மௌலவி அப்துர்ற ஊப் தௌஹீதுக்குரிய வரைவிலக்கணம் தெரியாமல் தௌஹீத் பேசுகின்றார்.?
*************************
மௌலவி, பாஸில்,
ஏ. எல். பதுறுத்தீன்.
காதிரி, ஷர்க்கி , பரேலவி.
"""""""””""""""”"""”"""”"”""””""""""
கடந்த 20வது பதிவில் அவரைப் பீடித்திருக்கும் நோயை அடையாளப்படுத்தியிருந்தோம். அதை உண்மைப் படுத்தி அவர் போட்டிருக்கும் பதிலில்
".நான் பைத்தியம் பிடித்து ஊர்ஊராய் சுற்ற வேண்டும்"என்று சாபமிட்டிருக்கின்றார்.
தனது இயலாமையை மறைக்கவும் , தனது ஆதரவாளர்களை சமாதானப்படுத்தவும் இப்படியெல்லாம் பம்மாத்துக் காட்டுவது அவரின் வாடிக்கையான ஒன்றுதான்.
அவருக்கு குப்று, ஷிர்க்கு போன்ற சொற்களைப் பிரயோகித்ததனால் தான் வசைபாடவேண்டி ஏற்பட்டதாகக் நியாயம் கூறுகின்றார்.
கோபம் வந்தால் சீறிப்பாய்வது வேட்டை மிருகங்களின்குணம். அம்மாறா நப்ஸு மிகைத்தவர்களிடமே இந்தக் குணம் இருக்கும்.
ஸூபிகள் இந்த குணத்தை வென்றவர்கள். அதனால், அவர்களிடம் மன்னிப்பு, சகிப்புத்தனம், பொறுமை , நிதானம், பழிவாங்காமை உள்ளிட்ட நற்குணங்கள் இருக்கும்.இவை எதுவும் இவரிடமில்லை .
அதனால் இவர் பேச்சால் பம்மாத்துக் காட்டுகின்றார் என்பது தெளிவு!
இவ்வாறு வசை பாடுவதற்கான காரணத்தை அவர் கூறும் போது,
எனது கட்டுரையில் குப்று, ஷிர்க்கு, முர்தத் என்ற சொற்களைப் பாவித்துள்ளேனாம்.
இப்படியான கடும் சொற்களைக் கூறியதால் தங்களுக்கும் கடுமையான சொற்களைப் பாவிக்க வேண்டி ஏற்பட்டது. என்கின்றார்.
இந்த வார்த்தைகளை நான் இப்போது சொல்வதற்கு 38 ஆண்டுகளுக்கு முன்னால்,
"மௌலவி அப்துர் ற ஊப் குப்று ஷிர்க்கு என்ற சகதியை முகத்தில் பெருமையாகப் பூசிக்கொண்டு திரிகிறார்"
என்று எழுதியது அவருக்கு பைஅத்தும் ,கிலாபத்தும்கொடுத்த ஷைகுதான் என்பதை மறைத்து விட்டார்.
இந்தவார்த்தையைக் கூறியதால் எனக்கு ஏசுவதாயின் , அந்த ஏச்சு முதலில் தனது ஷைகுக்குரியதுதான் என்பதை சொல்லாமல் கூறுகின்றார்.
இப்படியெல்லாம் நிலை தடுமாறுபவர் மனதில் பெருமையுள்ளது என்பதைத்தான் நமது ஆக்கத்தில் சுட்டிக்காட்டினோம். அதை அவர் மேலும் நிரூபித்துள்ளார். அவர் எழுத்தால் நமது கூற்றை உண்மைப் படுத்திய நாயனுக்கே சகல புகழும்.!
அவரின் ஏச்சும், சாபமும் எம்மை எமது வழியிலிருந்து ஒருபோதும் தடுக்காது.!
மவ்லவிஅப்துர்
ற ஊபின் நீண்ட நாள் வாதத்தில்ஒன்று ,
"தஸவ்வுபை அகீதா கட்டுப்படுத்தாது!". இவையிரண்டும் இரண்டு தனிவழிகள்! அதனால், தஸவ்வுபில் உள்ள குறையை தஸவ்வுபு நூற்களிலேயே காட்ட வேண்டும் என்கின்றார்.
ஒவ்வொரு கலைக்கும் உள்ளடக்கம், குறிக்கோள், மூலாதாரம் , அதன் பயன் என்பன இருக்கும். இதை அந்தந்த நூற்களின் ஆரம்பத்தில் கூறுவார்கள். இதை மவ்லவி அப்துர் ற ஊப் அறியாதவரல்ல!
