☆《《 வஹ்தத்துல் வுஜூத்
கோட்பாட்டா ??? ஹிந்துக்களின் பரிபாஷையா ??? 》》☆
http://al-bathr.blogspot.com/2018/07/blog-post.html
இஸ்லாம் எந்த ஒரு அன்நிய கலாச்சாரங்களையோ,
அவர்களின் பரிபாஷைகயோ,அங்கிகரிக்க வில்லை.தனித்துவமான ஷரீஅத்தின் பரிபாஷையில்
இஸ்லாமிய விளக்கத்தை விளங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.
அப்படியிருக்க,
வஹ்தத்துல் வுஜூத் கோட்பாட்டைப் போதிக்கின்றோம் என்று கூறும் தற்போதைய சில ஷைய்குமார்கள் ஹிந்துக்களின் பரிபாஷைகளை
அதிக அக்கறையுடன் உச்சரிப்பதை க்காண முடிகின்றது.
அண்மைக்காலமாக இந்தப்
பிரச்சாரம் சிலரால் வேகப்
படுத்தப்படுவதையும் , அதற்கு தரீக்கா கோமாளி மௌலவிகள் சிலரால் விளம்பரம்
கொடுக்கப்படுவதையும் முகநூல்கள் , வட்சொப் தளங்களில் காணமுடிகின்றது.
தஃவத் , கொத்பா,பயான்,
உள்ளிட்டவையில் அக்கறை
செலுத்தி பணம் தேடுவதிலும், மற்றும் உம்றா, ஹஜ்
முகவர்களாக ஈடுபடுவதிலுமே தற்காலத்தில் உலமாக்களின் முழுக்கவனமும் திரும்பியிருப்பதைக் காணமுடிகின்றது.
உலமாக்கள் உலகாயுதவாதிகளாக ஆனதால் மார்கம் அவர்கள் பார்வையில் மதிப்பற்றதாக மாறிவிட்டது.
இலங்கையில் இப்போது சில ஷைய்குமார்களும் ,அவர்களின் முரீதுகளும் குத்பு பட்டம் சூட்டுவதில்
வெட்கம் கெட்ட தனமாக நடந்து கொள்கின்றனர்.
தௌ ஹீதின் அறிவைப்
போதிப்பதாக நினைத்து குப்றையும் , வழிகேட்டையுமே போதிக்கின்றனர்.இதைப்புரிந்து கொள்ளாத அப்பாவிகள் ,ஆஹா என்னே! அற்புதமான விளக்கம் என்று கூறி அங்கலாய்கின்றனர்.
அல்லாஹுத்தஆலா எல்யற்றவன். அவனை எவராலும் பூரணமாக சூழ்ந்துஅறிய முடியாது.
யாஅல்லா உன்னைப் எப்படிப் புகழ வேண்டுமோ அவ்வாறு புகழ முடியாது.!
என்றே றஸூலுள்ளாஹி
சல்லல்லாஹுஅலைஹி வசல்லமர்கள் கூறினார்கள்
ஆனால் குத்புகள் என்று
தங்களைத் தாங்களே கூறிக் கொள்வோர் ,
"அல்லாஹ்வைப் பூரணமாக
அறிய முடியும்" என்று வாதிக்கின்றனர்.?
றஸூலுள்ளாஹ்வைப் பற்றிப் புகழ்ந்தவர்கள் சகலரும்
தங்களின் இயலாமையையே இறுதியாக ஒப்புக்கொண்டனர். அப்படியிருக்க
அல்லாஹ்வைப் பூரணமாக
அறிய முடியும்? என்றுவாதிப்பார்களா?
ஒருவர் அல்லாஹ்வை அறிவால் நெருங்கும் போது அல்லாஹ்வின் ஆற்றல் அவர்களுக்கு வெளியாகும்.
படைப்பின் இரகசியங்கள் துலங்கும் . அப்போதெல்லாம் அல்லாஹ்வைப் பற்றிய அச்சம் அதிகரிக்கும்.
அதனால்தான்,
அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவர்கள் ( அல்லாஹ்வை
அதிகம் அறிந்த) உலமாக்களே!
என்று அல்லாஹுத்தஆலா குறிப்பிடுகின்றான்.
