Skip to main content

கலீல் அவுன் வாப்பா நாயகத்தின் இக்கருத்துக்களை அவர்களை ஆதரிக்கின்ற உலமாக்கள் அங்கிகரிக்கின்றார்களா?

கலீல் அவுன் வாப்பா நாயகத்தின் இக்கருத்துக்களை அவர்களை
ஆதரிக்கின்ற உலமாக்கள்
அங்கிகரிக்கின்றார்களா?
------------------------
ஷர்க்கி  ,  பரேலவி,
------------------------
http://al-bathr.blogspot.com/2018/08/blog-post_15.html

நமது அருமை குத்புஸ்ஸமான் ஷம்ஷுல் வுஜூத்ஸய்யித்  கலீல் அவுன் நாதர் அவர்களிடம் மதுரையில் கற்றுணர்ந்த பிராமணப் பெரியவர்.

"ஸ்வாமி , இந்து மதம் அருவ வழிபாட்டை ஒப்புக்கொண்டாலும், உருவ வழிபாட்டை அதிகமாக அனுஷ்டிக்கின்றது.

ஆனால் இஸ்லாம் உருவவழிபாட்டை ஒரு போதும் எந்த நிலையிலும் ஒப்புக்கொள்ள வில்லை.

உருவ வழிபாட்டில் அப்படி என்ன குறை உள்ளது .? என்று கேட்டார்.

புன் முறுவல் சற்றே பூத்த ஷைகு நாயகம் அவர்கள்.,

நம்மைப்ப படைத்துப் பரிபாலிக்கும் எல்லையற்ற பரம்பொருளைத்  தொழுவதற்குப் பதிலாக , நாம்படைத்துப் பாதுகாக்கும் ஓர் எல்லைக்கு உட்பட்ட சிலையை வணங்குவது சீராகுமா? என்பது
ஒருபுறம் இருக்க ,
            ----------+---------

கல்வித் தெய்வமாகிய கலைவாணியை வழிபட்டால் , கல்வி என்னும் ஓர் அம்சத்தை மட்டும் வழிபடுகிறீர்கள்.  "காளி" என்னும் பெண் தெய்வத்தை வணங்கும்
போது  இறைவனின் உக்கிரமம் எனும் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மட்டும்தான் வழிபடுவீர்கள்.

இறைவனோ சகல அம்சமும் வல்லமையும் படைத்தவன் அல்லவா?  இறைவனின் இதர அம்சங்கள் வணங்கப்படாது விடுபட்டுப் போகும் அல்லவா?

அருளும் முழமையாக அருளப்படாது போகும் தானே?

எனவே , அருவ நிலையில்
இறைவனை வணங்குவது தான் அவனது முழுச்சிறப்பையும் வணங்க வழிவகுக்கும்.

அவனது பரி பூரண அம்சத்தை வணங்குவதுதான் அவனது பரிபரண அருளுக்கு நம்மைப் பாத்திரமாக்கும்

இது அருவ வழிபாட்டில்தான் சாத்தியப்படும் என்பது  நீங்கள் சிந்தித்துப்பார்த்தால் , உங்களுக்கே புலப்படும்என்றார்கள்.

பிராமணப் பெரியார் வாயடைத்துப் போய் விட்டார்.

ஆதாரம் : மனிதா ! பக்கம்  : 140,41

உருவ வழி பாட்டின் மூலம்
இறைவனை அடைய முடிமா?

ஒருமரம் இருக்கிறது . மனிதன் ஒருவன் அம்மரத்தை நினைத்து வந்தால் , அம்மரத்திற்குள்ள சக்தி
மட்டும் அவனுக்குக் கிடைக்கும்.
               மனிதா !  பக்  :  76

இலங்கைக்கு இந்தியாவிலிருந்து இந்து ஞானிகளை வரவழைக்கின்றனர்.
அருள் ஒளி நிலையம் முதலான ஸ்தாபனங்களை எல்லாம் பல நாடுகளிலும் நிறுவி வருகின்றனர்.
கொண்டாட்டங்கள் நடாத்துகின்றனர்.அவர்(ஞானி)நாடெங்கும் புகழப்படுகின்றனர்.

