*இஸ்லாத்தின் பார்வையில் மத நல்லிணக்கம்*
••••••••••••••••••••••••••••••••
அரபு மூலம்:
முகாஷபத்துல் குலூப். .
*ஹுஜ்ஜத்துல் இஸ்லாம், இமாம் ஙஸ்ஸாலி* றஹ்மத்துள்ளாஹிஅலைஹி
தமிழில்;
மௌலவி, பாஸில் , *ஏ.எல். பதுறுத்தீன்* .
ஷர்க்கி, பரேலவி ஸூபி, , காதிரி.
************************
அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.
ولا تركنوا الي الذين ظلموا فتمسكم النار
هود -113
அநியாயக்காறர்களோடு சேர்ந்திருக்காதீர்கள்( அவர்களைத்தாவிப் பிடிக்கும் )நெருப்பு உங்களையும் தாவும்.
இத்திருவசனத்திலுள்ள ركون றுகூன் என்ற சொல் பொதுவாக சார்தலை, அல்லது, கவனம் செலுத்துவதைக்குறிக்கும், அது சாதாரணமாக இருக்கலாம் , அல்லது அதிகமாக இருக்கலாம் என்று மொழியியலாளர்கள் அனைவரும் ஒருமித்துக்கூறியுள்ளனர்,
அப்துர்றஹ்மான் இப்னு ஸைது றஹ்மத்துள்ளாஹிஅலைஹி கூறுகின்றார்கள்,
இங்கு ركون றுகூன் என்ற பதத்திற்கான பொருள் மறைத்தல், அதாவது அவர்(காபிர்)களின் குப்றை மறுக்காதிருத்தல் என்கின்றார்கள்.
இக்ரிமா றஹ்மதுள்ளாஹி அலைஹிஅவர்களின் கூற்றுப்படி, றுகூன் என்பதன் பொருள், காபிர்களுடன் நல்லிணக்கமாக நடந்துகொள்ளாதே! காபிர்களோடும், கெட்ட நடத்தையுள்ள முஸ்லிம்களோடும் பரஸ்பரம் ஒட்டி உறவாடாதே! என்பதுதான் இத்திருவசனத்தின் வெளிப்படையான பொருளாகும்.
ஹளறத் நைஷாபூரி றஹ்மத்துள்ளாஹிஅலைஹி தன்னுடைய தப்ஸீரில் எழுதுகின்றார்கள்.
தடுக்கப்பட்ட ஒன்றுகூடல் என்பது , காபிர்களின் குப்றை நல்லதாகக்காணுதல், அவர்களின் வழியை சிறப்பானதாகக்கருதுதல், அடுத்தவர்களுக்குமத்தியில் அவர்களைப்பாராட்டுதல், இன்னும், வழிகேடான கருமங்களில் அவர்களோடு கூட்டுச்சேருதல்உள்ளிட்டதைக்குறிக்கும்,
அவர்களின் அநியாயங்களைத் தடுப்பதற்காக, அல்லது ஒரு பயனைப் பெறுவதற்காக அவர்களோடு உறவாடுவதாயின், எக்குற்றமுமில்லை, , வாழ்வாதாரத்திற்காக அவர்களுடன் சேர்ந்திருப்பதற்கு சலுகையுண்டு! ஆயினும், தக்வாவின் அடிப்படையில் ஒட்டு மொத்தமாக அவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்றுதான் என்மனம் விரும்புகின்றது.
