*மஹ்லறா பத்வா செல்லாதா? மடையர்களின் பிதற்றல்...*
அன்புள்ளம் கொண்ட சுன்னத் வல் ஜமாஅத் சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
வாட்ஸ்அப் தளங்களில் அன்வாரிய்யா தைக்கா என்ற பெயரில் ஒரு சுற்றறிக்கை கண்டோம்.
அதில் திருவிதாங்கோடு அப்துர் ரஹ்மான் அஹ்ஸனியின் தன்னிச்சை பத்வா செல்லாது காயல் மாநகர உலமா பெருமக்கள் மறுப்பு என்று சில கருத்துக்கள் பரிமாறப்பட்டு இருந்தன. அதற்கு பதில் கூறும் விதமாக இந்த அறிக்கை.
மஹ்லறா அரபிக் கல்லூரி என்பது பாரம்பரியம் மிக்க சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு கௌதுல் அஃலம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் திருப்பேரர் அஸ்ஸெய்யிது அப்துல்லாஹில் காதிரியில் பகுதாதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அவர்கள் ஈராக் நாட்டின் பகுதாது நகரைச் சார்ந்தவர்கள். அவர்கள் கட்டமைத்த கொள்கை கோட்பாடுகளின்படி தான் இதுகாலம் வரை நடந்து வருகிறது. இன்ஷாஅல்லாஹ் இனியும் நடக்கும். கௌது நாயகம் அவர்கள் அதற்கு காவலாய் நிற்கிறார்கள்.
அந்த மத்ரஸாவின் முதல்வர் மேலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பரம்பரையைச் சார்ந்தவர்கள். - தங்கள் ஹழ்ரத் என்றழைக்கப்படும் அஸ்ஸெய்யிது அப்துர் ரஹ்மான் பாகவி அஹ்ஸனி மத்தலில்லாஹில் ஆலி அவர்கள்.
அந்த அறிக்கையில், மஹ்லறா என்ற நிறுவனத்தின் முதல்வர் என்றும், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பேரர் என்றும் கூட பாராமல் மரியாதை இல்லாமல் விளித்து எழுதப்பட்டிருக்கிறது.
அந்த மரியாதையெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. ஏனெனில் அந்த தரீகாவே மரியாதை கெட்ட நயவஞ்சகனால் ஆரம்பிக்கப்பட்டதுதானே. அப்படித்தான் இருக்கும் அவர்களின் வளர்ப்புகளும். இதிலிருந்தே அவர்களின் தராதரம் தெரியும்.
ஃபத்வா கேட்கப்பட்டது ஒரு மத்ரஸாவிடம். அதுவும் அகீதா சம்பந்தப்பட்ட பத்வா. அது தனிப்பட்ட நபர்களிடம் கேட்கப்பட்டது அல்ல.
மஹ்லறாவில் பத்வா கொடுப்பதற்கு என்ன நடைமுறைகள் உள்ளதோ அதை அணுவளவும் பிசகாமல் பின்பற்றி நமது முன்னவர்கள் எதை எப்படி செய்தார்களோ அப்படி மஹ்லறா உலமாக்கள் அனைவர்களும் ஒன்று சேர்ந்து பத்வா கொடுத்திருக்கிறார்கள். இதில் உள்ளூர், வெளியூர் , கதீப் என்று எங்கிருந்து வந்தது?
மஹ்லறா நிறுவனர் அஸ்ஸெய்யிது அப்துல்லாஹ் மௌலானா அவர்கள் தரீகத்தை நமதூரில் பரப்ப கௌதுல் அஃலம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் திருஉத்திரவுபடி வந்தபோது அவர்களை ' *வெளியூர்க்காரர்* ' என்று மாற்றவர் பறைசாட்டினர்.
அதேபோல் அஸ்ஸெய்யிது ழியாவுல் ஹக் ஸூபீ ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களையும் வெளியூர்க்காரர் என்று விளித்தனர்.
அதேபோல் தங்கள் ஹழ்ரத் அவர்களையும் சொல்கிறார்கள்.
மார்க்கச் சட்டம், கொள்கையை பற்றி பே சுட்டிக்காட்ட உள்ளூர் உலமாக்கள்தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. மார்க்கம் தெரிந்தவர்கள் ஹக்கை நிலைநாட்ட வேண்டும். இதுதான் மார்க்கம் சொல்லும் வழி.