இஸ்லாத்தின் சகல கலைகளுக்கும் மூலாதாரங்களாக இருப்பது திருக்குர்ஆனும் ,ஹதீதுமாகும். இவற்றிற்கு அப்பாற்பட்டவை ஆதாரமாகாது. இமாம்களின் ஆய்வு இவை இரண்டிலும் ஒழிந்து மறைந்திருந்ததை வெளிப்படுத்தியது தவிர, அவர்களின் சுயகருத்துக்கள் எவையுமில்லை . அதனால், அவையும் மூலாதாரத்திற்குள் அடங்கும்.
"தீன்" மார்க்கம் என்பது 1- ஈமான்2- இஸ்லாம்3- இஹ்ஸான் ஆகிய மூன்றும் சேர்ந்தவையாகும்.
இவற்றுள் ஈமான் என்பது கட்டிடத்தின் அத்திவாரம் போன்றது, இதனால்தான் இஸ்லாத்தின் கட்டிடம் ஐந்து தூண்களால் நிறுவப்பட்டுள்ளது என்றும் , அதில் முதலாவது கலிமா என்ற ஈமானின் மூலமும், ஏனைய நான்கும் இஸ்லாத்தின் கடமையாகிய அனுஷ்டானங்களுமாகும் என்றும் றஸூலுள்ளாஹி ஸஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலம் அவர்கள் கூறினார்கள்.
தீனில் இஹ்ஸானைச்சேர்த்தார்கள். இஸ்லாத்தின் கட்டிடத்தில் சேர்க்க வில்லை என்பது ஈண்டு கவனிக்கத்தக்கது.
இஹ்ஸான் என்பதுதான் தஸவ்வுபு ! இதை கடைப்பிடிப்பவர் முழுமை பெற்ற அழகான வீட்டில்- மாளிகையில் குடியிருப்பார். இது இல்லாதவர் அவர் எப்படியோ அவர் தகுதிக்குத் தக்கவாறு வீட்டிலிருப்பார்.
இதிலிருந்து தஸவ்வுப் என்பது வீட்டின் அடிப்படை அங்கம் அல்ல ! அது மேலதிகமான பூரணத்தவத்திற்குரியது என்பது விளங்கும்
ஒருமனிதன் குற்றவாளியாக இல்லாமல் இருப்பதற்கு மேற்கண்ட இரண்டும் முக்கியம் . அதாவது, சொர்க்கம் செல்வதற்குரிய அடிப்படைத் தகுதி இவை இரண்டிலும் உள்ளது. இதில் எவரும் கோட்டை விட முடியாது.
இவை இரண்டிலும் ஈமான் முக்கியமாகும். இதுதான் அத்திவாரம்- அச்சாணி. இதில் வரும் குறைபாடு பின்னால் வரும் இரண்டையும் பாதிக்கும். இதனால், ஒருவர் தீனில் முன்னேற்றமடைய வேண்டுமாயின், ஈமானைச் சரிசெய்துகொள்வது முக்கியமாகும்.இது அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் மூலமே சாத்தியமாகும்.இதனால்தான் தரீக்கா வின் முதல் நிபந்தனையாக அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அடிப்படையில் அகீதா வை சரிசெய்து கொள்ளுதலைக் கூறினார்கள்.
ஈமான் என்பது றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மனதால் உண்மைப்படுத்துவதைக்குறிக்கும். அதாவது, றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு மார்க்கம் என்று கூறிய சகலதிலும் அவர்கள் உண்மைதான் கூறினார்கள் என்று மனதால் நம்புவதைக் குறிக்கும்.
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈமானின் கடமைகள் ஆறும், இஸ்லாத்தின் கடமைகள் ஐந்துமாக 11 விடயங்களைக் கூறினார்கள்.
இவற்றை நிறைவேற்றுவது சகலருக்கும் கடமை! இதில் யாரும் பொதுவாக விதி விலக்கில்லை.
மனிதர்கள் மூன்று விதத்தில் இருக்கின்றனர்.
1- பாமரர்கள்
2- விஷேஷமானவர்
கள்.
3- அதிவிஷேஷமான
வர்கள்.
