போர்வாள்கள் வளைச்சுருட்டுமா? சுழற்றுமா?
கலீபதுல் காதிரி, மௌலவி. பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி – பரேலவி) அவர்கள்
கடந்த பத்து ஆண்டுகளாக
வெலிகமையில் கலீல் அவுன் மௌலானாவின் இல்லத்தில் நடக்கும் மீலாத்விழாவுக்கு பிரதம பேச்சாளர்களாக மௌலவி ஷேக்
அப்துல்லாஹ் ஜமாலி ,
மௌலவி ஹாபிழ் அஹ்மத்
அப்துல்காதிர் மஹ்லறி உள்ளிட்டோர் தொடர்ச்சியாகக் கலந்து உரையாற்றி வருகின்றனர்.
இவர்கள் தமிழ் நாட்டிலும்,
இலங்கையிலும் பிரபலமான பேச்சாளர்கள். அஹ்லுஸ்
ஸுன்னத் வல் ஜமாஅத்தின்
அடையாளமாக வலம் வருபவர்கள்.
வழிகேட்டின் நாயகன் பீ.ஜே உடன் பல விவாதங்களைச் சந்தித்தவர்கள். பல நூறு மேடைகளில் ஏறி இறங்கியவர்கள். அதனால்,
மக்கள் இவர்களில் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர்.ஒருபோதும் வழிகேட்டுக்கு வால் பிடிக்காத போர்வாள்கள் என்று மக்கள் நம்புகின்றனர்.
ஆனைக்கும் அடிசறுக்கும் என்பது போல் சில வேளை அறியாத்தனமாக சில தவறுகளைச் செய்கின்றார்களா? அல்லது தெரிந்து கொண்டே செய்கின்றார்களா ?
என்பதை இவர்களின் பின்வரும் நமது கேள்விக்கான அவர்களின் விளக்கத்திலிருந்துதான் தெரியவரும்.
சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் "சூனியம்" பற்றிய விவாதப் பிரதி வாதங்கள் சூடுபிடித்தது யாவரும் அறிந்ததே!
சுன்னத் வல் ஜமாஅத்தின்
உலமாக்கள் யாவரும் சூனியத்தை நம்ப வேண்டும். அதுதான் சுன்னத் வல் ஜமா அத்தின் கோட்பாடு! என்று
முழங்கியது இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டு தானிருக்கின்றது.
றஸூலுள்ளாஹி சல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்களுக்கு ஒரு யூதன் சூனியம் செய்ததனால்
தான் சூறா பலக், சூறா நாஸ்
இறங்கியதாக உலமாக்கள்
ஆதாரம் காட்டிப் பேசியதை
மக்கள் மறக்க மாட்டார்கள்.
மார்க்கம் என்ற அடிப்படையில்தான் உறவும் பகையும்இருக்க வேண்டும் என்று கூறியவர்கள் ;
பின் வரும் கருத்தைப்பற்றி
சொல்லப் போவது என்ன .?
பீ. ஜே . விடயத்தில் காட்டிய வீரம் இங்கும் வருமா? அல்லது கிடைக்கும் இலாபத்தைத்தக்க வைக்க சப்பைக்
கட்டுக்கள் அரங்கேறுமா?
என்பதை பொறுத்திருந்து
பார்ப்போம்.!
கலீல் அவுன் மௌலானா சூனியம் பற்றி க்கூறுவதை இப்போது படியுங்கள்!
"சூனியத்தைப்பற்றி நாம் பல முறை இது பொய்யான விஷயம் எனக் கூறி வந்துள்ளோம். சூனியம் செய்பவர்களோடு பழகிப் பார்த்த பிறகும் அது பொய்யான
விஷயம் என்பதனை நாமும் அறிந்து நமது முரீதீன்களுக்கும் போதித்தோம்.
சூன்யம் என ஒன்று இல்லை எனபதனை இன்றைய science {அறிவியல்} உலகம்
நிரூபித்து விட்டது.
●═════════════════════●
அறிவுள்ள --மூளையுள்ள எந்தவொரு மனிதனும்
சூனியத்தை நம்ப மாட்டான்.
