Skip to main content

கஸ்று, ஜம்உ தொழுகையின் சட்டங்கள்

*கானுனுஷ்ஷரீஆ- ( ஷாபிஈ)* 
••••••••••••••••••••••••••••••

 *கஸ்று , ஜம்உ தொழுகையின் சட்டங்கள்.* 
•••••••••••••••••••••••••••••••••
மௌலவி, பாஸில், *ஏ. எல். பதுறுத்தீன்,* 
ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி. 
**************************

கஸ்று, என்பதன் பொருள்: குறைத்தல், மற்றும், சிறிதாக்குதல், ஷரீஅத்தில் இதன்பொருள் , நான்கு றகாஅத்துள்ள தொழுகையை இரண்டு றகாஅத்துக்களாகச் சுருக்குவதற்குக் கூறப்படும், இப்னுல் அதீர் றஹ்மத்துள்ளாஹிஅலைஹி அவர்களின் கூற்றுப்படி, தொழுகையைச் சுருக்குவது ஹிஜ்ரி நான்கில் சட்டமானது, ஹிஜ்ரி இரண்டில் றபீஉல் ஆகிரில் என்று தூலாபி றஹ்மத்துள்ளாஹிஅலைஹி கூறுகின்றார்கள், சிலரின் கூற்றுப்படி, ஹிஜ்றத்தின் நாற்பது நாட்களுக்குப்பின், பெரும்பாலும்
 பிரயாணத்தில் சிரமங்கள் ஏற்படாதிருப்பதற்காக வேண்டி தொழுகையைச்சுருக்குவதற்கு ஷரீஅத் அனுமதி வழங்கியது, 

றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், 

السفر قطعة من العذاب 

பயணம் வேதனையின் ஒரு துண்டு !

இங்கு வேதனை என்பது, களைப்பையும், துயரத்தையும் குறிக்கும், களைப்பு நடை அல்லது வாகனத்தில் பயணம் செய்வதால் ஏற்படும், உறவு,அல்லது நாடு துறப்பதால் ஒரு வகையான துயரம் வரும், 

 பிரயாணிக்கு பின்வரும் பத்து நிபந்தனைகளோடு நான்கு றகாஅத் தொழுகையை இரண்டாகச் சுருக்கித் தொழுமுடியும், 

1- பாவமானதாக இருக்கக்கூடாது .
,2- பயணம் 16 பர்ஸகாக இருக்க வேண்டும், 

3- அதாவான தொழுகையாக இருக்கவேண்டும்,

 4 கஸ்றுக்கான நிய்யத் தொழுகையின் ஆரம்பத் தக்பீரிலிருக்க வேண்டும்,

 5- பூரணமாகத்தொழுபவரைப் பின்பற்றாதிருக்கவேண்டும்,

 6- பயணத்தில் நேரத்திற்குரிய அதாவான தொழுகையாக இருத்தல்.

7- போகவேண்டிய இடம்பற்றிய ஆறிவு இருத்தல்

 8- கஸ்றுக்கு எதிரான எச்செயலும் இருக்கக்கூடாது, 

9- குறிக்கோள் சரியாக இருத்தல்,

 10- கஸ்று ஆகும் என்ற அறிவு 

இறுதியிலுள்ள ஐந்து ஷர்த்துக்களும் கதீப் ஷிப்ராமலஸி மற்றும் ஷெய்கு பாஜூரி றஹிமஹுமுல்லாஹ் உள்ளிட்டோரின் நூற்களிலிருந்து எடுக்கப்பட்டதாகும், பயணத்தில் கஸ்று செய்யலாம் என்பது நான்கு இமாம்களின் இஜ்மாஃவான முடிவு. 

அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.