இஸ்லாத்தின் பொதுக்கட்டளைகள் பாமரர்களை மைய்யப்படுத்தியதாக இருக்கும். நபிமார்களின்பொதுமையான போதனைகளும் இவர்களை குறிப்பாக்கியே இருக்கும்.
பொதுவான சட்டங்கள் வெளிப்படையாக இருக்கும். அதன்போதனைகளும் பாமரர்கள் விளங்கும் வண்ணம் இருக்கும்.
இதனால், ஒவ்வொரு துறையிலும் சுருக்கமானது, விரிவானது என்று வகைப்படுத்தியுள்ளனர். சுருக்கமானதை அறிய வேண்டியது பர்ளு ஐன்,என்றும், விரிவானதை அறிய வேண்டியது பர்ளு கிபாயா என்றும் வகுத்துள்ளனர்.
விரிவானதை அறிவதற்கு அறிவும், விவேகமும் வேண்டும் . சகலரும் விரிவாக அறிவது பர்ளு ஐன் என்றால் அது பாமர்களைப் பாதிக்கும். சொர்க்கம் குறுகிய வட்டத்தில் உள்ளவர்களுக்கு என்று மட்டுப்படுத்தப்படும். இது அல்லாஹ்வின் விசாலமான கருணையை கேள்விக்குட்படுத்தும். இதனால் , சகலரும் விரிவாக, ஆழமாக அறிந்திருக்க வேண்டும் என்பது தவறான வாதமாகும்.
துஹ்பத்துல் முரீதில் பின்வருமாறு எழுதுகின்றார்கள்.
فيجب علي كل مكلف من ذكر وانثي وجوبا عينيا معرفة كل عقيدة بدليل ولو اجماليا ، وأما معرفتها بالدليل التفصيلي ففرض كفاية : تحفة المريد : ١٤
அகீதாவில் சுருக்கமாக அறிய வேண்டியதில் அடிப்படையான சகலதும் அடங்கும். இதில் சிறிய, பெரிய நூற்கள் என்று வேறுபாடு கிடையாது!.இரண்டு நூற்களிலும் அடிப்படைக்கோட்பாடுகள் பொதுவாகவே இருக்கும்.
விரிவான நூற்களில் ஆதாரங்களும், நுட்பங்களும் இருக்கும். இவை அறிவு, விவேகம் தொடர்பானவையாகையால் பாமரர்கள் இதில் மூக்கை நுழைக்கக்கூடாது.
மௌலவி அப்துர்ற ஊப் இந்த ஒழுங்கு விதியை மீறி சகலரும் அந்தரங்கங்களை அறிய வேண்டியது கடமை! என்கின்றார். இவரின் கூற்றினால் பாமரர்கள் சகலரும் பாவியாகி நரகம் செல்ல வேண்டிவரும். நஊதுபில்லாஹி மின்ஹா! சொர்க்கம் வெறிச்சோடிக் கிடக்கும்.
அல்லாஹ் சக்திக்கு அப்பாற்பட்டதை ஏவியதாக வரும். அல்லாஹ் சக்திக்கு அப்பாற்பட்டதை நிர்பந்திக்க வில்லை என்று அவனே திருமறையில் கூறியுள்ளான்.
வஹ்தத்துல் வுஜூத் என்பது பாமர்கள், விஷேடமானவர்கள் தாண்டி அதிவிஷேடமானவர்கள் கஷ்பால் அறியக்கூடிய விடயமாகும். இதை விளங்குவதற்கு தர்க்கக்கலையில் அதிதிறமை வேண்டும்.இது பாமர்களுக்கு சாத்தியமில்லை! ஆதலால், இவர்களுக்கு வாஜிபாகாது
துஹ்ப்துல் முரீதில் எழுதுகின்றார் கள்.
ويجب علي المكلف ان يعرف ان الله موجود ولا يجب عليه معرفة ان وجوده تعالي عين ذاته ، او غير ذاته كما قاله سيدي محمد الصغير لان ذلك من غوامض علم الكلام ص،٣٢
புத்தியும், பருவமும் உள்ளவருக்கு அல்லாஹுத்த ஆலா ஒருவன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்வது வாஜிபாகும். அவனின் தாத்து அவன் தானானதா? அதற்கு வேறானதா? என்பதை அறிவது வாஜிபல்ல! ஸெய்யிதீ முஹம்மது ஸ் ஸஙீர் கூறியது போன்று இது இறையியல் கலையில் ஆழமான விடயமாகும்.
துஹ்பத்துல் முரீது
பக்கம். : 32.
