ஆடத் தெரியாதவருக்கு மேடை கோணலே தான்.
-------------------------------------------
ஷர்க்கி , பரேலவி
-------------------------------------------
உங்களின் எழுத்தில் ஆட்சேபனைக்குப் பதில் இல்லை. தற்புகழ்ச்சியும். வசை பாடலும்தான் உண்டு. அது நீங்கள் பாடியதல்ல. உங்களுக்குப் பின்னால்
பாடுபவருக்குச் சொந்தமானது.
கம்பனை மிகைத்த தமிழ் புலமை கொண்டவன் இன்னும் பிறக்கவில்லை. என்று பொதுவாகக் கூறப்படுகிறது.
அதனால் கம்பனை ஞானி என்று யாரும் கூறுவதில்லை.
அலியாரின் ஞானம் மறைக்கப்பட்டதல்ல .மற்றவர்களால் விளங்கப்பட்டது.
மல்லிகையில் தாமரை பூப்பதில்லை என்று என்பதைத் தாஶ்ரீஶ்ரீன் நாமும் கூறுகிறோம்.
ஹிந்து ஞானம் பேசுபவரிடத்தில் ஒருபோதும் இஸ்லாமிய தத்துவம்,ஞானம் சுரக்காது. குப்றியத்தை நேசிப்பவரிடத்தில் ஈமானின் வாடையும் வீசாது. குப்றை வெறுப்பது ஈமானின் வெளிப்பாடு.
கிதாபில் ஆழம் இருந்தால் எழுத்தில் ஏன் வெளிப்படவில்லை.
தமிழ் வித்துவத்தைக்கண்டு மயங்குபவன் முஸ்லிமல்ல.
கலீல் அவுனார் தந்தையிடம் அறபு மொழியைத்தான் படித்தார் ஒப்புக் கொண்டு ஏனைய அறிவுகள் தானாகக் கிடைத்தவை என்கிறீர்கள்.
மௌலவி அவர்களே!
தானாகக் கிடைத்தது ஹிந்து ஞானம் மட்டும் தானா?
சூபிகளின் ஞானம் கிடைக்கவில்லையா? கிடைத்தால் எப்போது வெளிவரும்?
தந்தை யாசீன் மௌலானாவின் அறபு நூற்கள் அவுன் நாயகரின் அந்தரங்கமும்
உறக்கத்தில் தானிருக்கிறதா?
அந்தரங்க ஞானம் கிடைத்தவர் எதற்காக ஹிந்து சமய நூல்களில் குறிப்பாக "இராமானுஜரில் " ஏன் தஞ்சமடையவேண்டும் ?
யாசீன் மௌலானா எழுதிய நூற்கள் ஏன் மறைக்கப்பட்டன.
நூற்கள் எழுதுவது பெட்டிகுள்க பூட்டி வைப்பதற்கல்ல,பயன்படாத அறிவு தண்டனைக்குரியது. அறிவை
மறைப்பதும் தண்டனைக்குரியதுதான்.
துஹ்பதுல் முர்சலாவுக்கு வாப்பா நாயகம் எழுதிய அடிக்குறிப்பை மீண்டும்
ஒருமுறை வாசியுங்கள்.
நீங்கள் பட்டம் பெற்ற மௌலவி, மத்ரசாவில் ஓதிக்கொடுக்கும் மௌலவி அதனால் தான் கூறுகின்றேன்.
வாப்பா நாயகத்தின் புத்தகங்களை நடுநிலைப் பார்வையில் பார்த்தால்
அங்கே இருப்பது
*இஸ்லாமா? ஹிந்துசமா? என்பது தெரியும்.*
எல்லாம் அவனே என்று பேசுவோரின் வாயிலிருந்து ஏழனமும் , பெருமையும்
எப்படி வரும்?
அழுக்கடைந்த மனதிலிருந்து நாற்றமடிக்கும் நெடிகள் எப்படி இவர்களிடமிருந்து வருகின்றன.
நமது குற்றச்சாட்டு
குடும்பம் பற்றியதல்ல. தமிழறிவு பற்றியதல்ல அறபு மொழியின் ஆழம் பற்றியதுமல்ல
மார்க்கம்பற்றியது. அதற்கு மார்க்க ரீதியான விளக்கமே வேண்டும். அதற்கப்பால் பேசுவது குறையை மறைக்க தேடும் வழியாகும்.
மௌலவிமார்களை மேடையில் ஏற்றுவதாலோ, அரபு நாட்டு ஷைய்குகளோடு படம் பிடித்துப் பகிர்வதாலோ, அலங்கார வார்த்தையால் புகழாரம் சூட்டுவதாலோ தீர்வு வரப்போவதில்லை .
தக்க ஆதாரம் சூபிகளின் நூற்களிலிருந்து வரவேண்டும். முடிந்தால் பதியுங்கள்.நீங்கள் மத்ரசாவில் ஓதிக் கொடுக்கும் மௌலவி !
ஆடத்தெரிந்தவன் ஆட்டத்தில் திறமையைக்காட்டுவான் தண் பெருமையை கூறி காலத்தைக் கடத்தமாட்டான்.
Comments
Post a Comment