واذا ضربتم في الارض فليس عليكم ان تقصروا من الصلاة 

நீங்கள் பூமியில் பயணம் செய்வதாயின், தொழுகையைச்சுருக்குவதில் உங்கள்மீது எக்குற்றமுமில்லை. 4:101   

பயணம் என்பதில் கரை, கடல், ஆகாயம் என்பதில் வேறுபாடு கிடையாது, அச்சமான சூழலிருக்கும் போதுதான் தொழுகையைச்சுருக்குவதற்கு அல்லாஹுத்த ஆலா அனுமதி வழங்கினான், இப்போது மக்கள் அமைதியான சூழலிலிருக்கின்றார்களே! என்று ஹளறத் யஃலா பின் உமையா றழியல்லாஹு அன்ஹு ஹளறத் உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்டார்கள், எனக்கும் கூட இது தொடர்பான வியப்பு இருக்கத்தான் செய்தது, இதனை றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களிடம் கேட்டேன், அதற்கு நபியவர்கள்,

صدقة تصدق الله بها عليكم فاقبلوا صدقته 

இது அல்லாஹுத்த ஆலா உங்களுக்கு வழங்கிய ஸதகா(உபகாரம்) ஆகவே, அவனுடைய ஸதகாவவை ஏற்றுக்கொள்ளுங்ஙள். என்று கூறினார்கள். 

அதாவது , பாதுகாப்பான சூழலிலும் கஸ்றுக்கான அனுமதி அல்லாஹ்வின் தரப்பிலிருந்து கிடைத்த உபகாரமாகும், அச்சமான நிலையென்ற விதி இங்கு இல்லை.

இப்னு அபீ ஷைபா றஹ்மத்துள்ளாஹிஅலைஹி மூலம் அறிவிக்கப்படுகின்றது.

ان خيار امتي من شهد ان لا اله الله وان محمدا رسول الله والذين اذا احسنوا استبشروا واذا اساؤوا استغفروا واذا سافروا تقصروا 

நிச்சயமாக, என்னுடைய உம்மத்துக்களிலுள்ள நல்ல மனிதர்கள் வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத்தவிர வேறு எவருமில்லை , முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் றஸூல் என்று சாட்சி பகர்பவர்கள் , இன்னும், உபகாரம் புரிந்தால் மகிழ்ச்சியடைவார்கள், இன்னும், குற்றம் செய்தால் பாவமன்னிபுபுத் தேடுவார்கள், இன்னும், பயணம் செய்தால் கஸ்று செய்வார்கள்.

கஸ்றுக்கான அனுமதி:

பிரயாணம் செய்யும் தூரம் 130: 1/4. கி.மீ. தூரத்துக்கு அப்பால் இருக்கவேண்டும், இதைவிடக்குறைந்த தூரத்தில் கஸ்று செய்யமுடியாது, சிலர் 96 கி: மீ, என்று எழுதியுள்ளனர், அது தவறான கணிப்பாகும்,

 பிரயாணத்தின் காரணமாக தொழுகையை கஸ்று செய்வதற்கும், நோன்பைத் தவிப்பற்குமுள்ள வித்தியாசம் யாதெனில், பொதுவாக தங்கடம் பற்றிய அச்சமில்லையாயின், பயணத்தில் நோன்பை விடுவதைவிட நோன்பை நோற்பது சிறப்பாகும், ஏனெனில், நோன்பை நோற்பதன்மூலம் நோன்புக்கான பொறுப்புதாரி நிலைத்திருப்பதில்லை , நோன்பைத்தவிர்ப்பதனால் , பொறுப்பு(மரணத்தின்பின்பும் ) எஞ்சியிருக்கும்,

  கஸ்றிலும், ஜமாஅத்திலும் எதிரும் புதிருமான நிகழ்வு இருக்குமாயின், கஸ்றுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும், ஏனெனில் இமாமுல் அஃழம் அபூஹனீபா றஹ்மதுள்ளாஹி அலைஹிடத்தில் கஸ்று வாஜிபாகும்,இமாம் அஹ்மத் றஹ்மத்துள்ளாஹிஅலைஹி அவர்களுக்கு மாற்றமில்லாதிருப்பதற்காக தொடர்ந்து கப்பலை ஓட்டிக்கொண்டிருக்கும் மாலுமியும், இன்னும் தொடர்ச்சியாகப் பயணம் செய்பவரும் தொழுகையைப் பூரணமாக்குவதுதான் சிறப்பாகும்,இவர்கள் தொழுகையைப் பூரணப்படுத்துவதை வாஜிப் என்கின்றார்கள்,

