கலீல் அவுன் வாப்பா நாயகத்தின் தப்பான போதனை?
http://al-bathr.blogspot.com/2018/08/blog-post_75.html
கலீல் அவுன் வாப்பா நாயகத்தின் தப்பான போதனை?
****************************
ஷர்க்கி, பரேலவி
---------------------------
கலீல் அவுன் மௌலானா என்பவர் நீண்ட காலமாக ஏகத்துவ விளக்கம் என்ற பெயரில் ஹிந்து ஞானத்தைப் போதித்து வருகிறார்.
இவரைப்பற்றிய தவறான அபிப்பிராயம் நீண்ட நாட்களாக தமிழகத்தில் உலமாக்களுக்கு மத்தியில் இருந்து வருகின்றது..
ஆனாலும் இவரின் ஆக்கங்களோ, நூற்களோ நமக்குக் கிடைக்கவில்லை. அண்மையில் தான் கிடைத்தன. அதைப்பார்த்த போது தான் விபரீதம் தெரியவந்தது.
இந்த வழிகெட்ட கருத்துக்கள் இலங்கையிலும் பரவக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் மறுப்பு எழுதத்துணிந்தேன்.
நாம் எழுதுவது என்ன என்பதை வாசிக்காமல் சிலர் குருட்டு தனி மனிதப் பக்தியில் மயங்கி அறியாத்தனமாக ஈமானை இழந்து
எம்மைவசை பாடுகின்றனர்.
மற்றும் சிலர் மின்னுகின்ற
பக்கம் ஒட்டிக்கொண்டு சுய
இலாபத்திற்காக மார்க்கதிற்கு விலை பேசுகின்றனர்.
இதனால் விபரமில்லாத சிலர், வெளிக்கோலத்திலும், வெறித்தனமான பேச்சிலும் மயங்கி,அவர்கள் பின்னே செல்கின்றனர்.இதில் சில மௌலவிமார்களும் இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது.
போலிகளை நம்பி ஈமானை இழந்து மறுமையை இழக்கக்கூடாது. ஜாஹிலியாக் காலத்தில் வாழ்ந்தவர்களும் முன்னோர் வழிகெட்டவர்களாக இருந்தாலும் சரி
அவர்கள் செய்வது அருவருப்பானதாக இருந்தாலும் சரி
அறிவுக்குப் புலப்படாததாக
இருந்தாலும் சரி குருட்டுத்தனமாக பின்பற்றினர்.
இஸ்லாம் இதனை கடுமையாக எதிர்த்தது. இஸ்லாம் தெளிவான மார்க்கம் இதில் மூடுமந்திரமோ தெளிவற்ற விளக்கமோ கிடையாது.
ஈமான் தொடர்பான விளக்கங்களையும், ஷரீஅத் சட்டங்களையும்., ஆத்மீக விளக்கங்களையும் இமாம்கள் மிகத் தெளிவாக நமக்கு விளக்கிவிட்டுச் சென்றுள்ளார்கள்
அதனைப்படித்து விளங்கி அதன்படி செயல் படுவதுதான் நமது கடமை ! அதற்கப்பால் தனிவழி செல்லவோ
சுய கருத்துக்கள் கூறவோ
நமக்கு எவ்விதமான அதிகாரமும், சுதந்திரமுமில்லை.
இந்த ஒழுங்கைத்தான் நமது முன்னோர் பின்பற்றி வந்தனர். யாராவது பிழையாகப் பேசினால்., எழுதினால் உடனே மறுப்புக்கொடுப்பார்கள். மக்களை எச்சரிப்பார்கள்.
ஆனால் இப்போது அந்த சூழல் இல்லாமல் போய்விட்டது. இன்றைய முஸ்லிம்கள் ஏதாவது ஓர் இயக்கத்தில் இருந்து அதை வளர்ப்பதுதான் இஸ்லாம் என்று
நினைக்கின்றான்.
அதனால் ஷரீஅத்தின் பார்வை மறைந்து தனிமனித மோகமும், இயக்க வெறியுமே முஸ்லிம்களைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றது.
இந்த இழி நிலை முஸ்லிம்களைத் தொட்டதற்குப் பிரதான காரணம், தலைமைத்துவ ஆசையும், பணமோகமும் அறியாமையுமாகும்.
பணத்தையும் பதவியையும் தேடி மார்க்கத்தை முதுகுக்குப் பின்னால் வீசிவிட்டு பா மரனைப் போன்று உலமாக்களும் வீறுநடை போடத்
தொடங்கி விட்டனர்.
இந்த இழி நிலையால் தான் வழிகெட்ட இயக்கங்களின்
தொட்டிலாக இலங்கை
மாறியிருக்கின்றது.
ஈமானில் பற்றுள்ள முஸ்லிம்களே.! இந்த மாயையிலிருந்து மீளுங்கள்! மறுமையை இழக்கத் துணியாதீர்கள் .
ஈமான் என்றால் என்ன .?
அல்லாஹ் என்றால் யாருக்குச் சொல்வது? என்பதை நமது முன்னோரிடமிருந்து
நாம் கற்றதற்கும் .கலீல் அவுன் (வாப்பா நாயகம்) என்பவரின் விளக்கத்திற்குமிடையிலுள்ள வித்தியாசத்தை இப்போது படியுங்கள்.!
அல்லாஹ் என்றால் யார்?
-------------------------------
எங்கும் நிறைந்த ஏக சக்தி திருவருட் பொழிக !
