Skip to main content

ரவூப் மௌலவியின் பொய் புரட்டு அம்பலமாகுகிறது…

*ரவூப் மௌலவியின் பொய் புரட்டு அம்பலமாகுகிறது…* 


‘ *அல் கிப்ரீத்துல் அஹ்மர்’* என்று ஒரு ஃபத்வா வஹ்தத்துல் வுஜூது சம்பந்தமாக கோர்வை செய்திருப்பதாகவும், அதில் பெரும் மகான்கள் கையொப்பமிட்டிருப்பதாகவும் அதன் பிரதியை வெளியிடுவதாகவும் கடந்த வருடம் 2021 நவம்பர் மாதம் பதிவுகள் முக நூலில் வெளிவந்துக் கொண்டிருந்தன. அதில் பல்வேறு சம்பவங்கள் விவரிக்கப்பட்டிருந்தன.

1979 ஆம் ஆண்டுவாக்கில் காத்தான்குடி(இலங்கை)யைச் சார்ந்த *மௌலவி A. அப்துர் ரவூப் மிஸ்பாஹி* என்பவர் ஞானம் என்ற பெயரில் சில கருத்துக்களை பொதுமேடையில் பேசியதில் பிரச்சினைகள் ஏற்பட்டு இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரால் *முர்தத்* என்று ஃபத்வா வழங்கப்பட்டு இஸ்லாமிய சமூகத்தைவிட்டு ஒதுக்கப்பட்டதை தமிழ் பேசும் இஸ்லாமிய நல்லுலகம் அறியும்.

அதன்பின் செய்வதறியாது திகைத்து நின்ற அவர், காயல்பட்டினம் *ஸூபி ஹழ்ரத்* ரழியல்லாஹு அன்ஹு அவர்களை (அவர்களிடம்தான் இவர் பைஅத் பெற்றிருந்தார்) அணுகி இந்த இக்கட்டிலிருந்து தம்மை காத்தருள வேண்டி நின்றார். தம் (முரீது) பிள்ளையின் கலங்கலான பரிதாபகரமான நிலையைக் கண்டு மனம் வேதனைப்பட்டு அவரை இக்கட்டிலிருந்து மீட்பதற்காக ஜமாஅத்துல் உலமா சபைக்கு கேள்விகள் கேட்டு பத்வாவில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி இந்த ஃபத்வா ரவூப் மௌலவிக்குப் பொருந்தாது என்று கிதாபுகளை ஆதாரம்  காட்டி பிரசுரம் வெளியிட்டார்கள். அதன்பிறகு ரவூப் மௌலவிக்கு நிம்மதி பிறந்தது. 

அதேநேரம் ரவூப் மௌலவியிடமும் இதுகுறித்து பேசி இனி ஞானவான்களின் பேச்சுகளுக்கு மாற்றமாக பேசக் கூடாது என்று கட்டளையிட்டார்கள். 

ஆனால் துரதிஷ்டம் ரவூப் மௌலவி தம் ஷைகுடைய கட்டளைக்கு அடிபணியவில்லை. தொடர்ந்து தவறான விளக்கங்களையே தந்து கொண்டிருந்தார். 

இதனை அறிந்த ஷைகு ஸூபி ஹழ்ரத் அவர்கள் தம் முரீதுகளிடமும் முஹிப்பீன்களிடமும் *ரவூப் குப்ரு என்னும் சேற்றை தம்முகத்தில் பூசிக் கொண்டு பெருமையடித்து திரிகிறார். அவரிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது* என்று உத்திரவு பிறப்பித்தார்கள்.