இமாம் அபூஹனீபா றஹ்மத்துள்ளாஹிஅலைஹி அவர்களின் கருத்தைவிட, இமாம் அஹ்மத் றஹ்மத்துள்ளாஹிஅலைஹி அவர்களின் கருத்து பூரணப்படுத்தல் என்ற அடிப்படைக்கு நெருங்கியிருப்பதால் இமாம் அபூஹனீபா றஹ்மத்துள்ளாஹிஅலைஹி அவர்களின் கருத்துக்கு ஷாபிஈ ஃபிக்ஹு நூற்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை, 

ஷாபியாக்களிடமும் சில கட்டங்களில் பிரயாணிக்கு கஸ்று வாஜிபாக அமையும்,அதாவது, தொழுகையை நன்கு பிற்படுத்தியதால் கஸ்று செய்யுமளவு நேரம்தான் மிச்சமிருக்கின்றதென்றால், கஸ்று செய்வது வாஜிபாகும், இன்னும், சில கட்டங்களில் கஸ்றும் , ஜம்உம் செய்வதும் வாஜிபாகிவிடும், இதற்கு உதாரணம் வருமாறு, 

 ஜம்உக்கான நிய்யத்தோடு ழுஹறை அஸர் வரை பிற்படுத்தி நான்கு றகாஅத் தொழும் அளவு நேரம்தான் மிச்சமிருந்தால், இந்தகட்டத்தில் கஸ்றும் , ஜம்உம் வாஜிபாகும்,

பிரயாணி என்பவர், பயணத்திலிருப்பவர் தவிர, பயணத்தை நாடியவரல்ல, பயணத்தை ஆரம்பித்ததிலிருந்தே பயணம் ஆரம்பமாகின்றது, பயணத்தின் தூரத்தை எட்டவேண்டும் என்பது கஸ்று செய்வதற்குக் கடமையில்ல.
 
கஸ்றுக்கான காலம்: 

குறித்த ஊரிலிருந்து ஊர்எல்லை யாக இருக்கும் பாலம் , அல்லது கணவாய்,அல்லது புகையிரநிலையம் ,அல்லது விமான நிலையம் உள்ளிட்டவையைத்தாண்டுவதிலிருந்து பயணம் ஆரம்பமாகும், அங்கு இவற்றில் எதுவுமில்லையென்றால் குடியிருப்புப் பகுதிகளைத் தாண்டியபின் ஆரம்பமாகும்,

  ஊரோடு ஒட்டியிருக்கும் தோட்டம் வயல்களைக்கடக்கடக்கவேண்டும் என்பது நிபந்தனையல்ல, இரண்டு அல்லது இரண்டைவிட அதிகமான கிராமங்கள் ஒட்டியிருந்து அவற்றிற்கிடையில் எல்லைகள் இல்லாதிருந்தால், ஓர் ஊராகவே கணிக்கப்படும், கூடாரத்தில்,அல்லது தற்காலிகமாகத் தங்கியிருப்பவர்களுக்கு தங்கியிருக்கும் இடத்தைத் தாண்டியதிலிருந்து பயணம் ஆரம்பமாகும்.

பயணத்தின் முடிவு: 

எங்கிருந்து பயணம் தொடங்கியதோ அந்த இடத்தை அடையும் போது பயணமும் முற்றுப்பெறும், ஊருக்குத் திரும்புவதன்மூலம் பயணம் நிறைவடையும், ஊரில் தங்குவது என்று நிய்யத்வைத்தாலும் சரி, வைக்காவிட்டாலும் சரி, ஊரல்லாத பயணத்தில் அங்கு தங்குவது என்ற நாட்டத்திற்குப்பின், ஊரின் எல்லையை அடைந்தால் பயணம் முடிந்துவிடும், நிரந்தரமாகத்தங்குவது, அல்லது தற்காலிகமாகத் தங்குவது என்றிருந்தாலும் சரி, போக்குவரத்திற்குரிய நாளைத்தவிர்த்து நான்கு நாட்கள் தற்காலிகமாகத் தங்கும் நாட்டமுள்ளவருக்குக் கஸ்று செய்யலாம்,  

