அஹ்லுல் பைத்துகள் மஃஸூம்களா?
-------------------------------
ஷர்க்கி ., பரேலவி
*********************
-------------------------------
ஷர்க்கி ., பரேலவி
*********************
அஹ்லுல் பைத்கள் தவறுகள், பாவங்களை விட்டும் பாதுகாக்கப் பட்டவர்களா? அப்படியாயின் அவர்களின் பேச்சில் , எழுத்தில் , சிந்தனையில் மார்க்க முரணான கருத்துக்கள் ஒருபோதும்
வரவே வராது.
வரவே வராது.
அப்படி வந்தால் ஒன்றில் இக்கோட்பாடு பிழையாக வேண்டும். அல்லது
பாவமான , குப்றியத்தான, வழிகேடான கருத்துக்களைக் கூறுவோர் உண்மையான,அஹ்லுல் பைத்துகளாக இருக்க முடியாது.
நபிமார்கள் அல்லாத எவரும் -மஃஸூம்- பாவத்தை-தவறுகளை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள் (மனிதர்களில்) இல்லை என்பது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் முடிவாகும்.
அப்படியாயின், அஹ்லுல் பைத்துகள் பாவம், தவறுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் என்று கூறியது யார்?
கருத்துக்கள் பிழைதான் ஆனால் சொன்னவர் அஹ்லுல் பைத் என்பதனால் குறை காணமாட்டோம் என்றால்,
யாஸீன் மௌலானா தப்லீக்கையும் தேவ்பந்தின் தலைவர்களையும் சரிகண்டார். அதனால் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் தப்லீக்கையும் ., தேவ்பந்தி களையும் குறைகாணாதீர்கள்.
ஒருபொருளில் இரு வியாபாரம் செய்யாதீர்கள். இஸ்லாம் அதை வெறுக்கின்றது.
தவறு யார் செய்தாலும் தவறுதான் ! என்றால் அதை எல்லோரிலும் சமமாகப் நிலை நாட்டுங்கள். மார்க்க விடயத்தில் முகஸ்துதியோ, விட்டுக் கொடுப்போ; சமரசமோ கிடையாது.காரணம். நாம் "முகல்லப்"புகள். ஷாரிஉ அல்ல !
உலமாக்கள் ஓரம்போனவர்களாக இருந்தால் மார்க்கமும் உலகமும் சீரழிந்துவிடும்.
ஓர் ஆலிமின் கால் சறுகல்
-வழிகேடு-உலகம் வழிகெட்டதற்குச் சமன். என்பது றஸூலுள்ளாஹி சல்லல்லாஹு அலைஹி
வசல்லமவர்களின் அமுதமொழி
வசல்லமவர்களின் அமுதமொழி
நாம் எவர் மீதும் காழ்ப்பு கொண்டு அவதூறுகளை அள்ளி வீசவில்லை.
அஹ்லுல் பைத்துகள் என்று கூறுவோர் தாங்கள் கூறியதற்குரிய விளக்கத்தை முன்வைக்காமல் எம்மீது அபாண்டங்களையும், அவதூறுகளையும் அள்ளி
வீசுகின்றனர்.
வீசுகின்றனர்.
இப்படியானவையில் தாங்கள் அஹ்லுல் பைத்துகள் என்பதை அடியோடு மறந்து விடுகின்றனர். ஷைய்கு என்பவர் எதுகூறினாலும் மறுப்பில்லாமல் ஏற்க வேண்டுமாம். அவர் பொய் சொன்னால்
கூட ஏற்கவேண்டுமாம். ஷைய்கை பின்பற்ற வேண்டும். அவர்கூறுவதை ஏற்க வேண்டும் .உண்மைதான்.!
ஆனால் , தரீக்கத் ஷரீஅத்திற்கு எதிராக ஒருபோதும் இருக்காது. அவ்வாறு யாராவது கூறினால்.அக்கூற்றுக்கு பெறுமானமில்லை என்பது ஸூபியாக்களின் ஒட்டுமொத்த கூற்றாகும்.
இவையெல்லாம் எழுத்திலும், பேச்சிலும் மட்டும்தானா?
நடைமுறையில் இல்லையா?
உலமாக்கள் ஊமையானால் அதற்கான முழுப்பொறுப்பையும் மறுமையில் ஏற்கவேண்டி வரும். இது மார்க்கம் ! இதில் உறவு , முகஸ்துதி
நடைமுறையில் இல்லையா?
உலமாக்கள் ஊமையானால் அதற்கான முழுப்பொறுப்பையும் மறுமையில் ஏற்கவேண்டி வரும். இது மார்க்கம் ! இதில் உறவு , முகஸ்துதி
கிடையாது.
இலங்கைக்கு நீண்ட காலமாக சங்கையான அஹ்லுல் பைத்துகள் வருகின்றார்கள் . யாராவது ஹிந்து மதக்கோட்பாடுகளை தவ்ஹீத் என்று சாயம் பூசி போதித்தார்களா?
கலீல் அவுன் மௌலானா எழுதிய எந்த ஒரு நூலிலும் சூபிகளின் விளக்கங்கள் இருக்கின்றனவா.? கிடையாது!
யாஸீன் மௌலானா புகாரி
ஷரீபுக்கு ஆயிரக்கணக்கான பக்கங்களில் விரிவுரை எழுதியதகவும் , அதுபோல் இன்சான் காமிலுக்கும் விரிவுரை எழுதியதாகவும் கூறப்படுகின்றது.
ஷரீபுக்கு ஆயிரக்கணக்கான பக்கங்களில் விரிவுரை எழுதியதகவும் , அதுபோல் இன்சான் காமிலுக்கும் விரிவுரை எழுதியதாகவும் கூறப்படுகின்றது.
அவர் வபாத்தாகியும் ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. அதைப்பகிரங்கப்படுத்தினால் எல்லோரும் நன்மை பெறுவார்கள்தானே!
அப்போது யாஸீன் மெளலானாவின் வஹ்ததுல் வுஜூத் விளக்கத்தை தெரிந்து கொள்ள முடியுமே!
யாஸீன் மௌலானா, தான் "மி.ஃறாஜ் " சென்றதாக
ஒரு நூல் எழுதி வெளியிட்டதாகவும், அதற்கு உலமாக்கள் அவருக்கெதிராக பத்வா வெளியிட்டதாகவும் மௌலவி அப்துர் றஊப் ஓரிடத்தில் பேசியது சில நாட்களுக்கு முன் வட்சொப்களில் வலம்வந்தது.
ஒரு நூல் எழுதி வெளியிட்டதாகவும், அதற்கு உலமாக்கள் அவருக்கெதிராக பத்வா வெளியிட்டதாகவும் மௌலவி அப்துர் றஊப் ஓரிடத்தில் பேசியது சில நாட்களுக்கு முன் வட்சொப்களில் வலம்வந்தது.
அப்படியாயின் அக்காத்திலிருந்த அதிலும் அவர் ஊரிலிருந்த உலமாக்களுக்கு
.."அஹ்லுல் பைத்துகள்" எது பேசினாலும் மூச்சுவிடக்
கூடாது என்ற விளக்கம் தெரியாமல் போய்விட்டதா? அல்லது இப்போது இருக்கின்ற உலமாக்களை விட அறிவு குறைந்த வர்களாக இருந்தார்களா?
கூடாது என்ற விளக்கம் தெரியாமல் போய்விட்டதா? அல்லது இப்போது இருக்கின்ற உலமாக்களை விட அறிவு குறைந்த வர்களாக இருந்தார்களா?
நன்றாகச் சிந்தித்து ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!
Comments
Post a Comment