(அதன்பிறகு தம்மிடம் பைஅத் பெற வந்த ஃபாரூக் மௌலவிக்கு ரவூபிடம் தொடர்பு வைக்கக் கூடாது என்று கண்டிசன் போட்டே ஸூபி நாயகம் அவர்கள் பைஅத் கொடுத்தார்கள். (அதன்பின் இதற்கு மாற்றம் செய்து அவர் ரவூப் மௌலவியிடம் தொடர்பு ற்படுத்திக் கொண்டு தம் பைஅத்தை தானே முறித்துக் கொண்டார்)

இவ்வாறு  தம் ஷைகுவின் விரோதத்தையும் கோபத்தையும் சம்பாதித்துக் கொண்டார் ரவூப் மௌலவி.

தம் ஷைகுவால் வெறுத்தொதுக்கப்பட்ட ரவூப் மௌலவி அதன் பிறகு ஸூபி நாயகம் அவர்கள்  ஹயாத்தோடு இருந்த காலகட்டத்திலேயே, அவர் சொன்ன பத்வாவை தயார் செய்து, ஸூபி நாயகம் தவிர்த்து (அவர்கள்தான் ரவூப் மௌலவியின் கருத்து வழிகேடானது.. என்று சொல்லிவிட்டதனால்) தமிழ்நாட்டிற்கு சென்று ஏனைய ஷைகுமார்களான *பாக்கர் ஆலிம், கம்பம் அம்பா நாயகம், யாஸீன் மௌலானா* ரிழ்வானுல்லாஹி அலைஹிம் மற்றும் *அப்துல் வஹ்ஹாப் பாகவி* போன்றோரிடம் சென்று இதை வாசித்துக் காட்டியதாகவும் அவர்கள் அனைவர்களும் அதனை சரிகண்டு கையொப்பமிட்டு தந்தார்கள் என்றும் தம் மனம் போன போக்கில் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். 

அதுவும் அந்த நபர்கள் மறைந்து வருடங்கள் பல ஆகிவிட்ட நிலையில் தற்போது இந்த தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
அப்போதுதான் யாரிடமும் கேட்க முடியாது நம்மை அனைவரும் நம்பி விடுவார்கள் என்று எண்ணினார் போலும்.

ஆனால் பொய் எப்படியாவது வெளிப்பட்டு விடும் என்று அவருக்கு தெரிந்திருந்தும் மனக்கணக்கில் கோட்டை விட்டு விட்டார்.

(அம்பா நாயகம் அவர்களுடன் நீண்ட காலம் தொடர்பில் இருந்தவன் நான். பல்முறை அம்பா அவர்களை சந்தித்திருக்கிறேன். தைக்காவில் வாரக் கணக்கில் தங்கி அம்பா அவர்கள் பேசிய ஞானங்களை கேட்டிருக்கிறேன். 

அம்பா அவர்கள் ரவூப் மௌலவி பேசிய மாதிரி எப்போதும் பேசியதில்லை. நானும் அவ்வாறு பேசியதாக கேள்விப்படவுமில்லை. 
அவ்வாறிருக்க அவர்கள் எவ்வாறு கையொப்பமிட்டிருப்பார்கள்?  இதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் முடிவுக் கட்டிக் கொண்டிருந்தேன். 

அந்த சமயத்தில்தான் அவரின் பதிவிற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக கருத்துக்கள் பதிவிடும்போது அவர்களுடைய அடிவருடிகளே நமக்கு உண்மையை வெளிக் கொணர வழிக் காட்டித் தந்தார்கள். 'அந்த பத்வாவில் கையெழுத்து போட்டதாக அவர் சொல்லியிருந்த *அம்பா நாயகம் அவர்களின்  மகனார்* (இவர்கள் வாசகம் எழுதிதான் அம்பா அவர்கள் அதில் கையொப்பம் இட்டதாக சொல்லப்பட்டது) இன்னும் உயிருடன்தான் இருக்கிறார்கள். அவரிடம் போய் கேட்டுக் கொள்ளுங்கள்' என்று அந்த அடிவருடிகளிலொருவர் எனக்கு வழிக் காட்டித் தந்தார்.