கண்ணுக்குத் தென்படக்கூடிய பொருட்களாகவோ புலப்படக்கூடிய அணுக்களாகவோ ; புலன்களைக்
கொண்டு விளங்கத்தக்கதாகவோ;
இல்லாததென்றோ உள்ளதென்றோ சொல்லவியலாத சுத்த சூன்யமாய் விளங்கிய அது தன்னிற்றானே
இசைக்கேற்பத் தாளத்தில்
இயங்கத் தொடங்கிற்று.
ஒடுங்கியிருந்த சூக்கும பிரணவமான ஓங்கார வடிவு விஷமப்பட்டு சைதன்னிய சேஷ்டையில் இயங்கத் தொடங்கிற்று.
இந்த உருக்களே இன்று அணுக்களெனவும் கோளங்களனவும்,மக்களனெவும்மாக்களனெவும், பட்சிகளெனவும் தோற்றங் கொண்டு
பரி பூரணமாய் , ஏக சக்தியாய் , காணும் பொருளாயும் காணவியலாததாயும்
புலப்படாததாயும் விளங்கும்
கால, சூக்குமப் பிரணவமாய் , ஜட ஆத்துமப் பொருளாய் விளங்கி நிற்கின்றது.
இதுவே பரிபூரணமும் சச்சிதானந்தமும் ஆதியந்தமற்ற
துமான சக்திப்பொருளாகும்.
ஏகமெனவும் தனித்த தெனவும் ஒருவனெனவும் ஒப்பு இணை களற்ற ஏக னெனவும் கூறும் பரம சக்தியும் இதுவேயாகும்.
பலமொழிகளிலும் பல மதத்தவர்களும் தாம் தாம் இவ்வுண்மையினையினையே
அறிந்தும் , அறியாதும்
அல்லாஹ் என்றும், கடவுளென்றும் , சிவ னென்றும் GOD என்றும் கூறிக்
கொள்கின்றனர்.
இம்மொழிகளாலே இதனைதத்தமக்குத் தனித்தனித்
தெய்வங்களெனப் பிரித்துக் கொள்கின்றனர்.
எம்மொழிபேசுவாராயின்
என்ன, எம்மதத்தவராயின்
என்ன, உயர் ஞானியாயின்
என்ன, ஏழையாயின் என்ன
பணக்காரனாயின் என்ன,
ஏழையாயின் என்ன ,
எல்லோருக்கும் மேற் கூறிய தத்துவமே தெய்வமாகும்.
...அனைத்தும் ஒன்றே எனும் இந்த ஞானத்தை திறம்பட அறிபவர் சாதி பேதம்,உயர்வு தாழ்வு , மதவேறுபாடு, முதலாளி தொளிலாளி முதலாம் வேற்றுமைகளை விட்டு நீங்கி , சத்திய ஒளியில் நித்தியம் ஜீவிப்பார்.
--பேரின்பப் பாதை--93,94
ஆதியில் ஒன்றாய் , அஃது இஃது என்றிலதாய் , பொருள் , இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றைக் கடந்ததாய் , அருவமாய் , அவ்வியக்கமதாய்ப், பரவியும் விரவியும் விளங்கா நின்ற பரம இரகசியமான சிற்சோதியாம் வித்தானது தன் ரகசியத்தை வெளியிடத் தத்தம் கொண்டமையின் அது விஷமப்படத் தொடங்கிப் பனரெனவும் இலையெனவும் பூவெனவும் காயெனவும் வேரனவும்
விகாரப்பட்டாற் போன்று
அணுபோற் கண்ணுக்குப்
புலப்படாப் பொருளாயும்
பஞ்ச பூதங்களாய் , ஏனையச் சிருட்டிப் பொருள்களாய்ச்
சராசரங்களாயக் கண்ணுக்குத் தென்படும் பொருளாயும் இயங்கா நிற்குமதுவே சர்வசத்தான இறையாகும்.
பேரின்பப் பாதை : 98,
இந்த வசனங்களும், கருத்துக்களும் ஹிந்து சமய தத்துவத்தை அங்கப்பிசகின்றி தெரிவிக்கின்றதா.? இல்லையா?
நமது முன்னோரிடமிருந்து
இப்படியான விளக்கத்தை
நாம் கேட்டதுண்டா?
அல்லாஹ்வும் ஹிந்துக்கள்
வணங்கும் சிவனும் ஒன்றா?
ஏனைய மதத்தினர் அல்லாஹ் வை நாம் நம்பிய படியும்
அறிந்தபடியுமா வணங்குகின்றனர்.?
அப்படியாயின் இஸ்லாம்
ஏனைய மதங்களை ஏன்
நிராகரிக்கின்றது?
அல்லாஹ்வைப் பயப்பிடுங்கள். அவனும் அவனது திருத்தூதர் முஸ்தபா மாநபி ஸல்லல்லாஹுஅலைஹி
வசல்லமவர்கள் காட்டித்தராத வழியில் செல்லாதீர்கள்.!
பிழையான கருத்துக்களைச் சொல்வோர் அஹ்லுல் பைத்துகள் என்றாலும் பிழை பிழைதான்.!
பிழையான கருத்துக்களைக் கூறுவோரைச் சந்தேகியுங்கள் . அதற்காக இஸ்லாம்கூறும் கருத்தில் சந்தேகிக்காதீர்கள்.
ஷைத்தானின் ஏமாற்று சதியில் மாட்டி ஈமானை இழக்காதீர்.!
பணத்திற்குச் சோரம்போகும் கொள்கை வேசிகளான ஆலிம்கள் விடயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.!
Comments
Post a Comment