●═════════════════════●
... ரசூலுள்ளாஹி சல்லல்
லாஹு ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கு சூன்யம் செய்ததாக தப்ஸீர் ஜலாலைனில் கூறப்படுகிறது. அவ்வாறு சூன்
யம் செய்யப்பட்ட போது தான் "குல் அஊது பிறப்பில் பலக் " சூறாவும்; "குல் அஊது பிறப்பின் நாஸ்"
சூறாவும் இறங்கியதாக அந்தத் தப்ஸீரில் கூறப்படுகிறது.
திருமறையின் பிறிதொரு
வசனத்தில் காபிர்கள்
"நீங்கள் சூன்யம் செய்யப்பட்ட மனிதரையோ பின் பற்றுகின்றீர்கள்.? எனக்கேட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க ....
இந்த வசனத்தின்படி ரசூலுள்ளாஹ்வை சூனியம் செய்யப்பட்டவர்கள் அல்ல என ஏற்றுக் கொள்பவர்கள் " குல் அஊது பிறப்பில் பலக்" சூறாவிற்கு விளக்கம்சொல்லும் போது ரசூலுள்ளாஹ் சல்லல்லாஹுஅலைஹி
வசல்லம் அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறுவது அறிவுக்குப் பொருத்தமானதாக இல்லையே?
பெண்களுக்குத்தான் இந்த "ஸிஹ்ரு." விஷயம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. ஸிஹ்ரு பொய்யான விஷயம் என்பதனையறியாது பெண்கள் தாங்களும் குழம்பிப் பிறரையும் குழப்பிவிடுகிறார்கள்.
ஆதாரம் : மனிதா! பக்:91
●═════════════════════●
கலீல் அவுன் மௌலானாவின் கருத்துப்படி;
"சூனியம் பொய் என்பதை
அறிவியல் நிரூபித்துள்ளது ."
"மூளையுள்ள எந்த மனிதனும் சூனியத்தை நம்ப மாட்டான்."
"சூனியம் பற்றி தப்ஸீர்களில் வருவது அறிவுக்குப் பொதுத்தமற்றது."
"றஸூலுள்ளாஹிசல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறுவதெல்லாம் உண்மையல்ல! "
"சூன்யம் இருக்கிறதாகக் கூறுபவர்கள் குழப்பவாதிகள்."
இக்கருத்துள்ள "மனிதா!" என்ற நூல் 2010ல் வெளிவந்தது. எட்டு ஆண்டுகளாகஇதை இவர்கள் படிக்கவில்லையா.?
அல்லது, கிடைக்கும் வாய்ப்பை இழக்கக்கூடாது என்பதற்காக மறைத்தார்களா.?
முஃதஸிலாக்களின் வழிகெட்ட இக்கொள்கையை உண்மை என்று நம்பிய அவர் முரீதுகளுக்கு துரோகம் செய்ததாக ஆகாதா?
ஒருபக்கம் சூனியம் உண்மை என்று முழங்கிய நீங்கள் ஏன் இங்கே அடங்கிப்போனீர்கள்?
வாய்திறந்து உங்கள் பதிலைக் கூறுங்கள் !
நீங்கள் சத்தியவான்கள் தான் என்று மக்களுக்கு உரத்துக்கூறுங்கள் .!
இல்லையென்றால் நீங்களும் விலைபேசப்பட்டவர்கள்
என்ற அவப் பெயர் நீங்காமல் இருக்கும்.
குறிப்பு:-
எந்த இமாமின் சிந்தனையிலும் உதிக்காத தவ்ஹீத் விளக்கம் இவர் நூலில் பரந்து காணப்படுகின்றது.
தொடராக வந்து கொண்டிருக்கும் .இன்ஷாஅல்லாஹ்!
அப்போது ஏன் நம்மீது வசை பாடுகின்றார்கள் என்பதைப்புரிவீர்கள்.!
குத்பு சமான் என்று லேபில்
போடுபவர்களின் அந்தரங்கம் ஒவ்வொன்றாக வெளிச்சமாகும் . இன்ஷாஅல்லாஹ்.!
Comments
Post a Comment