இறையியல்-அகீதாக் கலையில் மிக ஆழமான விடயத்தை அரைகுறையாக மொட்டையாகக் கூறி அதை ஆழமாக அறிந்து அதன் இன்பத்தை அனுபவிப்பது சகலருக்கும் கடமை என்கின்றார்இந்த மேதை? .
தனக்கே தெளிவில்லாமல் இருக்கும் போது மற்றவர்கள் தெளிவடைய போதிக்கின்றார்.
குருடனுக்கு குருடன் கோல்பிடிக்கின்றான்.
அகீதாவைப் பேசும் துறையை இல்முத் தௌஹீத் என்றும், இல்முல் கலாம் என்றும் கூறுவர்.
துஹ்பத்துல் முரீத் 32.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் தொட்டு முத்திரை நபி அலைஹிஸ்ஸலாம் வரையிலான சகல நபிமார்களும் அலைஹிமுஸ்ஸாத்து வஸ்ஸலாம் போதித்தது மாற்றமில்லாத தௌஹீதையாகும்.
நுபுவ்வத்தில் நபிமார்கள் சகலரும் சமம்தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த வகையில்,
தவ்ஹீத் என்பதற்கு ஷரீஅத்தில் பின்வரும் வரைவிலக்கணத்தைக் கூறுகின்றனர்.
وهو افراد المعبود لعبادة مع اعتقاد وحدته والتصديق بها ذاتا وصفات وافعالا.....
அவன் தனித்த ஒருவன் என்ற நிர்ணயத்தோடு இபாதத்திற்கு த்தகுதியானவனான வணங்கப்படக்கூடியவனை ஒருமைப் படுத்துவது.அந்த வணக்கத்தின் மூலமாக தாத்தையும், பண்புகளையும், செயல்களையும் உண்மைப் படுத்துவது.
அகீதாக்களின் மைய்யக் கருவான தவ்ஹீதின் உள்ளடக்கம் யாதெனில்,
وموضوعه: ذات الله تعالي من حيث ما يجب له ، وما يستحيل ، وما يجوز ؛ وذات الرسل كذلك والممكن من حيث انه يتوصل به الي وجود صانعه؛ والسمعيات من حيث اعتقادها .
அல்லாஹ்வின் தாத்துக்கு வாஜிபானதையும், அவனுக்கு இருக்கக் கூடாததையும், அவனுக்கு ஆகுமானதையும்; றஸூல்மார்களுக்கு அவசியமானவை, இருக்கக்கூடாதவை, ஆகுமானவை; நம்ப வேண்டியவைகளான கப்றிலிருந்து எழுப்பப்படுபவை, மீஸான், விசாரணை, சொர்க்கம், நரகம் இன்னும் இதோடு தொடர்பானவையாகும்.
இந்தக் கலையைப் படிப்பதன் பிரயோசனம்
وثمرته, معرفة الله بالبراهين
القطعية والفوز بالسعادة الابدية ؛
وفضله، انه اشرف العلوم لكونه متعلقا بذاته تعالي وذات رسله وما يتبع ذلك .
தக்க ஆதாரங்கள் மூலம் அல்லாஹ்வை அறிவது; நித்தியமானபேரின்பப் பாக்கியத்தைக் கொண்டு வெற்றி பெறுவது.
இந்தக் கலையின் சிறப்பு யாதெனில், அல்லாஹுத் த ஆலா வோடும், அல்லாஹ்வின் றஸூல்மார்களோடும் அதுதொடர்பானவை யோடும் சம்பந்தம் இருப்பதால் ஏனைய கலைகளை விட இது மேம்பட்டிருக்கின்றது.
துஹ்பத்துல் முரீது.
பக்கம் : 8
தவ்ஹீத் பற்றிய சுருக்கமான , ஆழமான விடயங்களைக் கூறும் துறையைத்தான் "அகீதா" என்கின்றோம். இந்த துறையின் ஆழத்தை அடைவதற்கான மார்க்கம் இஸ்லாம், தக்வா, பேணுதல், இறையச்சம், ஒழுக்கம், கடின யோகம் உள்ளிட்டவையாகும். இவற்றினால் மனம் பரிசுத்தமடையும். பரிசுத்தமான மனம் தெளிவடைந்து கண்ணாடியாகும்.