ஆரம்பத்திலேயே தங்குவதுபற்றி எந்த நாட்டமும் வைக்கவில்லையென்றால், அல்லது , ஒருவேலைகாரணமாக ஓர் ஊருக்குப்போய் அந்த வேலை நான்கு நாட்களுக்குள் முடிய வாய்ப்பில்லை என்று அவர் அறிந்திருந்தால், கஸ்றுக்கான அனுமதி அலாதியானதாகும்,

 எந்த ஒரு வேலைக்காகவும் தங்காதிருந்தால், நான்கு நாட்கள் கடந்ததோடு முடிந்து விடும், ஏதாவது ஊருக்குச்சென்று நான்கு நாட்களில் காரியம் முடியலாம் என்ற எண்ணத்தில் தங்கினால், பயணம் முடியாது, கஸ்று செய்துகொண்டிருக்கலாம்,

ஒவ்வொரு சந்தர்பத்திலும் காரியம் முடிவதற்கு வாய்ப்பிருந்து , அல்லது தங்கும் நாட்களைக் குறிப்பாக்காதிருந்தால் , 18 நாட்கள் வரை கஸ்று செய்யலாம்,

ஊரில் அல்லது ஊரல்லாத இடத்தில் தேவையில்லாமல் தங்குவது என்ற நாட்டத்தில் திரும்பிவருபவருக்கு கஸ்ருடைய சட்டம் தனியானது , 

 இவர் தொழுகையை கஸ்று செய்ய முடியாது, அங்கிருந்து புதிதாக பயணத்தை மேற்கொண்டால் , அது புதிய பயணமாகும்,பயணம் நீண்டிருந்தால் கஸ்று செய்யலாம், இல்லையேல் கூடாது,   

அடிப்படையில் பர்ளான தொழுகை தான் நோக்கமாகும், "பர்ளு" என்ற விதியால் நபிலான தொழுகையும், "அடிப்படை" என்ற குறிப்பால், "நேர்ச்சை" செய்யப்பட்ட தொழுகையும் வெளியேறிவிடும், அதாவது, நபிலான தொழுகையையையும், நேர்ச்சையான தொழுகையையும் கஸ்று செய்ய முடியாது, 

 தொழுகையில் கஸ்று செய்வதில் அடிப்படையான பர்ளைக்கஸ்று செய்வதாக இருந்தால், அவரைப் பின் தொடரலாம். கஸ்று நான்கு றகாஅத்துக்கள் உள்ள தொழுகையில் மட்டுமே செய்யலாம், இரண்டு , மூன்று றகாஅத்துள்ள தொழுகையில் கஸ்று செய்யமுடியாது.

கஸ்றின் நிபந்தனைகள்: 

1- பாவம். : 

பாவமான கருமமல்லாத பயணம் என்பதன் நோக்கம் யாதெனில், பாவமல்லாத நோக்கில் பயணம் செய்வதாகும், இப் பயணத்தில் ஏதாவது பாவம் நிகழ்ந்தாலும் சரி !

பாவத்தை விலக்கும் நான்கு சந்தர்பங்கள்: 

1- வாஜிபான பயணம்: 

  உ+மாக, கடனை அடைக்க, அல்லது ஹஜ்ஜுக்காக பயணிப்பது.

2- சுன்னத்தான பயணம்: 
 றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை, வலிமார்களை ஸியாறத் செய்வதற்காக, அல்லது உறவினர்களைத் தரிசித்து உபகாரம் செய்வதற்காக பயணிப்பது.

3- ஆகுமான பயணம்: 

 வர்த்தக நோக்கத்திற்காகப் பயணிப்பது.