அவர்களின் அந்த வேண்டுகோளின்படி அந்தப் பதிவில் ‘ *நான் அவர்களிடம் நேரடியாக  கேட்டுவிட்டு பதில் எழுதுகிறேன்’* என்று பதிவு செய்துவிட்டு அம்பா அவர்களின் மூத்த மகனார் *அப்துல் கபூர் சயீதி* ஹழ்ரத் (மௌலல் கவ்ம் கல்வத்து ஆண்டகை ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கலீபா முஹம்மது ஸயீதி ஹழ்ரத் – அம்பா நாயகத்தின் தந்தை அவர்களிடமும் முழுக் கல்வியையும் ஞானத்தையும் கற்றவர்கள்) அவர்களின் தொலை தொடர்பு எண்ணை பெற்று அவர்களுக்கு இது சம்பந்தமாக போனில் விசயம் கேட்டேன்.

அதற்கு அவர்கள் ‘ *அம்பா அவர்கள் எதற்கும் கையெழுத்துப் போட மாட்டார்கள். அந்த பத்வாவில் அவர்கள் கையெழுத்துப் போடவில்லை மேலும் அவர் எல்லாவற்றையும் அல்லாஹ் என்றல்லவா சொல்கிறார். அது குப்ருடைய வார்த்தை’* என்று ஆணித்தரமாக சொல்லிவிட்டு மத்ரஸா பாடத்தில் இருப்பதால் பிறகு பேசுகிறேன் என்று சொல்லி போனை வைத்து விட்டார்கள். தொடரும்....

-ஜமால் முஹம்மது.

Comments

Popular posts from this blog

வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை

வஹாபிய நூரீ ஷா ஸில்ஸிலாவில் 31வது இடத்தில் ஷேகாக வரும்  *வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை*  காஃபிரான அஷ்ரபலி தானவி தன்னுடைய ஹிகாயதே அவ்லியா என்ற நூலில் பெருமையாக எழுதியது

சேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் கொள்கைவாதியா அல்லது கொள்கை ???

சேக் அப்துல்லா ஜமாலி கொள்கைவாதியா அல்லது கொள்கை வேசியா ??? https://youtu.be/jVA8PTOAxzQ சேக் அப்துல்லா ஜமாலி  வாப்பா நாயகத்தை வாயாரப் புகழ்கிறார் .அவரின்  நூலைப்படித்ததாகவும் வாக்குமூலம...

விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்?

"லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  கலீபத்துல் காதிரி ஏ எல் பதுறுதீன் ஷர்க்கிபரேலவி அவர் கள்  "லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  என்று ஒருவர் கூறுவதை பற்றி விளக்கம் கேட்டால் வசைபாடுகின்றனர். வசை பாட முக நூலில் பக்கம் பக்கமாக எழுத முடியும். விளக்கம் சொல்ல முடியாது விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்? எழுதியதற்குரிய விளக்கத்தை கேட்பவர்கள் அஹ்லுல் பைத்தைக்குறை கூறுபவர்களாம். விளக்கம் சொல்ல ஏன் தயக்கம்? வசைபாடுவது அநாகரிகமாப்பேசுவது அபாண்டம் கற்பிப்பது. பிறரைத்தூண்டுவது விரும்பியவிதத்தில் மார்க்க முறனாகப் பேசுவது எல்லாம் அஹ்லுல் பைத்துகளுக்கு ஆகுமான செயல் ? நாகரிகமாகப் பேசி  விளக்கம் சொல்லி நல்வழிப்படுத்து வதெல்லாம் அவர்கள் பணியல்ல! தனிப்பட்ட விவகாரங்கள் பற்றி நாம் பேச வில்லை .அதுபற்றிபேச நாம் விரும்பவும் இல்லை .. இது மார்க்கம். அதிலும் ஈமானோடு தொடர்பானது. "இந்த நூற்றாண்டுக்கும் வருகின்ற நூற்றா...