தெளிவு என்பது அம்மாறாவின் குணங்கள் இல்லாத நப்ஸாகும்
இக்கண்ணாடியில் அவர் நப்ஸு அம்மாறாவைத் தாண்டிய பின் சூக்கும உலகின் காட்சிகள்அவர்மனதில் பதியும். இதையும் தாண்டி அவர் மனம் பரிசுத்தமாகி முத்மயின்னா என்ற நப்ஸை அடைந்தால் ஆன்ம உலகத்தின் காட்சி பதியும். இதை ஐனுல் யகீன் என்பர்.
இதற்கப்பால் அவர் தன்னுணர்வை இழந்தால் , அல்லாஹ்வின் தன்ஸீஹ் பகுதியாகிய அஃயானுத் தாபிதா வில் உள்ள திருநாமங்கள், றுபூபிய்யத், மில்கியத், உலூஹிய்யதின் இரகசியங்கள் பதியும், இதை ஹக்குல் யகீன் என்பார்கள்.
இதையும் தாண்டினால் அல்லாஹ்வின் ஸிபாத்துகளின் இரகசியங்கள் வெளியாகும்
இதையும் தாண்டினால் அல்லாஹ்வின் தாத்தில் சமாதியாவார். இதுதான் இறுதி உச்ச எல்லை!
இந்தப் பயணத்தை மிஃராஜ் என்பர். இந்த உச்சத்திற்கு வரவேண்டுமாயின், அதற்கு முன்னாலிருக்கும் மூன்று சூனிய பாழ் நிலையை கடக்க வேண்டும்.
இவர் சூனிமயமாக இருப்பதால் , இங்குள்ளவை இவருக்கு காட்சியாகாது. ஒரு பேரின்பஉணர்வைப் பெறுவார். இதனையே
الحق محسوس
என்பர்.
இந்தப் பேரின்ப உணர்வை ஒரு சொட்டாகிலும் அனுபவித்தவர் பாக்கியசாலிகள் என்று ஞானிகள் கூறுவர் .
இதை மௌலவி அப்துர் ற ஊப் பிழையாக விளங்கி அல்லாஹ் புலனுக்குட்பட்டவன் என்றும், அவர்பேச்சைக்கேட்டு விளங்கியவர்கள் பேரின்ப இன்பத்தை பெற்றுள்ளனர் என்றும் பீத்துகின்றார்.
புறப்புலன், அகப்புலன் இரண்டும் சூனியமான இடத்தில் எப்படி புலக்காட்சி செயல்படும் என்ற அடிமட்ட அறிவு கூட இல்லாமல் இருக்கின்றார்.
தவ்ஹீத் கலையும், அகீதாக் கலையும் இரண்டும் ஒன்றுதான் என்பதை இப்போது புரிந்திருப்பீர்கள்.
அகீதாவின் ஆதாரங்களை விளக்குபவர்களை முதகல்லிமீன்கள் என்றும், தன்னைப் பரிசுத்தப் படுத்தி அல்லாஹ்வில் தன்னை மாய்த்து , அவனின் தாத்தில் சமாதியடைந்து அவன் வழங்கும் றூஹுல்குத்ஸைக் கொண்டுமீண்டும் இவ்வுலகுக்கு வந்து விளக்கம் பகர்பவர்களை காமிலான ஷைகுமார்கள், ஸூபியாக்களில் அஹ்லுல் தம்கீன்கள், பாக்கி பில்லாஹ் என்றெல்லாம் கூறுவர்.
மௌலவி அப்துர் ற ஊப் அதிகமதிகம் உச்சரிக்கும் நூல் , அத்துஹ்பத்துல் முர்ஸலா" இந்த நூலின் ஆரம்பத்தில் எழுதுகின்றார்கள்.
الفت سابقا التحفة المرسلة الي النبي صلي الله عليه وسلم في علم الحقائق وكتبت حولها الحواشي وقد كانت تلك الحواشي متفرقة فجمعتها انفا متصلا بعضها ببعض فصارت كالشرح ...
ثم ذكرت فيها ما رأيته في كتاب بعض المحققين من عقائد الصوفية ،وجعلت ثواب هذالكتب لروح رسول الله صلي الله عليه وسلم وسميته بالحقيقة الموافقة للشريعة ،
முஹம்மது இப்னு பழ்லுல்லாஹ் ஆகிய நான் கூறுகின்றேன். முதலில் ஹகாயிக்குடைய அறிவு பற்றி அத்துஹ்பத்துல் முர்ஸலா என்ற நூலைக் கோர்வை செய்தேன்.பின்,அதைச்சுற்றி ஒரக்குறிப்புகளையும் எழுதினேன். அவை சிதறிக் கிடந்தன. அவற்றை சிலதை சிலதுடன் தொடர்பு படுத்தித் திரட்டினேன். அதுவே அதற்கான விரிவுரையானது.
