Skip to main content

உலமாக்களே! வழிகேட்டிற்குத் துணை போகாதீர்கள் !

உலமாக்களே! வழிகேட்டிற்குத் துணை போகாதீர்கள் !
___________________________

கலீபதுல் காதிரி, மௌலவி. பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி – பரேலவி) அவர்கள்


ஆதி வேதத்தில் எந்தப் பிரிவும் இல்லை. ஆதிவேதம் எல்லாமே  ஒன்று. இஸ்லாமிய வேதமாயிருந்தால் என்ன.?
இந்து வேதமாயிருந்தால் என்ன ?  பௌத்த வேதமாயிருந்தால்  என்ன?
கிறித்துவ வேதமாயிருந்தால் என்ன ?

ஏதாயிருந்தாலும்,அது தாற்பரியத்தில்  ஒன்றையே கூறிக் கொண்டிருக்கிறது.
அந்தத் தாற்பரியத்தை நாங்கள்  அடைய முடியாதிருப்பதற்குக் காரணம்  எம்மகத்தே உள்ள திரைகளாகும்.

அப்படியான வேற்றுமைத்
திரைகள் எங்களில் இல்லாது நாம் அனைவரும் ஒன்று.

வேதப் பிரிவுகள் இருந்தாலும் நம் தாற்பரியம் ஒன்றே

ஒரே இடத்தை அடையப் போகிறோம் எனும் உண்மையான அந்த நிலையை
அடைந்து விட்டால்  எல்லாமே ஒன்று.

எல்லாம் தனிமயம் என்ற அந்த நிலைக்கு வந்து விடுவோம்.

இதுதான் மனிதனாக நாம்  வாழ்ந்து நாம் பெறக் கூடிய இன்பம்.

இந்த உலகத்திலேயே இந்த
இன்பத்தைப் பெற்றிட வேண்டும்.இந்த உலகிலேயே நம்மால் பெற முடியாவிட்டால் எந்த உலகிலேயும்
எம்மால் பெற முடியாது.

ஏனென்றால் சந்தேகத்திலேயே வாழ்பவர்களுக்கு அந்த உலகத்திலும் சந்தேகம்தான் வரும்.

ஞான விளக்கத்தைத் தேடும்  எங்களில்  வித்தியாசம்  இன்றி எல்லோரும் ஒன்று. ஒரே நிலை .

அந்த மதம் ஞானத்தில் எதைக் கூறுகிறது.அதே போல இந்த மதம்  ஞானத்தில் எதைக்கூறுகிறது
என்பதைநல்ல முறையில் கற்றுவாழ முன்வருதல் வேண்டும்.

அனேகமாக இந்து ஞானத்திற்கும் இஸ்லாமிய  ஞானத்திற்கும்  நெருங்கிய தொடர்பு உண்டு.

நானும் பல புத்தகங்களில் வாசித்துள்ளேன். இப்படி இருக்கும் போது  எங்களில் எந்த வித்தியாசமும் இருக்க  வேண்டிய அவசியம் இல்லை.

அதாவது, எந்த மதமாக இருந்தாலும்
எல்லாம் ஒரே மதம்தான்.!

நாங்கள் பின்பற்றுவதை அப்படியே பின்பற்றிக் கொள்வோம்.

கலீல் அவுன் மௌலானா

          (வாப்பா நாயகம்.)

ஆதாரம்: ஔன் நாயகரின்
                அருள் மொழிகள்.
                தமிழ்-ஆங்கிலம்.
                பக்கம் : 81'82
       மூன்றாம் பதிப்பு:  2015

உலமாக்களே!

எம்மதமும் சம்மதம் , என்பது
இஸ்லாமியக் கோட்பாடா?

முஷ்ரிக்குகள்., காபிர்கள் எல்லோரினதும் போதனை
ஒன்றுதானா ?

மறுமையில் முஸ்லிம்களும்
முஷ்ரிக்குகளும்., காபீர்களும் செல்லுமிடம் ஒன்றா ?