இவர்களின் கொள்கைகள் பாத்திலானவைகளே ஹக்கின்  பூரண  பிரதி பிம்பம் இவர்களில் இல்லை. எப்படியாயினும் ஏக  ஞானம்
பெற வேண்டும் எனும் ஆசையாலே இதைச் செய்கின்றனர். ஞானிகளை வருவிக்கின்றனர்.
------------------------------------------
இதே நிலையில் ஹக்கைச்
சிறிதளவாவது காணும் பாக்கியத்தை இந்துக்களும் பௌத்தர்களும் பெறுகின்றனர். இதே நிலையில் பூரண தௌஹீத் நிலை இலங்கும்
          
மனிதா !  பக்கம்:  125

இறைவன் எங்கும் பரிபூரணமாய் இருக்கின்றான் எல்லாப்பொருட்களும் ஆதி முதல் அந்தம் வரை  உள்ள எல்லாம் இறைவனாகவே  இருக்கின்றன.

ஆதலால் மனிதனும் அவ்வாறே இருப்பதோடு அனைத்தும் சேர்ந்து இயற்கையிலேயே  அசைந்து ஆடி வருகின்றான்.என்பது உண்மையிலும் உண்மையே
            
மனிதா ! பக்கம் :  122,23

மனிதன் எதைச் செய்தாலும் அதை அல்லாஹ்வே செய்கிறான் என்பதுதான் கருத்து.அவன் நோக்கமில்லாமல் , அவன் கருத்தில்லாமல் எதையும் யாரும் செய்ய முடியாது.

இங்கிருந்து அங்கு போக வேண்டும் என நாம நினைத்தால், அங்கு போக முடியாது.

அல்லாஹுத்தஆலா அதை
நினைத்தால்

"அவனுடைய அணுக்கள்
************************
ஒன்று சேர்ந்தால்  அதனுடன்  நாம் நினைத்திருக்கக் கூடிய அணுக்கள் சேர்ந்தால் தான் நாம் அசைய முடியும்., போக முடியும்.
                
மனிதா ! பக்  : 100.

" இந்தியா நாடு நற்பேறு பெற்ற நாடு " என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.ஏனென்றால் இந்தியாவில்
தான் அதிகமான ஞானிகள் மட்டுமல்ல நபிமார்கள் என்னும் தூதர்களும் தோன்றினார்கள்.

(யார் அந்தத் தூதர்கள்)

.......முஸ்லிம்கள் என்று சொன்னால்லென்ன ? இந்துக்கள் என்று சொன்னாலென்ன ?  கிருத்தவர்கள் என்று
சொன்னாலென்ன ? பௌத்தர்கள் எனச் சொன்னாலென்ன?

நாம் அனைவரும் (மனிதன் எனும்) ஒரே நிலையில் உள்ளவர்கள். ஒரே அங்கங்களை யுடையவர்கள்.இவர்களுக்கு மத்தியில் மாற்றமில்லை . இவர்களின் முகம் என்ன? கண் என்ன? உடல்
என்ன? இவர்களின் நரம்புகளில்  ஓடக்கூடிய இரத்தம் என்ன ? எல்லாம் ஒன்றேதான். ஒரே நிறம்தான்.வேறு  வேறு நிறங்கள் இல்லை.

இந்நிலையில் நமக்கிடையே பேதங்கள் ஏன் ஏற்பட வேண்டும்?  அத்தகைய அவசியமே இல்லை.
இதனைத்தான் ஞானம்  கூறுகிறது.

நாம் அனைவரும் "ஒன்று" எனும் நிலையிலும் இருந்து இறைவனை வழிபாடு செய்தால் ஒன்றில் ஒன்றான ஏக இறையை வணங்கினால் எந்த உலகிலும் நமக்கு மேன்மையும் சிறப்பும் கைகூடும்.

இந்த வகையிலே ஞானம் என்னும் முக்கிய அம்சம் உலகிலே மிகமிகப் பரவவேண்டும்.

(இதைத்தான் புத்தரும் கூறினார். அக்பரின் தீனே இலாஹிக்கோட்பாடும் இதையே
போதிக்கின்றது உபநிடதங்களம் இதைத்தான் போதிக்கின்றன..)
               
மனிதா !  பக்கம்:   94 .

இன்றைய முஹம்மதும் ,அஹ்மதும் , அஹதும் நாமேஎதற்கும் அஞ்சாதீர்கள்.எமது சுடர் உங்கள் கண்களில் என்றுமே வீசிக் கொண்டிருக்கும்.

ஹக்காக நாமிருக்க  ஹக்கையே நீங்கள் பற்றியுள்ளீர்கள்.