اليس الله بكاف عبده
அல்லாஹுத்த ஆலாலா அடியானின் கஷ்டங்களில் அவனுக்குப் போதுமானவனாக இல்லையா?--36: الزمر
இமாம் நைஷாபூரியின் கூற்று முற்றிலும் சரியென்றே நான்கூறுகின்றேன், இந்தக்காலத்தில் காபிர்களோடு தொடர்புகளை வைக்காமலிருக்கவேண்டும், ஏனெனில், நன்மை ஏவுவது, தீயதைத்தடுப்பது, என்பது மோசடிகளும், சதிகளும் நிறைந்த இந்தக்காலத்தில் சாத்தியமில்லை, அவர்களோடு தொடர்பாக இருப்பதனால் ஏற்படும் அவர்களின் அக்கிரமங்கள் நாசத்தையே ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றன,
இந்த அக்கிரமக்காறர்களோடும், இன்னும், ,பகையாளிகளோடும் நெருக்கமான நேசம் வைத்து, அவர்களின் குடி, மற்றும், ஹறாமான வைகள் நிறைந்த அவர்களின் விழாக்களில் கூட்டாயிருப்பவன், இன்னும், நட்புக்கான அனைத்து விடயங்களையும் பூரணப்படுத்துபவன், அவர்களைப்போன்று வாழ்க்கையில் சேர்ந்துறவாடுபவன், அவர்களின் ஆடையை அணிந்து கொண்டு ஆனந்தமடைபவன், அவர்களின் வெளிப்படையானதும் அழியக்கூடியதுமான கவர்ச்சிகளை நல்லதாகக்காண்பவன், அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையில் பொறாமைப்படுபவனைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், ? எதார்த்தமாகப் பார்த்தால் இந்த பொருட்கள் யாவும் ஒரு வித்தைவிட அற்பமாகும், மனிதன் தன் மனதின் அடிஆழத்திலிருந்து நோக்கினால் ஒரு கொசுவின் இறக்கையைவிட அதிகம் கண்ணியமில்லாதவையாகும் பார்க்கின்றவனின் பார்வையில் இரண்டும் கண்ணியமில்லாதவைதான் ,
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
المرء علي دين خليله فلينظر احدكم من يخالل
மனிதன் தனது நண்பனின் மார்க்கத்திலிருப்பான், எனவே , தனது நண்பன் யார் என்பதைப் பார்த்துக்கொள்!
அபூதாவூத், 4833, திர்மிதி, 2378 அஹ்மத் 8015
மேலும் கூறினார்கள்.
مثل الجليس الصالح مثل حامل المسك ان لم يعطك اصابك من ريحه ، ومثل الجليس السوء كمثل صاحب الكير ان لم يحرقك اصابك من دخانه . روا ه البخاري
நல்ல நண்பனுக்கு உதாரணம், அத்தர் வியாபாரியைப்போன்று , அவன் அத்தர் தராவிட்டாலும் அவனிலிருந்து வீசும் மணத்தை நீர் பெறுவாய்! இன்னும், தீய நண்பனுக்கான உதாரணம் கொல்லன் கம்மாலையைப்போன்று, அதிலிருந்து வரும் தீப்பொறி உன் ஆடையைக்கரிக்காவிட்டாலும், அதிலிருந்துவரும் நாற்றப்புகை உன்னைத்தொடவேசெய்யும்,
_காபிர்களோடு நட்புப் பாராட்டுவது,._
அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.
مثل الذين اتخذوا من دون الله اولياء كمثل الذي العنكبوت اتخذت بيتا
அல்லாஹ்வுக்கு விரோதமாக அவனல்லாதவர்களை உதவியாளர்களாக எடுத்துக்கொண்டவர்களுக்கு உதாரணம் சிலந்திவலையைப் போன்றதாகும். عنكبوت 41
( மிகவும் பலவீனமானதாகும்)
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
من عظم غنيا لغناه فقد ذهبت ثلثا دينه
ஒரு செல்வந்தனை அவனுடைய செல்வத்திற்காக ஒருவன் கண்ணியப்படுத்தினால், அவனுடைய மார்க்கத்தில் மூன்றில் இருபகுதி வீணாகிவிடும்.
மேலும் கூறினார்கள்.
اذا مدح الفاسق غضب الرب واهتز لذلك العرش
ஒரு பாவியை (பாஸிக்கை) புகழ்ந்தால், அல்லாஹ் கடுமையாகக் கோபப்படுகின்றான், இன்னும் , அல்லாஹ்வின் அர்ஷு நடுங்குகின்றது .
