Skip to main content

ஓம் !என்பது ஓரிறைக்குரிய பெயர் என்பது தவறு!

ஓம் !என்பது ஓரிறைக்குரிய பெயர் என்பது தவறு!

*****************************
       ஷர்க்கி  , பரேலவி.
*****************************

https://facebook.com/story.php?story_fbid=2218084738233768&id=100000967918538&comment_id=2220784344630474

"ஓம் என்பது சத்தியத்தின் தீர்வு!" என்ற தலப்பில் மௌலவி  றிபாய் பாரி அவர்கள் நமது ஆட்சேபனைக்கு பதில் கூறியிருக்கின்றார்.

அவரின் பதிலில் பின்வருமாறு சில கேள்விகளை எம்மிடம் கேட்கின்றார் .
அவர் எம்மிடமிருந்து கேட்கின்ற விளக்கம் இதுதான்.

"ஹழரத் அவர்களே!தாங்கள் சரியான கருத்தைத்தான் தெரிவிக்கின்றீர்கள்
என்றால் "ஓம்"என்பது "ஹு"
என்பதற்குரிய வார்த்தை இல்லை அது உணவுக்குச் சொல்லப்படும்.
அல்லது உடலுக்குச் சொல்லப்படும்.
அல்லது வானுக்குச் சொல்லப்படும்;
அல்லது பூமிக்குச் சொல்லப்படும். ஏதோஒன்றுக்குச் சொல்லப்படும் என்று  விபரித்திருக்கலாம்தானே ....?

அதைவிட்டுவிட்டு சும்மா கத்துகின்றீர்கள்...

"ஓம் "  என்பது ஆதியும் அந்தமும்
அற்ற எவருக்கும் நிகரற்ற ஓரிறைக்கே சொல்லப்படும் என்பது இந்து வேதக்கோட்பாடாகும்.கருத்துமாகும்.

இது பிழை என்றால் எப்படி பிழை என்று தாங்கள் அதனை நிரூபிக்க வேண்டும்..
உங்களால் முடியுமா ?
இப்படி அவர் விளக்கம் சவாலோடு நீண்டு செல்கிறது.

"ஓம்"  என்பதற்கு" ஹூ" என்று நாம் கூறவில்லை. நாம் கூறியிருந்தால் அதற்குப் பதில் கூற வேண்டிய பொறுப்பு நிச்சயம் நமக்குண்டு. நாம் கூறாததற்கு நம்மிடம் விளக்கம் கேட்பது என்ன அறிவுடமை ?

" அ-உ-ம-ஒன்று சேர்ந்த , ஓம், என்னும் சூக்குமப் பிரணவம் என்போம்.
இதனையே அறபு மொழியில் "ஹூ" எனக் கூறுகின்றோம்.

ஆதாரம்: ஔன் நாயகரின் அருள் மொழிக் கோவை பக்கம்,  114,
என்று கூறியவர் கலீல் அவுன் மௌலானா !

அவர் இதனை எந்த அடிப்படையில் கூறினார் என்பதை விளக்க வேண்டியது அவர்தான். ஏன் இது வரை விளக்கம் கூறவில்லை.

மௌலவி பாரி அவர்கள்,

"ஓம்" என்பதற்கு ஹிந்து சமயம் கூறும் விளக்கத்தைக்கூறுகிறார். அதற்குரிய சான்றை முன்வைக்கத் தவறி விட்டார்.

இவ்விளக்கத்தை எங்கே கண்டார் என்று நாம் அறிந்தால்  அதுபற்றி ஆராயலாம். அதை"விட்டு விட்டு

"இது பிழை என்றால் எப்படி என்று தாங்கள் அதனை நிரூபிக்க வேண்டும்...."
என்று எமக்கு சவால் விடுகின்றார்.

மௌலவி பாரி அவர்கள் யாரோ கூறுவதைக் கேட்டு பதிவுகளைப் போடுகின்றார் என்றே நான் நினைக்கின்றேன்.  இருந்தும்,

அவரின் சவாலை ஏற்கிறோம்.

"ஓம்" என்பதற்கு மௌலவி
பாரி அவர்கள் கூறுவது போன்று , இந்து சமயத்தில் காண முடியவில்லை. அதற்கு மாறாகவே காணப்படுகின்றது.

இந்துசமய சொல் அகராதிஎன்ற நூலில் பின் வருமாறு விளக்கப்படுகிறது.
             ------------
ஓம்- மகா மந்திரம், பிரணவமந்திரம் . அ, உ, ம என்ற மூன்று ஒலிகளும் சேர்ந்தது

'அ' என்றால் சூரியன்.'உ' என்றால் சந்திரன். 'ம' என்றால் அக்கினி .
"ஓம் " என்பது எல்லா ஒளிவடிவமானது. இந்த மூன்று ஒலியும் முறையே ஸ்தூலம்
சூட்சுமம், காரணம் மூன்றும் உடல்களாக இருந்தும், பெண், ஆண், அலி எனும்
மூன்றாக இருந்தும்,

ருக் ., யஜுர், சாமம் எனும்மூன்று வேதமாக இருந்து பவமும் மூன்றன் அனைத்துமாய் ஒலிப்பதாகும்.
                         பக்கம்  : 186,

"ஓம்" என்பது  ஆதி அந்தமற்ற  ஓரிறைக்குரியது என்று மேற்கண்ட விளக்கத்தில் உண்டா?  இல்லையே!
அதற்கெதிரான விளக்கம் தானே இருக்கின்றது.