இந்தத் தத்துவத்தைப் போதிப்பவர் தன்னை குத்பு சமான் சம்சுல் வுஜூத் என்று மாபெரும்  ஆத்மீக ஜோதி அபுல் ஹசன் சாதுலி  நாயகம் கத்தஸல் லாஹு சிர்ரஹுல் அஸீஸ்
அவர்களுக்கு நிகராகக் கூறமுடியுமா?

இக்கருத்தைத்தான் யாசீன் மௌலானா அவர்களும் கூறினார்களா?

இப்படிக் கூறுபவர் அஹ்லுல் பைத் என்பதால் இது நியாயப்படுமா ?

வஹாபிகள் பிழையாகப்பேசினால் மட்டும்தான் மார்க்கம். மற்றவர்களுக்கு இல்லையா .?

உலமாக்களே ! இது அல்லாஹ்வின் மார்க்கம்..!

இதில்கையடிக்க எவருக்கும் உரிமையில்லை.!

பிழையான விளக்கம் கொடுப்போர் யாராக இருந்தாலும் அதற்கெதிராக
குரல் கொடுக்க வேண்டியது உலமாக்களின் இன்றியமையாத கடமை!

தனது சுக போகத்திற்காக
மார்க்கத்தை விலை பேசவேண்டாம்.

உலமாக்களே ! மறுமையில்
நிச்சயம் நீங்களும் விசாரிக்கப்படுவீர்கள்.!

அப்பாவிகள் வழிகெட்டுச்செல்ல நீங்களும் காரணமாகாதீர்கள்.!

Comments

Popular posts from this blog

வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை

வஹாபிய நூரீ ஷா ஸில்ஸிலாவில் 31வது இடத்தில் ஷேகாக வரும்  *வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை*  காஃபிரான அஷ்ரபலி தானவி தன்னுடைய ஹிகாயதே அவ்லியா என்ற நூலில் பெருமையாக எழுதியது

சேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் கொள்கைவாதியா அல்லது கொள்கை ???

சேக் அப்துல்லா ஜமாலி கொள்கைவாதியா அல்லது கொள்கை வேசியா ??? https://youtu.be/jVA8PTOAxzQ சேக் அப்துல்லா ஜமாலி  வாப்பா நாயகத்தை வாயாரப் புகழ்கிறார் .அவரின்  நூலைப்படித்ததாகவும் வாக்குமூலம...

விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்?

"லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  கலீபத்துல் காதிரி ஏ எல் பதுறுதீன் ஷர்க்கிபரேலவி அவர் கள்  "லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  என்று ஒருவர் கூறுவதை பற்றி விளக்கம் கேட்டால் வசைபாடுகின்றனர். வசை பாட முக நூலில் பக்கம் பக்கமாக எழுத முடியும். விளக்கம் சொல்ல முடியாது விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்? எழுதியதற்குரிய விளக்கத்தை கேட்பவர்கள் அஹ்லுல் பைத்தைக்குறை கூறுபவர்களாம். விளக்கம் சொல்ல ஏன் தயக்கம்? வசைபாடுவது அநாகரிகமாப்பேசுவது அபாண்டம் கற்பிப்பது. பிறரைத்தூண்டுவது விரும்பியவிதத்தில் மார்க்க முறனாகப் பேசுவது எல்லாம் அஹ்லுல் பைத்துகளுக்கு ஆகுமான செயல் ? நாகரிகமாகப் பேசி  விளக்கம் சொல்லி நல்வழிப்படுத்து வதெல்லாம் அவர்கள் பணியல்ல! தனிப்பட்ட விவகாரங்கள் பற்றி நாம் பேச வில்லை .அதுபற்றிபேச நாம் விரும்பவும் இல்லை .. இது மார்க்கம். அதிலும் ஈமானோடு தொடர்பானது. "இந்த நூற்றாண்டுக்கும் வருகின்ற நூற்றா...