தைலமி முஸ்னத் 1336 அபூயஃலா முஸ்னத் 171
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.
يوم ندعو كل اناس بامامهم
கியாமத்து நாளில் அனைத்து மனிதர்களையும் அவர்களுடைய இமாம்களோடு சேர்த்துஅழைப்போம்.
அல்இஸ்றா 71
இமாம் என்ற கூற்றில் உள்ள பொருள் பற்றி முபஸ்ஸிரீன்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் உண்டு ,
ஹளறத் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களும், அவர்களுடைய தோழர்களும் இமாம் என்பதன் பொருள் அவர்களின் அமல்களுக்குரிய ஏடாகும் என்கின்றனர்,
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.
فمن اوتي كتابه بيمينه
இன்னும், எவருடைய பட்டோலை அவருடைய வலக்கரத்தில் கொடுப்படும்,
அல்ஹாக்கா 19
ஹளறத் ஸைத் றஹ்மதுள்ளாஹி அலைஹி கூறுகின்றார்கள்.
இமாம் என்பதன் பொருள் திருக்குர்ஆன் ஆகும், மனிதர்கள் தௌறாத் உடையவர்களே!, இன்ஜீல் உடையவர்களே!, குர்ஆன் உடையவர்களே! என்று அழைக்கப்படுவார்கள்.
ஹளறத் முஜாஹித் றஹ்மத்துள்ளாஹிஅலைஹி கூறுகின்றார்கள்,
இமாம் என்பதன் பொருள் நபியாகும், மனிதர்களை ஹளறத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாமவர்களைப் பின்பற்றியவர்களே! வாருங்கள் மூஸா அலைஹிஸ்ஸலாமவர்களைப்பின்பற்றியவர்களே! வாருங்கள், ஈஸா அலைஹிஸ்ஸலாமவர்களைப்பின்பற்றியவர்களே வாருங்கள்! இன்னும் , முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களைப்பின்பற்றியவர்களே! வாருங்கள், என்று கூறப்படும்.
ஹளறத் அலி இப்னு அபீதாலிப் றழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்.
இமாம் என்பது, அவர்களின் சமகாலத்திலுள்ள இமாமைக்குறிக்கும், மக்கள் அவரின் கட்டளைப்படி செயல்படுவார்கள், அவர் விலக்கியதைத் தவிர்ப்பார்கள்.
ஹளறத் இப்னு உமர் றழியல்லாஹுமா மூலம் அறிவிக்கப்படுகின்றது.
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
واءا جمع الله الاولين والاخرين يوم القيامة رفع لكل غادر لواء فيقال هذه غدرة فلان ابن فلان.
கியாமத் நாளில் மனிதர்களை அல்லாஹுத்த ஆலா ஒன்று திரட்டியதும், ஒவ்வொரு துரோகிக்கும் ஒரு கொடி வழங்கப்பட்டு இது இன்னாரின் மகன் இன்னாரின் துரோகத்திற்கான கொடி என்று கூறப்படும்.
ஹளறத் அபூஹுறைறா றழியல்லாஹு அவர்கள் மூலமும் , இன்னும் அவர்களல்லாதவர்கள் மூலமும் அறிவிக்கப்படுகின்றது,
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மேற்படி திருவசனத்தின் விளக்கத்தில் கூறினார்கள்,
மனிதர்களிலிருந்து ஒருவரை அழைத்து அவரின் வலக்கரத்தில் அவரின் பட்டோலை வழங்கப்படும், அவருடைய உடலை அறுபது முழமாக ஆக்கப்பட்டு ,அவரின் தலையில் ஒளிசிந்தும் முத்தாலான கிரீடம் அணிவிக்கப்படும், அவருடைய முகம் அதிஉச்சமாகப் பிரகாசிக்கும், பின்னர், தன்னுடைய நண்பர்களிடம் செல்வார், தூரத்திலிருந்து அவரைப்பார்ப்பவர்கள் யாஅல்லாஹ்!, அவரின் தகுதியை இரட்டிப்பாக்குவாயாக! மேலும் , எமக்கும் இவ்வாறான அந்தஸ்த்தைத் தந்தளுள்வாயாக! என்று கூறுவார்கள்,
அவர் அவர்களிடம் வந்ததும், உங்களுக்கு சோபனம் உண்டாகட்டும், உங்களில் ஒவ்வொருவருக்கும் இந்த பதவி கிடைக்கும்என்று கூறுவார்.