பின்னர், ஸூபியாக்களின் அகீதாக்களில் நிபுணத்துவம் பெற்ற சிலரின் கிதாபுகளில் நான் பார்த்தவையை அதில் கூறியுள்ளேன்.
இதற்கு ஷரீஅத்திற்கு உடன்பட்ட எதார்த்தம் ( ஹகீக்கத்) என்று பெயரிட்டேன். இதன்தவாபை றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் றூஹுக்கு சேர்த்து வைக்கின்றேன்..
அத்துஹ்பத்துல் முர்ஸலாவின் முன்னுரை.பக் 1.
இதே நூலில் மீண்டும் எழுதுகின்றார்கள்.
وأما ما رأيته في كتاب بعض المحققين من عقائد الصوفية فهذه صوفيان( رابا عقائد ظاہر ہیچ مخالفت نیست) يعني ليس للصوفين مع عقائد علماء الظاهر مخالفة ابدا
التحفة المرسلة ، ٤٦
அறிந்து கொள்! ஸூபியாக்களின் அகீதாவில் நிபுணத்துவம் பெற்ற சிலரின் நூற்களில் நான் பார்த்த வகையில் அவர்கள் இரு பிரிவினர்களாக இருக்கின்றனர்.
.
வெளிப்படையான உலமாக்களின் அகீதாக்களோடு ஸூபியாக்களுக்கு ஒரு காலத்திலும் முரண்பாடு இருந்ததே கிடையாது
அத்துஹ்பத்துல் முர்ஸலா , பக்கம்: 46
மேற்கண்ட விளக்கத்திலிருந்து,
1- மௌலவி அப்துர் ற ஊப் தவ்ஹீதின் வரைவிலக்கணத்தைப் புரிய வில்லை . அதனால்தான் அல்லாஹ் வணக்கத்திற்குத் தகுதியானவன் என்ற கருத்தில் குறை காண்கின்றார்.
2- அகீதா துறையின் உள்ளடக்கம், அதன் குறிக்கோள் , அதன் வரையறை உள்ளிட்டவையை அறியாதிருக்கின்றார்.
3- அகீதாவில் நிபுணத்துவம் பெற்றவர்களின் நூற்களின் உள்ளடக்கத்தை புரியாமல் கதை கூறுகின்றார்.
4- ஸூபிகளுக்கும், ழாஹிறுடைய உலமாக்களின் அகீதாவுக்குமிடையில் வேறுபாடு இருப்பதாக பிழையான விளக்கத்தை பரப்புகின்றார்.
5- அகீதாவின் ஆரம்ப நூற்களில் பாமரர்களுக்கான அகீதாக்களைத்தான் கூறப்பட்டுள்ளது என்று தவறான மாயையை ஏற்படுத்துகின்றார்.
6- பாமரர்களுக்குக் கடமையில்லாதவையை கடமை என்று கூறி அவர்களைப் பாவியாக்குகின்றார்.
7- அகீதாவில் பர்ளு ஐன், பர்ளு கிபாயா எவை? என்ற அடிப்படை விளக்கம் கூட அறியாதவராக இருக்கின்றார்.
8- நூற்களை முழுமையாக வாசிக்காமல் நுனிப்புல் மேய்ந்து கொண்டு வித்துவம் பேசுகின்றார்.
மொத்தத்தில் இவருக்கு அகீதாவைப் பற்றியோ, அகீதா தொடர்பான விளக்கங்களோ இல்லாத நிலையில் பெரிய விம்பத்தைக் காட்டி மக்களை ஏமாற்றி வழிகெடுத்து பணம் திரட்டி சொகுசாக வாழ்கிறார்.
தனக்குத் தெரிந்த ஒழுக்கமில்லாத அரபு மொழியை வைத்து மக்களை எல்லாக்காலத்திலும் ஏமாற்றலாம் என்று கனவு காண்கின்றார்.
ஒப்பனை ஒருநாள் கலையவேசெய்யும்.!
அடுத்த தொடரில் தஸவ்வுபின் உள்ளடக்கத்தையும், அதில் இவர்கூறும் விளக்கங்கள் உள்ளடங்குமா? என்பது பற்றிப் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.
Comments
Post a Comment