4- மக்றூஹான பயணம்:

 தனியாக , அல்லது இருவரோடு பயணிப்பது,

றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்‌

المسافر شيطان والمسافران شيطانان والثلاثة ركب 

ஒருபிரயாணி ஷைத்தான், இரண்டு பிரயாணிகள் இரண்டு ஷைத்தான்கள், மூன்று பிரயாணிகள் ஜமாஅத் கூட்டம் ஆகும். அல்லாஹுத்த ஆலாவின் நினைவில்லாமல் தனியாகப் பயணம் மேற்கொள்வதுதான் மக்றூஹான பயணம், ஸாலிஹான மனிதர் பயணம் செய்வது போன்று அல்லாஹ்வின் நினைவோடும் , உறவோடும் பயணம் செய்தால், எவ்விதமான மக்றூஹும் கிடையாது, பயணம் பாவமான செயலை நோக்கமாகக் கொண்டிருந்தால் கஸ்று செய்ய முடியாது, ஜம்உம் செய்யமுடியாது, கஸ்றில் ஜம்உ செய்வதுபற்றிய சட்டம் பின்னர் வரும்‌ இன்ஷாஅல்லாஹ்! 

 சலுகை: 

நீண்ட பயணமாக இருந்தால், எட்டு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன, இவற்றை رخصة சலுகை எனப்படும்,

1- தொழுகையைச் சுருக்குவது, 

2- இரு தொழுகைகளை சேர்த்துத் தொழுவது, 

3- நோன்பை விடுவது, 

 4- மூன்று நாட்கள் வரை கால் மேசையில் மஸஹு செய்தல். 

5- ஜும்ஆ அன்று பஜ்றுக்கு முன் பயணம் மேற்கொண்டால், ஜும்ஆவைத் தவிர்ப்பது, 

6- நிர்பந்த நிலையில் செத்ததை உண்பது, பிரயாணம் அல்லாத காலத்திலும் நிர்பந்தமான சூழலில் செத்தவையைச்சாப்பிடலாம் என்றிருந்தால் , பிரயாணத்தில்தான் இப்படியான சூழல் அதிகம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால் இதையும் பயணத்தின் சலுகையில் இணைக்கப்பட்டுள்ளது.

 7- நபிலான தொழுகையில் கிப்லாவைத் தவிர்ப்பது  

8 தயம்மம் மூலம் பர்ளை நிறைவேற்றல், பிரயாணமல்லாத சந்தர்ப்பத்திலும் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டால், தயம்மம் செய்யமுடியும், ஆயினும், பயணத்தில் இவ்வாறான சந்தர்ப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதால், இதையும் பயணத்தின் வசதிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. 

நீண்ட பயணமில்லாமல் சுருக்கமான பயணமாக இருந்தாலும் இறுதியிலுள்ள நான்கு வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும், ஆரம்பத்திலுள்ள நான்கு வசதிகளும் நீண்ட பயணத்தோடு மட்டுப்படுத்தப்பட்டதாகும், ஷரீஅத்திலுள்ள சலுகைகளை பாவத்தோடு தொடர்பில்லாத குறிப்பான நிலைகளில் செயப்படுத்முடியும்,

الرخص لا تفاط بالمعاصي 

பாவமான நோக்கத்தோடு செய்யும் பயணத்தில் கஸ்று செய்ய முடியாது.

2- தூரம்: 

பயணத்திற்கான முழுமையான தூரம் ஒருதரப்பில் 16 பர்ஸகாக இருக்கவேண்டும், இப்பயணத்தில் திரும்பிவரும் தூரம் கணிக்கப்படமாட்டாது, ஒரு பர்ஸக் மூன்று மைல் என்ற கணக்கில் மொத்தம் 48 மைல்களாகும், இங்கு கூறப்படும் மைல் என்பது, ஹாஷிமிய்யத்தான மைலாகும்,ஆங்கிலக்கணக்கில் 130 1/4 கி.மீ.ஆகும்.

ஒருமைலில் 4000 பாதச்சுவடுகள் خطوة உண்டு , ஒரு பாதச்சுவடு மூன்று எட்டுக்கள், خطوة பாதச்சுவடு என்று இங்கு குறிப்பிடப்படுவது ஒட்டகத்தின் பாதச்சுவட்டின் அளவைக் குறிக்கும், எட்டு قدم என்பது சராசரி மனிதன் பாதத்தின் கீழுள்ள நீளத்தைக்குறிக்கும், இரண்டு எட்டு ஒரு முழத்திற்குச்சமன், இதில் கொஞ்சமும் குறைவு ஏற்பட்டாலும் குறை ஏற்படும், கஸ்று நிறைவேறாது, இதற்குமேலான தூரத்தில் குறையில்லை .

