"ஓம்", என்பதைத்தான் நாம் "ஹூ." என்கிறோம்.! கலீல் அவுன் மௌலானா (வாப்பா நாயகம் ) புதிய கண்டுபிடிப்பு!
●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●
ஷர்க்கி , பரேலவி.
http://al-bathr.blogspot.com/2018/08/blog-post_22.html
●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●
கலீல் அவுன் மௌலானாவின் எழுத்தும் , பேச்சும் சுத்தமான ஹிந்து சமயகோட்பாட்டையே பிரதி பலிக்கின்றன. இவரின் இக்கோபாட்டிற்கும் அவரது தந்தை பாட்டன் மார்களுக்கும் இம்மியளவும் தொடர்பில்லை என்று உறுதியாக நாம் நம்புகின்றோம்.
அதற்கான ஆதாரமும் கலீல்அவுன் மௌலானாவின் புத்தகத்திலேயே உண்டு.
கலீல் அவுன் மௌலானா
தந்தையிடம் அரபு மொழியைக் கற்றிருக்கிறார். அதற்கப்பால் எவ்வளவு தூரம் அரபுகிதாபுகளில் இவருக்கு மேலதிகஈடுபாடு உண்டு என்பது சந்தேகமே!
இவரின் புத்தகங்களில் எந்த இடத்திலும் ஸூபி ஞானிகளின் கருத்துக்களைக் காணவில்லை.
தமிழில் நன்கு தேர்ச்சி பெற்ற அவுன் மௌலானா , ஹிந்துக்களின் சமய இலக்கிய நூல்களில் தன்னைப் பறிகொடுத்துள்ளார்.
தனது விளக்கத்தில் முரீதீன் கள் சந்தேகப்படக்கூடாது என்ற அச்சத்திலேயே தான் குத்பு சமானாக இருப்பதாக ஐம்பது ஆண்டுகளாகக் கூறி வருகிறார்.
இந்தப் பேச்சை நம்பிய அவர் சீடர்கள் அவர் எது கூறினாலும் சுய சிந்தனைக்கு இடம் கொடுக்காமல்
வழிப்படுகின்றனர்.
இதே தந்திரத்தையே மௌலவி அப்துர் றஊபும் கையாளுகிறார்.
தனது முரீதுகளுக்குப் புது விளக்கம் கொடுத்தால் அதை பெரும் ஞானமாகக் கேட்டு தனது குத்பியத்தை அங்கீகரித்து தான் சொல்வதை யெல்லாம் பக்தியோடு
செவிமடுப்பார்கள் என்று விளங்கியே கலீல் அவுன்மௌலானா செயல் படுகிறார்.
அதனால்தானோ ,
சூபிகளின் அரபு நூற்களில்
கவனம் செலுத்தாமல் ஹிந்துக்களின் நூற்களில் புதையுண்டாரோ?
அவரின் ஆக்கங்களையும் ,
பேச்சுக்களையும் பாருங்கள்
ஹிந்துக்களின் சமய பரிபாஷைச் சொற்கள் அவர்களின் சிந்தனை ஓட்டத்திலும் அவர் எழுத்திலும் பிரகாசிக்கிறது.
அதற்கு நல்ல எடுத்துக்காட்டு பின்வரும் அவர் விளக்கமாகும்.
படியுங்கள் ! தெளியுங்கள்!
●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●
தற்பத நிலையானது தன்னையும் தன் தலைவனையும் அறிந்த நிலையாகும். இதனை தனக்குத்தானாய் அல்லது தன்னிற்தானாய் இருக்கும் நிலை.
தொம்பதம் என்பது நீ. நான்
எனத் தோன்றும் நிலை எனலாம்.
அசிபதம் என்பது இறைவனும் சீவனும் ஒன்றுகூடும் ஐக்கிய நிலை எனலாம். இதுவே இரண்டறக்கலக்கும் நிலையாகும்.
இதை அரபு மொழியில்
"விஸால்" என்போம்
(இதற்குரிய பொருள் "இத்திஹாத் " என்பதாகும். விஸால் என்பது தவறு !
ஹிந்துக்களின் கருத்துப்படி
ஒருவர் முக்தியடைந்தால் பிரமத்தோடு ஐக்கியமாகிறார். பின்னர் அவரும் பிரம்மத்தைப் போன்று ஆகிறார்.
பிரம்மத்தின் சகல தன்மையும் பின்னர் இவருக்கு வரும்.)
இம்முத்தாரங்களை , அ-உ-ம-ஒன்று சேர்ந்த , ஓம், என்னும் சூக்குமப் பிரணவம் என்போம்.
இதனையே அறபு மொழியில் "ஹூ " எனக் கூறுகின்றோம் ..
இறையில் ஐக்கியப் படலும்
அதனிமித்தம் இன்பத்தையடைதலும் சீவமுத்தர்களாகிய பிரகாசித்தலுமே மானிட ஜன்மம் பெறர்கரிய பெரும் பேறாகும்.
இதற்காகவே பிரம்ம ஞானமாகிய ஏகத்துவ ஞானம் உத்தம புருடர்களுக்கு அருளப்பட்டது.
அனைவரும் இவ்வருளொளியைப் பெறுவதனால் மருணீக்கப்பட்டு ஞான சம்மந்தமுடைய உத்தமர்களாய் வாழ்வார்களாக!
எங்கும் மெய்ஞானம் பரவிவையகத்தார் மெய்யகம்
பெறுவார்களாக ! ஞானப்
பிரகாசம் அடைவார்களாக !
ஆதாரம்: ஔன் நாயகரின்
அருள் மொழிக் கோவை!
பக்கம் : 114,
●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●
கலீல் அவுன் மௌலானாவின் மேற்கண்ட விளக்கம் சுத்தமான ஹிந்து மத போதனையில்லையா ?
"ஓம் " என்பதும், "ஹூ " என்பதும் ஒன்றென்றால் றாத்தீப் மஜ்லிசுகளில் "ஓம்" என்று திக்று செய்வது தப்பாகுமா ?
ஹிந்துக்கள் " ஓம் !" என்று எழுதுவது போன்று நாமும்
எழுதுவதில் என்ன தப்புண்டு !
திக்றில் உயர்ந்தது "ஹூ "
என்று இமாம் பக்றுத்தீன் றாஸி றஹ்மதுள்ளாஹி அலைஹி குறிப்பிடுகின்றார்கள்.
அப்படியாயின் ; ஹிந்துக்கள் உயர் தரமான திக்றைத்தான் உச்சாடணம் செய்யும் ஏகத்துவ வாதிகளா?
மௌனம் காக்கும் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்
மேடையலங்கார வாய்ச் சொல் வீரர்களே.!
உங்கள் அமுத செவ்விதழ்
திறந்து செப்புவீர்களா.?
வாய்திறந்தால் வருமானத்தில் நஷ்டம் என்று பயந்து மெனவிரதம் மேற் கொள்வீர்களா?
உங்களைப் போன்றுதான்
மறைந்த மூத்த உலமாக்களும் நடந்து இருபதியையும் இழந்து கைதேசத்துக்குரியவர்களானார்கள் . என்பதை ஒரு நொடி சிந்தியுங்கள்!
Comments
Post a Comment