வெளியூர்க்காரர் என்று சொல்லும் அவர்கள் நாரீயான அன்வாரியாக்கள் முதலில் மஹ்லறா பற்றி பேசக் கூட தகுதியற்றவர்கள். ஏனெனில் அவர்கள் கருத்துப்படி அது வெளியூர்க்காரரால் தோற்றுவிக்கப்பட்டது.
மேலும் சட்டமேதை ஷாபி இமாம் ரழியல்லாஹு அன்ஹு காயல்பட்டினத்துக்காரர் அல்ல. அவர்களின் தீர்ப்புகளை பின்பற்றி அவர்கள் செயல்படக் கூடாது.
மேலும் அவர்கள் இஸ்லாத்தையே பின்பற்றக் கூடாது. அதற்கு தகுதியற்றவர்கள்.
பத்வா என்றால் என்ன? அது எப்படி வெளியிடப்படும் என்றுகூட தெரியாத கத்துக்குட்டிகள் கையொப்பம் போட்டு சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
பத்வா கொடுப்பதற்கென்று பத்வா பிரிவு இருக்கிறது. அவர்கள் வெளியிடும் பத்வா மஹ்லறா அரபிக் கல்லூரியின் *பத்வா லெட்டர்பேடில்* தான் கொடுக்கப்படும். பட்டிருக்கிறது. மஹ்லறா நிர்வாக லெட்டர் பேடில் அல்ல. அந்த லெட்டர்பேடை நன்றாக படித்துப் பார்த்திருந்தால் அரபி நன்றாக தெரிந்திருந்தால் இது தெரிந்திருக்கும். ஆனால் கத்துக்குட்டிகள்தானே. என்ன செய்ய? அப்படித்தான் இருக்கும்.
தங்கள் ஹழ்ரத்தை விவாதத்திற்கு அழைக்கும் நாரீயான அன்வாரிகளே! முதலில் *போலியான நாரீநூரீ ஷாஹ் தரீகா* என்ற வாட்ஸ் அப் தளத்தில் உங்களை விவாதத்திற்கு அழைக்கப்பட்டு சுமார் ஒரு வருடத்தை நெருங்கி விட்டது.
மௌலவி கௌஸ் மதனி சாகிப் அவர்கள், நாரீகளை விவாதத்தீற்கு அழைத்தார்கள். அவர்களின் அழைப்பிற்கு இன்றுவரை *பதில் கொடுக்க முடியாமல்* பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறீர்களே! முதலிலே அவர்களிடம் விவாதம் செய்து விட்டு வாருங்கள். அவர்களின் கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்லிவிட்டு வாருங்கள். அதன்பிறகு தங்கள் ஹழ்ரத் அவர்களுடன் விவாதம் செய்வது பற்றி பரீசிலிப்போம். இன்ஷாஅல்லாஹ்.
உங்கள் சுற்றறிக்கையில் கையொப்பமிட்ட அனைவரும் நாரீநூரீஷாஹ் தரீகத்தினர்களே தவிர ஊரின் சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் அல்ல என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அப்படியிருக்க ஏன் பொய்யையும் புரட்டையும் எழுதுகிறீர்கள்?
உங்களுக்கு அட்வைஸ் செய்ய, ஏன் *குட்டிக்காட்டிலிருந்து* (வெளியூரிலிருந்து) குட்டி சைத்தானை அழைத்து வந்தீர்களே! அப்போது அது வெளியூராக தெரியவில்லையா?
ஆக சுன்னத் வல் ஜமாஅத்திற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத நூரீஷாஹ் தரீகாவினரான உங்களுக்கும் எங்கள் மஹ்லறாவிற்கும் சம்பந்தமில்லை. அதைப் பற்றி பேசவே நீங்கள் அருகதையற்றவர்கள்.
ஆக கௌது நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் *மஹ்லறாவிலிருந்து வெளியான *பத்வா* *செல்லத்தக்கதுதான்* . அது உங்களுக்கு புரியவில்லையென்றால் அங்கு சென்று விளக்கம் கேட்டு திருந்துங்கள்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
- *ஜம்இய்யத்து அஹ்லெ சுன்னத் வல் ஜமாஅத் (JAS)*
சதுக்கைத் தெரு
காயல்பட்டினம்.
Comments
Post a Comment