சென்றவர்களை எம்மில்  காணுங்கள். வருபவர்களும் நாமேயாவார்கள்.

இக்காலத்தில் மக்களை
இரட்சிக்கவே எம்மைச் சிறுபிராயம் தொட்டே ஹக்கின் மடியில்  வளர்த்து வந்தது.

மனிதா !   பக்கம் :  42

உலமாக்களே !

மேற்கண்டவைகள் அவர் கூறியவற்றில் சில துளிகள் இதை நீங்கள் ஏற்கிறீர்களா?

முஷரிக்குகள் வணங்குபவை,அல்லாஹ்வின் ஒருபகுதி அதனால்தான் முழுமையான அல்லாஹ்வின் அருளை அவர்களால் பெற முடியாது.ஆயினும் மறுமையில் சிறிதளவாவது அல்லாஹ்வைப் பார்ப்பார்கள் என்று
கூறுவது திருக்குர்ஆனோடு நேரிடையாக மோதவில்லையா?

அல்லாஹ் அணுவால் ஆனவன் என்கிறார்.அப்படியாயின் அல்லாஹ் சடமா? அணு அழிவையும். மாற்றத்தையும் கொண்டது. அப்படியாயின் அல்லா......??

இந்த குப்றியத்தான கருத்துக்களைக் கூறுபவரின் கடைசிப்பந்தியைப் படியுங்கள். நிலைமை எப்படி முற்றியிருக்கின்றது என்பதைப்
புரிவீர்கள்.

உலமாக்களே !

மௌலிது கத்தம் கந்தூரி
உள்ளிட்டவையை செய்பவர்
எப்படியான குப்றியத்தையும் பேசலாம். அதுபற்றி வாய் திறக்க மாட்டோம். ஆனால்

இவற்றை எதிர்ப்பவர் அற்பளவாவது குறைகூறினால்கூரிய வாளால் குதறி விடுவோம் என்பதுதான் உங்களின் கொள்கையா ?

இன்னும் உண்டு ,வரும்.....

Comments

Popular posts from this blog

வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை

வஹாபிய நூரீ ஷா ஸில்ஸிலாவில் 31வது இடத்தில் ஷேகாக வரும்  *வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை*  காஃபிரான அஷ்ரபலி தானவி தன்னுடைய ஹிகாயதே அவ்லியா என்ற நூலில் பெருமையாக எழுதியது

சேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் கொள்கைவாதியா அல்லது கொள்கை ???

சேக் அப்துல்லா ஜமாலி கொள்கைவாதியா அல்லது கொள்கை வேசியா ??? https://youtu.be/jVA8PTOAxzQ சேக் அப்துல்லா ஜமாலி  வாப்பா நாயகத்தை வாயாரப் புகழ்கிறார் .அவரின்  நூலைப்படித்ததாகவும் வாக்குமூலம...

விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்?

"லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  கலீபத்துல் காதிரி ஏ எல் பதுறுதீன் ஷர்க்கிபரேலவி அவர் கள்  "லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  என்று ஒருவர் கூறுவதை பற்றி விளக்கம் கேட்டால் வசைபாடுகின்றனர். வசை பாட முக நூலில் பக்கம் பக்கமாக எழுத முடியும். விளக்கம் சொல்ல முடியாது விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்? எழுதியதற்குரிய விளக்கத்தை கேட்பவர்கள் அஹ்லுல் பைத்தைக்குறை கூறுபவர்களாம். விளக்கம் சொல்ல ஏன் தயக்கம்? வசைபாடுவது அநாகரிகமாப்பேசுவது அபாண்டம் கற்பிப்பது. பிறரைத்தூண்டுவது விரும்பியவிதத்தில் மார்க்க முறனாகப் பேசுவது எல்லாம் அஹ்லுல் பைத்துகளுக்கு ஆகுமான செயல் ? நாகரிகமாகப் பேசி  விளக்கம் சொல்லி நல்வழிப்படுத்து வதெல்லாம் அவர்கள் பணியல்ல! தனிப்பட்ட விவகாரங்கள் பற்றி நாம் பேச வில்லை .அதுபற்றிபேச நாம் விரும்பவும் இல்லை .. இது மார்க்கம். அதிலும் ஈமானோடு தொடர்பானது. "இந்த நூற்றாண்டுக்கும் வருகின்ற நூற்றா...