ஜமாஅத் தொழுகையில் இமாமுக்கும் , மஃமூமுக்குமிடையுள்ள தூரமும் , குல்லதைனுக்குரிய அளவும் தக்ரீபி சுமாரான அளவுமாகும், தவிர , தஹ்தீதி. மட்டுப்படுத்தப்பட்ட தல்ல, தக்ரீபியான அளவில் சின்ன வித்தியாசம் பாதிப்பை ஏற்படுத்தாது,

மஸாபத் (தூரத்)தின் அளவிலுள்ள நிபந்தனை ஒரு தரப்பில் இரண்டு மன்ஸிலுக்கு சமனான பயணமாக இருத்தல் வேண்டும் ,

 பயணத்தூரம் ஒரு மன்ஸிலின் அளவாக இருந்து செல்லுமிடத்தில் தங்காமல் திரும்புவது என்று நாடினால், பயணத்தில் போகும் போதும், திரும்பி வரும்போதும் இரண்டு நிலைகளிலும் தொழுகையைச் சுருக்க முடியாது, இவ்வாறு இரு மன்ஸில் தூரத்தைத் தரையிலோ, கடலிலோ ஆகாயத்திலோ ஒரு நாளில், அல்லது ஒருமணித்துளியில் அல்லது ஒரு விநாடியில் கடந்தாலும் கஸ்று செய்யலாம், ஏனெனில் கஸ்று என்பது தௌகீபுக்குரிய توقيف
 கருமமாகும்.

தௌகீப் توقيف என்பது, றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்ததைக் கண்டு அன்னாரைத்தொட்டும் கூறப்படும் கருமத்திற்குக் கூறப்படும், இவ்வாறான கருமத்தில் இஜ்திஹாத்திற்கு இடமில்லை, இதில் கியாஸை நுழைக்கவும் முடியாது, 

ஹனபியாக்களிடத்தில் கஸ்றுக்கான தூரம் மூன்று மன்ஸிலாக வரையறுக்கப்பட்டுள்ளது, ஆனால், ஒரு மன்ஸிலுக்கான தூரத்தை ஒரு முழு நாள் பயணமாக்காமல் பஜ்றிலிருந்து சூரிய உச்சம் வரையான நேரம் என்று கூறப்பட்டுள்ளது, இதன்படி, மொத்தத்தூரம் ஹாஷிமிய்யத்தான அறுபது மைலாகும். ( ஹனபிகளிடத்தில் ஒரு மைல் என்பது ஒட்டகத்தின் 1000 பாதச்சுவடுகள் ஆகும்,இதன்படி,) ஆங்கிலக்கணக்கில்சுமார் 87 கி.மீ. ஆகும்.

3- அதாவான தொழுகையாக இருத்தல்: 

தொழுகையை அதாவாக நிறைவேற்றும் நேரத்தில் தொழுகையை நிறைவேற்றல் வேண்டும், பிரயாணத்திலில்லாமல் நிலையாகத் தங்கியிருக்கும் இடத்தில் தவறிப்போன தொழுகையை பயணத்தில் கஸ்று செய்து கழாவாக இறுக்க முடியாது, அதை பயணத்திலாயினும் சரி, தங்கியிருக்குமிடத்திலாயினும்சரி பூரணமாகவே நிறைவேற்ற வேண்டும், 

பிரயாணத்தில் தவறிய தொழுகையை அப் பயணத்திலேயே கஸ்றாகத் தொழலாம், பயணத்தில் தவறிய தொழுகையை நிரந்தமாகத்தங்குமிடத்தில் கழாச்செய்வதாயின், பூரணமாகவே தொழவேண்டும்,

4- நிய்யத்: 

கஸ்றுக்கான நிய்யத் தக்பீறத்துல் இஹ்றாமாகிய ஆரம்பத் தக்பீரில் அமைதல் வேண்டும், 

ழுஹறுடைய தொழுகையை கஸ்று செய்து தொழ நிய்யத்துச் செய்கின்றேன், அல்லது, ழுஹறுடைய இரண்டு றகாஅத்துக்களை நான் தொழுவதற்கு நிய்யத் செய்கின்றேன். என்றிருக்க லாம், 

