன்றவரின் நூல் ஆதாரமாகாது என்று கூறினேன். இதை நீங்கள் புரிய வில்லை போலும்!
மௌலவி றாபி அவர்களே!
ஏதோ சமாளிக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் எழுதுவதை படிக்கின்றவர்கள் தெளிவாகப் புரிகின்றார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.!
* கிறிஷ்ணன், புத்தர் , ராமன் உள்ளிட்டவர்களை நீங்கள் நபிமார்கள் என்று கூறுகின்றீர்களா?
* புத்தர் ஒரு நாத்திகர் என்பதை நீங்கள் அறிவீர்களா ?
* மாற்றம் உண்மை..!
நிலைபேறு பொய்.! ‘
என்பது புத்தரின் பிரபலமான ஒருகூற்று என்பதைக்
கேள்விப்பட்டுள்ளீர்களா?
இறைவனையே மறுக்கின்ற, மறுபிறப்புக் கோட்பாட்டை ஏற்கின்ற ஒருவரில் ஏன் அதீத அக்கறை?
வாப்பா நாயகத்தின் எழுத்தில். இஸ்லாமிய சூபிகளின் பரிபாஷைச் சொற்கள் துடைத்தெடுக்கப்பட்டு அந்த இடத்தில் இந்து
ஞானிகளின் பரி பாஷை இடம் பிடித்தது ஏன். .?
உங்கள் வாப்பா நாயகம் குத்பு என்றால் மஃரிபத் ஞானம் மடைதிறந்த வெள்ளமாக ஓடவேண்டுமே!
#ஓடை வரண்டல்லவா கிடக்கின்றது?
* பட்டத்திற்கு இஸ்லாம். பேச்சுக்கு இந்துத்துவமா ?*
மௌலவி றாபி அவர்களே!
வாப்பா நாயகம் மொழி பெயர்த்து விளக்கமும் எழுதி வெளியிட்ட "அத்துஹ்பதுல் முர்சலா" என்ற நூலைபடித்துப் பார்த்தீர்களா ?
அதைப் பார்த்திருந்தால் வாப்பா நாயகத்தின் அறிவின் ஆழம் தெரிந்திருக்கும்.
தப்புத்தப்பாக மொழி பெயர்த்து நேர் முரணான விளக்கத்தையல்லவா எழுதி வைத்துள்ளார்.
விரைவில் அது பற்றிய ஒரு விளக்கம் தொடராக வரும் இன்ஷா அல்லாஹ்!
வாசகர்கள் எம்மை விடப் புத்திசாலிகளாகவும், விளக்க முள்ளவர்களாகவும் இருப்பார்கள் என்று புரிந்து விளக்கம் எழுதுங்கள்.
Comments
Post a Comment