"ஓம்"   என்பது அவர்கள் வணங்கும் முச்சுடரினதின், தொடர்பான கூட்டு குறியீட்டு ஒலியென்று ஹிந்து சமயம் கூறுகிறது.

அதாவது அவர்களின் தெய்வம் , வேதம்,அதை வணங்கும் சட , சூக்கும உடலாகிய
பாலினத்தைக்குறிக்கும் சமயம் சார்ந்த குறியீட்டு மகா மந்திரத்தை , அல்லாஹ்வைக்குறிக்கும் "ஹூ "
என்று எப்படிக் கூற முடியும்?

மௌலவி பாரி அவர்களே!

ஹிந்து சமயக் கோட்பாடுகள் இஸ்லாத்திற்குள் எப்படி திணிக்கப்படுகின்றது என்பதை இதற்குப் பிறகாவது புரிவீர்களா?

இதற்கு  இதுவல்லாத வேறு விளக்கம் உங்களிடமிருப்பின் தயவு செய்து பதியுங்கள்!.

சொற் சிலம்பலைத் தவிர்த்து விளக்கத்தை மட்டும் கூறுங்கள்.

இது மார்க்கம்.! பிழையாக மக்கள் வழிநடத்தப்படுகின்றனர். அதனால்தான் இதில் நாம் அக்கறை காட்டுகிறோம்.வேறு எந்த குறுகிய நோக்கமுமில்லை.!

இவ்வாறு எழுதுவதால் மிகமிகத் தரக்குறைவாக சிலர் எம்மை விமர்சிக்கின்றனர். அது பற்றி நமக்குக் கவலைஇல்லை.  குறை கூறுபவர்களில் பலர் தூண்டப்படுகின்றனர் என்பதை  நாம் நன்கு அறிவோம்.

இது புதுப் பல்லவி அன்று!
நீண்ட நாட்களாக பழகிப்போன உத்தி.

கலீல் அவுன் மௌலாவில் யாராவது குறை கண்டால்
அல்லது அவர் விருப்பத்திற்கு மாறான ஆலோசனை கூறினால், அல்லது விளக்கம் கேட்டால் அல்லது அவரை
விட வேறு ஒருவரை உயர்வாக மதித்தால் ,

அவரை நோக்கி அக்கினிப்பார்வை தெறிக்கும். வசைவம்புகள் பிரவாகமெடுக்கும். ஒதுக்கல் உடனே அமுலாகும்.  இதை நாம் நன்கு அறிவோம். இதனால் பாதிக்கப்பட்டவர்களையும் அறிவோம்

அதனால், இந்தக் காட்டுக்
கூச்சல்களுக்கெல்லாம் நாம் காது கொடுக்க மாட்டோம். மக்கள் பிழையாக வழிநடத்தப்படக்கூடாது என்பதில் மட்டுமே கவனமாக இருப்போம். அது நமது கடமை! அதைத்தான் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொய்வில்லாமல் செய்து வருகிறோம்.

Comments

Popular posts from this blog

வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை

வஹாபிய நூரீ ஷா ஸில்ஸிலாவில் 31வது இடத்தில் ஷேகாக வரும்  *வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை*  காஃபிரான அஷ்ரபலி தானவி தன்னுடைய ஹிகாயதே அவ்லியா என்ற நூலில் பெருமையாக எழுதியது

சேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் கொள்கைவாதியா அல்லது கொள்கை ???

சேக் அப்துல்லா ஜமாலி கொள்கைவாதியா அல்லது கொள்கை வேசியா ??? https://youtu.be/jVA8PTOAxzQ சேக் அப்துல்லா ஜமாலி  வாப்பா நாயகத்தை வாயாரப் புகழ்கிறார் .அவரின்  நூலைப்படித்ததாகவும் வாக்குமூலம...

விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்?

"லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  கலீபத்துல் காதிரி ஏ எல் பதுறுதீன் ஷர்க்கிபரேலவி அவர் கள்  "லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  என்று ஒருவர் கூறுவதை பற்றி விளக்கம் கேட்டால் வசைபாடுகின்றனர். வசை பாட முக நூலில் பக்கம் பக்கமாக எழுத முடியும். விளக்கம் சொல்ல முடியாது விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்? எழுதியதற்குரிய விளக்கத்தை கேட்பவர்கள் அஹ்லுல் பைத்தைக்குறை கூறுபவர்களாம். விளக்கம் சொல்ல ஏன் தயக்கம்? வசைபாடுவது அநாகரிகமாப்பேசுவது அபாண்டம் கற்பிப்பது. பிறரைத்தூண்டுவது விரும்பியவிதத்தில் மார்க்க முறனாகப் பேசுவது எல்லாம் அஹ்லுல் பைத்துகளுக்கு ஆகுமான செயல் ? நாகரிகமாகப் பேசி  விளக்கம் சொல்லி நல்வழிப்படுத்து வதெல்லாம் அவர்கள் பணியல்ல! தனிப்பட்ட விவகாரங்கள் பற்றி நாம் பேச வில்லை .அதுபற்றிபேச நாம் விரும்பவும் இல்லை .. இது மார்க்கம். அதிலும் ஈமானோடு தொடர்பானது. "இந்த நூற்றாண்டுக்கும் வருகின்ற நூற்றா...