திருக்குர்ஆனில் பல இடங்களில் " என்னை அஞ்சுங்கள் " என்று கூறுகின்றான்.
வலிமார்களில் உயர் தகுதியைடைந்தவர்கள் "அல்லாஹ்வின் அச்சத்தால் அவர்களி உடல் உருகி ஐதாகியதாக வரலாற்றில் காண்கின்றோம்.
சுல்தானுல் ஆரிபீன் அஹ்மத் கபீர் நாயகமவர்கள் அல்லாஹ்வின் அச்சத்தால் உருகிவிடுவார்கள் என்று ஷைய்குல் அக்பர் றழியல்லாஹு
அன்ஹு கூறுகின்றார்கள்.
அப்படியிருக்க
"அல்லாஹ்வைப் பற்றிய அறிவில் இருப்பதெல்லாம் அன்பும், அருளும் , நன்னெறியும் உயர் நிலையும் மோட்சமுமாகும்."
என்பது யாருடைய கோட்பாடு?
தொழுகையில் உள்ளச்சம் வேண்டும். உள்ளச்சமில்லாததொழுகை உயிரற்றது,என்பது அர்த்தமற்றதாகி விடும்.
றஸூலுள்ளாஹி சல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்கள் தொழுதால் " சட்டியில் நீர் கொதிக்கும் இரைச்சல் சத்தைத்தைப்போன்ற சத்தம் கேட்கும் என்று சஹாபாக்கள் கூறுவார்கள்.
அனைத்துத் தஸவ்வுப் நூற்களிலும் ." இறையச்சம் பற்றிக் கூறப்படும் போது அதை மலினமாகக் கூறுவது யாருடைய ஞானம்.?
வலிமார்களைக் கடவுள் அவதாரம் என்று கூறுவதற்கும்., ஹிந்துக்கள் அவர்கள் சாமிகளை, குருக்களை கடவுள் அவதாரம் என்பதற்குமிடையில் உள்ள வித்தியாசங்கள் என்ன?
ஹிந்துக்களின் ஞானத்தில் சிக்குப்பட்டு அவர்களைத்
திருப்திப்படுத்தும் நோக்கில் அவர்களின் வேதங்களையும், பரிபாஷைச் சொற்களையும் அதிகம் பிரயோகிப் பதைக் கவனியுங்கள்.!
ஹஸனுல்பஸரி. ஜுனைதுல்பகுதாதி றஹிமஹுமுள்ளா உள்ளிட்ட ஆத்மீகத் தலைவர்கள் அடைக்கப்பட்ட அறையில்தான் ஆத்மீகப் போதம் செய்தார்கள்.
அறிவற்றவர்கள் பிழையாக விளங்கக்கூடாது என்பதற்காகத் தான் ஸூபிகள் தங்களுக்கென்று ஒரு பரிபாஷையை வகுத்துக்கொண்டனர்..
தங்களின் பரிபாஷையை
விளங்காதவர், அறியாதவர்கள் எங்களின் நூற்களைப் படிப்பது ஹறாம்! என்று கூறினார்கள்.
எல்லோரும் எழிதாக விளங்கக்கூடியது தான் ஞானம்
இறையறிவு என்றால் எதற்கு பரிபாஷை? ஏன்அதைப்படிக்கத்தடை?
முஃமின்களே! சிந்தியுங்கள்.!
ஹிந்துக்களின் வேதங்களைக்கற்று அதற்கு இஸ்லாமிய ஞானம்என்ற பெயரில் சந்தைக்கு வருகிறது மஃரிபா ஞானம்?
மத்ரசாவில் ஆரம்ப வகுப்பில் போதிக்கப்படுகின்ற
" பிதாயத்துல் ஹிதாயா ."
என்ற நூலைக்கற்ற ஆரம்ப
மாணவனே இவர்களின் வழிகேட்டை இலகுவாகப் புரிந்து கொள்வான்.
"ஏகேச்சுவர ஞான ஒளி வில் புகுகுதல் "
என்ற வாக்கியம் தெளிவற்றது.
ஆக, ஸூபிகளின் போதனையின் சாயல் இவர்களின் எழுத்திலோ, பேச்சிலோ காண முடியவில்லை!
தெளிவற்ற ஞானபோதம் செய்வோரில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
Comments
Post a Comment