ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி கலீல் அவுன் மௌலானாவின் வீட்டில் வைத்தே அஹ்லுல் பைத்தினர் வழி கெடவும் செய்வர் என்கிறார்
வீட்டுக்குள் வெடி குண்டு
-------------------------------------
அஹ்லுல் பைத்துகள் என்று
கூறுபவர் இஸ்லாத்திற்கு எதிராகப் பேசினால் ஒருபோதும் அவர் கருத்தை ஏற்கக் கூடாது. என்று நாம்
கூறிய போது
அஹ்லுல் பைத்துகள் ஒரு போதும் வழிகெடமாட்டார்கள் என்று உரத்துக் கூறினர்.
" நாம் அஹ்லுல் பைத்துக்கு
எதிரானவன் என்று எம்மில் எகிறிக் குதித்தனர்.
நாம் கூறியதைத்தான் ஷேக் அப்துல்லா ஜமாலியும் கூறுகின்றார்.
ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி கலீல் அவுன் மௌலானாவின் வீட்டில் வைத்தே அஹ்லுல் பைத்தினர் வழி
கெடவும் செய்வர் என்றும்
குர்ஆனுக்கும் ,ஹதீதுக்கும்
முரணாக அவர் கருத்துக்கள் காணப்பட்டால் அவரையும், அவர் கருத்தையும் நிராகரிக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்.
ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி இக்கருத்தைக்கூறுஙாம் போது மேடையில் அவர் பேச்சைக்கேட்டு ஆமோதித்தவர்களுக்கு .அதே கருத்தை நாம் கூறும் போது பிழையாகத் தெரிவது ஏன்?
ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி கூறியது சரி என்று ஏற்றால் ,
நாம் கேட்பது,
கலீல் அவுன் மௌலானாவின் நூலில் உள்ளவைகள் குர்ஆன் ஹதீதுக்கு உட்பட்டதா? மாறுபட்டதா?
உட்பட்டது எனின், தக்கஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும். பிழையென்றால் , பகிரங்கமாக மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் ..
இரண்டும் இல்லையென்றால் " கொள்கை வேஷி"என்ற தூற்றலுக்கு ஆளாக வேண்டிவரும்.
ஷேக் அப்துல்லா ஜமாலியின் கருத்தை அல்லாஹுத்தஆலா அவர்களின் வீட்டுக்குள்ளேயே வெடிக்க வைத்துஅவர்களின் போலியான கோஷத்தை துவம்சமாக்கிவிட்டான்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அல்ஹம்துலில்லாஹ்.!
Comments
Post a Comment