 இவ்வாறு செய்யாவிட்டால்,இன்னும்,,தொழுகையைப் பூரமாக்குவதாக நிய்யத் செய்தால்,அல்லது பொதுவாக குறிப்பில்லாமல் தவிர்த்தால், பூரணமாக தொழுகையை நிறைவேற்ற வேண்டும்,

பூரணமாகத் தொழுவதற்கு நிய்யத் வைத்தேனா? அல்லது , கஸ்றுக்காக நிய்யத் வைத்தேனா ? என்று சந்தேகம் வந்தால், தொழுகையைப் பூரணமாக்குவது வாஜிபாகும்.

5- பூரணமாகத் தொழுபவரைப் பின்பற்றாதிருத்தல்.

சுருக்காமல் பூரணமாகத் தொழுபவரைப் பின்பற்றக்கூடாது, குடியிருப்பாளர் ( முகீம்) பூரணமாகத் தொழுபவராகும், பிரயாணியும் பயணத்தில் தொழுகையை பூரணமாக்கினால், அவரும் பூரணமாகத் தொழுபவராக இருப்பார், பூரணமாகத் தொழுபவரைப் பின்பற்றினால் தொழுகையைப் பூரணப்படுத்த வேண்டும், பூரணமாகத் தொழுபவரை தொழுகையில் எப்பகுதியில் பின்பற்றினாலும் கஸறாக ஆகமாட்டாது.

6- பயணம் தொடர்ச்சியாக இருத்தல்.

 பயணத்தில் தொழுகை முழுமையாக இருக்க வேண்டும், தொழுகையின் நடுவில் வாகனம் ஊர்எல்லையை அடைந்து பயணம் முற்றுப்பெற்றால் , தொழுகையைப் பூரணப்படுத்த வேண்டும், ஏனெனில் சலுகைக்கான காரணம் எஞ்சியில்லை, பயணம் செய்யும் நபர் பயணத்தில் நான்கு நாட்களை விட, குறைவான காலம் தங்குவதாக நிய்யத்வைத்தால், சட்டப்படி அவரை முஸாபிராகக் கணிக்கப்படும், கஸ்றுசெய்வார்.
 7-செல்லுமிடத்தின் நோக்கத்தை அறிந்திருத்தல்.

  ஏதாவதுஒரு திசையில் போய்ச்சேருமிடத்தை அறிந்தல், ஓரிடத்தைக்குறிப்பாக வேண்டியதில்லை, உ+மாக, மேல்திசையில் செல்வதை அறிந்திருத்தல் , குறிப்பிட்டதிசையிலுள்ள ஊரைக்குறிப்பாக்கி அறியத்தேவையில்லை, நான்கு திசையில் ஏதாவது ஒருதிசையில் 130. 1/4 கி. மீ. தூரத்தைத்தாண்டி பயணம் செய்வதை நாடி னால்,
கஸ்று செய்யலாம். ஏதும் நகரத்தைக் குறிப்பாக்கத்தேவையில்லை.

 குறிப்பிட்ட நோக்கமில்லாமல் ஊர்ஊராகச்சுற்றித்திரிவோர் கஸ்று செய்ய முடியாது, இதற்கு இரு காரணங்கள் உள்ளன.

1- இவருக்கு பயணத்தின் தூரத்தைப்பற்றிய அறிவில்லை,

2- அவரின் பயணம் பாவத்திற்கான பயணமாக அமையும். ஏனெனில், எவ்வித காரணமுமின்றி மனதை வருத்துவது ஹறாமாகும்.

  செல்லுமிடத்தைப் பற்றிய அறிவோ, பயணத்தின் தூரத்தைப்பற்றிய அறிவோ இல்லாமல் வேறு ஒருவரைப் பின் தொடர்ந்து பயணம் செய்பவர்,குறிப்பிட்ட தூரத்தைக்கடந்த பின் , அவர் கஸ்று செய்யலாம், இதற்குமுன் கஸ்று செய்ய முடியாது.