காபிர்களின் முகம் கறுப்பாக்கப்பட்டு அவர்களின் உயரத்தை ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாமவர்களின் உயரத்தைப்போன்று அறுபது முழமாக்கப்படும், இன்னும், அவர்களின் தலையில் இருண்ட கிரீடம் அணிவிக்கப்படும், அவர் தனது நண்பர்களிடம் வருவார், அவரை அவர்கள் கண்டதும், யாஅல்லாஹ்! இந்த மனிதனின்
தீங்கிலிருந்து எங்களை காப்பாயாக ! , இப்படியான முடிவை எங்களுக்கு வழாங்காதிருப்பாயாக! என்று கூறுவார்கள்,
அவர் அவர்களிடம் வந்ததும் , யாஅல்லாஹ்! அவரை அவமானப்படுத்துவாயாக! என்றுகூறுவார்கள்,அப்போது அந்த காபிர் அவர்களைப்பார்த்து, அல்லாஹுத்த ஆலா உங்களை தன்னுடைய றஹ்மத்திலிருந்து தூரமாக்கிவிட்டான், உங்களில் ஒவ்வொருவருக்கும் இந்தவிதமாகவேதான் கையாளபாபடும் என்று கூறுவார்.
ஆல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.
اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها .
பூமி அதிர்வதாக அதிரும்போது, இன்னும், பூமி அதன் சுமையை வெளியாக்கும்.
ஹளறத் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா
இந்தத் திருவசனத்தின் விளக்கத்தில் கூறுகின்றார்கள்,
பூமி ஆழத்திலிருந்து அதிரும், அதன் வயிற்றில் மனிதர்கள், இன்னும் அடக்கமானவர்கள் எத்தனை பேர்கள் உள்ளார்களோ அவர்கள் அனைவரையும் வெளியேற்றிவிடும்,
ஹளறத் அபூஹுறைறா றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்,
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
يومئذ تحدد اخبارها.
( அந்த நாளில் பூமி தனது செய்திகளை விளக்கும்)
என்ற திருவாசனத்தை ஓதியதும், அதன் செய்தி என்ன ? என்று உங்களுக்குத் தெரியுமா ? என்று கேட்டார்கள், அல்லாஹ்வும் , இன்னும், அவனுடைய திருத்தூதரும் நன்கு அறிவார்கள் என்று ஸஹாபாக்கள் கூறினார்கள்,
فان اخبارها ان تشهد على كل عبد وامة بكل عمل على ظهرها
ஒவ்வொரு மனிதனினினதும், இன்னும் பெண்ணினதும் முதுகிலிருக்கும் ஒவ்வொரு அமலைப்பற்றியும் அது சாட்சி பகரும்.என்று கூறினார்கள்.
தப்றானியில் வரும் ஹதீதில் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்,
تحفظوا من الارض فانها امكم وانه ليس من احد عامل عليها خيرا او شرا الا وهي مخبرة
பூமியில் பாவம் செய்வதிலிருந்து பேணிக்கொள்ளுங்கள், ஏனெனில், அது உங்களின் தாயாகும், எவராவது ஒருவர் அதில் நன்மையோ, அல்லது தின்மையோ செய்வாராயின், அது (கியாமத்நாளில்) அதுபற்றிய தகவலைக் கூறும்
Comments
Post a Comment