 8- கஸ்றுக்கு எதிராக இல்லாதிருத்தல்,
  கஸ்றுத்தொழுகைக்கு நடுவில் கஸ்றின் நிய்யத்திற்கு மாற்றமான எதுவும் நிகழாதிருக்கவேண்டும், உ+மாக, தொழுகையின் நடுவில் தொழுகையைப்பூரணமாக்குவதாக நாடுதல், அல்லது , அவருக்கு கஸ்று செய்ய முடியாதிருக்கும் போது கஸ்று செய்தல்.

9- சரியான நோக்கம்.

 பயணம் ஏதும் சரியான நோக்கத்தைக் கொண்டித்தல் வேண்டும், உ+ம், ஹஜ், அல்லது, ஸியாறத் செய்தல், அல்லது வியாபாரம், தனி உல்லாசத்
திற்காக இருக்கக்கூடாது, இமாம் இப்னு ஹஜர் றஹ்மத்துள்ளாஹிஅலைஹி அவர்களின் கருத்துப்படி, ஊல்லாசம், சுற்றிப்பார்த்தல் உள்ளிட்ட பயணத்திலும் கூட கஸ்று செய்யலாம், இதன்மூலம் மனதின் மாச்சரியங்கள் அகன்று விடுகின்றன.

10- கஸ்று ஆகும் என்பதை அறிந்திருத்தல்: 

 கஸ்று ஆகுமானது என்ற அறிவோடு கஸ்று செய்தல், மக்கள் கஸ்று செய்வதைப் பார்த்துகஸ்றுசெய்தால் , அல்லது, தெரியாத்தனமாகக் கஸ்று செய்தால் சரியாக ஆகாது.  

தொடரும்.....

Comments

Popular posts from this blog

வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை

வஹாபிய நூரீ ஷா ஸில்ஸிலாவில் 31வது இடத்தில் ஷேகாக வரும்  *வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை*  காஃபிரான அஷ்ரபலி தானவி தன்னுடைய ஹிகாயதே அவ்லியா என்ற நூலில் பெருமையாக எழுதியது

சேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் கொள்கைவாதியா அல்லது கொள்கை ???

சேக் அப்துல்லா ஜமாலி கொள்கைவாதியா அல்லது கொள்கை வேசியா ??? https://youtu.be/jVA8PTOAxzQ சேக் அப்துல்லா ஜமாலி  வாப்பா நாயகத்தை வாயாரப் புகழ்கிறார் .அவரின்  நூலைப்படித்ததாகவும் வாக்குமூலம...

விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்?

"லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  கலீபத்துல் காதிரி ஏ எல் பதுறுதீன் ஷர்க்கிபரேலவி அவர் கள்  "லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  என்று ஒருவர் கூறுவதை பற்றி விளக்கம் கேட்டால் வசைபாடுகின்றனர். வசை பாட முக நூலில் பக்கம் பக்கமாக எழுத முடியும். விளக்கம் சொல்ல முடியாது விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்? எழுதியதற்குரிய விளக்கத்தை கேட்பவர்கள் அஹ்லுல் பைத்தைக்குறை கூறுபவர்களாம். விளக்கம் சொல்ல ஏன் தயக்கம்? வசைபாடுவது அநாகரிகமாப்பேசுவது அபாண்டம் கற்பிப்பது. பிறரைத்தூண்டுவது விரும்பியவிதத்தில் மார்க்க முறனாகப் பேசுவது எல்லாம் அஹ்லுல் பைத்துகளுக்கு ஆகுமான செயல் ? நாகரிகமாகப் பேசி  விளக்கம் சொல்லி நல்வழிப்படுத்து வதெல்லாம் அவர்கள் பணியல்ல! தனிப்பட்ட விவகாரங்கள் பற்றி நாம் பேச வில்லை .அதுபற்றிபேச நாம் விரும்பவும் இல்லை .. இது மார்க்கம். அதிலும் ஈமானோடு தொடர்பானது. "இந்த நூற்றாண்டுக்கும் வருகின்ற நூற்றா...